Pages

Sunday, November 1, 2009

தீபாவளி சிறப்புப் பதிவு - 2009..!!!

கார்த்திகை பாண்டியன் என்னை இந்தத் தொடர்பதிவுக்கு அழைத்து இருக்காரு.
1) உங்களைப் பற்றி சிறு குறிப்பு ?

மேவி (பெயர் சொன்னால் போதும் தரம் விளங்கி விடும்). என்னை பற்றி சொல்ல பெருசா ஒன்னும் இல்லைங்க.
2)தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம்?

சிறுவயதில் பாண்டிச்சேரி ல நிறைய பாட்டாசுகளுடன் கொண்டாடியது.மூன்று நாளாகியும்; தொடர்ந்து வெடித்தும் பட்டாசுகள் காலியாகவில்லை.அவ்வளவு இருந்துச்சு.
3)2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

போன தீபாவளிக்கு எந்த ஊரில் இருந்தேன்னோ அதே ஊரில் தான் இந்த தீபாவளிக்கும் இருந்தேன்.
4)த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

ரொம்பவும் சுயநலமாய் போகிவிட்டது.
5)புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

அதெல்லாம் தெரியாதுங்க. அப்பா, அம்மா தான் வாங்குவாங்க.
6)உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

வீட்டில் தான் செய்வோம். அது ஒரு பெரிய பட்டியலுங்க.
7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

நேரில் பார்க்க முடியுமானால் நேரில் சென்றே சொல்லி விடுவேன். இல்லாட்டி செல்போன் முலமாக தான்.
8)தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

அப்பாஸ், யுவன் வீட்டிற்கு மட்டும் சென்று விட்டு வீடு வந்து விடுவேன். தொலைக்காட்சி பெரும்பாலும் பார்க்க மாட்டேன். விளம்பர தொல்லை தாங்க முடியாது, அதனால் எதாவது புத்தகம் படிப்பேன்
9)இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

எல்லோரும் சந்தோஷமாக இருக்க வழிவகை செய்வேன்.
10)மறக்க முடியாத தீபாவளி சம்பவம் எதாவது ???

தலை தீபாவளிக்கு அண்ணி வந்து இருந்த பொழுது ; தீபாவளிக்கு மறுநாள் அண்ணி சமையல் தான். சாப்பிட்டு விட்டு "அண்ணி!!! ரசம் சூப்பர்" என்று சொன்னேன்.உடனே " மேவி!! அது சாம்பார்". என்று அவங்க சொன்னாங்க. பிறகு எனக்கு என்ன சொல்வது என்று தெரியாமல், எழுந்து போய் விட்டேன்.

4 comments:

ஊர்சுற்றி said...

கொஞ்சம் விளக்கமாகவே பதில்களைச் சொல்லியிருக்கலாம்!

ஸ்ரீராம். said...

பொன்னியின் செல்வனில் இருந்த வெளிப்பாடு இல்லாமல் இங்கு எல்லாம் மர்மம்! தீபாவளி தொடர் பதிவை ஸ்ரீ கிட்டேருந்து தொடர்ந்து வந்து உங்களை எல்லாம் பார்த்துகிட்டு இருக்கேன். அடுத்து எங்கன்னு ஓடணும்... வரேன்...

ப்ரியமுடன் வசந்த் said...

ம்ம்..கொஞ்சம்போல உங்களைப்பத்தி தெரிஞ்சுகிட்டேன்..

மேவி... said...

@ ur sutri : solli irukkalam. ana time illainga

@ sriram : app marma desam partha madiri irukku nnu sollunga

@ vasanth : ithu verum trailor thaan.

Related Posts with Thumbnails