அன்று தீபாவளி. வெடிச் சத்தம் கேட்டு எழுந்த பொழுது தான் ஞாபகம் வந்தது. என்ன தான் ஊருக்கு இரண்டு நாள் முன்னரே வந்து இருந்தாலும் அவளை பற்றி வீட்டில் சொல்ல சந்தர்ப்பம் பார்த்து கொண்டு இருந்தால் தீபாவளி கொண்டாடங்கள் பற்றிய சிந்தனை பெரிய அளவில் மனசுல இல்லை என்பது உண்மை.
சென்னையிலிருந்து கிளம்பும் போதே மனதிற்குள் முடிவு எடுத்து விட்டு தான் ரயில் ஏறினேன். என்ன தான் A / C பெட்டில் பயணம் செய்த பொழுதிலும் ; என்னால் அந்தே இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. மனதிற்குள்ளே ஓர் விவாத மேடையில் பலமான விவாதம் நடந்து கொண்டே இருந்தது. அந்த மேடையில் "யாரிடம் இந்த விஷயத்தை சொல்வது-அம்மா அல்லது அப்பா" , "சொன்ன பின் எந்த மாதிரியான விளைவு ஏற்படும்" போன்ற தலைப்புகளில் எனக்கு நானே கருது சொல்லியும் எதிர் கருது சொல்லியும் அந்த இரவை ஓட்டினேன். நிஜத்தில் அம்மா எதிர்ப்பு சொன்னால் என்ன செய்வது என்று நினைக்கவே பயமாக இருந்தது. அம்மா அப்பாவை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாது.... அதே சமயம் அவளையும் என் மனதிலிருந்து வெளியேற்றவும் முடியாது. உயிரில் கலந்து விட்டாள் அவள்.
அவள் அழகான இம்சை. அவளை முதலில் பார்த்து வருடங்கள் பல ஆகிய பொழுதிலும் அவள் முகம் நேற்று பார்த்தது போல் பசுமையாய் மனதில் ராஜா ரவி வெர்மா ஓவியமாய் பதிந்து உள்ளது. இரவுகளில் அவள் வருவாள் தினம்தோறும். நித்தமும் அவள் தான் மனதில். அவள் நினைவ்வுகளை தான் சுவாசித்தேன்.
வீட்டிற்குள் நுழைந்த பொழுது அம்மா கேட்டாங்க "என்னாச்சுடா??? இப்படி இருக்கா".
அப்பொழுதே சொல்லிருக்கலாம் ஆனால் உடல் சோர்வு காரணமாய் அம்மாவை எதிர் கொள்ள இயலவில்லை. பிறகு வந்த இரண்டு நாட்களிலும் அம்மா அப்பா, இரண்டு பேரும் வேலையாய் இருந்ததினால் தனியாக பேச முடியவில்லை. அந்த நேரங்களில் என்னுள் இருந்த அந்த அவஸ்தையை மிகவும் ரசித்தேன்.
அடுத்த வெடி சத்தத்தில் இயல்பு நிலைக்கு வந்தேன். அம்மா பூஜை வேலையில் இருந்தார்கள். அப்பா நண்பர்களுக்கு செல்போன் முலமாக வாழ்த்துக்களை சொல்லி கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் எனது செல்போனில் அழைப்பு வர, அதை எடுத்து பேசும் நிலையில் நான் இல்லாதால், அதன் இயக்கத்தை நிறுத்தினேன்.
காலை பூஜை முடிந்த நேரம். பேசலாம் என்று அம்மா அருகே சென்றேன். சமையல் வேளை. அதனால் சமயலறையில் இருந்தார்கள்.
"அம்மா"
" என்டா"
"கொஞ்சம் பேசணும்"
"இப்ப தான் நேரம் கிடைச்சுதா"
"போ. அப்பா கிட்ட போய் சொல்லு"
நான் மொக்கை போட தான் வந்து இருப்பேன் என்று நினைத்து விட்டார்கள். என் மொக்கையை தவிர்க்க அம்மா கையாளும் உத்தி இது. அம்மாவுக்கு தெரியும் எனக்கு அப்பா கிட்ட கொஞ்ச பயம் உண்டு என்று. சரின்னு அப்பா கிட்ட சென்ற பொழுது வாசலில் பக்கத்து வீட்டு மகாலிங்க மாமாவிடம் பேசி கொண்டு இருந்தார்.
வந்து டிவி முன் அமர்ந்தேன். நேரம் போனதே தெரியவில்லை. இப்பொழுது தான் கவனித்தேன். அம்மா என் அருகே நின்ன்று கொண்டு இருப்பதை. பேசலாம் என்று நினைத்த பொழுது ..... அம்மாவுக்கு பிடித்த நடிகையின் பேட்டி டிவியில் ஒளிபரப்பானது. நேரம் காலம் தெரியாமல் ........ வந்த கோவத்தில் மாறன் சகோதரர்களை மனதிற்குள் சபித்தேன்.
=
காலை சிற்றுண்டி முடிந்த நேரம். அப்பா வெளியே போய் இருந்தார். அம்மாவும் நானும் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டு இருந்தோம். அம்மாவை எப்படியும் சமாளித்து விடலாம் என்ற தைரியம் கேள்வி கேட்க அப்பா இல்லை என்பதினால் வந்தது. அம்மாவிற்கு என் மேல் தனிபட்ட பிரியம் உண்டு. மொத்த குடும்பத்தில் நான் அதிகம் படித்தவன் என்பதினாலும், நல்ல குணமுடையவன் என்பதினாலும்.
வசதியான குடும்பம்...... அவளை மணம் முடித்து வைக்க சிரமம் இருக்காது என்ற நம்பிக்கை எனக்கு ஆரம்பம் முதலே இருந்தது.
காலை முதலே எனக்கு செல்போன் அழைப்பு ஏதும் வராததாலும், அப்பாஸும் யுவனும் இன்னும் வீடிற்கு வரவில்லையே என்று கேட்க ; பேச்சு ஆரம்பமானது.
சிறிது நேரம் போன பின்
"அம்மா"
என்னா என்பது போல் புருவம் உயர்த்தி பார்த்தாங்க.
எனக்குள் ஆயிரம் பிரளயம்.
"நா ....நா ... நான் ஒரு பெண்ணை கா...."
"ம்ம்ம் சொல்லு"
இது தான் அம்மாவிடம் எனக்கு பிடித்தது. மிகுதியான உக்கம் தருவார்கள்.
"நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன்" என்று மனபாடம் செய்தது போல் சொல்லி விட்டேன்.
எனக்கு ஆச்சிரியம். அம்மா சிரித்த படி " யார அது??"
சற்றும் இதை நான் எதிர்பார்க்கவில்லை.
தைரியம் வந்து ....
"அசின் ம்மா"
"????"
"நடிகை அசின் ம்மா" என்று அழுத்தி சொன்னேன்.
ரொம்ப முத்தி போயிருச்சு என்பது போல் அம்மா என்னை பார்த்தாங்க.

16 comments:
ம்க்கும்...
நல்லா காதலிங்கப்பு...
அவங்க உங்களை கழட்டி விடாம இருந்தா சரி...
இப்படித்தான் யாரோ சினேகாவைக்கூட லவ் பண்ணினாங்களாம். :)
அடடே!
விசயம் அம்மாவுக்கும் தெரிஞ்சி போச்சா!
சரி சரி,
ஹார்லிக்குஸும், ஆரஞ்சும் வாங்கிட்டு பார்க்க வர்றேன்!
வார்டு நம்பர் என்ன?
\\"நடிகை அசின் ம்மா" என்று அழுத்தி சொன்னேன்.\\
அவனா நீயி??? :-)
kikikiki
என்ன மேவீ.நேத்துக்கூட என்கூடப் பேசறப்போ யாரோ அக்கா பொண்ணுன்னு... பேர்கூடச் சொன்னீங்க !
kodumai kodumai kodumai!!!
@ வசந்த் : சரிங்கண்ணா
@ சின்ன அம்மிணி : அப்படியா ...நான் எல்லா நடிகையும் லவ் பண்ணுவேன்
@ வால்ஸ் : பண்டிமடம் தானுங்க ஹீ ஹீ ஹீ
@ விஜய் : எஸ் சார்
@ கார்க்கி : ஹி ஹி ஹி ஏன் பொறாமையா
@ ஹேமா : ஆமாங்க... காமெடிக்காக முடிவை மாற்றிவிட்டேன்
@ திவ்யப்ரிய : அடுத்த சேடன் பகத் நான் தான்னு சொல்லுங்க
அய்யே அசின் வேண்டாம் மேவி எனக்கு அவங்களை பிடிக்காது
@ தாரணி ப்ரியா : அப்ப த்ரிஷாவுக்கு வாழ்க்கை தந்து விடலாமா ?????
அடப் பாவமே இதென்னா கலாட்டா!?
ம்.. காதல்
அம்மாவுக்கும் தெரிஞ்சி போச்சா???????
hahaha:)))))))
அசின் வீட்ல இருந்து ஆட்டோ வருது ஆட்டோ வருது.
நானும் எங்கம்மாகிட்ட காதலி பேரை சொன்னேன். அம்மா மயங்கி விழுந்துட்டாங்க. என் காதலி பேரு நமிதா
@ அன்புடன் அருணா : ஹீ ஹீ ஹி ஹீ .....
@ தியாவின் பேனா : ஆமாங்க
@ மஹா : வரட்டும் வரட்டும் ...... மாப்பிள்ளை பார்க்க தானே
@ tamiluthayam : தல ..... நமீதா எனக்கு ரொம்ப லவ் டாச்சர் தரங்க ... சொல்லி வைங்க ஹீ ஹீ ஹீ
Post a Comment