Pages

Sunday, December 20, 2009

தற்கால அடிமைகள் -2

நான் ஏற்கனவே இந்த தலைப்பில் எழுதிருக்கிறேன். மீண்டும் ஓர் முறை துறை சார்ந்த பதிவு எழுத வேண்டும் என்ற ஆசை வந்த பொழுது, இதை விட சிறந்த தலைப்பு எனக்கு தோன்றவில்லை.

அது என்ன தற்கால அடிமைகள். இந்த தலைப்புக்கும் நமது வாழ்க்கை முறைக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. நமது தினசரி வாழ்வில் நாம் பயன்படுத்தும் பொருட்களில் பலவற்றின் தேவை நமக்கு முன் வாழ்ந்த தலைமுறையின் மேல் வலுகட்டயமாக திணிக்க பட்ட ஒன்றாகும். பல காலங்கள் முன் மனிதன் இயற்கையோடு ஒற்றி வாழ்ந்த நாட்களில், இப்பொழுது இருக்கும் பல நவீன வசதிகளின் தேவை இருந்ததே இல்லை.

இங்கு நான் முதலாளித்துவத்தின் அடிப்படை concept ஒன்றை சொல்கிறேன். அதாவது ஒரு பொருளின் தேவையை உண்டாக்க ; மற்றொரு பொருளுக்கான தேவையை உற்பத்தி செய்வது. இதை CLUSTER MARKETING என்று சொன்னால் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

அது என்ன cluster மார்க்கெட்டிங் ????

அதாவது இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட பொருள்கள் இடைய இருக்கும் ஒரு பொதுவான விஷயத்தை வைத்து தேவையை உண்டாக்குவது. DEMAND CREATION . BRANDING யின் அடிப்படை.

இதை சுலபமாக புரிய வைக்க ..........

மின்சாரம் கண்டுபிடித்த பின், அதற்க்கான தேவைகள் உருவாகவில்லை. பிறகு மின்சாரத்தால் இயங்கும் பற்பல சாதங்கள் கண்டுபிடித்த பிறகு தான் மின்சாரதுக்கான தேவை கொஞ்சம் கொஞ்சமாக துளிர் விட ஆரமித்தது.

இதை இன்னும் சுலபமாக புரிய .......

இந்திய அரசாங்கம்.... பற்பல manufacturing units க்கு சலுகை தருவது ...... அவர்கள் மின்சாரதுக்கான தேவையின் உற்பத்தி காரணிகளாக இருப்பதால் தான். FAN MIXEE GRINDER போன்ற பொருட்களின் உற்பத்தி தொழிற்சாலை என்றால் கொண்டாட்டம் தான்.
எப்புடி என்றால்..... அந்த தொழிற்சாலை உற்பத்தி செய்யும் ஒவ்வொரு சாதனத்தின் பயன்பாடும், அதை வாங்கும் நபர்களை இன்னும் கொஞ்சம் மின்சாரத்தை உபயோக படுத்த வைக்கும்.

சரி. தொழிற்சாலையின் மின்சார பயன்பாடும், வீடுகளில் மின்சாரத்தின் பயன்பாடும் ஒன்றாகுமா ????

அந்நியன் படத்தில் ஒரு டயலாக் வரும்... ஞாபகம் இருக்கா ??

ஒரு கோடி ஐஞ்சு பைசா ......

புரியவில்லை என்றால் ...... நம்ம தமிழிலையே ஒரு பழமொழி இருக்கு.... "சிறுதுளி பெரு வெள்ளம்"

ஒவ்வொரு வீட்டிலும் மின்சாரதுக்கான சின்ன சின்னதாய் தேவையை உற்பத்தி பண்ணினால்...... ஆயிரம் வீடுகளில் மின்சார பயன்பாடு எவ்வளவு வரும்..... அப்பொழுது ஒரு நகரத்தில் .... ஒரு நாட்டில் ....... (நீங்களே கணக்கு போட்டு பார்த்துகோங்க, ஏனென்றால் நான் கணக்கில் ரொம்பவே சுமார் ரகம்)
இந்த மாதிரியான முறைகள் ஏன் வந்தது என்று பார்த்தால் ......

நாட்டை நிர்வகிக்க காசு வேண்டாமா .........

சரி. ஆன இப்ப யாரு நாட்டை நிர்வாகம் செய்யுறாங்க..எல்லோரும் பணத்தை திருட தான் செய்றாங்கன்னு சொன்னால்....

அதற்க்கு என் பதில் ......

அரசியல்வாதிகள் கொளையடித்து போக மிச்சம் இருக்கும் காசில் தான் நாட்டின் நிர்வாகத்திற்கு.....

நாட்டை நிர்வாகிக்க போதுமான காசு இருக்கிறதா என்று எப்படி தெரிந்து கொள்வது??
அதற்க்கு தானே தகவல் கேட்டு அறியும் சட்டம் இருக்கிறது என்று யாராச்சு சொன்னால் ...... சந்தேகமே வேண்டாம், அவர்களுக்கு வடிவேலுவிற்கு பின் நல்ல எதிர்காலம் இருக்கிறது. சில விஷயங்களில் அரசாங்கம் ரகசியம் காக்க வேண்டும். ஒரு திட்டத்தை முடிக்க ஒதுக்க பட்ட காலத்தையும் தண்டி போகிறதா ??? அதற்க்கு ஒரே ஒரு காரணம் தான். போதுமான நீதி இல்லாதது தான்.

அரசு கிட்ட காசு இல்லாட்டி ஆயிரம் காரணம் இருக்குமில்லையா ???? ஆமாம் கட்டாயமான முறையில் இருக்கும். அத்தனை காரணங்களுக்கும் முலம் சரியான நிர்வாகம் அல்லது சரியான தலைமை இல்லாதது தான்.
சரி இது எல்லாம் பொது மக்களை எப்படி பாதிக்கும் ???

கொஞ்சம் நாட்களுக்கு முன்னாடி கத்திபாரா மேம்பாலம் கட்டினாங்கல. அப்பொழுது சரியான மாற்று வழிகளை ஏற்பாடு செய்யாததால் .... TRAFFIC JAM அதனால் எரி பொருள் வீண், அதற்க்கு செலவு செய்த காசு வீண், அதிலிருந்து வந்த புகையை சுவாசித்த சிலருக்கு உடல் நல கேடு. MENTAL TENSION சிலருக்கு, அதனால் அவர்கள் எடுத்த முடிவுகளால் வந்த இழப்பு........ இன்னும் சொல்லி கொண்டு போகலாம். இந்த மாதிரியான DIRECT மற்றும் INDIRECT AFTERMATHS களை பற்றி படிக்கவும், ஆராயவும் மிகவும் உதவியாய் இருப்பது CHAOS THEORY .

இதை தான் கமல்ஹாசன் அவரது படத்தில் சொன்னார்...... அது என்ன எது ன்னு கூட பார்க்காமல் கிண்டல் அடித்து தள்ளிட்டாங்க. சரியாக யாராச்சு ஊடகதில் சொல்லி இருந்தால் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கும்.


தொடரும்....


8 comments:

க‌ரிச‌ல்கார‌ன் said...

//TRAFFIC JAM அதனால் எரி பொருள் வீண், அதற்க்கு செலவு செய்த காசு வீண், அதிலிருந்து வந்த புகையை சுவாசித்த சிலருக்கு உடல் நல கேடு. MENTAL TENSION சிலருக்கு, அதனால் அவர்கள் எடுத்த முடிவுகளால் வந்த இழப்பு........ இன்னும் சொல்லி கொண்டு போகலாம். இந்த மாதிரியான DIRECT மற்றும் INDIRECT AFTERMATHS களை பற்றி படிக்கவும், ஆராயவும் மிகவும் உதவியாய் இருப்பது CHAOS THEORY .//

இன்னும் சொல்லு த‌லைவா

மேவி... said...

@ karisal : solluren thala

Karthik said...

ரைட்டு..:)

Anonymous said...

useful post

ஹேமா said...

நாட்டு நடப்பு அலசல் நல்லாருக்கு மேவீ.தேவையானதும்கூட.

மேவி... said...

@ karthik : raittu

@ maha : thanks

@ hema : amanga

கிருஷ்ண மூர்த்தி S said...

சம்பந்தமில்லாத துறைகளைத் தொடாமல் போகிறவரை, துறைசார்ந்த பதிவு எழுதுவது சரிதான்!

கேயாஸ் தியரி, வண்ணத்துப் பூச்சி மாயம்னு சொல்லிக் கொண்டே போவது யாருடைய தலையையோ சுற்றி, வேறு யாருடைய மூக்கைத் தொட்டு விட்டு ஆஹா தொட்டுப் புட்டேன் என்கிற மாதிரி இருக்கே நண்பா!

இங்கே ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டிருப்பதென்னவோ உண்மை என்றாலும், எதை எதோடு முடிச்சுப்போடுவது?

மேவி... said...

@ கிருஷ்ணமூர்த்தி :

குறைந்த அளவு தாக்கம் இருந்தாலும் சொல்லி தானே ஆக வேண்டும் ....இரண்டும் DEPENDENT FACTORS யாக தானே இருக்கிறது .....

Related Posts with Thumbnails