விசாரணைகள் முடிந்த நிலையில்
வலிகள் தரும் வசவுகளை கண்ட மனமாய்
வலிகள் தரும் வசவுகளை கண்ட மனமாய்
வலிகள் தராத அடிகளை தங்கிய உடல்
கொண்டு என் உணர்வுகளின் தனிமையை கண்டு அஞ்சும்
வேளையில் மனதில் கவிதை எழுதும் ஆசைகள் அலை மோதிய
பொழுதில் காகிதங்கள் ஏதும் இல்லாத நிலையில்
எண்ணங்களை எழுதுகோள் ; காற்று காகிதமானது
நான் இந்த கவிதையை எழுதும் வேளையில்.....
நினைவுகளின் பதிவு ஏதும் இல்லாத
சுத்தமான காற்றை தேடினேன் ;
சுத்தமான காற்று கிடைக்காத பொழுது
நான் சுவாசிக்க சேமித்து வைத்திருந்த காற்றில்
என் எண்ணங்களின் பதிவான கவிதையை எழுதும்
வேளையில் வலிகள் இல்லாத உடல் வலிகள்
காரணமாய் மயங்கினேன் .....
மறுநாள் வலிகளை வழி கொண்டு வரவேற்க
மயக்கம் தெளிந்த பொழுது
நான் பதிவு செய்த காற்றை காணவில்லை
யாரவது சுவாசித்து இருப்பார்களோ என்ற பயத்தில்
நான் இருக்க....
காலடி சத்தங்களை கேட்டது என் காதுகளில்
10 comments:
இப்போதைக்கு உள்ளேன்! அப்புறமா படிக்கறேன். உங்களை தொடர் பதிவுக்கு அழைத்து இருக்கிறேன். பாருங்க :))
http://arivalee.blogspot.com/2009/11/blog-post.html
இதனால் அறியப்படுவது யாதெனில் தலைவரை ரெண்டு நாள் லாக்கப்பில் வைத்து யாரோ டின்னு கட்டியிருக்கிறார்கள்!
//நான் பதிவு செய்த காற்றை காணவில்லை
யாரவது சுவாசித்து இருப்பார்களோ என்ற பயத்தில்//
ம்ம் நல்லாருக்கு..
..Blogger வால்பையன் said...
இதனால் அறியப்படுவது யாதெனில் தலைவரை ரெண்டு நாள் லாக்கப்பில் வைத்து யாரோ டின்னு கட்டியிருக்கிறார்கள்!//
அப்படியா மேவி ஒரு வாரத்துக்கு பக்கமா காணாமா போனது இதனால்தானா
//காலடி சத்தங்களை கேட்டது என் காதுகளில்//
அது காதுலதான் கேட்கும்
மேவீ காத்தில என்ன எழுதினீங்க.உங்களைப் பிடிச்சு வச்சவங்களுக்கு எதிரா ஏதாவது எழுதி வச்சீங்களா.அவங்களே எடுத்திருப்பாங்க.பாருங்க திரும்பவும் விசாரணைன்னு கூட்டீட்டுப் போகப்போறாங்க.இதுக்குத்தான் சின்னதிலேயே சொல்லி வச்சாங்க கண்ட இடத்திலயும் கரிக்கோடு கீறக்கூடாதுன்னு.
மேவி உங்க காத்து உங்ககூட இல்லாட்டி உங்களுக்குப் பிடிச்சவங்ககிட்டத்தான் இருக்கும்.தேடுங்க கிடைச்சிடும்.
@ ramya : saringa
@ vangamudi : raittu. vanthu parkkiren
@ vaals : he he he he eppudi kandupidichinga
@ vasanth : thanks dude
@ tharani priya : ama ana illai
@ hema : kattayam
ஆவ்வ்.. உண்மையிலேயே செம கவிதை தல. ஆனா எனக்குதான் சரியா புரியல. பின்நவீனம்?
வரிகளைக்கட்டமைப்பதில் இன்னும் கொஞ்சம் கவனம் தேவைன்னு நினைக்கிறேன் நண்பா..ஆனா கருத்து செமையா இருக்கு.. வாழ்த்துகள் பின்நவேனத்துவவாதியே..
Post a Comment