நம்ம நாமக்கல் கவிஞர் எழுதின கதை இது ... நாவல முதல வந்துச்சு அப்பரும் படமா எடுத்தாங்க. நாவலை நான் படிச்சதில்லை. நாமக்கல் கவிஞர் பத்தி எனக்கு ஜாஸ்தியா தெரியாது. ஆனா அந்த காலத்துல இந்த கதை ஒரு பெரிய action கதையாக வந்துருக்கும். சரி படத்தை பத்தி சொல்லுறதுக்கு முன்னாடி நாமக்கல் கவிஞர் எழுதினன இந்த நாவலை online ல வாங்க இங்கே கிளிக் பண்ணுங்க.
இந்த படத்தை விட இதுல வர ஒரு பாட்டு தான் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அது பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதினது. இவரோட பாட்டு ல எப்பவுமே ஒரு social view இருக்கும். "இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் ....." ங்கிற பாட்டை ஒரு வாட்டி கேட்டு பாருங்க . இன்னைக்கு கூட அது பொருத்தும். ஒரு வேளை அவரு சோஷலிஸ்ட் யாக கூட இருக்கலாம். அதுல ஒரு line வரும் பாருங்க ...."தெரு எங்கும் பள்ளிகள் கட்டுவோம்....." நம்மகுள்ள இருக்குற மனிஷநேயத்தை கொஞ்சம் தட்டி எழுப்பி விட்டுட்டு போகும்.
இந்த ஒரு பாட்டை தவிர வேற எந்த பாட்டும் என்னை கவரல.
கதைல கிராமத்துல பணகார வீடு பெண் பூங்கோதை யை சுத்தி தான் நடக்குது. பூங்கோதை மேல ஆசை வைச்சு இருக்குற கிரமத்து மைனர் தன்னோட அடியாள் காத்தவராயன் கிட்ட சொல்லி, பூங்கோதையை கடத்த சொல்லுறேன். அப்படி கடத்தி கொண்டு போற போது, ஒரு மலைவாசி பெரியவர் அவங்களை அடிச்சு போட்டுட்டு பூங்கோதையை காப்பாத்தி கொண்டுகிட்டு போறார்.
இதுக்குள்ள பூங்கோதையோட அப்பா என்ன பண்ணுறார்ன்ன, போலீஸ் கிட்ட கம்ப்ளைண்ட் தந்துரர். அங்க இருக்குற போலீஸ் ஓட நிலைமையோ ரொம்ப ஒடிசல். அந்த கிராமத்துல நடக்குற திருட்டு, கொலைகளை கண்டுபிடிக்க முடியாம தவிச்சுகிட்டு இருக்காங்க. இதுல வேற அவங்களுக்கு இன்னொரு குழப்பம் .... நடக்குறதுக்கு எல்லாம் யார் காரணம்ன்னு. காத்தவராயனா இல்ல மலைக்கள்ளனா .... இல்ல இரண்டு பேரும் ஒருத்தர் தானா ???? இதற்க்கிடைய (இனிமேல் சுத்த தமிழ் ) பூங்கோதியை அந்த பெரியவரு ஒரு மலை குகைக்கு கூட்டிகிட்டு போறாரு ....அங்க பூங்கோதைக்கு ஒரு ஆச்சிரியம் காத்துக்கிட்டு இருந்தது ???
நிலைமை இப்படி இருக்குற போது அந்த கிராமத்துல திடீர் பணக்காரர் ரஹீம் போலீஸ்க்கு அறிமுகம் ஆகுறாரு.அவருடைய நடவடிக்கை எல்லாம் மர்மமாக இருப்பதினால் அவர் மேல் ஒரு கண் வைக்கிறது போலீஸ். அவர் அடிக்கடி மலை பக்கம் போயிட்டு வருவதை பார்த்து ..போலீஸ் அவர் கிட்ட விசாரிக்கும் பொழுது, மலைக்கள்ளன் தானோட நண்பருன்னு சொல்லுறார்....அதே சமயத்துல கிராமத்துக்கும் போலீஸ்க்கும் நிறைய உதவிகளும் செய்யுறார் ...... அது வரைக்கும் வெளி உலகத்துக்கு தன்னை காட்டிக்காத மலைக்கள்ளன், பூங்கோதையை கட்டாயம் கல்யாணம் பண்ணி கொள்வதாய் கடிதம் அனுப்புகிறான் ( இந்த சீன் ல வசனம் சரியா கேட்கல ....)..ஏன் ???
இதற்க்கிடைய பூங்கோதை ஓட அத்தை 12 வருஷங்களுக்கு முன்னாடி காணாமல் போன தனது மகனை பற்றி வருத்தம் கொள்கிறாள். அவன் என்ன ஆனான் ???
கொஞ்ச நாள் கழித்து பூங்கோதை வீட்டுக்கு திரும்பி வருகிறாள் ... நகை எதுவும் திருடபடாமல் . ஆனால் அவள் திரும்பி வந்த சந்தோசம் நிலைப்பதற்குள் பூங்கோதையின் அப்பா காணாமல் போகிறார் .. அவரை கடத்தியது மலைக்கள்ளன் தான் குற்றம் சாட்டுகிறது போலீஸ். அப்படி இருந்தும் பூங்கோதைக்கு மலைக்கள்ளன் மேல பிரியம் வருகிறது. பிரியம் ஒரு கட்டத்தில் ரஹீம் சொல்லும் ஒரு விஷயத்தை கேட்டு அவளுக்கு காதல் ஆகுது.
இதுக்கு எல்லாத்துக்கும் விடை சொல்லுவது மீதி கதை ....
இந்த படத்தை பத்தி நம்ம பாராயோட எண்ணத்தை படிக்க இங்க கிளிக் பண்ணுங்க..... இன்னைக்கு காலைல டி கடைல பார்த்த ஒரு பெரியவர் கிட்ட இந்த படத்தை பற்றி பேசும் பொழுது, அவரு படத்தை விட நாவல் நல்ல இருக்கும்ன்னு சொன்னாரு. கொஞ்ச நாள் முன்னாடி நிறைய பேர் படிக்குற சாண்டில்யன் எழுதின ஒரு நாவல் வாங்குவதற்கே எனக்கு முச்சு தள்ளி போயிருச்சு ....இதுல நான் நாமக்கல் கவிஞர் (நாமக்கல் ல இவரு ஒருத்தர் தான் கவிஞர் போல ) க்கு எங்க தேடுவேன்....
படத்துக்கு வசனம் எழுதிருப்பது ..... கருணாநிதி (இப்படி தானுங்க டைட்டில் கார்டு ல வருது .....ஹலோ திமுக BROTHERS AND SISTERS டென்ஷன் வேண்டாம்....நான் இலக்கியவாதி இல்லை ). பொதுவா இவரு வசனம் எழுதின்ன படத்தையெல்லாம் பார்த்தால், ஹீரோ ஒரு நேரம் வரைக்கும் ரொம்ப சாதாரணமா பேசிகிட்டு இருப்பாங்க, ஆனா என்ன ஆகும்ன்னு தெரியல திடிர்ன்னு பேதி கண்ட மாதிரி சுத்த தமிழ் ல பேச ஆரம்பிச்சுடுவாங்க, பிறகு இரண்டு நிமிஷம் கழிச்சு சாதாரண தமிழுக்கு u turn அடிச்சு வந்துருவாங்க. அது ஏன்ன்னு எனக்கு புரியல.
இந்த படத்துல எம்ஜியாரை விட எனக்கு பானுமதி அவர்களை தான் ரொம்ப பிடிச்சுருக்கு. வெட்கம், கோவம், சந்தோசம் ன்னு கலந்து கட்டி அடிச்சு விளையாடி இருப்பாங்க. இந்த மாதிரியான திறமை உள்ள நடிகைகள் இனிமேல் வருவாங்களா என்பது சந்தேகம் தான். முதல் காட்சியிலையே குதுரை மேல அமர்ந்தபடி வருவாங்க பாருங்க ....செம கிளாஸ் தான். சின்ன மச்சம், மீசை, தாடி ....இதையெல்லாம் வைச்ச மாறுவேஷம் ஆகிடும்ன்னு இந்த படத்துல தான் கண்டுபிடிச்சு இருப்பாங்க போல. இதை நான் ஏன் சொல்லுறேன்ன்னு நீங்க நாவல் படிச்சுட்டு பிறகு இந்த படத்தை பாருங்க...உங்களுக்கே தெரியும்.
இவ்வளவு பாட்டு உள்ள படத்தை அந்த காலத்துல எப்படி தான் பொறுமையா பார்த்தாங்களோ தெரியல சாமி. ஒரு வேளை அந்த காலத்துல அடிக்கடி தம் அடிபவர்கள் நிறைய பேர் இருந்திற்ப்பாங்க போல . ஆஹ ஊன்ன பானுமதியை பாட்டு பாடி டான்ஸ் அட விடுறாங்க.
இந்த படத்தை பார்க்கும் போது, திருச்சி ல அந்த காலத்துல குரங்கு ரோடு ன்னு ஒரு இடத்துல (இப்பொழுது அந்த ரோடு மிகவும் பிரபலமானது.) வழிப்பறி நிறைய நடக்குமாம். அங்க நிறைய மரம் இருக்குமாம் (அந்த காலத்துல ..அந்த காலத்துல ) . அதில் தொங்கிய பாடி போற வர வண்டியில் இருந்து அரிசி மூட்டைகளை கொள்ளை அடிப்பாங்க. அதெல்லாம் ஞாபகம் வந்துருச்சு.
முக்கியமா ஒன்னை சொல்லிட்டு நான் முடிச்சுக்கிறேன் . இந்த படத்துல வர விஞ்சு சண்டைக்கு சின்ன வயசுல நான் மிக பெரிய ரசிகன். என்னை பெரிதும் ஆச்சிரிய பட விஷயங்களில் இதும் ஓன்று. ஆனா இன்னைக்கு காலைல படத்துல அந்த சீன்யை பார்க்கும் பொழுது கொஞ்சம் ஏமாற்றமே வந்துச்சு. நான் அந்த விஞ்சு படத்துல ரொம்ப பெருசா USE பண்ணிருப்பாங்கன்னு இவ்வளவு நாள் நினைசுகிட்டு இருந்தேன்...ம்ம்ம்ம் ஒரு வேளை பட்ஜெட் PROBLEM யாக கூட இருக்கலாம். நாவலை படிச்சு பார்க்கணும்.
நான் சரித்திரம் படிச்ச வரைக்கும் இந்த மாதிரியான மலைக்கள்ளன் ஆட்கள் நிறைய இருந்திருக்காங்க. அவங்களுக்கெல்லாம் ராஜ்யத்தை எதிர்த்து மக்களுக்கு நல்லது செய்வதே வேலையாக இருந்திருக்காங்க. அவர்களை தவிர்த்து பல திருட்டு கோஷ்டிகளும் இருந்திருக்காங்க. பைக் ன்னு ஒன்னு இருந்த கார் ன்னு ஒன்னு இருக்க தானே செய்யுது. (பழமொழி சொன்ன அனுபவிக்கணும் ஆராய கூடாது.)
ஹாய் மக்கள்ஸ் எப்புடி இருக்கீங்க. புது வேலைல ரொம்ப பிஸி ஆகிட்டேன். இப்ப இருக்குற கம்பெனில என்னோட dept புதுசா ஆரம்பிக்க பட்டது. அதனால தினசரி பாம்பே ல இருந்து செம pressure வந்துக்கிட்டே இருக்கும். பிறகு பழைய கம்பெனி மாதிரி இல்லாம இங்க எல்லா வெப்சைட்யையும் block பண்ணிருக்காங்க. ஒரு இலக்கியவாதிக்கு என்ன என்ன சோதனை வருதுன்னு பார்த்தீங்களா ???? நான் பிரபலம் ஆவுறது யாருக்கோ பிடிக்கல போல் இருக்கு.
= = = = =
கொஞ்ச நாளா என்னோட பைக்க்கு Shell petrol போட்டுக்கிட்டு இருக்கேன். ஆனா விசாரிச்சு பார்த்த, அந்த PETROL போட்ட கூடாதுன்னு சில பேரு சொல்லுறாங்க. ஆனா ஆபீஸ்க்கு போகும் போது அந்த பங்க் தான் வசதியா இருக்கு. இன்னொரு விஷயம் சொல்லிய ஆகணும், SERVICE செமைய இருக்கு. ரொம்ப மரியாதைய நடந்துக்குரங்க.
= = = = =
அல்லையன்ஸ் பதிப்பகம் மைலாப்பூர் ல இருக்கே, அந்த கடைல சும்மா போய் பார்த்தேன். சரி போயாச்சே வெறும் கையோட வர கூடாதேன்னு நம்ம மெரினா எழுதின "நாடகம் போட்டு பார்" புத்தகத்தை வாங்கிட்டு வந்தேன். சலிசு விலை தான். Amateur Drama போடுவதற்கு முன்னாடி அந்த டிராமா டைரக்டர் என்ன என்ன படு படுகிறார்ன்னு சொல்லிருக்காரு. அவரோட சொந்த சோக கதையாக கூட இருக்கலாம். ஒரு மாதிரி அனுபவ கட்டுரை மாதிரி இருக்கு.
= = = = =
சமீபத்துல பைத்தியக்காரன், வினவு தோழர்கள் எழுதின பதிவுகளையெல்லாம் நானும் படிச்சேன், ஆனா நரசிம் எழுதின பூக்காரி பதிவை அதற்குள் நரசிம் அதை delete பண்ணிட்டாரு. சரின்னு GOOGLE READER ல அந்த பதிவை தேடி பிடிச்சு படிச்சேன். புனைவு என்றெல்லாம் சொல்ல முடியாது. நேரடி தகுதல் மாதிரி தான் எனக்கு தெரிஞ்சுச்சு.
சந்தனமுல்லை மற்றும் நரசிம் ஆகிய இரண்டு பேரோட எழுத்துகளுக்கும் நான் பெரிய ரசிகன். நர்சிம்க்கு சந்தனமுல்லை மேல என்ன கோவம்ன்னு எனக்கு தெரியல. என்ன பிரச்சனைன்னு கூட எனக்கு தெரியாது. ஆனா நரசிம் அந்த மாதிரி எழுதிருக்க கூடாது. அவரோட தகுதிக்கு இந்த மாதிரியெல்லாம் எழுதிருக்க கூடாது.
இதுக்கு மேலையும் நிறைய சொல்லிருப்பேன், ஆனா அதுக்கு எனக்கு தகுதிருக்கான்னு தெரியல.
நானும் நிறைய அசிங்கமான கதைகள், படம்கள்ன்னு நிறைய பார்த்து இருக்கேன், ஆனா யாரையும் தவறான பார்வையில் பார்த்ததில்லை.
என்னைவிட நர்சிமுடைய மிக பெரிய ரசிகனாகிய எனது நண்பன் பிரபு மாமா தான் ரொம்ப நொந்து போயிட்டான்.
இதுல இருந்து ஒன்னே ஒன்னு தான் கத்துகிட்டேன்..... கோவத்துல இருக்கும் போது எந்த பதிவையும் எழுத கூடாதுன்னு.
= = = = =
என்னோட உண்மையான பெயர் வந்து ஒரு ஹிந்து கடவுளுடைய நேரடி பெயராக இருப்பதால் தான் நான் மேவின்னு எனக்கு நானே ஒரு பெயரை வைச்சுகிட்டேன். ஒரு வாட்டி கார்க்கி ஏதோ ஒரு பின்னூட்டத்துல தம்பி மேவின்னு சொல்லுறதுக்கு பதிலா டம்பி மேவின்னு சொல்லிடாரு....சரி இதே நல்ல இருக்குன்னு அந்த பெயரையையே வைச்சுகிட்டேன்.
= = = = =
புது ஆபீஸ் ல எல்லோரும் ஒரே age group தான். அதுவும் என்னோட டீம் ல இருக்கிற எல்லோருக்கும் ஆள் இருக்கு. எனக்கு மட்டும் தான் ஆள் இல்லை. நானும் எவ்வளவு நாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது??? அழகான பெண்களை பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு காதலன் இருக்க கூடாதுன்னு தான் நினைக்கிறேன், ஆனா சாயங்காலம் ஆன காதுல வளையம் மாட்டின எதாச்சு ஒரு பையன் அவளுக்காக ஆபீஸ் க்கு வெளில காத்து இருப்பான்......
அதை வைச்சே எல்லோரும் என்னை ஓட்டிகிட்டு இருக்காங்க. பிறகு ஆபீஸ் ல நான் சொல்லுற oneliners செம பிரபலம்.
வீட்டு ல ஒரு பொண்ணு யை fix பண்ணிருக்காங்க போல் இருக்கு. அவளை பார்க்கனும்ன்னு ஆசைய இருக்குன்னு கார்த்திகை பாண்டியன் கிட்ட சொன்ன .....அதுக்கு அவரு " வேண்டாம்னே ..... கல்யாணத்துல பொண்ணு கர்பமா இருந்த நல்லவ இருக்கும்" ன்னு சொல்லுறாரு.... என்ன கொடுமை மேவி இது .........சார் ...நான் பெண்ணை பார்க்கணும்ன்னு தான் சொன்னேன் .......
= = = = =
கடைசியா சுறா, ரெட்டை சுழின்னு இரண்டு படம் தான் பார்த்தேன்... முடியல இரண்டும் செம மொக்கை சுறா படத்துல விஜய் கையை பின்னாடி கட்டிக்கிட்டு நடக்குறார், அது தான் படத்துல அவரு பண்ணிருக்கிற ஒரே புது விஷயம். தமன்னாவுக்கு பல dress suit ஆகல.
= = = = =
நேத்து பதிவர் சந்திப்புக்கு போகணும்ன்னு தான் இருந்தேன்.... ரொம்ப tired ஆகா இருந்ததால் போகல.
= = = = =
வெயிலை குறைக்க நிறைய மரம் வளருங்க.... ஆனா நம்ம என்ன செய்றோம் ??? மரங்களை வெட்டி வீடுகளை கட்டிக்கிட்டு இருக்கோம். BASIC SCIENCE படிச்சவங்களுக்கு தெரியும் ..... eco balance ன்னு என்னன்னு. நிறைய oxygen க்கு நிறைய மரம் வளர்க்க வேண்டும்ன்னு. ஆன சென்னை சிட்டி ல பாருங்க ....... வண்டிககளில் இருந்து வரும் புகையை சமாளிக்க நமக்கு தேவையான மரங்கள் இல்லை. இந்தியாவுல காட்டு பகுதி குறைஞ்சுகிட்டே வருதுன்னு எங்கையோ படிச்சேன் .....
இப்படியே போன நீங்க தான் வயசான காலத்துல கஷ்ட பட போறீங்க.
= = = = =
பரிசல்காரர் போன் நம்பரை மாத்திடாராம்... இப்ப தான் மெசேஜ் வந்துச்சு.
கொஞ்ச நாள் முன்னாடி கலைஞர் டிவி ல வந்துச்சுன்னு நினைக்கிறேன், அப்ப பார்க்க முடியாம போயிருச்சு. ஆனா பாருங்க நேத்து youtube துளாவிட்டு இருக்கும் போது இந்த குறுங் படத்தை பார்த்தேனுங்க. செமைய இருந்துச்சு. கதை ஒரு மாதிரி Nonlinear narrative style ல இருந்தாலும் சொன்ன விதமும் வசனங்களும் அருமையா இருந்துச்சு.
அதிலும் கதையை சொல்லிக்கிட்டு போற அசாமி ஓட ஸ்டைல் நல்ல இருக்கு.
முக்கியமா இதை பத்தி நான் ஏன் சொல்லுறேன்ன .....என்னோட கல்லூரி வாழ்க்கையை எனக்கு ஞாபக படுத்திருச்சு. நானும் இந்த படத்துல வர குண்டு பையன் மாதிரி தான் சினிமா, டி, புத்தகங்களுக்கு ஆகுற செலவுக்காக எவனையாச்சு உசுப்பேத்தி காசை பிடுங்குவேன். ம்ம்ம் அதெல்லாம் ஒரு காலம். இதுல என்னோட டார்கெட்க்கு பெண்களும் தப்ப மாட்டாங்க. இப்படி பண்ணிக்கிட்டு இருந்த என்கிட்டையே ஒருத்தன் பிட்டு ஒட்டியும் இருக்கான். (இப்ப அவன் பில் கேட்ஸ் க்கு குஜா துக்குர வேலைல இருக்கான்).
சரி மேட்டர் க்கு வருவோம் ....முக்கியமா ஒரு விஷயம் ஒரு புது படம் வந்த பதிவாளர்கள் எல்லோரும் அதுக்கு விமர்சனம் பண்ணுறாங்க ...அதே போல ஒரு குறுங் படதக்கும் விமர்சனம் எழுதினாங்க ன்ன நல்ல இருக்கும். முக்கியமா அவர்களுக்கு இன்னும் சப்போர்ட் யாக இருக்கும்.
சின்ன சின்ன உணர்வுகளை கூட அழகாய் சொல்லிருவாங்க இந்த மாதிரி குறுங் படத்தை எடுக்கிறவர்கள். கேபிள்ஜி அப்பப்ப இந்த மாதிரி படத்தை அறிமுகம் செய்வாரு. ஆனா detail ஆ எழுதுவாரான்னு தெரியல.
சரி இன்னும் நிறைய சொல்லலாம் ..ஆனா எனக்கு தான் டைம் இல்லை....
இந்த எடுத்தவர் இன்னும் பெரிய அளவுக்கு வளர வாழ்த்துகிறேன் ..... இந்த படத்தை பற்றி தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்க.
டிஸ்கி - இந்த மாதிரியான குறுங் படங்களுக்கு நிறையவே demand இருக்கு.....virtual education system பரவி கொண்டிருக்கும் இந்த காலத்தில் பாடங்களை எளிய முறையில் மாணவர்களுக்கு புரிய வைக்க இந்த மாதிரி குறுங் படங்கள் மிக முக்கியம்...