Pages

Thursday, December 17, 2009

வேட்டைக்காரன் - பட விமர்சனம்


பலர் வேட்டைக்காரன் வழக்கமாய் வரும் விஜய் படமாய் தான் இருக்கும் என்றும்.... ஒரு பொழுது போக்கான படம் தான் என்றும் சொல்லிட்டாங்க. சரின்னு நம்ம மட்டும் எதுக்கு புதுசாய் விமர்சனம் எழுதனும்..... ஏற்கனவே எழுதின வில்லு மற்றும் குருவி பட விமர்சனங்களையே படித்து விடுவது உத்தமம்.

அதுவும் ட்ரைலர் ல "உனக்கு எல்லாம் போலீஸ்காரன் போதாது....வேட்டை வேட்டை..வேட்டைக்காரன் தான் ........" என்று சொல்லும் பொழுதே கொஞ்சம் டரில் ஆனேன். எனக்கு ஆசை தான் ஒரு அம்சமான விஜய் படம் பார்க்க வேண்டும் என்று.

ஆக்ஷன் படங்கள் என்றாலே பொதுவான கதை தான் ஞாபகம் வருகிறது நம்ம தமிழக டைரக்டர்களுக்கு. என்னை கேட்டால் விஜய்க்கு CRIME THRILLER வகைரா படங்கள் மிகவும் பொருந்தும். THE LAST MAN ON EARTH போன்ற கதைகள் அவருக்கு ரொம்ப சூட் ஆகும்.

மற்ற நடிகர்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு அம்சம் விஜய்க்கு இருக்கிறது. முக பாவனையில் SILENT TERROR காட்டுவதில் கில்லாடி.

MASS HERO ஆக வேண்டும் என்ற ஆசையில் தனது திறமையை சற்றும் புரிந்து கொள்ளாமல் தப்புப்பான கதைகளை தேர்ந்தெடுத்து காலத்தை வீணாக்கி கொண்டு இருக்கிறார்.

மசாலா படங்களிலையே இவ்வளவு திறமை காட்டும் விஜய் வித்தியாசமான கதைகளில் வெளுத்து வாங்கி விட மாட்டாரா ?????

பிறகு சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. விஜய் ரசிகர்களுக்கு நாளையே பொழுது சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள். கட்டாயம் இது ஓர் அருமையான படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

17 comments:

Azhagan said...

\\மசாலா படங்களிலையே இவ்வளவு திறமை காட்டும் விஜய் வித்தியாசமான கதைகளில் வெளுத்து வாங்கி விட மாட்டாரா ?????//.... ennatha solla!

க‌ரிச‌ல்கார‌ன் said...

//சரின்னு நம்ம மட்டும் எதுக்கு புதுசாய் விமர்சனம் எழுதனும்..... ஏற்கனவே எழுதின வில்லு மற்றும் குருவி பட விமர்சனங்களையே படித்து விடுவது உத்தமம்//

//கட்டாயம் இது ஓர் அருமையான படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.//

என்ன‌ சொல்ல‌ வ‌ர்றிங்க த‌ல‌

Vijay said...

போக்கிரி படம் பார்த்தப்புறம், இனி ஜன்மத்துக்கு விஜய் படம் பார்க்கக்கூடாது என்று முடிவெடுத்துவிட்டேன்.

டம்பி மேவீ said...

@ அழகன் : ஒன்னும் சொல்வதற்கு ஒன்னுமில்லையா ??????

@ கரிசல்காரன் : நாங்க எல்லாம் நடுநிலைவாதி...தெரியுமா ....அப்படி தான் பேசுவோம்

@ விஜய் : நான் இன்னும் அந்த அளவுக்கு போக வில்லை....விமர்சனங்களை படித்தே முடிவு செய்வேன்

அத்திரி said...

நம்பமுடியவில்லை நம்பமுடியவில்லை.............விஜயை கலாய்க்காமல் நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு பதிவு..

//மசாலா படங்களிலையே இவ்வளவு திறமை காட்டும் விஜய் வித்தியாசமான கதைகளில் வெளுத்து வாங்கி விட மாட்டாரா //

!!!!!!!????

rajan RADHAMANALAN said...

எது ! கலாய்க்காத பதிவா ?

//மசாலா படங்களிலையே இவ்வளவு திறமை காட்டும் விஜய் வித்தியாசமான கதைகளில் வெளுத்து வாங்கி விட மாட்டாரா ?????//

இதுக்கு பேரு என்ன தலைவா ?

அத புரிஞ்சு சிரிக்க தான அஞ்சு கேள்விக் குறி போட்டுருக்காரு

கார்க்கி said...

//Vijay said...
போக்கிரி படம் பார்த்தப்புறம், இனி ஜன்மத்துக்கு விஜய் படம் பார்க்கக்கூடாது என்று முடிவெடுத்துவிட்டே//

என்ன ஒரு முடிவு? இவருக்கு மிகவும் பிடித்த படம் சிங்காரவேலனாம். எவ்ளோ நல்ல படமில்ல அது சகா?

rajan RADHAMANALAN said...

சேவல் கிட்ட நீயும் கொஞ்சிக் குலாவ வேணும் - கொண்ஜாமே நீயும் போனா குஞ்சுகள் எங்குருவாகும்!

Karthik said...

ithu velaikku aavarathilla...:)

ஸ்ரீ said...

நல்லா இருங்கப்பா.

வால்பையன் said...

நான் தியேட்டருக்கு போய் தமிழ் படம் பார்த்து நாலு வருசமாச்சு!

ஒன்லி சண்டீவி!

டம்பி மேவீ said...

@ அத்திரி : ஏன் இருக்க கூடாதா ???? ஏதோ மனசுக்கு பட்டதை சொன்னேன்

@ ராஜன் : எப்புடி ராசா ...இப்புடி எல்லாம் பின்னுறிங்க

@ கார்க்கி : இன்னும் நிறைய படங்கள் பிடிக்கும் என்று அவர் சொல்லிருக்கரே ..... சிங்காரவேலன் படம் நல்ல படமா என்று எல்லாம் தெரியாது..... சின்ன வயசில் பார்த்த பொழுது நன்றாக சிரித்து இருக்கிறேன் ......அதன் பிறகு அந்த படத்தை முழுமையாக பார்த்தது இல்லை

@ ராஜன் : நோ டபுள் மீனிங்

@ கார்த்திக் : அப்ப வேற எதுக்கு ஆகும்ன்னு சொல்லுங்க

@ ஸ்ரீ : நன்றிங்க

@ வால்ஸ் : நீங்க யாரு ....கம்ப்யூட்டர் ல உலகத்தை பார்ப்பவர் நீங்க ..உங்களோடு போட்டி போட முடியுமா

நட்புடன் ஜமால் said...

விஜய் ரசிகர்களுக்கு நாளையே பொழுது சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள். ]]

:)

\\கட்டாயம் இது ஓர் அருமையான படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.\\

செம காண்பிடண்ட் பாஸ் ...

நாஞ்சில் பிரதாப் said...

//MASS HERO ஆக வேண்டும் என்ற ஆசையில் தனது திறமையை சற்றும் புரிந்து கொள்ளாமல் தப்புப்பான கதைகளை தேர்ந்தெடுத்து காலத்தை வீணாக்கி கொண்டு இருக்கிறார்.//

பாதி சரி சாதி கரீட்டுங்க... திறமைன்னா கிலோ என்னன்னு கேட்பாரு.. டான்ஸ் ஆடுறதும், பைட்டு போடறதும் மட்டுமதான் அவரு சினிமால நடிக்க போதும் நினைச்சுட்டு இருக்காரு.

25 வருஷமா கமல், ரஜீனி தராத மசாலாவா இவரு தந்துடப்போறாரு.


//மசாலா படங்களிலையே இவ்வளவு திறமை காட்டும் விஜய் வித்தியாசமான கதைகளில் வெளுத்து வாங்கி விட மாட்டாரா ?????//
கண்டிப்பாக மாட்டார்... அதுக்கெல்லாம் நடிக்கத்தெரியரிந்திருக்கனும்...

rajan RADHAMANALAN said...

//கண்டிப்பாக மாட்டார்... அதுக்கெல்லாம் நடிக்கத்தெரியரிந்திருக்கனும்...//

அவங்கப்பா அதெல்லாம் சொல்லி குடுக்கல !

சங்கவி கூட கபடி வெளயாட தான் சொல்லி தந்தாரு

senthils said...

"விஜய்: நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்கமாட்ட....
ஒரு குரல்: டேய், நீ அடிச்சாக்கூட பரவால்லடா! நீ நடிச்சாத்தாண்டா தாங்கவும் முடியல, தூங்கவும் முடியல..!".

அரைத்த மாவையே திரும்ப அரைக்கும் வேட்டைக்காரன் அட்டர் பிளாப்பு.

வில்லு,குருவி லிஸ்டுல வேட்டைக்காரன்.


விஜய் மாறவில்லை. மாறவும் போவதில்லை.
படமும் ஓட போவதில்லை.

டப்பா படம்.குப்பை படம்.

Karthik Lollu said...

Padathula MASS therikkudu.. Collections Alludu... CULT CLASSIC.. MASS RE-DEFINED... Watch Vettaikaaran...Enna seyya... Fan aagita inda elavellam solla vendi irukku.. Eppo thirunda porrar therila..

Related Posts with Thumbnails