Pages

Saturday, November 14, 2009

குழந்தைகள் தினம் இன்று.....


இன்று நேருவின் பிறந்த நாளாம், அவருக்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும் என்பதால் அவரின் விருப்ப படி இந்த நாளை குழந்தைகள் தினமாக அறிவிச்சாங்க இந்திய அரசாங்கம். இந்த மேட்டர்யை நாங்க எல்லாம் சின்ன வயசில மீட்டர் போட்டு யோசிப்போம். எல்லாம் கொக்கு மக்காக தான். ஹ்ம்ம்.



குழந்தைகள் தினம் என்று கொண்டாடும் இந்திய அரசு இன்னும் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுக்க இன்னும் பெரிய அளவில் எந்த முயற்சியும் எடுத்த மாதிரி தெரியல. ஏதோ ஒன்னு இரண்டு சங்கங்கள் இருந்தாலும் ஒரு உஸ் இல்லை.



என்னை கேட்டால் இதற்க்குன்னு ஒரு அமைச்சரங்கம் (MINISTRY ) பெரிய அளவில் அமைத்து மிகவும் சக்தி வாய்ந்ததாக உருவாக்கினால் நல்ல இருக்கும்.



அதுவும் சினிமா, இலக்கியம் போன்றவற்றில் குழந்தைகளுக்கான இடம் இருப்பதில்லை. இன்று சமுகத்தில் குழந்தைகள் தினம் வந்தால் தான் குழந்தைகளை பற்றி பெரிய அளவில் பேசுகிறோம். பிற்பாடு மறந்து விடுகிறோம்.



இன்று எனக்கு தெரிந்து சென்னையில் பல குழந்தைகள் அவர்களின் குழந்தைதனமையை பெற்றோரின் பொருளாதார வேட்டையால் தொலைத்து கொண்டு இருக்கிறார்கள். இன்னும் பல வருஷம் கழிந்து பல திறமை கொண்டவர்களை பார்க்க முடியாது. இப்பொழுதே எதாவது செய்தால் தான் நாளைய இந்தியாவை காப்பாற்ற முடியும். இன்று கல்வி நிலையில் பொறுத்த வரைக்கும் ஒரு LONG STANDING PLAN இருப்பதாய் தெரியவில்லை.
பல வீடுகளில் குழந்தைகள் குழந்தைகள் போல் இல்லமால் பெரிய மனுஷங்கள் மாதிரி நடக்குரங்க.



போன தலைமுறையில் கல்வி முறை சரி இல்லாததால் தான் இன்று EMPLOYBILITY ரேட் ரொம்பவே கம்மியா இருக்கு. இன்ன்னும் சொல்லி கொண்டே போகலாம் அவ்வளவு இருக்கு.



ஓர் நல்ல சமுகம் அமைக்க வேண்டுமானால் ; நாளைய இந்தியாவுக்கு ஒரு நல்ல எதிர்க்காலம் அமைய வேண்டுமானால் குழந்தைகள் குறித்தான விழிப்புணர்வு வருவது காலத்தின் கட்டாயமாக இன்று இருக்கிறது.
=
=
=
=
=
டிஸ்கி : குழந்தைகளை குழந்தைகளாக வளர விடுங்கள்.

6 comments:

ஹேமா said...

குழந்தைகள் தினம்.
*********************
குழந்தைகள் தினமாம்.
சிறுவனின் தலையில்
கட்டு நோட்டீஸ்.
ஒட்டின பிறகுதான்
ஒட்டிய வயித்துக்கு
ஒரு பிடி சோறாம் !

Anonymous said...

Who knows where to download XRumer 5.0 Palladium?
Help, please. All recommend this program to effectively advertise on the Internet, this is the best program!

மேவி... said...

@ hema : wow... romba thanks

Divyapriya said...

//என்னை கேட்டால் இதற்க்குன்னு ஒரு அமைச்சரங்கம் (MINISTRY ) பெரிய அளவில் அமைத்து மிகவும் சக்தி வாய்ந்ததாக உருவாக்கினால் நல்ல இருக்கும்.//

ரொம்ப சரியா சொன்னீங்க!

மேவி... said...

@ divyapriya : thanks

iniyavan said...

எனக்கு டிஸ்கி ரொம்ப பிடிச்சிருக்கு!

Related Posts with Thumbnails