====================================
ஆட்டோவில் செல்ல முடிவெடுத்தேன். வழக்கமாய் பஸ்யில் தான் பயணம் செய்வேன். சிறிது தனிமை தேவைப்பட்டது, ஏன் என்று தெரியவில்லை.
"திருவெறும்பூர்...."
"திருவெறும்பூர்ல எங்க........"
"சாந்தி தியேட்டர் எதிருல..... கரை மேல ஒரு கிலோ மீட்டர் போகனும்...."
"250 ....."
(-)
மன்னார்புரம், அந்த பழைய RTO ஆபீஸ் கட்டடத்தை பார்த்த உடனே ........
"நானும் திருச்சில கொஞ்ச நாள் இருந்திருக்கேன்..... தெரியுமா?"
"நிஜமாவா ......"
"அப்பா, திருச்சி RTOல கொஞ்ச நாள் இருந்தாரு....."
சிரித்தேன். மேற்கொண்டு நடந்த சம்பாஷனை நினைவுக்கு வந்ததால்.
(-)
ஜமால் மொகமத் காலேஜ்யை கடக்கும் போது. டூ வீலரில் தாயின் மடியில் அமர்ந்து இருந்த குழந்தையை பார்த்து சிரித்தேன், பிறகு குழந்தையின் தாய், தந்தை எல்ல்லோரையும் சேர்த்து ஒரு குடும்பமாக பார்த்த பொழுது ஏன்னோ காணமல் போன சோகம், மனதின் விலாசம் அறிந்து, மனதிற்குள் குடி வந்தது.
(-)
குளித்த பின்பு குளியலறையில் இருந்த கண்ணாடியில் இருந்த நீர் துளிகளை துடைத்த பின் பார்த்தேன். அவள் என் தோள் மேல் சாய்ந்து, நின்று கொண்டு இருந்தாள்.
அவளது மேனியை சற்று வருடி, முகத்தை முடிருந்த முடியை பின் தள்ளி விட்டு, முத்தம் கூடுக்க உதடுகளை குவித்து, முத்தமிட போகும் முன், அவள் வெட்கத்தில் கண்களை முடி கொண்டாள். அதை ரசித்த படியே நின்று கொண்டு இருந்தேன்.
கொஞ்ச நேரம் போன பின், அவள் என் காதுகளை பிடித்து..... கொஞ்சும் குரலில்....
"இன்னும், என்ன செய்ஞ்சு கிட்டு இருக்க .....?"
நீ வெட்கப்படும் அழகை ரசித்து கொண்டு இருந்தேன் என்று சொல்லும் முன்.
அவள் இன்னும் கோவமாக கண்களை திறந்து,
"இன்னும் என்ன செய்ஞ்சு கிட்டு இருக்க....." என்று கத்தினாள்.
நான் திடுக்கிடுது பார்த்த பொழுது, அவள் இல்லை.கற்பனை.
வெளியே கதவை பலமாக தட்டிய படி அப்பாஸ் கத்தி கொண்டு இருந்தான்.
"இன்னும் என்ன செய்சு கிட்டு இருக்க....."
தொடரும்
5 comments:
கோலங்கள் முடிந்ததென்று வருத்தப்படுபவர்கள், இதை படித்து ஆறுதல் பெறவும்!
இதுக்கு எண்டு கார்டு எப்ப தல!
இது எப்போ ஆரம்பிச்சீங்க தல? நான் இன்னும் படிக்கவே ஆரம்பிக்கலை. பொறுமையா மொத்தமும் படிச்சிட்டு கமெண்டுறேன். :))
டைட்டிலே ஆயிரம் கத சொல்லுதே !
ஒரு குல்பி ஐஸ் காரன் கேரக்டர உள்ளார ( கதைக்குள்ளார) நொழைச்சிட்டா சூப்பரா இருக்கும் தல !
@ வால்ஸ் : ஏனிந்த கொலை வெறி ..... அடுத்த பக்கத்தில் முடியும் .... இனிமேல் கதைகள் நிறைய எழுத போறேன்.....
@ கார்த்திக் : புரியுது .... உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு
@ ராஜன் : என்னை வைச்சு காமெடி கிமெடி பண்ணலையே ????
//என்னை வைச்சு காமெடி கிமெடி பண்ணலையே ????//
ச்ச! ச்ச !
Post a Comment