Pages

Wednesday, December 23, 2009

மேவி .....ஐ லவ் யூ - 2

ST ANNE 'S GROUND யை தாண்டி போனால் LAWRENCE HALL பக்கம் இருக்கிறது பெண்கள் விடுதி. அவர்கள் சொன்னது சின்ன வேலை தான். விடுதி ஜன்னல் பக்கமாய் போய் ஹாரிதாவின் ஹால் டிக்கெட்யை எடுத்து வர வேண்டும். அது அவள் டேபிளில் தான் இருக்குமாம்.

ஜன்னல் அருகே போன்னேன்.



மறுநாள்.

கணக்கு பரீச்சையில் சரியாக எழுத முடியவில்லை. எல்லாம் மறந்தது போல் : எவ்வளவு நினைவு படுத்தி பார்த்தும் ஞாபகம் வரவில்லை. கண்களை மூடினால் அதே காட்சி தான்.

ஒரு மணி நேரம் முன்னாடியே answer - sheet யை தந்து விட்டு வெளியே வந்தேன்.


= = = = = = = = = =



மே 1999

"இல்ல நான் hotel management தான் படிப்பேன் ......."

"டேய் சொன்ன கேள்ளுடா....." என்றார் அப்பா.

"அது எல்லாம் முடியாது .....என் வாழ்க்கை,நான் தான் முடிவு எடுப்பேன் ......" என்று நான் சொல்லி முடித்த மறுகணம் பெரிய அண்ணன் வேகமாய் வந்து பலமாய் ஒரு அரை விட்டார்.



= = = = = = = = = =


ஜூன் 1999

காரில் பயணித்து கொண்டு இருக்கிறேன். காருடைய நிழல் நீளமாக இருந்து காரின் உள்ளே ஒளிந்து கொண்டு இருந்தது. சென்னை நோக்கிய பயணம். இரண்டு கார்கள்.

பெரிய அண்ணன் காரில் நான் இருந்தேன். கூடவே அண்ணி. சின்ன அண்ணன் அந்த காரை ஒட்டி கொண்டு இருந்தார்.


கதவை யாரோ தட்டுறாங்க. ......

வந்தது பக்கத்து ரூம் எம்பிஏ பசங்க. ஏதோ எகனாமிக்ஸ்ல
ஏதோ சந்தேகமாம். (என்ன கொடுமை சார் இது).ம்ம்ம் மணி 7 :30 ஆகிருச்சு. போய் சாப்பிடனும். வழக்கமாய் இந்திரா காந்தி சிலை பக்கத்தில இருக்கிற அரிய பவன்ல தான் சாப்பிடுவேன். கணபதி மெஸ் முடினத்தில் இருந்து இங்கே தான், அதுவும் பக்கத்து ரூம் பசங்க தான் சொன்னங்கன்னு போய் சாப்பிட ஆரமிச்சேன். வர வர அங்கேயும் டிப்பன் நல்ல இல்லை. அதனால் சேகர் மஹால் பக்கம் கோவை மெஸ்ன்னு ஏதோ புதுசாய் வந்து இருக்காம். இன்னைக்கு அங்க தான் ஜாகை. போயிட்டு வந்து கதையை தொடருகிறேன்.


மணி 8 : 20 .

ரூம்க்கு இப்ப தான் வந்தேன். கோவை மெஸ் பரவல. ஆன முத நாளே ரொம்ப கேள்வி கேட்டுட்டாங்க.

"வொர்க் பண்ணுரிங்க சார் ..?"

"ஆமாங்க....."

"என்ன சம்பளம் வரும் நமக்கு ??"

சொன்னேன்.

"அவ்வளவு காசுக்கு ஆபீஸ்ல என்ன பண்ணுவிங்க சார் ......."

நான் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன். வழக்கமாய் ஆக மாட்டேன் ஆனால் பசி நேரத்தில் இப்படி அவன் கேட்டதால் ....

"ஆபீஸ் போன உடனே பேண்ட்யை கழுட்டி, பின்னாடி எண்ணையை தடவிக்கிட்டு ....குனிஞ்சு நிக்கணும்...... "

"என்ன சார் ...இப்புடி சொல்லுரிங்க ...."

"யோவ் ...முதல டிப்பன் வைச்சுட்டு, எது வேணாலும் கேள்ளு சொல்லுறேன். மனுஷன் நாள் புல்லா வேலை பார்த்துட்டு பசியோடு வந்தா, நிக்க வைச்சு கேள்விய கேக்குறிங்க ....."



ஜன்னல் திறந்து விட்டேன் ...நம்ம கற்பனை குதுரை ஓட வசதியா இருக்கும்ல. கதைக்குள் போறதுக்கு முன்னாடி நம்ம ஹீரோவை பற்றி எனக்கு மட்டும் தெரிஞ்ச உண்மையை சொல்லியாகனும். ஹீரோ பிறந்த பொழுது என்னசுன்ன ....

"என்னங்க ...பாருங்க உங்க பையன் பிறந்த உடனே உச்சா போறேன்.... அவனை டாக்டர் க்கு தான் படிக்க வைக்கனும்" என்றாள் நம்ம ஹீரோட அம்மா. உடனே அதற்கு கவுன்ட்டர் தந்தார் ஹீரோட அப்பா ....

"இல்லடி...நல்ல பரு உச்சா ஓட ஆய் போறான்....அதனால் அவனை ENGINEER யாக ஆகுவேன்..."


சரி கதைக்குள் போகலாமா ???


இது வரைக்கும் யாருமே 95 % க்கு குறைந்தது இல்லை .....அதனால் REC யா IIT யா என்ற கேள்வி தான் எழும், எதொன்றில் அட்மிஷன் கிடைத்து விடும்; அதனால் எல்லோரும் ரிசல்ட் வரும் முன்னரே கூடி ஓர் கொண்டாட்டத்தை அனுபவிக்க ஓன்று சேர்ந்து விடுவார்கள். இந்த வருடம் எனக்காக ஓன்று சேர்ந்தனர்; கொண்டாட்டம் இல்லை. 78 % தான்.

புழுவை போல் பார்க்க பட்டேன். ஆனால் நான் அடிக்கடி கண்களை முடி ......கொடைக்கானல் குளிரில் LADIES ஹோச்டேல் ஜன்னல் பக்கம் நின்று கொண்டு இருந்தேன்.

குடும்ப கெளரவம். என் கனவு கனவாகவே போய்விட்டது.

சென்னை வந்து சேர்ந்தோம் ...... என்னவோ சாபத்தில் பிடியில் இருக்கும் ஓர் வாகனத்திலிருந்து இறங்கியது போல் ஓர் உணர்வு. நான் சேர போகும் கல்லூரி முன்பு இருந்தோம்...

நான் முதல் முறை கல்லூரிக்குள் அட்மிஷன்க்காக சென்ற சமயம். அது வரைக்கும் நகர பெண்களை பற்றி கேள்விப்பட்டு தான் இருக்கிறேனே தவிர பார்த்ததில்லை. அப்பொழுது தான் சென்னைக்கு முதன் முறையாக வந்தேன், உண்மையில் பெண்களில் அத்தனை விதமான அழகு உள்ளது என்று அன்று தான் அறிந்தேன். அப்பாஸ், யுவனோடு கல்லூரியிலும் படிக்க முடியவில்லையே என்ற வருத்தம் போனது . தேவதைகளுடன் படிக்கும் வாய்ப்பு கிடைத்த பொழுது சனியன்களை பற்றி என்ன கவலை. LIFE ல FIGURE வந்த உடனே நண்பனை CUT பண்ணி விடுவது தானே தமிழ் நாட்டின் பாரம்பரிய வழக்கம்.

எதிரில் இருக்கும் ஹோட்டல்ல சாப்பிட்டு விட்டு வந்தோம்.

SRENT ENGINEERING COLLEGE ..... கல்லூரியின் பெயர் சொன்னது பளபள எழுத்துக்கள். பணக்கார கல்லூரி, பணம் படைத்தவர்களுக்கான கல்லூரி.

குடும்பத்தை பொறுத்த வரைக்கும் , குடும்ப கௌரவத்தை மேம் மேலும் தொடர செய்யும் இடம்.

கனவுகளை பொசுக்கிய இடம் எனக்கு. சிந்தனைகள் பல எண்ண காற்றலையில் .....மனதிற்குள் குழப்பம்.


பெரிய அண்ணனுடைய குரல் : கேட்ட உடனே நினைவுகள் திரும்பின.

அண்ணன் இருக்கும் இடம் நோக்கி சென்ற பொழுதில் தான் கவனித்தேன் ...... அட்மிஷனுக்கு வந்திருந்த பெண்கள் அழகாய், தேவதைகளாய். போட்டிக்கு அப்பாஸ் இல்லை, இல்லாவிட்டால் பெண்களுடன் என்னை பேச விடாமல் அவனே எல்லோரையும் கவர்ந்து இருப்பான். அவன் இங்கு சேர்தது ஓர் வகையில் சந்தோஷமே. பிகர்கள் இருக்கும் இடத்தில நட்புக்கள் எல்லாம் அந்நிய நாட்டு சதிகளே.எப்புடியும் படிப்பு முடிவதற்குள் இரண்டு மூன்று பிகர்களை கரெக்ட் பண்ணிவிட முடியும் என்ற நம்பிக்கை, அப்பாஸ் என்னுடன் வந்தால் இதெல்லாம் முடியாது.

"டேய் ....அப்பா உன்னை கூப்பிட்டார் ..."

"என்ன ..அப்பா?"

"அமான் அங்கிள் போன் பண்ணினார்டா .....அப்பாஸையும் இங்க தான் சேர்க்க போறாராம் .....சந்தோசம் தானே ?"

நான் சும்மா ஒப்புக்கு சிரித்தேன்.

= = = = = = = = = = = =
செப்டம்பர் 1999

"பேண்ட்யை கழட்டுரா ......"

வகுப்புகள் ஆரமித்து சில நாள் சென்று இருக்கும். விடுதி வாழ்க்கை எனக்கு ஒன்றும் புதுதில்லை என்பது சிக்கிரம் ஒத்து போனது. இரவு நேரங்களில் சாப்பிட்ட பின் சூடாக பால் குடிப்பது எனக்கு பழக்கம். அப்படி கூடிய வெளிய சென்று விட்டு உள்ளே வரும் பொழுது தான் சீனியர்களிடம் மாட்டி கொண்டேன்.

ரொம்பவும் ஸ்ட்ரெஸ் பண்ணினாங்க. ரொம்பவே பொறுமை காத்தேன். ஓர் கட்டத்தில் முடியவில்லை.

பிரின்சிபால் ரூம்.

பிரின்சிபால். டீன். வார்டன். சப்-இன்ஸ்பெக்டர்.

அதற்குள் தகவல் கிடைத்து. பெண்களும் விடுதியிலிருந்து வந்து இருந்தனர். என்னையும், அப்பாஸையும் சுற்றி ஏதோ அரசியல் நடந்து கொண்டு இருந்தது. காலேஜ்க்கு புதியவர்கள் என்பதால் எங்கள் பேச்சு எடுபட்டது.

ஆனால் இதையெல்லாம் விட ......பழகிய பெண்ணுடைய முகத்தில் தான் என் முழு கவனமும் இருந்தது.

அவளை நான் ஏற்கனவே ஓர் முறை ஸ்கூல்ல பார்த்து இருக்கிறேன். கணக்கு பரீச்சைக்கு முந்திய இரவில்..... ஆனால் இந்த வாட்டி அவள் உடைகளோடு இருந்தாள்.


தொடரும்

11 comments:

hiuhiuw said...

//தொடரும்//


அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ் !

மேவி... said...

@ rajan : yen intha kolai veri???

hiuhiuw said...

பயமா இருக்கு தல

மேவி... said...

@ rajan : yen appadi???

கார்த்திகைப் பாண்டியன் said...

முன் பின் எதுவுமில்லாத நவீனத்துவ குழப்பக் கதை எழுதிக் கொல்லுறீங்களே மேவி..

MT said...

limit the number of posts per page.. takes time to load.

மேவி... said...

@ karthi : colour pattern yai vaichu padichu parunga...


@ mt : pannitten

தாரணி பிரியா said...

என்ன மேவி இது ஒண்ணியும் புரியலை :(

மேவி... said...

@ thaarani priya : app naan ilakkiyavathi aagittene????


(romba simply yaga thane eluthi irukkiren )

மேவி... said...

மக்களே ...இப்ப வந்து பாருங்க ...கொஞ்சம் மாற்றி இருக்கிறேன் கதையை

ஹேமா said...

தொடருங்க....பார்க்கலாம் என்ன சொல்ல வாறீங்கன்னு !

Related Posts with Thumbnails