உலக திரைப்பட வரலாற்றில் முதன் முறையாக அறிமுக காட்சியில் சாக்கடையில் இருந்து கதையின் ஓர் நாயகன் வருவது போல் அமைத்திருந்தது இந்த படத்தில் தான் இருக்கும். (எனக்கு தெரிந்த வரைக்கும்). BANK ROBBERY படங்களில் இது ஒரு குறுப்பிட வேண்டிய படம். ஒரு கிளாச்சிக்.
ராணுவத்தில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக வெளியேற்ற பட்ட சிலரை ஒருவன் ஒருங்கிணைத்து ராணுவ ரீதியில் திட்டங்களை திட்டி ஒரு வங்கியை கொள்ளை அடிப்பது தான் கதை.( வர போகும் எதாவது புது தமிழ் படத்தை நினைவு படுத்தினால் அதற்கு கம்பெனி பொறுப்பில்லை)
கூட்டாளிகள் அனைவரும் ஒவ்வொரு விதங்களில் திறமை மிக்கவர்கள். அந்த திறமைகளை கொண்டு ஓர் ராணுவ முகாமிலிருந்து ஆயுதங்களை கொள்ளை அடிபதையும், அந்த ஆயுதங்களை கொண்டு வங்கியை கொள்ளை அடிப்பதையும் என்ற இரு முக்கிய சம்பவங்களையும் அதற்கு ஏத்த துணை சம்பவங்களை கொண்டு விறுவிறுப்பான திரைப்படமான இது ஒரு பிரிட்டிஷ் நாட்டு திரைப்படம். ஒரு நாவலை தழுவி எடுக்க பட்டது. அதை எழுதியவரும் இதில் நடித்துள்ளார்.
எனக்கு நன்றாக நினைவுயிருக்கிறது நான் சிறு வயதில் இந்த படத்தை பார்க்கும் பொழுது கண் இமைக்காமல் பார்த்தது. அந்த காலத்தில் இந்த மாதிரியான சம்பவங்கள் அடிக்கடி நடந்தால் ஹாலிவுட் மற்றும் பல நாட்டு திரைப்பட துறையினர் இதே போல கதைஅம்சம் கொண்ட திரைப்படங்களை எடுத்து உள்ளனர். தமிழிலும் பல வந்துள்ளது.
தமிழ் சினிமா போல இல்லாமல் அப்ப அப்ப போலீஸ் கதையில் எட்டி பார்த்து டென்ஷன் ஏற்படுத்தும். ஆனால் தமிழ் படத்தில் கொள்ளை அடிப்பது ஹீரோவாக இருந்தால் போலீஸ் கட்டாயமான முறையில் முட்டாளாக தான் இருப்பார்கள். இந்த படத்தில் அப்படி இல்லாமல் இருபது கொஞ்சம் நிம்மதி தான் என்றாலும் கடைசி காட்சியில் பரிதாபம் ஏற்படுவது டைரக்டர் யின் வெற்றி. படத்தில் டைரக்டர் டச் என்பது கதாபாத்திரங்களின் அறிமுகதில்லையே அவர்களின் நிலையையும் சொல்லி விடுவதில் தெரிகிறது.
ஓன்று மட்டும் நிச்சயம்.... ஞாயிறு மாலையில் பொழுது போக்க ஏற்ற படம்.
5 comments:
சின்ன வயதில் பார்க்கும் பொழுது ...
இப்பவும் சின்ன வயசு தானே உங்களுக்கு ;)
-------------------------
பார்ப்போம் ...
ஏன்யா மொத்தப் படமும இருக்கா? அநியாயம்யா
விஜயகாந்த் நடிச்சா தான் நான் இந்த மாதிரியான படங்களைப் பார்ப்பேன்.
துரை இங்கிலீஸ் படமெல்லாம் பாக்குது! ;))
@ ஜமால் : அமாங்க உண்மையாக நான் யூத் தான் ... பாருங்க நல்ல பொழுது போகும்
@ கார்த்திகை பாண்டியன் : அது வெறும் ட்ரைலர் மட்டும் தானுங்க
@ மஹா : இந்த படத்திற்கு அவர் சரி வர மாட்டார்
@ கார்த்திக் : நாங்களும் உதவாத சினிமா பார்போம் ல
Post a Comment