Pages

Friday, March 29, 2013

கலவை - குவென்டின் டாரண்டினோ:::மரியான்:::சுஜாதா:::மோகன் ஸார்


தத்துவ ஆராயுதல் புத்தகமொன்றில் தத்துவங்களை பற்றி "உலகம் முழுக்க மக்கள் வெவேறு மொழிகளால் பிரிக்க பட்டாலும், அவர்களது மானுட உணர்வுகள் ஒரே அடித்தளத்தை கொண்டது தான். அதனால் உலகம் முழுக்க விரவி கிடக்கும் தத்துவங்களில் கண்ணுக்கு தெரியாத ஒரு நூல் இருக்க தான் செய்யும்.  

= = = = =
சுஜாதா கதை திரைக்கதையெழுதி வந்த கன்னட படம் ஆர்யபட்டா , அதை புத்தக வடியிலேயே படிக்க நன்றாக இருக்கும், அதுவும் இந்த காட்சி எழுத்துக்களின் மூலம் பாத்திரங்களின் மன நிலையை அழகாக படம் பிடித்து காட்டும். அதுவும் ஆசான் சுஜாதாவின்   நிகழ்தகவுகளை அருமையாய் கையாண்டு இருப்பார். 

ரமேஷ் அரவிந்த் கேட்டு கொண்டதற்காக அந்த நாள் திரைபட கதையை மையமாக கொண்டு  சுஜாதா எழுதினார் என்றாலும், சுஜாதாவுக்கே உரித்தான எழுத்து லாவகத்தில் கதை முற்றிலும் புது மாதிரியாக காட்சி அளிக்கிறது. 

ஆனால் இந்தகாட்சியை பார்த்தால், சுஜாதாவின் எழுதுயிரோட்டத்தை கொன்றிருப்பர்கள் என்று தெரிகிறது. முழு படம் பார்க்க ஆவல். இரண்டு காட்சிகள் தான் காண கிடைக்கிறது.

= = = = =
சற்று முன்பு தான் சுஜாதா 2000ம் வருடம் குமுதத்தில் எழுதின "ஓரிரவில் ஒரு ரயிலில்" கதையை படித்தேன் .... முடித்த பின் என்ன இது ஏமாற்றம் அளிக்கிறதே என்று யோசித்த பொழுது  குமுதத்தில் வந்ததாயிற்றே வேறெப்படி இருக்கும் என்று தோன்றிற்று. 

பக்கங்களை நிரப்ப வேண்டி ஆசான் எழுதிருக்கலாம் என்ற சந்தேகம் கிருஷ்ணதாசன் ராஜ பண்டிதனை ப்ருந்தா துப்பாக்கியால் சுட்ட பிறவு தான் வந்தது. அஷோக் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. வாசிப்பனுபவ சுவாரசியம் எதுவுமின்றி கதை ஒரு ராத்திரிலேயே என்று தொடங்கி சுவரில் ரத்தக் கோடிட்டது என்று முடிந்து விடுகிறது.  

விழுப்புரத்தில் ரயில் நின்ற பிறகாவது கதையில் சுவாரசியம் ஏறி கொள்ளுமென்று எதிர்பார்த்து ஏமார்ந்து போனேன். ஆசான் டச் இதில்.மிஸ்ஸிங். 

கதை உயிர்மை வெளியீட்டுள்ள சுஜாதாவின் குறுநாவல்கள் தொகுதி 
இரண்டாவதிலும்,கிழக்கு வெளியீட்டில் தனி புத்தகமாகவும் கிடைக்கிறது. 

= = = = =
"பதிவர் அறிமுகம் - மேவி

மேவி என்கிற பெயர் கூகிள் பிளஸ் வட்டத்தில் மிகவும் பிரபலம். மிக இளைஞர் இப்போது தான் திருமணம் நிச்சயமாகி கடலை சாகுபடியில் பிஸி ஆக உள்ளார்.

ஆயினும் கொஞ்ச காலமாக தனது ப்ளாகை தூசு தட்டி அவ்வப்போது மீண்டும் எழுத ஆரம்பித்துள்ளார் 

கொத்து பரோட்டா, வானவில் வகையில் கலவை என்று எழுதுவது சுவாரஸ்யமாக உள்ளது. மேவியின் ப்ளாக் பெயர் : தினசரி வாழ்க்கை. வாசித்து பாருங்கள் !"

வசிஷ்டர் கையால் குட்டு..... பிரபல பதிவர் +Mohan Kumar  ஸார் என்னைய பத்தி எழுதி இருக்காரு அவரோட பதிவில்.

இதை பத்தி Sriram Narayanan அண்ணன் கூகிள் பிளஸில் 

என்ன தவம் செய்தனை +மேவி .. ??

+Mohan Kumar புகழ் மேவி
வீடுதிரும்பல் புகழ் மேவி
வானவில் புகழ் மேவி

இனி மேவியை எப்படி அழைக்கலாம்? இந்த மூன்றில் எந்த ஆப்சனுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைக்குதோ - அப்படியே அழைக்கலாம். உங்க ஓட்டுக்களை கமெண்டா போடுங்க.

மேவி சார் (இனிமே எல்லாம் அப்படித்தான்), சில லட்சம் பேர் படிக்கும் விகடனில் ஒரு கவிதை (அ) கட்டுரை வந்தாலே உடனே அதை ஸ்கேன் பண்ணி கூகிள் பிளஸ், மைனஸ், ஃபேஸ்புக் எல்லாத்திலேயும் பப்ளிகுட்டி பண்ற மக்களுக்கு மத்தியில் பல கோடி பேர் படிக்கும் வீடு திரும்பலில் அறிமுகம் செய்யப் பட்டும் அதை வெளியில் சொல்லாமல் இருக்கும் உங்க தன்னடக்கத்தை நினைச்சா புல்லரிக்குது சார்!!!!!!!!!

= = = = =
பொதுவாகவே உலக சினிமாக்களை விரும்பி பார்ப்பேனென்றாலும், எந்த படத்தை இயக்குனரை மனதில் வைத்து அல்லது இயக்குனருக்காக படம் பார்த்ததில்லை. அதெல்லாம் தமிழ் சினிமாவோடு சரி. ஆனால்  குவென்டின் டாரண்டினோ பற்றி இந்த கட்டுரையில் வந்துள்ள குறிப்புகள் அவரது பிற படங்களை பார்க்க ஆர்வத்தை தூண்டுகிறது. எழுதியர் லக்கிலுக்காக இருக்குமோமென்று சந்தேகமாக இருக்கிறது. ஏனென்றால் கூகிள் கூட்டலில் முதல் பகிர்வு அவருடையது தான். 

= = = = =  
 தனுஷின் மரியான் பட டிரைலர் வந்துள்ளது என்று அறிந்து பார்த்த பொழுது .... வெளிநாட்டு வேலை செய்யும் இடத்தில சிக்கி தவிக்கும் உணர்வு போராட்டங்களுடைய படம் என்று சொல்ல முடிகிறது. 

தனுஷை துள்ளுவதோ இளமை படத்தில் இருந்து ரசிக்கிறேன். தனுஷின் திரைப்படங்களுக்கும் என் கடந்தகால நினைவுகளுக்கும் ரகசியமான மெல்லிய தொடர்ப்புள்ளது. அந்த படத்தில் இருந்து தனுஷின் ஒரு படத்தையும் பார்க்காமல் விட்டதில்லை. மரியானை ஆர்வங்களுடன் எதிர்பார்க்கிறேன்.  

= = = = = 

No comments:

Related Posts with Thumbnails