உங்களுக்கு மேலாண்மை பக்கம் விருப்பம் இருந்தால்,
கட்டாயம் எல்டன் மையோ ஹவ்தொர்ன்
விளைவு ஆராய்ச்சிகளில் ஒன்றான இல்லுமினெஷன் ஸ்டடி பற்றி கண்டிப்பா தெரிந்து கொள்ள
வேண்டும்.
இந்த இல்லுமினெஷன் ஸ்டடி என்பது வேலை செய்யும் இடத்தில ஒளி
அளவையும் வேலை செய்பவரின் செயல் பாடு திறனையும் ஆராய்வதே. இந்த ஆராய்ச்சி 1920களின் பிற்பகுதியிலும் 1930களின் முற்பகுதியிலும் மானுடவியல் ஆராய்ச்சியாளரான எல்டன்
மையோவால் தொழிற்சாலைகளில் நடத்த பட்டது.
இதன் மூலம் அவர் கண்டிபிடித்து என்னவென்றால்,
ஒளி அளவு குறைய குறைய ஒரு
இடத்தில வேலை செய்பவரின் செயல் திறன் குறைந்து கொண்டே போகிறது என்பதை தான். அதே
நேரத்தில் ஒளி அளவு குறையில் இருந்து அதிகமாக அதிகமாக அவர்களது திறன் மேம்படுவதையும் கண்டுள்ளார்.
பல்கலைகழக மனித மேலாண்மை வகுப்பில் இதை எங்களுக்கு சொல்லி தரும் பொழுது,
ஆசிரியர் அறையை இருட்டாகி பிறவு
எங்களது மனநிலையை கேட்டார், அதை எழுதி வைக்கவும் சொன்னார்,
பிறவு ஜன்னல்களை திறந்து விட்டு,
விளக்குகளை போட்ட பிறவு வீசும்
இளந்தென்றல் காற்றை (மலை காடு பக்கம் எங்களது பல்கலைகழகம் இருந்தது) சுவாசிக்க சொன்னார்.... பிறவு அப்பொழுத்திய மனநிலையை எழுதி
வைக்க சொல்லிவிட்டு... முந்தைய குறிப்பை படித்து பார்க்க சொன்னார். ஆச்சரியம் ஒருவர் கூட மகிழ்வு
மனநிலையில் இல்லை.
நேற்று சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து
பெருங்களத்தூர் வருவதற்கு திருமால்பூர் செல்லும் ரயிலில் ஏறினேன். திரிசூலம்
ரயில் நிலையம் வருவதற்குள் தூக்கம் கண்ணை தட்டியது. எங்கே இப்படியே போனால்
தூக்கத்தில் பெருங்களத்தூர் நிலையத்தை விட்டுவிடுவோமோ என்ற பயத்தில் ஒவ்வொரு
பெட்டியாக மாறி மாறி ஏறி இறங்கி கொண்டிருந்தேன். அப்பொழுது ஒவ்வொரு
பெட்டியிலும் ஒவ்வொரு விதமான ஒளி அளவு.
ஒளி அளவு அதிகமாக இருந்த பெட்டிகளில் மக்களின் உற்சாக நிலை
அதிகமாக இருந்தது. ஒளி அளவு குறையான பெட்டியில் உற்சாக நிலை ரொம்ப குறைவாக
இருந்ததையும் கவனித்தேன். கவனித்த பொழுது தான் இந்த ஆராய்ச்சி பற்றிய விஷயம் மனதில் தோன்றியது.
வகுப்பை தாண்டிய எனக்கு பிடித்தமான ஆராய்ச்சியை பற்றிய நேரடி அனுபவம் இதுவே. மனிதனுக்கும் ஒளிக்குமான உறவு பிறந்த நொடியில் இருந்தே
ஆரம்பமாகிறது. இதை பற்றி நீங்கள் அதிகமாக விளித்து கொள்ள ஒரு விடுமுறை நாளில்
உங்களுக்கு காலையில் இருக்கும் மனநிலையையும்,
மாலையில் இருக்கும்
மனநிலையையும் ஒப்பீட்டு பாருங்கள்... விவரங்கள் புரியும்.
ஒளி என்று மட்டும் இல்லை,
மனிதன் ஐம்புலன்களால் நுகரும்
எந்த விஷயத்தையும் வைத்து இந்த கோட்பாடை பரீட்சையித்து பார்க்கலாம். இதற்க்கு
சிறப்பான உதாரணம் பருவ நிலை மாற்றங்களால் மாறும் நமது மன நிலையே.
ஆனால் ஒளியை மாதிரியே தூய்மையான காற்றும் மனிதனுக்கு பெரும்
உற்சாக நிலையை தர கூடியது. ஆனால் நகரங்களில் அதற்கு வழியே இல்லாத பொழுது ..... நகர
மக்களின் உற்சாக நிலை எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.
ஏனென்றால் இன்று நகரங்களில் ஒளி தொகை தேவைக்கு அதிகமாகவே
இருக்கிறது, உற்சாக / ஊக்க மனநிலை அவைகள் தந்து விடுகிறதா ???
இந்த காலத்தில் இந்த ஆராய்வு
நிகழ்வு நடத்த பட்டிருந்தால் ஒளியோடு காற்றுக்கும் வேலை சார்ந்த மனநிலைக்கு
முக்கிய பங்கு இருக்கிறது என்று சொல்ல பட்டிருக்கும். டாட்.
2 comments:
மாசில்லா காற்று... சிந்திக்க வேண்டிய விசயம்...
ஆனால் (எங்கள்) கிராமத்தில் உண்டு...
ஒளியில இவ்வளவு சமாச்சாரமா!
Post a Comment