Pages

Friday, November 27, 2009

செய்திகள் வாசிப்பது மேவி

" 200 நகரங்களில் குழாய் மூலம் சமையல் எரிவாயு "

லண்டன் போன்ற நகரங்களில் பல வருஷம் முன்னாடியே இதை சத்தியம் ஆக்கி காட்டி இருக்காங்க. ஆன நாம இந்தியாவில் தான் இது இன்னும் திட்ட அளவில் இருக்கிறது. பிறகு இந்த திட்டமானது பல இடற்பாடுகளை உண்டாக்கும் என்பது தெளிவாக தெரிகிறது. இன்னும் அரசு சப்பளை செய்யும் LPG GAS யில் பல பிரச்சனை இருக்கிறது. அதை சரி செய்யாமல் இவர்கள் எப்புடி அடுத்த நிலைக்கு போவர்கள் என்று ஆச்சிரியமா இருக்கு.


"பஸ்களில் விளம்பரத்துக்கு தடை ஆண்டுக்கு ரூ.10 கோடி இழப்பு"

என்ன கொடுமை சார் இது. நேற்று வரையில் உயர் கட்டணங்கள் வசூலிக்கும் A / C பஸ்களில் மட்டுமே விளம்பரங்கள் பார்க்கும் படி இருக்கிறது. மற்ற சாதாரண பஸ்களில் விளம்பரம் மாட்டப்பட்டு இருந்தாலும் அது பெரும்பாலும் பார்க்கும் படி இருப்பதில்லை. குறைவான பராமரிப்பு அதனால் அழுக்கு படிந்து TARGET AUDIENCE போய் சேரவில்லை. இதை மோப்பம் பிடித்த கம்பெனிகள் கணக்கு போட்டு பார்த்ததில் அவர்களின் EXPECTED RETURN ON INVESTMENT குறைவாக இருந்ததால் விழித்து கொண்டனர். இந்த விளம்பரங்கள் தரும் வருமானத்தை நம்பி தானே அரசு போஸ்டர், பேனர்களை தடை செய்தது. ஐயோ பாவம் அரசு.
"மக்களை கேட்டு பாருங்கள். விமர்சனம் எழுதியவர்களின் முகத்தில் தான் கரி - கமல்"


இவர் ஏதோ சமுக சேவை செய்து அதை சிலர் கிண்டலடித்தது போல் பேசுறார். சந்தைக்கு விற்பனைக்கு வந்த பொருளை பற்றி நாலு பேர் நாலு விதமாக பேச தான் செய்வார்கள். இதற்க்கு எல்லாம் பயந்தால் தொழில் பண்ண முடியுமா ?????
"மும்பையில் சீன பொருட்கள் கண்காட்சி"


ஆமா உள் ஊர் பொருட்களை நன்றாக முன்னேற்றிட்டாங்க இப்ப சீனா நாட்டு பொருட்களுக்கு போய்ட்டாங்க. சும்மா சொல்ல கூடாது நம்ம நாட்டு ஆரசாங்கம் நன்றாகவே நாம் நாட்டு சந்தைக்கு முக்கியத்துவம் தருகிறது. இதற்க்கு முக்கிய காரணம் நம்ம நாட்டு வணிகர்கள் கூட தான் தர கட்டுபாடு என்று ஓன்று இருப்பதையே மறந்து விடுகிறார்கள். இதனால் அவர்கள் ஒன்றும் பெரிய நஷ்டம் இல்லை தான். ஆனால் ஏதோ ஒரு வழியில் உழைக்கும் மக்களின் முன்னேற்றத்தை தடுக்கிறது.

4 comments:

கிருஷ்ணமூர்த்தி said...

கொட்டாவி விட்டுக் கொண்டே தூக்கக் கலக்கத்தில் செய்திகள் வாசிப்பதைக் கேட்ட மாதிரி இருந்தது!

குழாய் மூலம் எரிவாயு!
மற்ற ஊர்களைக் கம்பேர் பண்ணின விதம் சரி தானா? இங்கே குழாய்த் தண்ணீரில், சாக்கடை நீரும் கலந்து வரும்? எரிவாயுவும் கலந்து வந்தால், மீட்டர் போட்டு வ்சசூல் பண்ணுவது எப்படி என்பதைக் கண்டுபிடிக்க அவகாசம் வேண்டாமா?

விமரிசகர்கள் முகத்தில் கரி!

உடுங்க! பதிவர்கள் அடுத்த சான்ஸ் கிடைக்கிறவரை, இப்படி யார் மீதாவது சேற்றை வாரி இறைப்பதும், கடைசியில் தன்கள் முகத்திலேயே கரி பூசிக் கொள்வதும் வாடிக்கை தான்! இப்படித்தான், உன்னைப் போல் ஒருவனை சேறு வீசி ஒரு விளையாட்டாகவே நடத்தினார்கள்! இலவச விளம்பரம்?

Cable Sankar said...

ரைட்டு என்னங்கிறீங்க இப்போ..:)

பிரபு . எம் said...

தினசரி வாழ்க்கையில் செய்திகள் முக்கியம்தான் Friend.... அடிக்கடி வாசிங்க
நல்லா இருக்கு பாஸ்.. :)

வால்பையன் said...

//"மக்களை கேட்டு பாருங்கள். விமர்சனம் எழுதியவர்களின் முகத்தில் தான் கரி - கமல்"


இவர் ஏதோ சமுக சேவை செய்து அதை சிலர் கிண்டலடித்தது போல் பேசுறார். சந்தைக்கு விற்பனைக்கு வந்த பொருளை பற்றி நாலு பேர் நாலு விதமாக பேச தான் செய்வார்கள். இதற்க்கு எல்லாம் பயந்தால் தொழில் பண்ண முடியுமா ?????//


யோசிச்சு பார்த்தா நீங்க சொல்றது தான் ரொம்ப சரியா தெரியுது!

Related Posts with Thumbnails