Pages

Tuesday, December 22, 2009

தற்கால அடிமைகள் -4

நான் எதற்கு கடந்த இரு பதிவுகளிலும் பிராண்டு, பிராண்டு ன்னு சொல்லி கொண்டு இருந்தேன் என்றால் பொதுவாய் நான் கவனித்து இருக்கிறேன் சிலர் சிலரிடம் பிரண்டுயை பற்றி பேசும் பொழுதெல்லாம் அதை பற்றியே விவரிப்பு செய்வதற்கே நேரம் போய் விடும். அதற்க்கு தான் எனக்கு தெரிந்த வகையில் சொல்லி கொண்டு இருந்தேன்.

மேலும் நான் சொல்ல வந்த விஷயத்தை வார்த்தைகளில் சொல்ல தெரியாமல் தடுமாறி கொண்டு இருந்தேன். கொஞ்சம் குழம்பி தான் போயிருந்தேன், எதை பற்றி சொல்லுவது என்று.

பொதுவாய் நீங்கள் ஒரு விஷயத்தை கவனித்து இருந்திர்கள் என்றால் நம்ம நாட்டில் பொருளாதார மண்டலங்கள் அமைக்கும் அரசு (அதுவும் பெரும்பாலும் ஐடி கம்பனிகள்) நாட்டின் முதுகு எலும்பான விவசாயத்தின் மேல் அந்த அளவுக்கு அக்கறை காட்டுவது இல்லை.

நான் கொஞ்ச நாள் முன்னாடி கொரியா நாட்டு செய்தி ஆவண படத்தை பார்த்தேன். (வேறு மொழி என்பதால். நான் SUB TITLE களை கொண்டு தான் புரிந்து கொண்டேன்). அது என்ன சொலுச்சு என்றால் நகரத்தில் வாழும் நடுதர மக்கள் கொஞ்சம் பேர் சேர்ந்து, மொத்தமாய் காசு போட்டு, ஒரு விவசாயிடம் தந்து, அவனது மகசூல் இன்னும் அதிகமாக வர உதவி செய்றாங்க. பதிலுக்கு அந்த விவசாயி தனக்கு வரும் லாபத்தில், அந்த மக்களின் முதலிட்டுக்கு ஏற்பஅவர்களின் பங்கை பிரிந்து தருகிறான். மேலும் சிலருக்கு பொருளாகவும் தருகிறான். அதை அவர்கள் சந்தையில் நேரடியாக விற்பனை செய்து, கொஞ்சம் அதிகமாக காசு வந்தால், விவசாயிக்கும் தருகிறார்கள். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் இதில் அந்த நாட்டு அரசாங்கத்துக்கு எந்த பங்கும் இல்லை. பொது மக்கள் எல்லாரும் தங்களின் சுய முயற்சியில் இதை செய்றாங்க. இதனால் இரண்டு பேருக்கும் வருமானம். இதற்க்கு என்று DOCUMENTATION கூட பண்ணுறாங்க.


நான் அப்படியே அசந்து போயிட்டேன். செம PROCESS . இந்த மாதிரியான திட்டங்களை ஏன் நமது இந்திய அரசாங்கம் PROMOTE செய்வது இல்லை என்ற கேள்வி எனக்குள் வந்தது.

ஆனால் நமது அரசாங்கம் செய்வது என்ன ???

அந்த காலத்தில் இயற்க்கை விவசாயத்தை கொண்டு தான் நம் முன்னோர்கள் செழுமையாக வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இப்பொழுது அரசு உர கம்பெனிகளின் BRAND PROMOTER யாக தான் செய்யல் படுகிறது.

கொஞ்சம் நாள் முன்னாடி நண்பர் ஒருவரிடம் பேசி கொண்டு இருக்கும் போது, அவர் சொன்னார் உரத்தின் தர கட்டுப்பாடு பற்றி எல்லாம் அரசு அதிகம் கவலை படுவது இல்லை. விவசாயிகளுக்கு அவை பரிந்துரை செய்ய படும் முன்பு சரியான முறையில் பரிசோதனை செய்ய படுகிறதா என்பது கேள்வி குறி தான் என்று சொன்னார்.


இது எல்லாம் விவசாயத்தை படித்தவர்கள் நிறைய பேர் இருந்தால் ....விவசாயிகளுக்கு இது எல்லாம் எடுத்து சொல்லி இருப்பாங்க.

ஆன, நாட்டின் முதுகு எலும்பு என்று சொல்ல படுற விவசாயம் சார்ந்த படிப்புகளுக்கு அரசாங்கம் பெருசா ஒன்னும் செய்யவில்லை.... இன்ஜினியரிங், மெடிகல், ஆர்ட்ஸ் காலேஜ் இருக்கும் அளவுக்கு விவசாய கல்லூரிகள் இருப்பதில்லையே.

விவசாய படிப்புகளுக்கான DEMAND யை ஏற்படுத்த நமது அரசாங்கம் தவறி விட்டது. விவசாயம் படித்தால் குறைந்த பட்சம் நல்ல வாழ்க்கை முறை வாழ முடியும் என்ற நிலை வர வேண்டும். விவசாயம் சார்ந்த நிறைய தொழில் வாய்ப்புகள் இருக்கிறது, அதை பற்றி எல்லாம் பெரியதாக விழிப்புணர்வு இல்லை மக்களிடம்.


என்னை கேட்டால் பள்ளிகளில் சயின்ஸ் குரூப், கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப் போன்று சில SELECT பண்ணின பள்ளிகளில் விவசாயத்தையும் ஒரு குரூப் யாக கொண்டு வர வேண்டும். அதில் முழு முழுக்க விவசாயம், பிறகு அதனை சார்ந்த துறைகள், வணிகம் போன்ற பாடங்களும் அதில் இருக்க வேண்டும்.

விவசாயத்தை சார்ந்த மாநாடுகள் மக்களுக்கு புரிற மாதிரி நடத்த வேண்டும். பேசும் மொழிக்கு மாநாடு நடத்தும் தமிழ் அரசு, விவசாயத்துக்கு நடத்தினால் நல்ல இருக்குமே. அந்த மாநாடுகள் முக்கியமாக துறை சார்ந்த மாநாடாக இல்லாமல், பொது மக்களிடம் விவசாயத்துக்கான DEMAND CREATE பண்ணும் மாநாடாக இருக்க வேண்டும். (விவசாயத்துக்கு என்று நம் தான் ஒரு பண்டிகையே கொண்டாடுகிறோம்)

தொடரும்

13 comments:

வால்பையன் said...

விவசாயத்தை மூட்டை கட்டிட்டு எல்லோருக்கும் மண்ணை திங்க கொடுங்கப்போவுதாம் நம்ம அரசாங்கம்!

கிருஷ்ண மூர்த்தி S said...

மேவி!

விவசாயத்தைப் பற்றிப் பேசுவது என்று ஆரம்பித்தால், விவசாயி சந்திக்கும் பிரச்சினை எதையாவது எடுத்துக் கொண்டு ஆரம்பியுங்கள்!
இன்னமும் இந்த நாட்டில், பெரும்பான்மையான மக்கள் விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்களைத் தவிர வேறு ஒன்றையும் கற்றுக்கொள்ளவோ, மாற்றத்திற்குத் தயார் செய்யும் அடிப்படைக் கட்டமைப்போ(கல்வி, நவீன முறைகளோடு பரிச்சயம் இப்படி) இந்த அறுபது ஆண்டுகளில் வளர்ச்சி பெறவே இல்லை என்பது கசப்பான உண்மை.

புறக்கணிக்கப்படும் பெரும்பான்மை மக்களது நிலையைச் சொல்வதற்கு பிராண்டில் இருந்து ஆரம்பித்தே ஆக வேண்டுமா என்ன?

அடுத்தது, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்! தகவல் தொழில் நுட்பத்துறையின் மீது மட்டும் அரசு காதல் கொண்டு ஓடோடிச் சென்று ஊட்டிக் கொண்டிருப்பது போலச் சித்தரித்திருப்பதுமே கூட, ஒரு வகையில் தவறானது!

அரசின் தயவு இல்லாமலேயே தான் இந்தத் துறை, தன்னுடைய திறமை, போட்டியைச் சந்திக்கும் திறன், குறைந்த விலை என்று பல்வேறு காரணங்களால், முன்னுக்கு வந்தது!
நீங்கள் சொல்வது போல அரசின் பரிவு ஆரம்பத்திலேயே கிடைத்திருந்தால், இந்தத் துறையும், ஆரம்பத்திலேயே கருகிப் போயிருக்கும்!

ஆக, பொருளாதாரம் ஏதோ ஒரு திசையில் வளர்வதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அங்கேயும் கூட ப்ராண்ட் பற்றிய சம்பந்தம் எங்கே வருகிறது?

தொடர்ந்து கேள்விகள் எழுப்புவது உங்களைச் சீண்டுவதற்காகவோ, உசுப்பேத்தி விடுவதற்காகவோ இல்லை!

தமிழ் வலைப்பதிவுகளில்,கொஞ்சம் வித்தியாசமான தலைப்பு, பொருளில் எழுத ஆரம்பித்திருக்கும் உங்களுக்கு, சில ஆரம்ப படித்தரங்களைச் சுட்டிக் காட்ட மட்டுமே!

விவசாயத்தை, விவசாயக் கல்லூரிகளும், அரசும் தான் சொல்லிக் கொடுக்க முடியும் என்று யார் சொன்னது?

சின்ன ராசு என்று நினைக்கிறேன்! கே.பாக்யராஜ் எடுத்த படம், அதில் ஐஸ்வர்யா, விவசாயக் கல்லூரி மாணவி! நாற்று நடுவது எப்படி என்று விவசாயிகளுக்குச் சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கும் சீன் நினைவுக்கு வருகிறதா?

ஒரு வார்த்தை--

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
வீணில் உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்.
விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம்
வெறும் வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோம்

வெறும் வீணர்களாய் இருக்கும் அரசியல் வாதிகளுக்கு நீர்பாய்ச்சி உடலம் நோக மாட்டோம் என்பதில் இருந்து ஆரம்பமாகட்டும்!

மேவி... said...

"விவசாயத்தை, விவசாயக் கல்லூரிகளும், அரசும் தான் சொல்லிக் கொடுக்க முடியும் என்று யார் சொன்னது?"


நீங்கள் சொல்வது முற்றிலும் சரி தான் சார்...ஏற்று கொள்கிறேன். சுயமாக விவசாயி குடும்பத்தினர் விவசாயம் கற்று கொண்டு சிறந்த முறையில் செய்யல் பட்டு வந்தனர். இப்பொழுதும் இருக்கிறார்கள். ஆனால் என் நண்பர்கள் நிறைய பேர் விவசாய குடும்பத்திலிருந்து தான் வந்து இருக்காங்க. அவங்களுக்கு மற்றும் அவங்க குடும்பத்திலிருக்கும் அனைவருக்கும் விவசாயத்தில் நம்பிக்கை போய் விட்டது. பல பிரச்சனை. அரசு மற்ற தொழிலுக்கு தரும் முக்கியத்துவம் இதற்க்கு தருவது இல்லை. இன்று பல கிராமம்களில் அடுத்த தலைமுறையினர் தங்களை போல் கஷ்ட பட கூடாது என்று ரியல் எஸ்டேட் க்கு நிலத்தை விற்று பிள்ளைகளை படிக்க அனுப்பும் அப்பாக்கள் தான் ஜாஸ்தி.

பிரண்டு எங்கே வந்தது என்று கேட்டிங்களே ????

இன்று சென்னையை சுற்றி இருக்கும் பல விவசாய நிலங்கள் வீடு மனையாக மாறி போனதற்கு பெரிய பிரண்டுகளே காரணம். அரசுக்கு தொழில் விஷயமாக பேச வரும் வெளிநாட்டு கம்பெனிகள் தங்களது பிரண்டு வலிமையை காட்டி தான் காரியங்கள் சாதித்து கொள்கிறன. வட மாநிலங்களில் பெரிய கம்பெனி அல்லது பிரண்டு எதிர்த்து நியாயமான முறையில் கூட போரட்ட முடியவில்லை ஏழை மக்களால். சின்ன அளவில் இருக்கும் அரசியல்வாதிகள் கூட காசுக்கு ஆசைப்பட்டு விலை போறாங்க.......

மேவி... said...

உங்களது மற்ற கேள்விகளுக்கு அடுத்த பதிவில் என்னால் முடியாத அளவ்வுக்கு சிறந்த விடை சொல்கிறேன்.

தங்களது கருத்துக்கள் எனக்கு மேலும் ஆர்வத்தை கூடுக்கிறது.........

தங்களது கேள்விகளே ......நான் என்னோ தன்னோ என்று படித்த சில புத்தகங்களை மீண்டும் சரி வர படிக்க தூண்டு கிறது

மேவி... said...

ஒரு கம்பெனியின் FOCUSED GROWTH ல பிரண்டுக்கு பெரும் பங்கு இருக்கிறது சார்

கிருஷ்ண மூர்த்தி S said...

"Sub Prime Crisis or Dubai debt crisis இரண்டுக்குமே ஒரு பொதுவான அம்சம் இருக்கிறது. கவனித்தீர்களா?
இரண்டிலுமே, நிலத்தின் விலையைத் தாறுமாறாக உயர்த்திக் கொண்டு, அதுவே தொழிலாகவும் வளர்ச்சியை அளவிடுகிற அளவுகோலாகவும் வைத்துக் கொண்டிருந்த போக்கே பொருளாதாரத்தைச் சரித்தது!. இங்கேயும், நம் நாட்டில் தொழில் வளர்ச்சி, உற்பத்தித் திறன், அடிப்படைக் கட்டமைப்பு இவைகளின் பலன்களை ரியல் எஸ்டேட் துறை, சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கும் போக்கு ஆரோக்கியமானது அல்ல. துபாய்க் கனவு கெட்ட கனவாக இருந்தாலுமே கூட, இந்த ஒரு பாடத்தைக் கற்றுக் கொண்டால் அது வளர்ச்சிக்கு உதவும் கருவி!"

http://consenttobenothing.blogspot.com/2009/12/blog-post_07.html

இந்தப்பதிவில் கொஞ்சம் விரிவாகவே சொல்ல முயற்சித்திருக்கிறேன் மேவீ! இது தவிர பொருளாதாரம் என்ற குறியீட்டுச் சொல்லை வைத்துத் தேடினால், இன்னம் எட்டுப் பதிவுகள் இருக்கும்.

நீங்கள் கடைசியாகச் சொல்லியிருப்பது போல விவசாய நிலங்களை விளைநிலங்களாக மாற்றியதில், கார்ப்பரேட்டுக்களின் பங்கு ஒன்றுமில்லை! ஐ டி துறை வளர்ச்சியில், வேலைவாய்ப்புக்கள் புதிதாக உருவானதும், அவர்களுடைய வருமானத்தில் பெரும்பகுதியை ரியல் எஸ்டேட் துறை சாப்பிட்டுக் கொண்டிருப்பதையும் தலைகீழாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.

இங்கே கறுப்புப் பணமும் ஊழலும் கைகோர்த்துக் கொண்டு செயல் படும் வெற்றிகரமான கூட்டணியில், இந்த வரிசைப்படி-- சினிமாப் படம் தயாரிப்பது, ரியல் எஸ்டேட், அதற்கு அப்புறம் இது அது என்று பலவற்றை வரிசைப் படுத்த முடியும்.

Brand, Focused Growth, Corporate advantage, bargaining power இதெல்லாம், ஒன்று ஒன்றாக, தனித்தனியாகப் பார்க்கப் படவேண்டியவை. சில நேரங்களில் சேர்ந்திருப்பதுபோல இருப்பதுமுண்டு. அதற்கும் பின்னால் உள்ள காரணங்களை முதலில் கண்டுகொள்ளப் பாருங்கள்!

மேவி... said...

@ கிருஷ்ணமூர்த்தி :

"நீங்கள் கடைசியாகச் சொல்லியிருப்பது போல விவசாய நிலங்களை விளைநிலங்களாக மாற்றியதில், கார்ப்பரேட்டுக்களின் பங்கு ஒன்றுமில்லை!"

பொதுவாய் பார்த்தால் ஒன்றும் இல்லை தான். சப்பை மேட்டர் யாக தான் தெரியும். ஆனால் இதற்கு தான் நான் CHAOS தியரி பற்றி கொஞ்சம் சொன்னேன். நேரடியாக இல்லாவிட்டாலும் ...மறைமுகமாக இருக்கிறது.

அரசு எல்லாம் முதலிடுகளும் ஒரே இடத்தை நோக்கி செலுத்தியதால் ....வேலை வாய்ப்பை தேடி எல்லோரும் பெருநகரங்களை நாடி வந்தார்கள் ..... வந்தவர்கள் வீடு மனையின் தேவை உற்பத்தியாக காரணனிகளாக ஆனார்கள்.

ஒரு நகரத்தை எடுத்து கொண்டால் ......இவ்வளவு தான் வளர்ச்சி இருக்க வேண்டும் இல்லாட்டி தங்காது என்று ஒரு கோட்பாடு இருக்கிறது. அப்படி அளவுக்கு மீறின வளர்ச்சி இருந்தால் பின் விளைவுகள் நிறைய இருக்கும்.


"Brand, Focused Growth, Corporate advantage, bargaining power இதெல்லாம், ஒன்று ஒன்றாக, தனித்தனியாகப் பார்க்கப் படவேண்டியவை"

இதையெல்லாம் தனி தனி கோட்பாடுகளாக இருந்தாலும் ...... ALL ROADS LEAD TO ROME என்கிற மாதிரி இவை அனைத்தும் ஒரே காரணத்துக்காக தான் உருவாக்க பட்டது.
முக்கியமா விஷயம் இவை எல்லாம் ஓன்று இல்லாமல் ஓன்று இல்லை

(தங்களின் பதிலை எதிர் பார்க்கிறேன் )

Karthik said...

keep going.. post and comments are interesting.. :)

கிருஷ்ண மூர்த்தி S said...

/அரசு எல்லாம் முதலிடுகளும் ஒரே இடத்தை நோக்கி செலுத்தியதால் ....வேலை வாய்ப்பை தேடி எல்லோரும் பெருநகரங்களை நாடி வந்தார்கள் ..... /

கேயாஸ் தியரியில் இருந்து, விவசாயம், பொருளாதாரம், இப்போது வரலாறுமே தலைகீழாகச் சொல்கிறீர்களே!

சார்லஸ் டிக்கென்ஸ் எழுதிய ஓலிவர் ட்விஸ்ட் கதையைக் கொஞ்சம் சிரமம் பாராமல் படித்துப் பாருங்களேன்!

முதல் அத்தியாயமே, தொழிற்புரட்சியின் விளைவாக, கிராமப் பொருளாதாராத்தை உடைத்து,அதன்பின் மக்கள் நகர்ப்புறங்களுக்குத் தேடிவரும் அகதிகளான கதையைத் தன்னையறியாமலேயே பதிவு செய்திருக்கிறது.

அது மாதிரித்தான்! அரசின் உதவி, அரசியல்வாதிகளின் கூட்டணி எல்லாமே தொழில்மயமானதின் பின்னால் தான் வருகிறது.

ஒன்றோடொன்று தொடர்பு உள்ளவை என்பதெல்லாம் சரி!எது முன்னால், எது முக்கியமான காரணம் என்பதில் தான் பிரச்சினையே!

இப்படி வரிக்கு வரியாகப் பதில் செய்துகொண்டேபோனால், இதுவும் ஒரு வகுப்பறையாக மாறிவிடக் கூடிய அபாயம், பின்விளைவுகள் எல்லாம் இருக்கிறது :-))

தவிர, நான் வகுப்பறையைத் தாண்டி வெகுதூரம் வந்தாயிற்று! கேள்விகள் கேட்பதோடு, தெரிந்து கொள்வதில் கொஞ்சம் சுயமுயற்சியும் கூடிய கட்டத்திற்கு வருவது நல்லது.

மேவி... said...

கேள்விகள் கேட்பது எனக்கு ரொம்ப பிடித்த ஓன்று ...... நீங்கள் எது வரைக்கும் பதில் சொல்லுவிர்களோ அது வரைக்கும் கேள்வி கேட்பேன்.
@ கிருஷ்ணமூர்த்தி :

"முதல் அத்தியாயமே, தொழிற்புரட்சியின் விளைவாக, கிராமப் பொருளாதாராத்தை உடைத்து,அதன்பின் மக்கள் நகர்ப்புறங்களுக்குத் தேடிவரும் அகதிகளான கதையைத் தன்னையறியாமலேயே பதிவு செய்திருக்கிறது"

ஐயா...... நான் சொன்னதை தான் நீங்களும் சொல்லி இருக்கீங்க .....

கிருஷ்ண மூர்த்தி S said...

/நான் சொன்னதை தான் நீங்களும் சொல்லி இருக்கீங்க/

அப்படியா மேவீ! வண்டிமாட்டை, வண்டிக்கு முன்னால் பூட்டுவதற்கும்,வண்டிக்குப் பின்னால் பூட்டுவதற்கும் வித்தியாசம் தெரிந்துகொள்ளவேண்டும் என்று சொன்னதாகத் தான் நினைவு!

நீங்களோ, நானும் வண்டி மாடுன்னு தானே சொன்னேன் என்கிறீர்கள்! இரண்டும் ஒன்றா?

கேள்விகள் கேட்பதன்றி வேறொன்று அறியேன்னு வசனம் நாகேஷ் ஒருத்தர்மட்டும் பேசும்போது ரசிக்கிறமாதிரி இருந்தது! அதையே எல்லோரும் கிளிப்பிள்ளைகள் மாதிரிப் பேசிக் கொண்டிருந்தால், விடைகளைத் தெரிந்துகொள்வது எப்போது?

முதலில், கேள்விகளின் உபயோகமே விடைகளைத் தேடுவதில் தான் என்பதும், அதற்குச் சொந்த முயற்சியும் மிக அவசியம் என்பதையும் ஏற்கெனெவே சொல்லியிருந்தேனே!

கேள்விகளைச் சரவெடிகளாக மட்டுமே வெடித்துக் கொண்டிருப்பது சிறுபிள்ளைத்தனம்! கொஞ்சம் அதையும் தாண்டி, விடைகளைத் தேட முயல்வோமே!

புதுவருடத்திற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் மேவீ!

மேவி... said...

யானை முன் இருந்தும் சுமையை இழுக்கும் ....பின்னாடி இருந்தும் சுமையை தள்ளும் ....

கார்க்கிபவா said...

கியாஸ் தியரி எல்லாம் பேசினால் உலகில் நாளை நடக்கும் எல்லா கிரிமனல் செயலுக்கும் இந்த பதிவு கூட காரணமாய் அமையலாம். அதை விடுங்க.

கிருஷ்ணமூர்த்தி சொல்வதை யோசிங்க. புரிதலில் தவறு இருக்குமேயானால் அதைப் பற்றிதான் கேள்விகள் வர வேண்டும். அபப்டியில்லாமல் நம்ம ஸ்டேண்டுக்கு ஆதரவான கேள்விகள் எழுப்பி பயனில்லை.

சீக்கிரமே இங்கே விவசாயம் கூட பிராண்டட் கார்பரேட்களால் நடத்தப் படப்போவதை காணும் பாக்கியம் நமக்கு உண்டு

Related Posts with Thumbnails