நேற்று இரண்டு திரைப்படங்களை பார்த்துவிட்டு வீடு வந்த பிறவு,
திரைப்படங்கள் தந்த மன மகிழ்வை
நீடித்து கொள்ள விரும்பி சுவாதி'ஸ் பேமிலி என்டர்டெயின்மென்ட் ரூ.199
வெளியீட்டுள்ள மௌலியின் வெற்றி பெற்ற "ப்ளைட் - 172" நாடகத்தை இரண்டாவது முறை பார்த்தேன்.
சிறு வயதில் பார்த்த மாதிரி ஞாபகம்,
எதிலென்று நினைவு இல்லை,
ஆனால் நாடகத்தில் வரும் ஆங்கில
மொழி நகைச்சுவை காட்சி மட்டும் நன்றாக நினைவில் இருக்கிறது.
பலதரப்பட்ட சமூக பின்னணியில் இருந்தும் பல பிரச்சனைகளுக்காகவும்,
நோக்கங்களிற்க்காகவும் பம்பாய் (நாடகம்
மேடை ஏறிய காலத்தில் மும்பாய் பம்பாய் ஆக தான் இருந்தது) செல்லும் ப்ளைட் 172
பிடிக்க விமான நிலையத்திற்கு
வருகிறார்கள். அவர்களிடையே நடக்கும் நிகழ்வுகளாக அழகாய் நாடகத்தை
வடிவமைத்திருப்பார் இயக்குனர் மௌலி.
நாடகத்தில் எல்லாமே சிறப்பு தான். குறிபிட்டு சொல்ல வேண்டுமானால் .....ஒரு பட தயாரிப்பாளர் தனது பட கதையை சொல்வதும்,
கூட்டத்தில் இருக்கும்
இன்னொருவன் குற்ற உணர்வுடன் அவனது கடந்தகால நிகழ்வுகளை நினைத்து பார்ப்பதும்...மற்றவர்
ஆர்வமுடன் கதை கேட்பதும் .... வாய்ப்புகளே இல்லை. மௌலியின் நுண்ணிய இயக்க
திறமைகளின் வெளிப்பாடுகளவை.
இரண்டு மணி நேர நாடகத்தில் சிரிக்க வைப்பதை மட்டும் முன்
நிறுத்தாமல், அப்பொழுதிய சமூக அபத்தங்களையும் சாடியுள்ளார் மௌலி.
முக்கியமாக விமான நடைபாதையில் நின்று கொண்டு,
உள்ளூர் கதை..கடை வைக்கிற திட்டம்
போடுதல் காட்சி எல்லாம்..... செம செம
முக்கியமாக ஒத்து, மணியாச்சி காட்சிகளுக்காக இன்னொரு தடவை பார்க்கலாம்.
கட்டாயம் இந்த நாடக தொகுப்பு உங்களது டிவிடி கலெக்ஷன்ஸில்
இருக்க வேண்டிய ஓன்று. நான் சென்னை மவுண்ட் ரோடு ஸ்பென்ஸர் பிளாஸா லேண்ட்மார்க்கில் வாங்கினேன்.
நாடகத்தில் தனிப்பட்ட சிறப்புகள் என்று பார்த்தால் .... 1970களில் பல நூறு தடவை மேடை ஏற்ற பட்டதும்,
பிறவு 1980களில் தொலைக்காட்சி நாடக வடிவில் பல நாடுகளில் மீண்டும் மீண்டும்
ஒளிபரப்பட்டதுமே இதன் வெற்றியை சொல்கிறதே.
அவசியம் வாரயிறுதி மாலை மகிழ்விற்காக பார்க்கலாம்.
No comments:
Post a Comment