தமிழ் நாட்டோட முத பெருசு ரிடையர் ஆக போகுதாம். இதை ரொம்ப நாள் முன்னாடி பண்ணி இருந்தால் தமிழ் நாடே கொண்டாடி இருக்கும். இப்ப பாருங்க காஞ்சி போன (கஞ்சி என்று படித்தால் நான் பருப்பு விற்க மாட்டேன்) வழக்காய் பஜ்ஜி மாதிரி ஆகிருச்சு. தமிழ் மொழிக்காக கல்லக்குடில படுத்து எழுந்தார்ரு........ எவ்வாளவு வலிசுருக்கும்.
=====================================
சாரு அவரோட புத்தக வெளியிட்டு விழாவுக்கு பிறகு தண்ணி பார்ட்டி வைச்சு இருக்காராம். ஏன்னு தெரியல. அவரோட புக் வெளி வந்துருச்சு என்று கேட்டு அதிர்ச்சியில் மயக்கம் போடாதவங்களை பார்ல தீர்த்தம் வாங்கி தான் மயக்கம் போட வைக்க போறார் போல் இருக்கு.
=====================================
கொஞ்ச நாள சிலர் பெரிய இலக்கியவாதிகளுக்கு அடியாள் சேருக்கும் பனியில் இருக்காங்க. ஏதோ இவங்க பேசி தான் சாருக்கு எக்ஸ்ட்ராவா sales யாக போற மாதிரியும், இவங்களை விட்ட அவருக்கு பேச வாய் இல்லாத மாதிரியும் ல பில்டப்பு தராங்க...... முதல இவங்க பிளாகை தான் காணாம போகனும். சத்யமா நான் சிமென்ட் தரை பதிவாளரை சொல்லல.
=====================================
நானும் உரக்கடை சாரி நுரையடல் அதும் இல்லையா ???? சரி சரி ஞாபகம் வந்துருச்சு உரையாடல் கவிதை போட்டிக்கு கவிதை எழுதலாம்ன்னு இருக்கேன், அனா ஒரு மண்ணாகட்டியும் மண்டைல தோன்ன மாட்டேன்ங்குது. சரி எல்லோரையும் போல எண்டர் தட்டி எதாவது பண்ணிரலாம் ன்னு பார்த்த...... ஒன்னும் முடியல. சரின்னு ஜகா வாங்கிட்டேன்.
=====================================
வே(கோ)ட்டைக்காரன் படத்துல விஜய் ஏதும் புதுசா பண்ணலன்னு பதிவுலக விஜய்யின் PRO தன்னோட பதிவிலும், நேத்து என்கிட்டே செல்போனிலும் சொல்லிடாரு. அதனால் முத நாள் டிக்கெட் கிடைக்காதவங்க நேர போய் விஜயின் பழைய படத்தோட டிவிடி வங்கிகொங்க. டிக்கெட் விலையை விட கம்மியாக தான் இருக்கும். இந்த மாதிரி அஜித்தின் PRO சொல்லிடாருன்ன நல்ல இருக்கும். ஏன்னா நாங்க எல்லாம் நடுநிலை வியாதிகாரங்க ல .
=====================================
இந்த வார அறிமுகம் வால்பையன். இவரோட பதிவுகள் எல்லாம்(வேற வழி)நல்ல இருக்கும். பலது மொக்கையா இருக்கும். சரக்குயை வைத்து இவர் படைக்கும் இலக்கியங்கள் உலக புகழ் பெற்றவை.
(பிரபல பதிவாளர்கள் தான் சிறு பதிவாளர்களை அறிமுகம் செய்ய வேண்டுமா ???? நாங்களும் பிரபலங்களை அறிமுகம் செய்வோம். உலக சினிமாவை உள்ளூர் எச்சுசாமிகள் அறிமுகம் செய்வது போல.... டேய் நாங்களும் பின் நவீன அரிப்புகள் தான் )
(பிரபல பதிவாளர்கள் தான் சிறு பதிவாளர்களை அறிமுகம் செய்ய வேண்டுமா ???? நாங்களும் பிரபலங்களை அறிமுகம் செய்வோம். உலக சினிமாவை உள்ளூர் எச்சுசாமிகள் அறிமுகம் செய்வது போல.... டேய் நாங்களும் பின் நவீன அரிப்புகள் தான் )
=====================================
ஒரு ஏ ஜோக் .....
"நீங்க என்னவா இருக்கீங்க ??"
"நான் cable operator ய இருக்கேன்"
"எத்தனை பேருக்கு ???"
(இது புரியாவிட்டால் நீங்க ஒரு டுப்-லைட் ன்னு confirm பண்ணி கொள்ளலாம்)
=====================================
நேத்து காலையில் திருவண்ணமலைக்கு கிளம்பி கொண்டு இருந்தோம்... அப்ப எனக்கும் சொந்தக்கார பையனுக்கும் இடையே நடந்த டயலாக்
"எதுக்கு அங்க போறோம் ????"
"ஜோதியை பார்க்கடா"
"எத்தனை பிட் இருக்கும் டா "
=====================================
11 comments:
அருமையன் அறிமுகம் மேவி அண்ணே..!
நீங்க வேணுமின்னா பாருங்க, ஒரு நாளைக்கு இந்தப் பதிவர் ரொம்ப பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிய
ஆளாளாளாளாளா வருவாரு.
இது தலைகீழா நின்னு யோசிச்ச பதிவு போல இருக்கே
அருமை..
எல்லா மேட்டரும்.. முக்கியமா கேபிள் மேட்டர்
நல்லாதானே இருந்தே என்னாச்சு டம்பீ
ஆவ்.. இவன்கிட்ட இனிமேல ஃபோன்ல பேசவே கூடாது போலிருக்கே
//
"நீங்க என்னவா இருக்கீங்க ??"
"நான் cable operator ய இருக்கேன்"
"எத்தனை பேருக்கு ???"//
ஹாஹாஹாஹாஹா!
ஏன் இந்த கொலைவெறி!
வேறு வேலையே கிடைக்கலையா?
டம்ப்ரீ... ரொம்பநாளா யோசிச்சிகிட்டு இருந்தேன்! கேபிளுக்கு விளக்கம் அதுதானா? சங்கரண்ணே...அவ்வ்வ்வ்வ்வவ்வ்
//"எதுக்கு அங்க போறோம் ????"
"ஜோதியை பார்க்கடா"
"எத்தனை பிட் இருக்கும் டா "//
”ஆள் எப்படி இருப்படா”ன்னு கேட்டிருக்கனும்!
திருவண்ணாமலையில் ஜோதி தியேட்டர் இருக்கா என்ன!?
ஒண்ணுமே புர்லப்பா...
அறிமுகமும் அதுக்கு நீங்க சொன்ன லாஜிக்கும்.. எங்கேயோ போய்ட்டீங்க!! :) :)
எழுத்தாளர்கள் கூட குவார்ட்டரும் கோழி பிரியாணியும் கொடுத்து கூட்டம் சேர்க்க ஆரம்பிச்சிட்டாங்களா? ஆவ்வ்வ்..
@ ராஜூ : கட்டாயம்... அவர் மேல் நம்பிக்கை இருக்கிறது
@ சங்கர் : ஒரு விம்புக்கு எழுதின பதிவு இது சகா
@ கேபிள்ஜி : ரொம்ப நன்றி... உங்கள் பெருந்தன்மைக்கு
@ தாரணி ப்ரியா : ஒரு விம்புக்கு எழுதின பதிவு இது அக்கா .... தமிழ்மணத்தில் vote பெறவே எழுதினது
@ கார்க்கி : எப்புடிருந்தாலும் நாங்க விட மாட்டோம் ல ....
@ வால்ஸ் : டைப் பண்ணி கொண்டு இருக்கும் போது டக்குன்னு தோனுச்சு ...
@ கலையரசன் : ஹி ஹி ஹி ... வாவ் சும்மா இருங்கப்பா .... அவரே சும்மா இருந்தாலும் நீங்க கிளப்பி விட்டுருவிங்க போல் இருக்கே
@ வால்ஸ் : கேட்டு இருக்கலாம் ... அந்த நேரத்தில் அது தான் தோனுச்சு...
@ நைனா : ரைட்டு
@ கார்த்திக் : ஆமாம்பா
Post a Comment