Pages

Friday, March 22, 2013

பாலாவின் "பரதேசி"



நேற்று பாலாவின் பரதேசி பார்த்தேன். படத்தை விட பாடல்கள் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.  படத்தில் நுண்ணிய விவர விவரிப்பு  இல்லையென்றாலும் படம் அருமை. முற்றிலும் புதுமையான தளத்தில் இயங்குவதால் வரவேற்க வேண்டியதாக போகிறது. 

ஒட்டுபெருக்கியை விட ஒரு இடத்தில கங்காணியை "ப்ளேசஸ் மீ லோர்ட்" காட்சியில் பிடித்து போகிறது. அந்த சாப்பாட்டு பந்தியில் ஒட்டுபெருக்கியின் அழுகை மனதை ஏதோ செய்கிறது. பல காட்சிகளில் இருக்க வேண்டிய ஆழங்கள் இல்லை. 

கட்டாயம் எல்லோரும் பார்க்க வேண்டிய படம்.  பாலா தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றுள்ளார் என்பதை மறுக்க முடியாது. மூன்றாவது படத்திலேயே அதர்வாக்கு இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்திருப்பதை அவரது அப்பா முரளி பார்க்காமல் போய் விட்டாரே என்ற வருத்தம் படம் முடிந்து வெளிய வரும் போது தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. 

பாலா இயக்க தவறுகள்  என்று பார்த்தால், ஒட்டுபெருக்கி கங்காணி உடன் செல்வதற்கு முன் அங்கம்மாவை பார்த்து பேசும் இடத்தில பின்னணி இசையை அனுமதித்தது. அதே போல் கங்காணி கூலிகளை பிரட்டும் இடத்திலும் அதே தவறு.

தவறுகள் இல்லாத அதிர்வை தருவது இடைவேளை காட்சி தான். அதே போல் முடிவில் அழுகைனூடே வருத்த சோக எண்ணங்களின் தகவல் பரிமாற்றம் ...... வாய்ப்புகளே இல்லை, பாலா!!! பாலா தான். 

எரியும் பனிகாட்டை படித்ததில்லை இன்னும், தோன்றுகிறது இப்பொழுது. அடுத்த வாசிப்பின் தொடக்க புள்ளி எரியும் பனிக்காட்டின் குளிரில் தான். நீதிபதி மனப்பான்மையில் ஆர்வமில்லாத, ஆர்வ இலக்கிய இச்சை. அதனால் பரதேசி வியப்புகள் மாற போவதில்லை. 

அடுத்த மாத பயங்கள் பரதேசியை சார்ந்து வர போகும் இலக்கிய பத்திரிக்கை கட்டுரைகளை நினைத்து தான்.
 

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அப்பா முரளி ஞாபகம் வந்தது உண்மை...

முடிவில் சொன்னது போல் 'பயம்' வந்ததும் உண்மை...

Related Posts with Thumbnails