எனக்கும் அவளுக்கும் இடைவேளை
கட்டிலில் அவள் அந்த பக்க்கம்
நான் இந்த பக்கம்
எங்களுக்கு நடுவே ஊடல்....
இரவின் மௌனம் பழகியது
அவளின் மௌனம்
நான் அறியாதது.......
இரவின் மௌனம் ; மனதில்
அமைதி இல்லை,
பேசுவதற்க்கான வார்த்தைகளை
தேடியபடி கண்கள்
இரவின் இருட்டில் விடை தெரியாமல்
விடை என்னுள் வைத்து கொண்டே ......
12 comments:
nice. good work
Gayathri
ஊடல் பிரித்த கட்டிலில்
பக்கம் பக்கமாய்
நானும் அவளும்.
இரவோடு பழகியதால்
புரிந்துகொண்டேன்
அதன் மொழியை.
புரியாத மொழியோடு
மௌனமாய் அவள்
மறு பக்கத்தில்.
இரவின் இருளை
கண்கள் விழுங்க
வார்த்தைகள் வராமல்
விடை தெரிந்த என்னோடும்
மௌனம் இன்னும் !!!
மேவீ உங்கள் கவிதையை மெருகு படுத்தியிருக்கிறேன்.எப்படியிருக்கு ?
@ hema : wow... supera irukkunga
உங்கள் கவிதையும் அழகு. ஹேமாவின் மெருகேற்றல் மிக அருமை...
ஓ
இது தான் கவிதையா!?
உங்கள் கவிதையும் ஹேமாவின் கவிதையும் அருமையா இருக்கு.
மேவி !! அசத்துங்க!!!
ஹேமாவின் நகாசுவேலையும் சூப்பர்!
Superb
visit my blog
http://surakovai.blogspot.com
குட்..
நல்லாருக்குப்பா உங்க ஊடல் கவிதை..
kavidhai nalla irukku Mayvee... :)
@ காயத்ரி : எந்த ஊரில் இருக்கீங்க மேடம் ???
@ புலவன் புலிகேசி : நன்றி
@ வால்பையன் : இதை கவிதை ன்னு எல்லோரும் சொல்லுறாங்க... அனா எனக்கு ஒன்னும் தெரியாது
@ MAHA : தேங்க்ஸ் மஹா
@ தேவன் மாயம் : ரொம்ப நன்றி
@ ராசு : உங்க பிளாக் க்கு வந்து பின்னோட்டமும் போட்டாச்சு தல
@ பிரியமுடன்...வசந்த் : ஐ... அப்படியா
@ kanagu : தேங்க்ஸ்
Post a Comment