Pages

Sunday, December 6, 2009

உயர்ந்த மனிதன் - பட விமர்சனம்

எனக்கு தெரிந்து சிவாஜி கணேஷின் படங்களில் கிளாச்சிக் வகையை சேர்ந்தது இந்த படம். எப்புடி தில்லான மோகனம்பாள் படத்தில் ஒரு SETTLE யான நடிப்பை வெளி படுத்தி இருப்பாரோ அதே மாதிரி இந்த படத்திலும், சொல்ல போனால் வாழ்ந்து காட்டி இருப்பார். நான் பெரும்பாலும் சில பழைய படங்களை தான் மீண்டும் மீண்டும் பார்ப்பேன், அப்படி பார்க்கும் படங்களில் இதுவும் ஓன்று.இந்த படத்தை விமர்சனம் செய்வதும் ஓன்று தான், படத்தில் சிவாஜி கணேஷர் நடிப்பை பற்றி சொல்லவதும் ஓன்று தான். அந்த அளவுக்கு படம் முழுக்க சிவாஜி ராஜ்யம் தான். நான் இந்த படத்தை முதன் முறையாக சன் டிவியில் தான் பார்த்தேன். அப்பொழுது எல்லாம் சன் டிவி மட்டும் தான். சேனல் மாற்றும் வேலையும் விளம்பரங்களின் தொல்லையும் இருந்தது இல்லை.
இந்த படத்தில் முழுக்க ஒரு வித BODY LANGUAGE கையாண்டு இருப்பார், அது வேறு எந்த படத்திலும் அவரிடம் காண முடியாத ஓன்று. ஒரு வேளை இயக்குனர்களுக்கு அது தெரியாமல் போய் இருக்கலாம். அல்லது அத்தகைய நடிப்பை DEMAND செய்யும் கதைகளை உருவாக்க தெரியாமல் இருந்திற்பர்கள். சில படங்களில் சிவாஜி கணேசரின் நடிப்பு ரொம்பவே ஓவர் அக்டிங் செய்வது போல் இருக்கும்..... அந்த மாதிரியான படங்களையெல்லாம் ஓர் முறைக்கு மேல் நான் பார்த்தது இல்லை.பட கதையை பற்றி நான் சொல்ல வேண்டும் என்று இல்லை, தொல்லை கூடுக்கும் தொலைக்காட்சிகளில் நிச்சயம் ஒரு முறையாவது பார்த்து இருப்பிங்க. சோ, கதை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் படம் பார்த்தபின் எந்த இங்கிலீஷ் படத்திலிருந்து காபி அடிதிற்பர்கள் என்ற யோசனை வருவதை தடுக்க முடியாது. படம் பார்த்த பின் கொஞ்சம் யோசித்து பார்த்தால் இப்படி தான் முடிவுக்கு வர முடியும், ஆங்கில கதை வித் தமிழ் சினிமா கிளைமாக்ஸ்.


எனக்கு இந்த படத்தில் பிடித்த கட்சிகள் என்று சொன்னால் படத்தில் வரும் கொடைக்கானல் காட்சிகளும், பிறகு சிவாஜி தனது மனைவிடம் பொய், சொத்து போன்றவற்றை பற்றி பேசும் காட்சிகள் எல்லாம் செமையான கிளாஸ். இப்படி சொல்வதின் முலம் நான் சிவாஜி கணேஷர் மிக சிறந்த நடிகர் என்று சொல்லவில்லை, இந்த படத்தில் அவருடைய நடிப்பு எனக்கு பிடிக்கும் .இந்த படத்தின் கதை அமசமும் வித்தயசமானது தான், அந்த காலத்தில் வயசான பணக்காரர் என்றால் அந்த கதாபாத்திரம் ஓன்று மிகவும் நல்லவர், இல்லாவிடில் மிகவும் கெட்டவர் என்று தான் வகை படுதிருந்தர்கள். அது அத்தனையும் தண்டி வயசான பணக்கரர்யை முக்கிய பத்திரமாக எடுத்து கொண்டு வெளி வந்த முதல் கதை இதுவாக தான் இருக்கும். மோட்டார் சுந்தரம் பிள்ளை என்ற படமும் இதே மாதிரியான GENRE யில் தான் வந்தது, ஆனால் அதில் கடைசில் தான் சிவாஜி கதாபாத்திரத்துக்கு முக்கியதுவம் கூடுது இருப்பாங்க. மற்றபடி பெருசா DETAILED ACTING இருக்காது.இன்னொரு முக்கியமாக கூறுபிட்டு சொல்ல வேண்டிய காட்சியும் ஓன்று இருக்கிறது, அது கடைசியில் சிவாஜி கணேஷன் சிவகுமாரை போட்டு அடிக்கும் காட்சி. என்னை கேட்டால் படம் அந்த காட்சியோடு முடிந்து விடுகிறது, ஆனால் டைரக்டர்க்கு என்ன நிர்பந்தம் ஏற்பட்டதோ தெரியவில்லை தமிழ் சினிமா கிளைமாக்ஸ் வைத்து விட்டார். ரசிகனின் ரசனை அன்று ஆட்சி செய்தது; ஆனால் இன்றோ ரசிகர்களின் உணர்வுகளை துண்டி விட்டு காசு பார்க்கிறார்கள்.சிவாஜி நடிப்பிற்க்காக இரண்டு படம் சிடி வாங்கி வைத்து கொள்ளலாம். அதில்தில்லான மோகனம்பாள்
உயர்ந்த மனிதன்


19 comments:

அன்புடன் அருணா said...

எனக்கும் பிடித்த படம்....குறிப்பாக அந்த நாள் ஞாபகம் பாட்டு சீன்!

ஹேமா said...

எனக்கும் பார்த்த ஞாபகம் இந்தப்படம்.தில்லானா மோகனாம்பாள் நிறையத்தரம் பார்த்திருக்கிறேன்.சிவாஜி அவர்களின் படங்கள் பிடித்தது என்று நிறையவே சொல்லிப் போகலாமே !

டம்பி மேவீ said...

@ அன்புடன் அருணா : ஆமாங்க எனக்கும் அந்த பட்டு ரொம்ப பிடிக்கும் ....

@ ஹேமா : பிடித்த சிவாஜி படங்கள் என்று என்கிட்டயும் ஒரு பெரிய லிஸ்ட் இருக்கு. அனா அவர் நடிப்புன்னு நான் விரும்பி பார்ப்பது இந்த படங்களை தான்.

கிரி said...

எனக்கு ரொம்ப பிடித்த படங்களில் இந்த படமும் ஒன்று.

இந்த படத்தில் சிவாஜியும் சௌகாரும் செயற்கையாக வாழ்க்கை நடத்துவார்கள்..சௌகார் க்ளப்பில் அவரது நண்பி சொன்னதை கேட்டு சிவாஜியை அடிக்க கூறுவார்..ஆனால் சிவாஜி செய்ய மாட்டார்..ஆனால் தொடர்ந்து வற்புறுத்த கடுப்பான சிவாஜி செம அரை விட்டு விடுவார்..

இதனால் அழ ஆரம்பிக்கும் சௌகாரை சிவாஜி சமாதனப்படுத்துவது அதன் பிறகு நடக்கும் காட்சிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்... ரொம்ப அழகான காட்சி.

இதை போல பல காட்சிகளை கூறலாம்..

சிவாஜி பெரிய பணக்காரர் எனவே அதன் கம்பீரத்தை, பணக்கார தோரணையை ஒவ்வொரு காட்சியிலும் அட்டகாசமாக நடித்து காட்டி இருப்பார்..

நீங்கள் கூறியது போல சிவாஜி ஒரு சில படங்களில் ஓவர் ஆக்டிங் செய்து இருப்பார்..அதை போல இல்லாமல் இதில் அவரது சிறப்பான நடிப்பு.

அசோகன் கூட இதில் நன்றாக நடித்து இருப்பார்..

D.R.Ashok said...

இததான் வால் உல்டா பன்னாறா...

சௌகார் ஜானகிகிட்ட.. சிவாஜி பேசற டயலாக் எனக்கும் பிடிக்கும்... நம்ம எழுதற கணக்குல பொய், நீ கட்டியிருக்கற புடவை.. அப்ப்டின்ற ரீதியில போகும்.

சிவாஜி ஒவர் acing இல்லாம நடிக்கயிருக்கமுடியும் .. ஆனா அன்னக்கி ரசிகனின் தேவைக்கு தான் அந்தமாதியான actinga அவரு கொடுத்தாரு :)

கும்க்கி said...

1

கும்க்கி said...

2

கும்க்கி said...

3

கும்க்கி said...

4

கும்க்கி said...

5

கும்க்கி said...

6

கும்க்கி said...

7

கும்க்கி said...

8

கும்க்கி said...

9

கும்க்கி said...

10

கும்க்கி said...

tamil type problem
sorry mavee.

will meet next.

கும்க்கி said...

சரி..இந்த படத்தில் முழுக்க ஒரு வித BODY LANGUAGE கையாண்டு இருப்பார், அது வேறு எந்த படத்திலும் அவரிடம் காண முடியாத ஓன்று..


சிவாஜியின் ஒருவிதமான நடிப்பு என்று பதிவில் குறிப்பிட்டுள்ளீர்களே அது என்ன என்று பதிவின் முடிவு வரை சொல்லவில்லையே..?

கும்க்கி said...

பொதுவாகவே ஓவர் ஆக்டிங் என்றுதான் இப்போது தோன்றும்...ஆனால் அவர் நடிக்க வந்த காலத்தில் சராசரியாக எல்லோரும் கொண்டாடக்கூடிய நடிப்புத்திறன் வாய்ந்தவர்தானே அவர்...
உணர்வுகளை சிவாஜியைவிடவும் வெளிக்காண்பித்த நடிகர்கள் வேறு யாரையும் ஒப்பிட தோன்றவில்லை மேடி...

tamiluthayam said...

சிவாஜியின்"பார்த்தால் பசி தீரும்" படத்தை பாருங்கள். அதில் லேசாக ஒரு கால் ஊனம். படம் முழுக்க நொண்டி , நொண்டி நடப்பார். அந்த பாடி லாங்வேஜ் ரெம்ப நன்றாக இருக்கும்.

Related Posts with Thumbnails