Pages

Sunday, December 13, 2009

தேவதையின் கை - 4

=====================================
நண்பர்களுக்கும், வீட்டில் இருப்பவர்களும் கொஞ்சம் ஆச்சிரியமாக பார்த்தனர். ஏன் என்று தெரியவில்லை. ரசனை முதல் எல்லாவற்றிலும் அவளின் ஆளுமையை உணர்ந்தேன். அது என் சுயமாக இல்லாவிட்டாலும், அதை நான் ரசித்தேன்.
(-)
பகலில் விழித்து கொண்டே கனவு கண்டேன். சன் மியூசிக்கில் காதல் பாடல்கள் வரும் பொழுது எல்லாம் என்னை அறியாமல் சிரித்தேன், கொஞ்சம் வெட்க பட்டேன். அப்படியே காற்றில் பறப்பது போல், மேகங்களை தண்டி நச்சத்திர வீதியில் அவளோடு கை கோர்த்து கொண்டு ; மகிழ்ச்சின் உச்சத்தில் இருப்பதாய் மனம் சொல்லியது. ஆனால் நான் பெல்பூர் மூன்றாவது தெருவில், முதல் வீட்டில் தான் இருந்தேன். எதிர் வீட்டில் மாமி துணி காய போட்டு கொண்டு இருப்பதை பார்த்தேன்.

(-)

நான் எப்பொழுதும் இப்படி எல்லாம் உணர்த்து இல்லை. பெண்களை பார்த்ததும் மயங்கி, காதல் கொள்பவனும் அல்ல. ஆனால் ஒரே இரவில் ஒரு பெண் என்னை இந்த அளவுக்கு வசியம் செய்ய முடியுமா என்று எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது. எது.... எது... எது என்னை மயக்கியது என்று என் மனதை கேள்வி கேட்கும் தருணங்கள் சிலது கிடைத்த பொழுதிலும், அவளின் நினைவுகள் என்னும் வலையில் இருந்து என்னை மீட்க முயற்சிக்கும் முன்னரே, அதே நினைவுகள் அவள் மேல் நான் காதல் கொண்டு, பைத்தியமாகி விட்டேன் என்பதை உணர்த்தி விட்டு, அப்ப அப்ப சென்றது .........வந்த உடனே.
(-)

"ஒரு bhel puri ......" என்று யுவன் ஆர்டர் பண்ணினான்.

அப்பாஸ் உடனே " டேய் மேவி நீ சொல்லுறா...."

"எனக்கு.....ஹாய்... மகேஷ் இதிலைய வந்த..... பஸ் ல போறேன்ன்னு சொன்னே ??"

அவர்கள் இருவரும் புரியாமல் என்னை பார்த்து கொண்டு இருந்தனர்.

(-)
"டேய் கதையே கூடுகாத ..."

"சொல்லவே இல்ல ..."

"ஆள் எப்புடிரா இருப்பா ...."

என்று அவர்கள் என்னை ஏதோ ஏதோ கேட்டு கொண்டு இருக்க...... நான் அந்த நினைவுகளிலே மீண்டும் மீண்டும் வாழ்ந்து கொண்டு இருந்தேன்.

(-)

வெளிக்கிழமை..... நாளை தீபாவளி.

நங்கள் எல்லோரும் ....... BHEL TOWNSHIP .......கோவில்கள்..... வழக்கமாய் நாங்கள் செய்யும் வேலை தான். ஆனால் ......

யுவன், அப்பாஸ் என்னோடு இல்லை.

"என்ன தம்பி......" என்று கேட்டார் ஸ்ரீராம் அண்ணன். வக்கீல்.சில நேரங்களில் அவருடைய அப்பாவின் கடையை பார்த்து கொள்வார்.

"ஒன்னும் இல்லண்ணே..... லெமன் டி போடுங்கண்ணே ....."

லெமன் டி. சூடாக இருந்தது.

"மலைகோவில் கடை எப்புடி ண்ணே போகுது...." என்று கேட்ட படியே புதுசாக வந்து இருந்த புது பட டிவிடிகளை...... ஒவ்வொரு டிவிடி அட்டையிலும் நாயகன், நாயகியாய் நானும் அவளும்.

"நைட் வரேண்ணே.......'

"தம்பி... நைட் ஜமாவா வந்துருங்க ....."
"நைட்ன்ன மொட்டை மாடில நின்னு வானத்தை பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும்"
(-)
இரவு உறக்கம் பிடிக்கவில்லை. ரூம்லில் லைட் போட்டு, சுவரில் ஒரு பல்லி அங்கும் இங்கும்.....

FACEBOOK கில் புதிதாய் ரேணுகா தேவி என்ற பெயரில் FRIEND REQUEST வந்து இருந்தது. ஒரு வேளை அவளாக இருக்குமோ .....இல்லை வேறு யாரவது .......

கண்களை முடி யோசித்து பார்த்தேன்...... பள்ளியில் பெங்களூர் பெண்..... நண்பர்கள் வட்டம்.... கல்லூரி.........ரேணுகா ஸ்பரிசம் இல்லை...

தேவி ...ஒரு வேளை அவளாக இருக்கும்மோ.....பிரொபைல் போட்டோ வேறு இல்லை. தூக்க கலக்கம்.
(-)
கோவிலுக்கு போய் கொண்டு இருந்தேன்.... இரண்டாம் தெருவை தண்டி கொண்டு இருக்கும் பொழுது ...

ராஜு அப்பா .....

"எப்புடி இருக்கடா ...."

"நல்ல இருக்கேன் ஆன்டி...."

அப்பொழுது ஏதோ ஒரு புகைப்படத்தை கவரில் இருந்து வெளியே எடுத்த படி ராஜு அப்பா என் அருகே வந்தார்.
(-)
"ஒரு KINGS ....."
" .....DO YOU SMOKE .....??"

முதல் முறையாக இழுத்த பொழுது கொஞ்சம் நெஞ்சுக்குள் எரிச்சல் ..... சூடாக ஏதோ ஓன்று .... கொஞ்சம் காற்றில் பறப்பது போல் உணர்ந்தேன்.
"இல்லை ....எனக்கு அது எல்லாம் பிடிக்காது"
வாயில் புகையை சேமித்து வைத்து..... அடி நாக்கை சற்று அழுத்தி .....பலமாக இழுத்தேன்......
"இதுதானப்பா ராஜூவுக்கு பார்த்து இருக்கிற பொண்ணு ......"
அடுத்த முறையிலிருந்து menthol புகைக்க வேண்டும் ....... எரிச்சல் கம்மியாக இருக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.
(-)
அவள் மேலிருந்த காதல் ....அது காதல் தானா என்ற சந்தேகம் இப்பொழுது .... மேல் இருந்த காதல் இப்ப காமம் என்ற நிலையில் இறங்கி. எனக்கே என் மேல் எரிச்சலாக இருந்தது. வரும் நாட்களில் எப்புடி அவள் முகத்தை பார்ப்பேன். ராஜூவை அண்ணன் என்ற நிலையில் வைத்தே பார்த்து பழகி உள்ளேன். வருங்காலத்தில் அண்ணி.

இந்த நினைவே என்னை கொன்று விடும் போல் இருந்தது.
எரிச்சல், கோவம், காதல்,காமம் என்று பல்வேறு உணர்ச்சிகள் மாறி மாறி வந்த வண்ணம், நிலை தெரியாது அறிவு மங்கி,மயங்கி பேதலித்து .......


சுய-இன்பம் கொண்டேன் அவள் நினைவுகளில் இருந்து தப்பிக்க முடியும் என்று அழமாக எண்ணியதால். உடல் சோர்வு அடைந்ததே தவிர அவள் நினைவு லேசாக இருந்தது. உடல் வலு பெற பெற, அவளின் நினைவும் பலம் பெற்றது.
(-)
அடுத்த வாரம். வெளிக்கிழமை இரவு.

திருச்சி நோக்கிய பயணத்தில் ஏதோ ஒன்றை தொலைத்து, அதை தேடுவது போல் என் நினைவுகள்.

ராஜூ அண்ணன். குடும்ப நண்பர் என்ற நிலையில் இருந்து நண்பர் என்ற நிலைக்கு போய், அதன் பிறகு தெரிந்தவர் ஆகிருந்தார் இந்த ஒரு வாரத்திற்குள்.

எல்லாம் என் செயல் திறனுக்கு மீறிய வேகத்தில் நடந்து கொண்டு இருந்தது. எல்லாம் சொன்ன அவள் இதை ஏன் சொல்லாமல் விட்டுவிட்டாள் என்ற கேள்வியே என்னை மிகவும்...... பெண்களிடம் பிடிக்காத ஓன்று அது தான்.
"MARKETING STRATEGIST OF THE YEAR "
கண்களில் வந்த கண்ணீரை துடைத்து கொண்டேன்.
(-)
"ராஜூ அந்த மோதிரத்தை அவ கைல போடுறா ..."

நான் வெளியே வந்து விட்டேன். இனிமேல் வாழ்வில் ராஜூ அண்ணனை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். கார் எடுக்க வந்த நான், கடைசியாக அவள் முகத்தை பார்க்க முடியுமா என்ற கேள்விக்குள் மாட்டி கொண்டேன்.
(-)
நிறைவு

5 comments:

Karthik said...

தல, நான் இன்னும் இந்த சீரீஸ படிக்க ஆரம்பிக்கவே இல்ல. ஸாரி. படிச்சிட்டு கமெண்டுறேன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

எதிர்பார்க்காத முடிவுப்பா.. முதல் பாகமும் கடைசி பகுதியும் ரொம்பவே நல்லாயிருந்தது,..

ஹேமா said...

கற்பனைத் திறனும் கதை ஓட்டமும் அதை எழுதும் அமைப்பும் நல்லாவே இருக்கு மேவீ.நடுநடுவில் நல்ல வர்ணனைகளும் அசத்தல்.

உங்க கரைச்சல் தாங்கமுடியாம பசியோட இருந்து எல்லாம் பொறுமையா வாசிச்சேன்.
நல்ல முயற்சி மேவீ.

இப்போ நிறைய நேரம் கிடைக்குதாக்கும் உங்களுக்கு.
பதிவுகள் அடிக்கடி வருது !

Anonymous said...

க‌தை ஓட்ட‌ம் ந‌ல்லா இருந்த‌து. வ‌ருண‌னைக‌ள் அருமை.

டம்பி மேவீ said...

@ கார்த்திக் : சரி ....ஞாபகமா வந்து பின்னோட்டம் போட்டுருங்க

@ கார்த்திகை : அப்படியா ரொம்ப நன்றி

@ ஹேமா : ரொம்ப ரொம்ப நன்றி ..... இன்னும் பல கதைகள் கைவசம் இருக்கு ....

@ மஹா : தேங்க்ஸ்

Related Posts with Thumbnails