சிவராமன் அண்ணன்
குங்குமத்தில் எழுத ஆரம்பித்திருக்கும் கர்ணனின் கவசம், காலையில் ஆபீஸ்
போகும் வழியிலேயே பார்த்து...போய் சேர்வதற்குள் வாங்கி படித்துவிட்டேன். முதல்
பகுதி நல்ல தொடக்கமாக இருக்கிறது.
சூரியனுக்குள் ஊடுருவும் கனிமத்தை தேடி போகிற
கதையில், அமெரிக்கா, ஜெர்மன், இந்திய என்று
மூன்று இடங்களில் கதை நகர்கிறது. மைய புள்ளி எதுவென்று தெரியவில்லை. வர்ணனைகள்
எடுதுவும் இல்லாமல் நேரடியாக கதைக்குள் நம்மை கொண்டு செல்வதில் அண்ணனின் தீவிர
வாசிப்பு தன்மை தெரிகிறது.
அப்படிய ஏதோ படம் பார்ப்பது போல் இருக்கிறது. வசனங்களிலேயே
கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. நல்ல இருக்கிறது. கதையின் அடர்த்தி வரும்
பகுதிகளில் மெம்மேலும் பெருகும் என்று நம்புகிறேன்.
இன்னும் அதிகமான படங்கள் போட்டால், கதையோடு ஒன்றி
போக வசதியாக இருக்கும். செய்வார்களென்று நம்புகிறேன்.
தேசிய நோக்கம், விஞ்ஞான நோக்கம், தனிப்பட்ட
நோக்கம் என்று தொடர் கதை என்ற கோலத்தின் முதல் மூன்று புள்ளி நோக்கங்களை
வைத்திருக்கிறார் ஆசிரியர்.
வாழ்த்துக்கள் சிவராமன் அண்ணே.உங்களோட
தொடர் கதைக்கு ரசிகர்கள் பலர் கிடைக்கட்டும். கதைய நல்லா
கொண்டு போங்க. தொடர் கதை படிச்சே ரொம்ப நாளாச்சு.
= = = = =
திட்டமிட்டு தான் அரசாங்கம்
மக்களை நுகர்வு / பொருளாதார அடிமைகளாக மாற்றி இருக்கிறது. அந்த ஆட்டு மந்தையில்
இருந்து சிந்தனைவயபட்டு தப்பிக்கும் சில ஆடுகளை அடக்குமுறை கொண்டே அழிக்க
பார்க்கிறது.
இந்திரா பார்த்தசாரதி அவர்கள் எழுதின குருதிபுனல் நாவலில் ஒரு வரி வரும்.
வார்த்தைகள் சரியாக ஞாபகம் இல்லை.... கருத்து இது தான் எதற்கும் பயன் தராத
மிருகங்களை உருவாக்கி , அது என்றாவது பயன் தரும் என்று
பொய்மை நம்பிக்கையில் நம்மை ஆள்வதற்கு தேர்ந்து எடுத்து கொண்டிருக்கிறோம்.
லயோலா மாணவர்கள் கைது :((((
தமிழக அரசின் அதிகபட்ச கோழைத்தனமான அடக்குமுறை நடுஇரவு கைது.
= = = = =
சென்னையில் நாய்கள் தொல்லை அதிகமாகிவிட்ட காரணத்தால் ஒரு நாய்க்கு ரூ.50 என்று ஒப்பந்த முறையில் ஆட்களை அமர்த்தி
இருக்கிறார்களாம். ஒப்பந்த முறை என்றாலே வேலையை முடித்தால் காசு. ஆனால் நாய்களை
பிடிக்கும் பொழுது நாய் கடித்து விட்டாலோ அல்லது காயங்கள் ஏற்பட்டு விட்டாலோ அந்த
நபருக்கு மருத்துவ உதவிகள் கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.
நாய் கடி ஊசி ஓன்று ரூ.300, பிறவு முழுமையான மருத்துவத்திற்கு ரூ.1500 ஆகுமாம். இதெல்லாம் நாய் பிடிக்கும் நபர்களால் ரூ.50ல் எப்படி சமாளிக்க முடியும். என்னதான் அரசாங்க மருத்துவமனையில்
இலவசமாக கிடைத்தாலும் ... அரசு மருத்துவ மனைக்கு போய் வரும் செலவு, அதனால் ஏற்படும் அன்றைய வருமான இழப்பு
என்று பல விஷயங்களை எப்படி அந்த சாதாரணன் சமாளிப்பான் ???
இதில் விவரம் உங்களுக்கு தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.
= = = = =
இப்பெல்லாம் டைம் பாஸ்
உள்ளடக்கத்திற்காக நம்பி வாங்கவே முடியறதில்லை. வந்த புதிதில் பள பள காகிதத்தில்
வெளிநாட்டு / உள்நாட்டு நடிகைகளின் கவர்ச்சி படங்களை போட்டது போல இப்பொழுதெல்லாம்
அந்த இதழில் காண கிடைப்பதே இல்லை. ஐந்து ரூபாயில் உலக அளவில் ஜொள்ளு விடலாமென்று
என் பிரியத்துக்குரிய சினி கூத்து இதழை விட்டுவிட்டு டைம் பாஸ் இதழ் பக்கம்
வந்ததற்கு ..... நம்ப வைத்து மோசம் செய்து விட்டார்கள்.
காமெடி என்ற பெயரில் மொக்கை போடுகிறார்கள். அதை தான் நானே
பண்ணுகிறேனே. சினி கூத்து அழகியலின் மங்கிய வெளிப்பாடாக இருப்பது தான் டைம் பாஸ்
இதழுக்கு பலமென்பதை அதன் ஆசிரியர் புரிந்து கொள்ள வேண்டும். பிறவு விகடன் குழும பத்திரிக்கை என்பதால் தான் அதை வாங்குகிறேனென்று தெரிந்த
பின்னும் வீட்டில் என்னை திட்டாமல் இருக்கிறார்கள். திசை மாறிய இதழ் குதிரையை
சரியான திசைக்கு சீக்கிரம் திரும்ப வேண்டும் என்பது என் ஆசை. அதை வரும் இதழிலேயே
காண அவா.
= = = = =
சொல்வது தாமதம் என்று
தெரிந்தாலும் தமிழ் ஆழியின் பிப்ரவரி மாத இதழில் வந்திருக்கும் செ.ச.செந்தில்நாதன்
எழுதிருக்கும் "ரிஸானா ஒரு குழந்தையின் மரணம்" என்ற கட்டுரையை கட்டாயம்
சேமித்து வைக்க வேண்டிய கட்டுரை என்பதை சொல்கிறேன்.
தமிழ் ஆழியின் ஜனவரி மாத இதழ் (அது தான் தமிழ் ஆழியின் முதல் இதழும்
கூட) அவ்வளவாக கவரவில்லை என்னை, அல்லது என் விருப்பகுறியவை எதுவும் இல்லை என்றும் சொல்லலாம். அங்கொன்றுமிங்கொன்றுமாய்
கட்டுரை பிடித்திருந்தாலும், முழு வடிவிலான பத்திரிக்கையாய் மன விருப்ப அரங்கில் உட்காரவில்லை.
வரி சேமிப்பு காலம் என்பதால் வேலை பளுவில் எதுவுமே படிக்க
முடியவில்லை. நேற்று இந்த மாத உயிர் எழுத்து பத்திரிக்கையில் கார்த்திகைப் பாண்டியன் எழுதிய "Viva La Muerte அல்லது இணைய மும்மூர்த்திகளும்
இலக்கிய பஜனை மடங்களும்" சிறுகதையை இரவு 12 மணிக்கு படிக்க ஆரம்பித்தேன், வரிகள் கடந்து Fuck Me என்று வந்து பிறகு "நீ நீ நீ
நீ" என்று நீண்ட நீக்கள் வந்தது. அதில் கடைசி நீ வந்திருந்த பொழுது சுயம்
நீயான நான் நித்திர தேவியிடம் அடைக்கலம் ஆனேன்.முழுமையாய்
படிக்க வேண்டுமின்று.ஆமென்.
Viva La Muerte என்றால் தற்கொலையை கொண்டாடுவோம்
என்று அர்த்தமாம். கதை முடிந்த பிறவு பின்னிணைப்பாக இதன் பொருள் இருக்கிறது
= = = = =
No comments:
Post a Comment