Pages

Thursday, February 25, 2010

கலவை

எனக்கு 49 வயதில் இறக்க வேண்டும்ன்னு ஆசையா இருக்கு. அது ஏன்னு தெரியல சின்ன வயசில் இருந்தே இப்படி ஒரு எண்ணம். எனக்கு இறப்பை கண்டு பெரிய அளவில் பயம் ஒன்றுமில்லை ஏனென்றால் நான் என்னுடைய பிறப்பை பெரியதாக கொண்டாடுவது இல்லை. யார் ஒருவன் அவனது பிறப்பை பற்றி பெருமிதம் கொள்கிறானோ அவனுக்கே இறப்பை பற்றிய பயம் அதிகமாக இருக்கும். நாம் ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டே தான் வாழ்கிறோம். நாம் பிறந்ததே இறப்பதற்கு தான். அதனால் ஆணவம் இல்லாமல் மனிதனாய் வாழ பழகி கொள்ளுங்கள்.

= = = = = = = = = =

THE SEVENTH VOYAGE OF SINBAD ....1958 லில் வந்த படம். FANTASY வகைறவை சேர்ந்தது. கதைன்னு ஒன்னும் பெருசா இருக்காது. ஆனால் இதில் வரும் மாயஜால காட்சிகளுக்காகவே ஒரு முறை பார்க்கலாம். அதுவும் அந்த காலத்திலையே குறைந்த தொழில்நுட்ப வசதிகளை கொண்டு சிறந்த முறையில் ANIMATION காட்சிகளை உருவாக்கி உள்ளார்கள். ஒத்த கண் ராட்சசன், அடிமை டிராகன் , ஒரு அடி உயர இளவரசி என்று உங்கள் வீட்டு குழந்தைகளின் ரசனைக்கு ஏற்ற படம்.

இந்த படத்தின் இன்னொரு விஷயம் என்னவென்றால் எப்பொழுதும் அலாவுதீன் கையில் இருக்கும் அற்புத விளக்கை சிந்துபாத் கையில் தந்து இருக்காங்க. மேலும் ஜினியை ஒரு கதாபாத்திரமாக காட்டி இருக்காங்க, கடைசியில் ஜினி விளக்கில் இருந்து விடுதலையாகி மனிதனாய் மாறி சிந்துபாத் கப்பலில் சேர்ந்து விடுவார்..... (தினத்தந்தி சிந்துபாத் கதை முடிந்து விட்டதா ???)

= = = = = = = = = = =

சேத்தன் பகத் தனது அடுத்த கதை எழுத ஆரம்பிச்சிட்டாராம். வித்தயாசமான காதல் கதைன்னு ட்விட்டர் ல சொல்லி இருக்காரு. பார்போம். இவருடைய 2 STATES தான் நான் அதிகம் சிரித்துப்படி படித்த புத்தகம். அதில் ஒரு இடத்தில மாப்பிள்ளைக்கு மாமனார் பஞ்சகச்ச வேஷ்டி கட்டும் பொழுது ....ஒரு டயலாக் எழுதி இருப்பார் பாருங்க வாய்ப்பே இல்லை .......அவ்வளவு காமெடி.

= = = = = = = = = = =

BUSINESS LAW பற்றிய எளிய அறிமுகம் வேண்டுவோருக்கு RSN PILLAI and BHAGAVATHY இதே தலைப்பில் எழதிய புத்தகம் உபயோகமாக இருக்கும் .....என்ன படிக்க தான் கொஞ்சம் SCHOOL GUIDE மாதிரி இருக்கும்.

= = = = = = = = = =

இப்ப நான் படித்து கொண்டு இருப்பது ADAM SMITH (பொருளாதாரத்தின் தந்தை ... (தாய் கட்டாயம் அவரது மனைவியாக தான் இருக்க வேண்டும் ஏனென்றால் அவருக்கு சின்ன வீடு மற்றும் set up கள் இருந்ததாக குறிப்பு எதுவுமில்லை )) எழுதிய THE WEALTH OF NATIONS . ஏறக்குறைய மூந்நூறு வருஷங்களுக்கு முன்னாடி எழுதப்பட்டது. பொருளாதரத்தில் ஆர்வமுள்ள எல்லோரும் படிக்க வேண்டிய புத்தகம் இது, ஆனால் ரொம்ப TECHNICALA இருக்கும். நான் இப்ப தான் பைசா வந்த கதையை படித்து முடித்தேன். அதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. அவ்வளவு DRY .

இந்த புத்தகத்தை எனக்கு படிக்க தந்த ராஜேஷை பற்றி கொஞ்சமாவது சொல்லியாக வேண்டும். எந்த புது புத்தகம் வாங்கினாலும் அவர் படிக்குமுன் என்னை படிக்க சொல்லி தருவர்.(பிரியம் எல்லாம் இல்லைங்க..நான் தரும் இம்சை தங்காமல் தான் தருவாரு). இவர் இங்க நிறைய படிச்சிட்டு, இங்கிலாந்துக்கு போய் இன்னும் அதிகமாக செலவு செய்து இன்னும் அதிகமாக படிச்சிட்டு ....."என் திறமை முழுவதும் இந்தியாவுக்கு தான்" அப்படின்னு வீரமா வந்தாரு..... வந்த மூன்றே மாதங்களில் ரொம்ப நொந்து போய் "மேவி நான் இந்தியாவுக்கே வந்து இருக்க கூடாது ...அங்கேயே இருந்திர்க்கனும்....." சொல்ல (புலம்ப) ஆரம்பிச்சிட்டாரு .......

= = = = = = = = = =

சுஜாதா ...எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். முதலில் இவர் சினிமாவுக்கு எழுதும் வசனங்களை கேட்டு தான் இவரது ரசிகர் ஆனேன். பிறகு பொதிகையில் (பத்து வருடங்களுக்கு முன்) " கொலை உதிர் காலம் " தொடராக வந்த பொழுது தான் இவர் என் ஹீரோவனர். இவரது "ஸ்ரீ ரெங்கத்து தேவதைகள் " ....CLOSE TO MY HEART .

சமீபத்தில் தாரணி அக்கா சொன்னதினால் "பிரிவோம் சந்திப்போம்" படித்தேன் (உபயம் : ராஜேஷ் ) ...அப்பிடியே உருகி போயிட்டேன். எனக்கு BRANDING மேல் ஆசை வந்ததிற்கு இவர் எழுதிய ஒரு கட்டுரை தான் காரணம் .

= = = = = = = = = =

கொஞ்ச நாள் முன்னாடி எனது சொந்தக்காரர் ஒருத்தர் நித்யானந்தரின் "ஜீவன் முக்தி" பரிசாக தந்தார் ( எங்க குடும்பத்தில் இருக்கிற எல்லோருக்கும் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உண்டு, என்னை தவிர).... நல்ல ENGAGING யாக தான் எழுதிருக்கார். அதிலும் ஆன்மீகவாதிகள் "முக்தி பக்திக்கு அடிப்படை" என்ற CHAPTERயை கட்டாயம் படிக்க வேண்டும். (ஆன்மீகத்தில் நாட்டம் இல்லாதவர்கள் பின்னூட்டத்தில் கிண்டல் அடிக்கவும்)

= = = = = = = = = =

வர வர குமுதத்தை படித்தாலே ஏதோ இன்டர்நெட்யை படிப்பது போல் உள்ளது . இல்லாட்டி அவங்க தருகிற மேட்டர் எல்லாம் ஏற்கனவே படித்தது போல் இருக்கு. விகடனுடன் போட்டி போடுவதை நிறுத்தி விட்டு .....இவர்களின் CONTENT மேல் கவனத்தை செலுத்தினால் நல்ல இருக்கும்.

அதே மாதிரி தான் "புதிய தலைமுறை" யும், வர வர அவர்களின் CONTENT யை பார்த்தாலே ரொம்ப குழம்பி போய் இருக்காங்கன்னு தெரியுது. வரும் காலங்களில் இதுவும் இன்னொரு வார இதழ்யாகி விடுமோ என்று கொஞ்சம் யோசனையாக இருக்கு.

= = = = = = = = = =

கார்க்கி ரசிகர் மன்ற முதலாம் ஆண்டு கூட்டம் போன வாரத்தில் வெற்றிக்காரமாக நடந்தது. கூட்டத்தில் பேசிய "கோவை கார்க்கி ரசிகர் மன்ற" தலைவர் பிரபு அவர்கள் ட்விட்டரில் கார்க்கி எழுதும் "தோழி அப்டேட்ஸ்" மிகவும் ரசிப்பதாய் சொன்னார். டெல்லி ரசிகரான அப்பாஸ் கார்க்கி எங்கே இலக்கியவாதியாக மாறி விடுவரோ என்ற தனது பயத்தை வெளிக்காட்டினர். (மேலும் விவரங்களுக்கு என்னை தொடர்பு கொள்ளுங்க)

= = = = = = = = = =

கோவா படத்தை பார்த்தப் பிறகு பியாவை காதலிக்காமல் இருக்க முடியவில்லை. த்ரிஷா சொன்ன மாதிரி கனவுல வரல, அதனால் அவங்களை கை விட்டாச்சு (ONLY SINGLE MEANING ) ..... ஆனாலும் நமீதா தான் என் கனவுக் கன்னி ...அதில் எந்த வித மாற்று கருதும் இல்லை.

= = = = = = = = = = =

கார்த்திகை பாண்டியன் அவர்கள் காதலர்கள் தினத்தின் போது எனக்கு போன் பண்ணினாரு ..... நான் ரொம்ப பயந்துப் போயிட்டேன், நான் அந்த மாதிரி ஆளு இல்லைங்கன்னு சொல்லலாம்ன்னு பார்த்தேன். நல்ல வேளையாக வாழ்த்துக்களை மட்டும் சொன்னாரு

வானவில் கார்த்திக் கேட்டு கொண்டதின் பெயரில் நானும் ட்விட் பண்ண ஆரம்பிச்சாச்சு.

= = = = = = = = = =

பிகு : இந்த பதிவில் இடைச் சொற்க்களை நான் அதிகம் உபயோக படுத்தவில்லை, அதனால் இலக்கியவாதிகள் என்னை மன்னிக்கவும்

Monday, February 22, 2010

தொலைந்த சொர்க்கம் -4

பகுதி - 4
= = = = = =
தாஜ்
மும்பை


சயீத் தாதாவிடம் இருந்த தொலைப்பேசி அழைப்பை எதிர் நோக்கி காத்திருந்த சமயத்தில் வேறு இரு நபர்கள் பதட்டத்துடன் திருட்டுத் தனமாய் வேலைப் பார்த்துக் கொண்டு இருந்தனர். இன்னும் மூன்று அல்லது நான்கு நிமிடங்களில் அழைப்பு வரும் என்று அவருக்கு தெரிந்து இருந்ததால் அவரால் இயல்பாய் இருக்க முடியவில்லை. சுவாசம் கூட அவரது சக்திக்குள் இல்லை.

அதே கட்டடத்தில் மூன்றாம் தளத்தில் ஒருவன் CCTV கேமராக்கள் இருக்கும் இடங்களை நோட்டம் விட்டுக் கொண்டும், ENGINEERING DEPARTMENT யில் இன்னொருவன் அந்த ஹோட்டலின் MAP , BLUE PRINT யையும் ஜிராக்ஸ் எடுத்து கொண்டும் இருந்தனர்.

= = = = = = = = = =


புனே

அவள் புனேவில் உள்ள ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் எதிரில் தனது காரில் அமர்ந்தப்படிய அங்கு வருவோர் போவோரை நோட்டம் விட்டு கொண்டு இருந்தாள். அப்பொழுது அவளது செல்போன் தன இருப்பதை உணர்த்த ஒலியை ஒளியுடன் வெளியிட்டது.

டிஸ்பிளேவை பார்த்தாள். தெரியாத நம்பர்.

யாராக இருந்தாலும் பேசிவிடலாம் என்று நினைத்தவாறு எடுத்தாள்.

"ஹலோ...?" என்றாள் கேள்விக்குறியுடன்

"டாக்டர் ....."

"ya .... hope that you are aware that you are speaking to an gynecologist ..."

அதற்க்கு பதில் வந்த உடன்

"sorry ..... am on leave "

என்றுச் சொல்லி வைத்தாள் மித்ரா தாஸ்.

= = = = = = = = = =

ஷபேனம்....இப்பொழுது என் முன் ஒரு புரியாத புதிராய் உலவிக் கொண்டு இருந்தாள். என் காதலை ஏற்று கொண்டாளா இல்லையா என்ற குழப்பத்துடன் நான் அமர்ந்து இருந்தேன்.

கவிதை எனக்கு வாசித்துப் பழக்கமில்லை, ஆனால் எனக்கு இப்ப ஒரு கவிதை வாசிக்க வேண்டும் என்றது போல் இருந்தது. கட்டிலிலிருந்து எழுந்து போய் Leona Lewis யை நிறுத்திவிட்டு RD Burman யை இசைக்க விட்டாள்.

I was feeling nude and there was alot to be felt tonight .


= = = = = = = = = =

சர்ச்கேட்

மும்பை

போலீஸ் ஸ்டேஷனில் இருந்து இயலாமை உடன் வெளிய வந்த அவர் ...... இல்லை இல்லை அந்த மாதிரியான முக பாவனை உடன் வெளிய வந்த அவர் .....

எதிரில் காரில் அமர்ந்து இருந்தவனை நோக்கி வெற்றி என்பது போல் கை காட்டினார்.


= = = = = = = = = =

Devil's eye ஆபீஸ்
மும்பை .

ஷனந்து கொஞ்ச தூரம் போன பிறகு தனது செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டு இருந்தான்...

"அப்ப யாரையாவது பலி போட்ட TRP இன்னும் ஜாஸ்தி ஆகுமா ???"

"....."

"ஆனா எப்புடி ...அவங்க நல்ல முன்னேறினா பிறகு தானே ......"

தொடரும் .....

Friday, February 19, 2010

தொலைந்த சொர்க்கம் -3

பகுதி -3

Devil's eye ஆபீஸ்
மும்பை .

அந்த நியூஸ் சேனலின் MD தனது அறையில் தன் எதிரில் அமர்ந்து இருந்த அந்தச் சேனலின் டாப் நியூஸ் ரிப்போர்ட்டர்களை பார்த்தபடி ;
"எல்லோரும் வந்தாச்சா ???" என்று கேட்டார் ஷனந்து ஷர்மா.
"இல்ல சார். விவிதி இன்னும் வரல" என்று அங்கு அமர்ந்து இருந்த ஏழு ரிப்போர்ட்டர்களில் ஒருவன் சொன்னான். ஷனந்து தனது வழக்கமான கெட்ட வார்த்தைச் சொல்லும் முன் .....

கதவின் அருகே,
டெல்லி பல்கலைகழகத்தின் முதுநிலை பட்டம் வந்து நின்றது மன்னிக்கவும் பட்டம் வாங்கியவள் வந்து நின்றாள்.
"சாரி சார்" என்றபடி வந்து அமர்ந்தாள் விவிதி. வாழ்க்கையில் தனது லட்சியக் கனவுக்காக எதையும் இழக்க தயாராக இருப்பவள். ஏனென்றால் அவளுக்கு என்று தனிப்பட்ட நம்பிக்கைகள் எதுவும் இல்லை.

"இன்னும் கொஞ்ச நாள்ல மும்பையில் பெரிய அளவில தகுதல் ஒன்னு நடக்க போரறதா உளவுத்துறை ஸ்மெல் பண்ணி இருக்காங்க. சோ நாம் எதையும் சமாளிக்க தயாராக இருக்கனும். நான் ஒரு வீக் நடக்கும்ன்னு என்று எதிர்ப்பார்க்கிறேன். Are we fit for it?"
"முடியும் சார். அனா இன்னும் கொஞ்சம் வசதி வேண்டும் சார்"
"எனது??"
"நாம சிஸ்டம் கொஞ்சம் வீக்யாக இருக்கு சார். tele-conference ல அப்ப அப்ப வாய்ஸ் பிரேக் ஆகுது சார். போன ப்ராஜெக்ட்ல கூட இதே பிரச்சனை தான் சார். அதான் அப்ப TRP கம்மி ஆகிருச்சு"
"அது சில நொடிகள் தானே"
"அதுக்குள் வேற சேனலுக்கு வாய்ப்பு போயிரும் சார்"
"சரி. வேற என்ன இருக்கு"
"பார்த்து தான் சொல்லனும் "

"சரி. இதை கொஞ்சம் லீக் ஆகாமல் பார்த்துகோங்க. நெதர்லாந்து brands சிலது இந்தியாவுக்கு வருது. அதனால மார்க்கெட்டிங் department TRP இருந்த அந்த promoting ப்ராஜெக்ட் நாமக்கு தான்னு சொல்லி இருக்காங்க. பத்து கோடி கிட்ட assured ROI"
"சரி சார். நாளைகே இதப் பற்றி ரிப்போர்ட் தரோம்"
"அது மட்டும் இல்லை. நாளை முதல் நீங்க எல்லோரும் டெய்லி ஒரு கவர் ஸ்டோரி தரனும். எதுக்கு ரேடிங் ஜாஸ்திய இருக்கோ அவங்களுக்கு தான் இந்த ப்ராஜெக்ட்"
நட்பு இருந்த இடத்தில பகமை உணர்வுடன் கலைந்து சென்றனர். எல்லோருக்கும் அந்த ப்ராஜெக்ட் அவங்க வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்பது தெரிந்து இருந்தது.
விவிதி மட்டும் அங்கேயே நின்று கொண்டு இருந்தாள். வாழ்வில் அடுத்த நிலைக்கு போகும் நேரம் இது என்று உணர்ந்து இருந்ததால் இந்த ப்ராஜெக்ட்யை கை விட அவளுக்கு மனமில்லை.
கொஞ்ச நேரம் கழித்து, வெற்றிகரமாய் ப்ராஜெக்ட் கிடைத்த சந்தோஷத்தில் சோர்வாக வெளியே வந்தாள்.

கொஞ்ச தூரம் நடந்து போனவளை ......

"hey ..... confirm that uplinks are on smooth mode ...???"


= = = = = = = = = =

சயீத் கொஞ்சம் அல்ல ரொம்பவே பதட்டமாய் தான் இருந்தார் எந்நேரமும் அவருக்கு அந்த தாதாவிடமிருந்து அழைப்பு வரும் என்பதால் தான்.

அப்பொழுது அவரது செல்போன் ஏதோ ரஷ்ய நாட்டின் இசையை வெளியிட்டது.

ஒரு மினிஷம் பயத்துடனே எடுத்து டிஸ்பிளேவை பார்த்தார்.

மும்பை நம்பர் இல்லை. அவரது மனம் கொஞ்சம் சாந்தமானது. பீகார் நம்பர்.

பேசியது கிஷன் ......

"ரொம்ப நன்றி சார் ......"

"நன்றி எல்லாம் இருக்கட்டும் ...இன்னும் நாலு நாள் தான் இருக்கு வேலைல சேர...சிக்கரம் வந்து சேரு...."

இந்த மாதிரியான சிறுச் சிறு உதவிகள் தான் அவரது வாழ்க்கையில் கொஞ்சமாவது நிம்மதி தந்துக் கொண்டு இருப்பதாய் நம்பிக் கொண்டு இருந்தார். மற்ற நேரங்களில் எல்லாம் மாதம் முதல் தேதி வந்தாலே அந்த மாதம் கட்ட வேண்டிய due க்களிலே மனம் போய்...பயம் திரும்பி வருகிறது அவருக்கு.

இன்னும் அவர் எதிர்ப் பார்த்த அழைப்பு வரவில்லை. ஒரு நிமிஷம் அவரது மனைவியும் குழந்தைகளும் அவர் கண் முன்னே வந்து போனார்கள்.


= = = = = = = = = =

ஷபேனம் என்னைப் பார்த்து மர்மம் கலந்த வெட்க சிரிப்பை ஒன்றை தந்தாள். எனக்கு அதைப் பார்த்தப் பிறகு அவஸ்தையாய் இருந்தது.

மெல்ல மெல்ல என் அருகே வந்து , தோல் மீது கை போட்டப்படியே ....

"give me some time baby " என்று சொன்னாள்.



கொஞ்ச தூரம் போனவள் திரும்பி என்னை பார்த்து ....

"and also dont use safety here afterwards ....." என்று சொல்லியப்படி நான் மீதி வைத்து இருந்த காண்டங்களை குப்பை தொட்டியில் போட்டாள்.




தொடரும் .....

தொலைந்த சொர்க்கம் -2

பகுதி -2

தாஜ்,
மும்பை.

அன்று காலையிலிருந்து கொஞ்சம் பதட்டமாய் தான் இருந்தார் அந்த ஹோட்டலின் PURCHASE MANAGER சயீத். நேற்றுயிலிருந்தே இப்படி தான். அதுவும் ஒரு பெரிய தாதாவிடம் இருந்து கொலை மிரட்டல் வந்தால் எப்படி நிம்மதியாய் இருக்க முடியும்.

பரபரப்பான மனநிலமையுடன் தனது அலுவலகம் நோக்கி சென்று கொண்டு இருந்தார். மனிதனின் அறிவு குரங்காய் மாறும் வயதில் அவரிருந்தார். 40 ........ பார்பதற்கு 34 போல் இருந்தார்.

= = = = = = = = = =


சர்ச்கேட்
மும்பை
போலீஸ் ஸ்டேஷனுக்கு அந்த இரவில் கொஞ்சம் தயக்கமாய் தான் அந்த வயதான ஆள் நுழைந்தான். அங்கே இருந்த ஹெட் கான்ஸ்டபிள் அருகே போய் ......
"சார்...."
"என்னயா??"
"சார். யார்ன்னு தெரியல தொடர்ந்து முன்னு நாளா யாரோ சில பேரு பீச் பக்கமா சந்தேகமா சுத்திகிட்டு இருக்காங்க சார்"
"யார்ன்னு தெரியுமா?"
"வெளிநாட்டுகாரங்க மாதிரி இருக்காங்க சார்"
"யோவ். அது டூர்ரிஸ்ட்யாக இருக்கும்"
"இல்ல சார். பார்த்த அப்படி தெரியல சார்"
"பின்ன ...."
"எனக்கு சந்தேகமா இருக்கு சார்"
"அதுக்கு?"
"நீங்க வந்து பார்க்கனும் சார்"
"உன் சந்தேகத்துக்கு எல்லாம் நாங்க வர முடியாது... போ போ....."
"சார்........"
"இப்போ நீ போகலன்ன உன்னை சந்தேக கேஸ் ல உள்ள தள்ளிருவேன்"
அவன் ஏமாற்றத்துடன் என்ன செய்வது என்று தெரியாமல் வெளியே சென்றான்.

= = = = = = = = = =

பிளாசா ஹோட்டல்

நியூயார்க்
காலியாக இருந்த அந்த பாரில் இருட்டின் மறைவில் இருவர் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.
"இது அவசியமா???"
"அவசியமோ ...... அவசியம் இல்லையோ ; காசு வாங்கியாச்சு. செய்துதான் அகனும்."
"சரி. இதில டிவி நியூஸ் சேனல் ஆளு எப்படி வந்தான்???"
"எல்லாம் TRP செய்ற வேலை தான். viewership ஜாஸ்தி ஆச்சுனா ....... அவனுக்கு லாபம் தானே"
"௦ஓகோ..... இப்படி போகுதா சங்கதி"
"சரி சரி ...... வெளில போகும் பொழுது ..... நான் சொன்ன ஹோட்டல் ல அந்த பெயர் ஒரு ரூம் புக் பண்ணிரு.....அது தான் CODE WORD . ...."
"சரி அப்பரும் ...."
" நீ இத பண்ணு முதல"

= = = = = = = = = =


"ஏன்......என்ன திடிர்ன்னு கேட்குற?" என்று கேட்டப்படி ஷபேனம் அருகே போனேன்.

"sources say that something is going to wrong "

"aa .... sources ...... many a times they have proved that they are only shit.. nothing else"

"ok , leave them .... but we have been ordered to slow down the projects in mumbai for quiet sometime"

அவள் தந்த காப்பியை குடிதப்படிய அவள் சொன்னதை நம்ப மறுப்பதாய் தலையாட்டினேன் ...

"no anand ...you have to be serios in this ...."

குளித்து முடித்தப் பிறகு ....அமைதியாய் இருந்த மனம், அவளுடன் கொண்டு இருந்த அறு மாதக் கால நட்பு தற்பொழுது காதலாக மாறி இருந்த சமயத்தில் அவளுக்காக அவள் சொன்னதை யோசிக்க தூடங்கியது. ஆனால் அதை விட எனது காதலை அவளிடம் எப்புடி சொல்வது என்பதே எனக்கு பெரிய யோசனையாக இருந்தது.

சற்று நேரம் ஆழமாய் யோசித்தப் பின் எதிர் சோபாவில் உட்கார்து இருந்த அவளை பார்த்து மிகுதியான தவிப்புடன் கேட்டேன் ....

"shabenam . "

"what ??"

"will you marry me "

= = = = = = = = = =

இந்திய - பாகிஸ்தான் எல்லை

அவன் எதிரே பருவ வயதில் இருக்கும் நான்கு விடலை வாலிபர்கள் அமர்ந்து இருந்தார்கள்.


அப்பொழுது அவன் மயக்கும் குரலில் .....


"இதை செய்தால் எல்லாம் வல்ல இறைவன் சந்தோசபடுவான் ; உங்களுக்கு சொர்க்கத்தில் 14 கன்னி பெண்களை பரிசாக தருவான்"


"உண்மையாகவா!!"


"ஆமம். அது மட்டும் அல்ல. உங்களுக்கு மறுபிறப்பில் நீங்கள் அமெரிக்காவில் பெரிய பணக்கரனாய் பிறக்க அருள்புரிவான்"


விடலைகள் கற்பனையில் மிதந்துக் கொண்டு இருப்பதை கண்டு அவன் மர்மமாய் சிரித்தான். அந்த விடலைகளுக்கு மத சொற்பொழிவை விட அவருடைய இந்த பேச்சு ரொம்ப சந்தோஷத்தை தந்தது. ......

தொடரும் .....

Wednesday, February 17, 2010

தொலைந்த சொர்க்கம் -1

= = = = = = = = = = = = = = = = = = = =

பகுதி - 1

சென்னை, தமிழ் நாடு.
இரவு :09 :00

அவள் சிரித்தபடிய அவளுக்காக கார் பார்கிங்கில் காத்து கொண்டு இருந்த என்னை நோக்கி வந்தாள். அவளும் நானும் ஒரே ஆபீஸ். அன்று முழுவதும் இருவரின் கண்களும் அடிக்கடி சந்தித்துச் சிரித்துக் கொண்டன. இரவு நேர தென்றல் ; அவளை பார்த்தப் பிறகு என்னை ஏதோ இம்சித்தது.
சென்றோம் ; சென்னையில் உள்ள ஓர் பிரபல ஹோட்டல் பார்க்கு. singles bar , அதனால் எங்களுக்குள் தயக்கம் இல்லை.
அமர்ந்த பிறகு .....
"B-52 with vodka " என்று சொன்ன பிறகு என்னை பார்த்தாள்.
"Manhattan" என்றேன் நான்.

= = = = = = = = = =

திவஸ், மதிய பிரதேசம்.

மும்பை நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கிடந்த அந்த பிணத்தை சுற்றி போலீஸ் நின்று கொண்டு இருந்தது. ஆண் பிணம். ஆனால் அதனுடைய பிறப்பு உறுப்பு தனியாக ஐந்து அடி தூரத்தில் ஈ மொய்தப்படி கிடந்தது.

"சார் எப்புடி, இத ஒரு பொண்ணு தான் கொலை செய்ஞ்சு இருப்பன்னு சொல்லுரிங்க??" என்று கேள்விக் கேட்ட படிய தனது சீனியரை பார்த்தான்.

"some girl have cumed on him " என்று அந்த பிணத்தினுடைய தொடை பகுதிகளை காட்டியப்படி சீனியர் சொன்னார்.

அப்பொழுது புதருக்குள் இருந்து வந்த நாய் ஓன்று ஆந்த உறுப்பை முகர்ந்து பார்த்துவிட்டு ஓடி சென்றது.

= = = = = = = = = =

கிடைத்தது நான் சொல்லியது. ஒரு sip க்கு பிறகு அவளைப் பார்த்தேன் ; மந்தகசமாய் சிரித்தாள். 555 pac லில் இருந்து ஒரு cigar எடுத்து பற்ற வைக்க போன்னேன்.
இதை பார்த்த பார் செக்யூரிட்டி என் அருகே வந்து.....
"sir. smoking is prohibited here"
"ok. is there any smoking zone near by??"
"no"
வேறு வழி இல்லாமல் ஐம்பது ரூபாய் தந்தேன் ; அவன் வாயை முடி கொள்ள.
"shabenam. cigar??"
"its not my brand"என்று சொல்லியேவரே தனது கை பையில் இருந்து எடுத்தாள் menthol flavor. 120 mm ; பெண்களை குறிவைத்து சந்தையிட பட்டவை. அந்த flavor எனக்கு பிடிக்காது. மது அருந்திய பின்.....
பேசினாள்.
அவளின் பருவகால காதலை பற்றி ,காதலனின் தந்தையுடன் அவளுடைய தாய் கொண்டு இருந்த கள்ளக்காதலை, அதனால் அவள் அடைந்த அவமானத்தை பற்றி,
இதனால் அவளின் காதல் எவ்வாறு தோற்றது,
அவள் இருக்க ; வேறு ஒருத்தியுடன் அவனுக்கு நடந்த விருபபமில்லாத கல்யாணம்,
மனதைத் தேற்ற படிப்பில் கவனத்தை மாற்றியதை......
எல்லாம் சொன்னாள்.
கேட்க கேட்க எனக்கு அவள் மேல் இருந்த காமம் போய் ; ஒரு வித பரிதாபம் ஏற்பட்டது.


ஏறக்குறைய அவள் வாழ்கையும் என் வாழ்கை போலவே இருந்தது. நானும் என் சொர்கத்தையும் தொலைத்து விட்டேன். சுழ்நிலை கைதியாக இருந்த பொழுது ஏற்பட்ட தோல்வி.இன்று நான் சமுதாயத்தில் ஒரு நல்ல நிலையில் இருந்தாலும் ; அன்று கல்லுரி முடித்த நிலையில் என்னால் ஒரு வாக்குறுதி தர முடியவில்லை.அதன் பிறகு மேலப் படிப்பு படித்து, பிறகு ஒரு அமெரிக்க கம்பெனியில் வேலை கிடைத்தது ; இங்கே இப்பொழுது ஒரு உத்தர் பிரதேச அழகியுடன் இருக்கிறேன்.



எனது சிவிக் காரில் அவள் குடி இருக்கும் apartment க்கு வந்துயடைந்தோம்.
கார் பார்கிங்யை நோட்டம் விட்டபடி ; அவளிடம்
"hey will my car find a place here"
"look for my lot"
“hmm. What happened to your car?”
“its in the office itself. But don’t worry the keys are with me and have asked anna to have a look on it”
“oh, that drunkard. Do you still believe him?”
“yap. What to do”
“where is your lot”
“over there”

அவள் flat அருகே வந்ததும் ; அவள் கதவுகளை திறந்தாள்.
அவள் கதையை கேட்டபின் அன்று இரவு பிளான் செய்தபடி ஏதும் செய்ய தோன்றவில்லை.உடலில் எழுச்சி இல்லை.
மனம் ஒரு வித மயான அமைதியில் இருந்தது.
"சரி ஷபேனம். நான் வரேன்."
"என்னாச்சுப்பா" என்றாள் அவளின் மழலை தமிழ்யில். அதற்கே நான் என்னிடத்தில் இல்லை. சொக்கி போகிவிட்டேன்.
"இல்லை...... இன்று வேண்டாமே..."
"இல்லை இன்று நீ எனக்கு வேண்ணும்"
மறுப்புடன் நான் செல்ல எத்தனித்த போது என் சட்டையை பிடித்து இழுத்தாள்.அவள் இழுத்த வேகத்தில் நான் அவள் மேல் மோதினேன்.
அருகே வந்த அவள் எனது இரு கன்னங்களையும் நக்கினாள். பிறகு எனது உதட்டை கவ்வினாள்.
சிறிது நேரம் என் உதடுகள் அவள் உதடுகளை அடக்க முயற்சித்தது. அவ்வாறே அவள் உதடுகளும்.

நாவுகள் நலம் விசாரித்து கொண்டன.
கதவை முடிவிட்டு.
சென்றோம் கட்டிலுக்கு.
முதலில் அவள் ஆளுமையில் நான்.
பிறகு என் ஆளுமையில் அவள்.
அவள் என் ஆளுமையில் இருந்த போது ஏன்னோ கண்ணதாசன் எழுதிய " உனக்கும் கிழே ; உள்ளவர் கோடி ; நினைத்து பார்த்து நிம்மதி நாடு:" என்ற வரிகள் நினைவுக்கு வந்தது.
சிரித்தேன்.
அவளும் சிரித்தாள்.
அந்த சிரிப்பினால் என் மனதிற்குள் தீபாவளி.
அப்பொழுது ஷபேனம் முகத்திற்கு பதிலாக ஷாபிய சயீத்யின் முகம் என் கண்களில் வந்து போனது.
எழுந்தேன்.
அவளிடத்தில் ஆண்மையின் சாட்சிகள்;
என்னிடத்தில் பெண்மையின் சாயல்.
உட்கார்ந்தேன்.
"என்னாச்சுப்பா ஆனந்த்தேவ்?"
"ஒன்னும் இல்லை"
சரி மனநிலைமையை மாற்ற.......
“so how do you feel honey ??”
“cloud nine”
“hmm”
“how do you feel”
“me too the same ”
சற்றென்று செல்லமாய் அறைந்தாள்....

= = = = = = = = = =

பட்னா, பீகார்.

இரவு சினிமா பார்த்துவிட்டு வேலைக் கிடைக்காத வருத்ததுடன் வீட்டுக்கு வந்த கிஷனுக்கு , அவன் பெயருக்கு வந்து இருந்த லெட்டரை பார்த்ததும் சந்தோசம் பொறுக்கவில்லை. இனிமேல் வாழ்வில் பொற்காலம் தான் என்று நினைத்தான். மும்பை தாஜ் ஹோட்டலில் வேலை. PURCHASE EXECUTIVE .

= = = = = = = = = =

"ஆனந்த். கட்டாயம் நீ மும்பைல நடக்கிற conference க்கு போய் தான் ஆகனுமா??" என்று தனது கண்களில் தவிப்பை வைத்தப்படி கேட்டாள் ஷபேனம்.

தொடரும் ....

Tuesday, February 16, 2010

கலவை

எனக்கு வரும் கோடான கோடி பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வதை விட, என் எழுத்துக்களை நம்பி என் பிளாகை படிக்காத வாசகர்களுக்காக அடுத்த மொக்கை பதிவுக்கான வேலையை பார்ப்பது தானே என்னை மாதிரி உள்ள ஒரு பிரபலமாகாத பதிவாளரின் கடமை. அதனால் தான் என்னால் எந்த பதிவிற்கும் பின்னோட்டம் போட முடிவதில்லை. எல்லோரும் என்னை புரிந்து கொள்ளுங்கள். (நீ பின்னோட்டம் போட்ட என்ன போடாட்டி என்னன்னு நீங்க சொலுறது எனக்கு கேட்குது.) அப்படியே நான் பின்னோட்டம் போட்டாலும் அது மூன்றாம் உலக யுத்தத்திற்கு காரணமாகி விடாதுன்னு என்ன நிச்சயம்????

= = = = =

1 .50 ரூபாய்க்கு தலைக்கு போட்டுக் குளிக்கிற ஷாம்பூ கடைக்குக் கடை விக்குது, ஆனா ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு ரேஷன் கடைகளில் மட்டும் தான் கிடைக்குது. இப்ப நம்ம நாட்டில பொது மக்களுக்கு அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை பொருட்கள் கம்மியான விலைக்கு பெரும்பாலும் கிடைப்பதில்லை, ஆனால் தேவையே இல்லாத பொருட்கள் தான் பரவலா கிடைக்குது.

ஒரு விவசாயிக்கு விவசாயத்திற்கான லோன் கிடைப்பதை விட டிவி, பைக் போன்றவற்றை வாங்க லோன் சீக்கிரமாக(வேகமாகவும்) கிடைக்கிறது.

= = = = =

காதலர் தினத்தில் ஜோடியாக திரிந்தால், அவங்களுக்கு கட்டாய கல்யாணம் பண்ணி வைக்க ஒரு குரூப் கிளம்பி இருக்காம்.(இது அடுத்த வருஷமும் தொடருமாம்.) நல்லது. அப்படியே என்னை மாதிரி பிகர் கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களுக்கு பிகரை பிடிச்சு குடுத்து, பிறகு கல்யாணம் செய்து வைத்தால் நல்ல இருக்குமே.(கல்யாண பிரோகர் வேலைன்னு முடிவான பிறகு அவர்கள் இதையும் செய்யலாமே)

= = = = =

மர்ம தேசம் எழுதின இந்திர சௌந்தராஜனின் அடுத்த சீரியல் வர போகுது,"யாமிருக்க பயமேன்". டைரக்டர் யாருன்னு தெரியல. பழனி தான் கதைக்களம். போகர் ஒரு வேளை இரண்டு நவபாஷாணச் சிலைகள் செய்து இருந்தால், அந்த இரண்டாவது சிலை எங்கு இருக்கும், அவர் ஏன் ஒன்பது விஷங்களை வைத்து சிலை செய்தாருன்னு கதை போகுதாம். FEB 22 ல இருந்து ஸ்டார்ட் ஆகுது விஜய் டிவி ல, மாலை 7 :30 மணிக்கு (பின் நவீனம்.....).

= = = = =

YOU CAN WIN புத்தகத்தை எழுதின shiva khera வின் அடுத்த புக் வந்து இருக்கு (கட்டாயம் அது இலக்கியமாக இருக்காது....அப்படி இருந்தால் தான் யாராச்சு அதை பற்றி எழுதிருப்பங்களே). YOU CAN SELL . பெயர் ராசியோ என்னவோ இந்த புக்க்கும் போன வாட்டி வைச்ச மாதிரியே இந்த வாட்டியும் பெயர் வைச்சு இருக்காரு. அதே போல் வெற்றி பெறுமான்னு பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். நான் இந்த புத்தகத்தை இன்னும் படிக்கல. ஆனால் இது எல்லோரும் அவசியம் படிக்க வேண்டிய ஓன்று.

அதே மாதிரி KABUL DISCO ன்னு ஒரு புக் வந்து இருக்கு. காபுல் நகரத்தை பற்றி கதை எழுத ஒரு எழுத்தாளன் ஆப்கானிஸ்தானுக்கு போறான் , அவனுக்கு அங்கு ஏற்படும் அனுபவங்கள் , கார்ட்டூன் படக் கதையாக வந்துள்ளது. சிறியவர்களும் பெரியவர்களும் படிக்க வேண்டியே புக் இது. அந்த நாட்டின் கலாச்சாரத்தை பற்றி சிறியவர்கள் தெரிந்துக் கொள்ள கொஞ்சமாச்சு உதவி செய்யும்.

= = = = =

சில ஓலைச்சுவடிகள், தஞ்சாவூர் பெரிய கோவிலின் கல்வெட்டுக்களின் சில பிரதிகள் வைத்து கொண்டால், இந்த நாள் மட்டும் அல்ல நீங்கள் எந்த நாளும் ஹேமாவை போல் புரியாத தமிழ் வார்த்தைகளை போட்டு கவிதை எழுதலாம்.

அதே போல் நீங்க எழுதும் பதிவிகளில் பட்டை, ஏலக்காய் போன்றவற்றை கலந்தால் நீங்களும் இவரை போல் தமிழ்மண விருதை வாங்கலாம்.

= = = = =

Sunday, February 14, 2010

காதல் கவிதைகள் -4

பெயரில்லா சூனியக்காரியின் காரணமில்லா சாபம்
காட்டு வழிச் செல்லும் ஒத்தையடி
பாதையில் உலவுவதாய் கண்டுக் கேட்டு
அய்யனார் கோவில் விபுதி உடன்
பயந்த உன்னையும் உன் விழிகளையும்
பயம்புடுத்த மரத்திலிருந்து விழுந்து
ஏற்பட்ட காயங்களை தடவி ரசித்தப்படி
கிராமம் நோக்கிச் செல்லும்
பேருந்தில் இருபத்தி மூன்றாம் இருக்கையில்
அமர்ந்து பயணிக்கிறேன்
நாளை உன்னை பருவப் பெண்ணாய் பெண் பார்க்க
திருமணத்திற்காக.....

Saturday, February 13, 2010

காதலர் தினம் : ஏதோ என்னால் முடிந்த சிறு அட்வைஸ்

  • PROPOSE பண்ண போற பொண்ணு எந்த மாதிரி டைப்ன்னு முன் கூட்டியே தெரிந்து வைத்து இருக்க வேண்டும். அப்ப தான் யாரும் பார்க்காதவாறு செருப்படி வாங்க முடியும். (கருணை அடிப்படையில் மறைவிடத்தில் வழகும் படி கேட்க வாய்ப்பு கிடைக்கும்)
  • பொண்ணுங்க கிட்ட எடுத்த உடனே காதலை சொல்லிவிட கூடாது. அவளுடைய தங்கச்சி அழகா இருந்தா டக்குன்னு அவகிட்ட காதலை சொல்ல சான்ஸ் கிடைக்கும். (சில சமயம் பொண்ணுங்களை விட அவங்க அம்மா அழகாய் இருப்பாங்க. அதுக்குன்னு தவறான வழியில் போக கூடாது. அந்த பொண்ணுங்களோட அப்பாவின் அதிர்ஷ்டம் எண்ணி பெரு முச்சு விட்டுக்க வேண்டியது தான் )....
  • ஒரு வேளை நீங்கள் என்னை மாதிரி பயங்கர மொக்கை பார்ட்டியாக இருந்தால், காதலை நேரில் சொல்ல வேண்டாம்.
    அவங்க கிட்ட பேச ஆரம்பிக்கும் பொழுது ...."உங்க கிட்ட தனியா பேசணும்" ங்கிற மாதிரி எல்லாம் ஆரமிக்க கூடாது. அப்படி ஆரமிச்ச பார்ட்டி முதலிலையே உஷார் ஆகிடுவாங்க.
  • feb 14 அன்னைக்கு நிறைய பொண்ணுங்க வெளியே வருவாங்க. so காலேஜ் க்கு அப்ளிகேஷன் போடுற மாதிரி ட்ரை பண்ணுங்க.
    முதலில் காதலை சொல்லும் முன், எதையும் தாங்கும் உடம்பு இருக்க வேண்டும், எவ்வளவு பெரிய செலவு வந்தாலும் அதை சந்திக்கும் பர்ஸ் வேண்டும்.
  • அப்படி உங்களுக்கு சூப்பர் பிகர் யாரையும் தெரியாது என்றால் ....நாளைக்கு வெளியவே போகாதிங்க( நீங்க எல்லாம் என் ஜாதி)(நீங்க எல்லாம் உயிருடன் இருந்து என்ன பயன்)
  • இருப்பதிலையே பிரச்சனை இல்லாதது எதுவென்றால் ..."ஒரு தலைக் காதல்" தான். இந்த வகை காதலில் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் காதலிக்கலாம். வைரமுத்துவே சொல்லிருக்கார் ...."கற்பனை மட்டும் இல்லையென்றால் நிஜங்கள் நம்மை தின்று விடும்" என்று.

காதல் கவிதைகள் -3

தேவதையாய் நீ வந்த
நொடிகளின் வேர்வையில்
செம்மையானது
காய்ந்துப் போன என் மனப் பிளவுகளின் ஏக்கங்கள்.

= = = = =

பூவே உனக்காக ரோஜாக்களுடன்
நான் காத்திருந்த சமயங்களிலெல்லாம்
ரோஜாக்கள் காய்ந்து விடுமோ என்ற
பயத்தில் காலத்தை நிலை நிறுத்த பார்க்கிறேன்
உன் அழகுச் சாரல்
எனக்காகவே என்பதினால் .....

= = = = =

காதலைச் சொல்ல
வார்த்தைகளுடன் போராட்டம்
அவை கவிதையாய் வேடிதப் பொழுது
உன் பெயரின் நாதங்களே
எனக்கு இசையாய் கேட்டது ....

= = = = =

உன் "ம்ம்ம்" "ஆகா"வுக்கும்
அர்த்தம்
என்னை அழைத்த பொழுது
நான் சார்ப்பு இலக்கியமாய்
மாறிருந்தேன்....
என் மனம் உன்னைச் சார்ந்து இருப்பதால் .....

= = = = =

உன் பெயருக்கும் என் பெயருக்கும்
இடைச் சொற்களாய்
நடந்து விடாதோ நம் திருமணம்

= = = = =

கலவை - காதலர் தின ஸ்பெஷல்

முதலில் எல்லோருக்கும் வயிற்று எரிச்சலுடன் காதலர் தின வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன்
= = = = =
நானும் வயசுக்கு வந்த நாளில் இருந்து (அந்த அகோர சம்பவம் எப்ப நடந்துச்சுன்னு கேட்க கூடாது..) பார்க்குறேன் பாரதிராஜா படத்தில வர மாதிரி "மாமா நான் உனக்கு தான்"ன்னு சொல்லிட்டு ஓடி வருகிற மயிலு மாதிரி எந்த பொன்னும் நம்ம லைப் ல இன்னும் கிராஸ் ஆகல. நானா எந்த தேவதையையும் தேடிப் போக மாட்டேன் (போனாலும் ஒன்னும் கிடைக்காது என்பது வேற விஷயம்). ஸ்கூல், காலேஜ் படிக்கிற காலத்தில நமக்கு படிப்பே பெரிய போராட்டமாக இருந்துச்சு. அதனால லவ், சைட்டுக்கு எல்லாம் நேரமே இருந்தது இல்லை.

இன்னொரு விஷயம் நான் போடுற மொக்கைக்கு "C" கிளாஸ் பொண்ணுகளே திரும்பி பார்க்காது. அப்படி இருந்தும் ஒரு "A" கிளாஸ் பொண்ணு என்னை திரும்பி பார்த்துச்சு. பின போகும் போது பெயரை சொல்லி கூப்பிட்ட, திரும்பி பார்த்து தானே அகனும்.

= = = = =

காலேஜ் செகண்ட் இயர் படிக்கும் போது...... பொண்ணு கால கைல விழுந்து அவளை ஐஸ் கிரீம் சாப்பிட கூட்டிட்டு போனேன். பிறகு நான் பேசலாம்ன்னு பார்த்தா...... அவ பேசின பேசின பேசினா .........(ஆனால் என்ன பேசினாள்ன்னு எனக்கு இது வரைக்கும் தெரியாது). பின் சுடு கண்ட பூனையாய் போர் கால தேவைக்கு கூட எந்த பெண்ணையும் ஐஸ் சாப்பிடவோ, ஹோட்டலுக்கோ கூட்டிட்டு போனது இல்லை.

= = = = =

ஆளுக்கு ஆள் ஒரு பொண்ணு கூட சினிமா பார்த்ததையே பெருசா பேசிட்டு இருக்காங்க. நான் பதினோரு பொண்ணுங்க கூட சினிமா பார்த்து இருக்கேன். ஆனா எல்லோரும் நினைக்க கூடிய மாதிரி அது ஒரு சந்தோஷமான அனுபவமாக இல்லை. செமஸ்டர் எக்ஸாம் முடிஞ்ச அடுத்த நாள், சும்மா தானே இருக்கோம் படத்துக்கு போவோம்ன்னு முடிவு பண்ணி தியேட்டருக்கும் போயாச்சு. அங்க பார்த்தா எங்க UG காலேஜ் பியுட்டி.....(அப்ப நிறைய அவளை பார்த்து ஜொள் விட்டுகிட்டு இருந்தாங்க, சில வாத்தியார்களும் அதில் அடங்கும்). அழகுன்ன அழகு அப்படி ஒரு அழகு. சரி டிக்கெட் எடுத்துட்டு, தனியாக தான் வந்து இருப்பா ன்னு நம்பி அவகிட்ட பேச போனேன்.... அதன் பிறகு ஒரு ஒரு ஆள் வந்து சேர்ந்தாங்க .....அப்பவே உஷார் ஆகிருக்கனும், விதி யாரைவிட்டது. உள்ள போன பிறகு .....சுறாவளி அடிச்சு வெளுத்து வாங்கிருச்சு. போனது சிம்பு படத்திற்கு ......அப்ப என் நிலைமை எப்புடி இருந்திற்கும்ன்னு நினைச்சு பாருங்க.

= = = = =

சின்ன வயசிலிருந்தே சினமாக்களில் ஹீரோ லவ் லெட்டர் கூடுக்கிரத்தை பார்த்து வளர்த்ததினால்...எனக்கும் ஒரு பொண்ணு கிட்ட ( நான் HOMO SEX இல்லைங்க....அதனால் தான் பொண்ணு கிட்ட போனேன். அப்படி இருந்தா எங்க கிளாஸ் ல நல்ல கலரா ஒரு பையன் இருந்தான், அவன் கிட்ட பொய் இருப்பேன்) லவ் லெட்டர் குடுக்கனும்ன்னு ஆசை இருந்துச்சு ஆனா மனசுல தைரியம் இல்லை. அப்படி மனசுல தைரியம் வந்து எழுதலாம்ன்னு நினைச்ச போது....லவ் லெட்டர் எல்லாம் மலை ஏறி போயிருச்சு .....SMS , EMAIL ன்னு தொழில்நுட்பம் வளந்துருச்சு.

= = = = =

Friday, February 12, 2010

காதல் கவிதைகள் -2


காதல் வருவதில்லை
ஒருவனுக்கு
காதலுடன் காதலி
வருவதால் காமம்
அந்த உணர்வை காதலாய் இருக்கவிடுவதில்லை ........


= = = = = =

என் அடிவயிற்றில் ரோமங்கள்
முளைத்த காலத்தில்
என்னுள் தோன்றிய
காமம் உடைந்ததே
உன்னை பார்த்தப்பொழுது
இதற்க்கு பெயர் தான் காதலா ???

= = = = =

காதல் கவிதைகள் -1


நீ வருவாய் என
காலை நேர பனித் துளிகளுடன்
காதலுக்காக தனிமைப்பட்டு இருக்கும்
மலர்களாய் இருப்பேன் நீ வரும் பாதையில் .......

தோழியாய் வந்துவிட்ட பெண்ணே
என் வருங்காலத்தில் மனைவியாய் இருக்க
என் நிகழ்காலத்தில் என்னை காதலிப்பாயா ??

கவிதையாய் வருகிறாய் என்றால்
சொல்லிவிடு நான் வார்த்தையாகிறேன்
ஈரமாகாத முத்தத்தைப் போல்
நான் இருக்க விரும்பவில்லை .....

Wednesday, February 10, 2010

தமிழ்ப்பட விமர்சனம் : அசலான விமர்சனம்

பத்து லட்சம் ஹிட்ஸ்களை தர போகும் பதிவாளர்களுக்கும் வாசகர்களுக்கும் (அப்படி யாராச்சு இருக்கிங்களா ...இருந்தா சொல்லுங்கப்பா) நன்றி நன்றி ........

சமீபத்தில் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படம் ரசிக்க தெரிந்தவர்களுக்கு மட்டும் தான்னு சொல்லிருக்காரு..அதனால் இனிமேல் படம் வெளிவரும் பொழுது அது கக்கா போக தெரிந்தவர்களுக்கா ...இல்லை முச்சா போக தெரிந்தவர்களுக்கா என்று அவர்கள் சொல்லி விட்டால் நல்ல இருக்கும் ..... அதன்ப்படி நாங்களும் படம் பார்ப்போம் ,விமர்சனம் எழுதுவோம் ல


டிஸ்கி : தமிழில் எழுதும் போது தமிழ் படத்திற்கு தானே பெரும்வாரியாக விமர்சனம் எழுத முடியும். அதுவும் அசலாக இருந்தால் தானே எல்லோரும் படிபங்க.......

கொஞ்ச நாளாய் எல்லா பதிவுகளிலும் எதாவது ஒரு படத்துக்கு விமர்சனம் எழுதிகிட்டு இருக்காங்க. சரின்னு புயலாய் புறப்பட்டு விமர்சனம் எழுதியே தீர்வதுன்னு ஒரு முடிவோட எழுத ஆரம்பிச்சு இருக்கேன். நான் இது வரைக்கும் எந்த புதுப் படத்துக்கும் விமர்சனம் எழுதினது இல்லை ....... அப்படியே எழுத தோன்றினாலும் என்ன எழுதுவதுன்னு தெரியல.

சரி ஏதோ ஒப்புக்கு கதை சவாரி அடிக்குது, கேமரா லென்ஸ் ல ஓட்டை, டைரக்டர் சரியாய் குளிக்கல...... ஹீரோவுக்கு ஜெட்டி சைஸ் சரி இல்லைன்னு நானும் நூற்றுக்கு பத்தாய் எழுதிட்டு போகலாம். ஆனால் வருங்கால சமுதாயம் என்னை என்ன சொல்லும்(நமக்கு சரித்திரம், பொருளாதாரம், ஆங்கிலம்........ எல்லா கருமமும் முக்கியம் இல்லையா)......

நம்ம எப்புடி விமர்சனம் எழுதின என்ன .....நூறு வருடம் கழித்து வர போகும் என்னைப் போல் உள்ள மட்டையர்களுக்கு தெரியவா போகுது ?????

நேத்து சாயங்காலம் பிற பதிவாளர்கள் எப்புடி விமர்சனம் எழுதறாங்கன்னு பார்க்கலாம்ன்னு உட்க்கார்ந்த.....முடியல, என்னை தவிர எல்லா பையபுள்ளைகளும் படத்தை விமர்சனம்ங்கிற பெயர்ல விம் சோப்பு போட்டு தோச்சு எடுக்கிறாங்க. நான் அப்படியா ஷாக் ஆகிட்டேன்.

படம் பார்க்க உட்க்காரும் பொழுதே அடியில் கொல்லி கட்டை வைசுக்குவங்க போல் இருக்கு. அவங்க பதிவுகளெல்லாம் படிக்கும் பொழுது தியேட்டர் விட்டு வெளிய வழியே (கவிதை கவிதை .....என்ன கருமம்மோ) வந்துடனே டி குடிக்குரங்களோ (இலக்கியவியாதிகள் மன்னிக்கவும்......சரியான spelling தெரியல) இல்லையோ இன்டர்நெட் செனட்டர்க்கு போய் விமர்சனம் எழுத START பண்ணி விடுறாங்க .......

தமிழ்ல வர பல படங்கள் மொக்கையா தான் இருக்கு ....அதுக்கு டைம் வேஸ்ட் பண்ணினதே பெருசு : அந்த மொக்கை படத்துக்கு விமர்சனம் எழுதிவேற நம்ம டைம்யை மொக்கை ஆக்க வேண்டுமா ?????

இன்னொரு விஷயம் ....எனக்கு விமர்சனம் எழுத தெரிந்தால் நான் எழுத மாட்டேனா ???? பிறகு படம் பார்க்காமல் விமர்சனம் எழுத எனக்கு தெரியாதே ......(அந்த மாதிரி பின்னோட்டம் வேண்டுமானால் போடா தெரியும்).....

அதுவும் மொக்கை படத்துக்கு மொக்கையா விமர்சனம் எழுதின பிறகு திரட்டில சேர்க்க படும் படு இருக்கே ........இதுல வேற விமர்சனத்துல இடைச்சொற்கள் இல்லைன்னு இலக்கியவாதிகள் complaint பண்ணுறாங்க....அவங்களெல்லாம் கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டு இருக்கும் AGATHA CHRISTIE ஓட தமிழ் மொழிபெயர்ப்பு நாவலை படிக்க வைக்க வேண்டும்.....(அவங்க கிட்ட தான் எப்புடி ஒரு சிறந்த நாவலை மொழிபெயர்த்து மொக்கை ஆக்குவது என்பதை கற்று கொள்ள வேண்டும் .....இதிலையும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் பல புது புது தமிழ் வார்த்தைகளை தெரிந்து கொள்ள முடியும் ......அதற்க்கெல்லாம் பாரதி சொன்னது போல் மனதில் உறுதி வேண்டும்....வார்த்தைகளில் தெளிவு வேண்டும்)....

இன்னொரு முக்காத விஷயம் என்னன்னா விமர்சனம் எழுத ஆரமிக்க இருக்கிற வரைக்கும் அந்த மொக்கை படங்களின் கதையை ஞாபகம் வைத்திருக்க வேண்டுமாம். இதை விட பெரிய தண்டனை வேறு எதுவுமில்லை......

ஆனால் இந்த பட விமர்சனங்களால் ஒரு நன்மையையும் உண்டு ........ பிறர் காசை செலவு செய்து படம் விட்டு ....விமர்சனம் எழுதவங்க. அதை படிச்சுட்டு நம்ம காசை மிச்சம் பிடிச்சுக்கலாம்.

அப்படா நானும் விமர்சனம் எழுதிட்டேன் .......

Friday, February 5, 2010

தாம்பரம் வித்யா திரையரங்கு - விமர்சனம்

முக்கிய (முக்காத) குறிப்பு - இந்த தியேட்டருக்கு யாரோ சூனியம் வைச்சுட்டாங்க போல் இருக்கு (ஒரு வேளை MR தியேட்டர் காரங்களாய் இருப்பங்களோ) . இங்கே ரிலீஸ் செய்யப்படும் படங்கள் முக்காவாசி மொக்கையா தான் இருக்கு (கால்வாசி என்னவாக இருக்குன்னு கேட்காதிங்க).... அன்று ஏகன் ; இன்று அசலுக்கே ஆபத்து... தல உஷாராக இருக்குங்க அடுத்த படத்திற்கு ...நல்ல வேளை நான் இன்னும் படத்தை பார்க்கல. டிவி ல போட்ட பார்த்துக்கொள்ளலாம்

படமெடுக்கப்பட்டது ரொம்ப நாள் முன்னாடி.இப்ப கால மாற்றத்துக்கு ஏற்றார் போல் தியேட்டரும் கொஞ்சம் மாறி தான் இருக்கு. ஆனால் முகப்பு இப்படியே தான் இருக்கு. இன்னும் எத்தனை நாளைக்கு தான் சினிமா விமர்சனத்தையே எழுதிக் கிட்டு இருப்பது. பதிவுலகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகும் கடமை எனக்கும் இருக்கு என்றே நினைக்கிறேன். உலக சரித்திரத்தில் முதல் முறையாக, முற்றிலும் புதுமையாக சினிமா திரையிட படும் திரையரங்கு பற்றின விமர்சனத்தை நான் எழுதுகிறேன்.

எனக்கும் இந்த திரையரங்குக்கும் பெரிய தொடர்பு, பாந்தம், சொந்தம் என்று ஏதும் இல்லை. இதில் அஜித் நடித்த வரலாறு படத்தை தான் முதல் முறையா பார்த்தேன்(அதனால் தான் இப்படி மொக்கைய இருக்கியா என்று யாரும் கேட்க வேண்டாம் ). பெருங்களத்தூர் க்கு பக்கத்தில் இருப்பதால் கொஞ்சம் அடிக்கடி போக சௌரியமாக இருக்கு.

கிரோம்பேட்டை வெற்றி தியட்டர் போல் இல்லாமல் இங்கே வெளி ஆட்கள் தான் கள்ள டிக்கெட்களை விற்க்கிறார்கள். ஆனால் விலை தான் ஜாஸ்தி. மேலாளர்ன்னு ஒருத்தர் இருக்கிறாரு. கண்ணாடி போட்டு இருப்பாரு, கூட்டம் ஜாஸ்தியாக இருந்தால் வெளியே வந்து சவுண்ட் விடுவாரு. ஆனா யாரும் மதிக்க மாட்டங்க. இவரும் கத்துவதை விட மாட்டாரு.

கழிவறைகளை அடிக்கடி சுத்தம் செய்வாங்க (அது அசுத்தமா இருப்பதால்), அதனால் அதெல்லாம் கொஞ்சம் சுத்தமாக இருக்கும்.
பாதுகாப்புக்கு ஆட்கள் இருக்காங்க, அதனால் பெண்கள் தைரியமாக வரலாம். நாற்காலிகள் உட்க்கார சுகமாகவும், வசதியாகவும் இல்லாவிட்டாலும் கூட, தொல்லை தராமல் இருக்கும்.

எல்லா திரையரங்கை போல் இங்கும் சிறப்பல சட்டங்கள் உண்டு.

பால்கனி - இந்த தியேட்டர் ல அவ்வளவு வசதியாக இருக்காது. என்ன ஒரு கொடுமைன்ன காதல் ஜோடிகள் கம்மியாக தான் வருவாங்க. அப்படியே வந்தாலும் ......சீன் எதுவும் பார்க்க முடியாது.

A / C .......எல்லா தியடர்களை போல் தில்லாங்கிடி வேலை தான் செய்வாங்க.

வெளி உணவு பொருட்களுக்கு இங்கே அனுமதி இல்லை ......ஆனால் இங்கு விற்கப் படும் SNACKS அவ்வளவு சிறப்பாக இருக்காது. சிறப்பாக இல்லாவிட்டாலும் ஏதோ பெரிய TASTE இருப்பது போல அதிக விலை வைத்து விப்பாங்க......

நைட் ஷோ - இந்த தியட்டரில் கூட்டம் கம்மியாக தான் இருக்கும்..... பஸ்க்களை நம்பி நைட் ஷோவுக்கு இங்கே வராதிங்க ....

இங்கே இருக்கும் GENERATOR அப்பப்ப மக்கர் பண்ணும்.....

MOVIE PROJECTION நன்றாக இருந்தாலும் ..... SCREEN சரி இல்லாததால் ...படம் கொஞ்சம் CLARITY கம்மியாக தான் தெரியும்.

CAR , BIKE பார்க்கிங் க்கு தனியாக இடம் இருக்கு...... ஆனால் மழை காலங்களில் தண்ணீர் தேங்கும்....

ஆகமொத்தம் ...நல்ல படங்களை பார்க்க ஏற்ற இடம் வித்யா தியேட்டர் ...
டிஸ்கி - யாருகாச்சு மலரும் நினைவுகள் இருந்தால் ...பின்னூட்டத்தில் சொல்லவும்

அசல் - அஜித்

அசல் பட டிக்கெட்டின் விலையை கேட்ட உடனே அப்படியே பம்பி கொண்டு திரும்பி வந்துட்டேன்
அசல் படம் இன்று ரிலீஸ் ஆகபோகுது. கொஞ்சம் சந்தோசம் கொஞ்சம் டென்ஷனாய் இருக்கு. ஏன்ன அஜித், சரண் இரண்டு பேருக்கும் பெரிய தோல்விகளுக்கு பிறகு வருகிற படம். இன்னொரு பயம்(ஆச்சிரியம்) - தல அஜித் இதில கதை, திரைக்கதை இன்னும் பல வேலைகள் செய்து இருக்காரு.

வில்லன் படத்திற்கு பிறகு யூகி சேதுவும் அஜித்தும் ஒன்னு சேர்ந்து இருக்காங்க . மற்றப்படி படத்தை பத்தி எனக்கு பெருசா ஒன்னும் தெரியாது. எல்லா பதிவாளர்களை போல் நானும் கேபிள் அண்ணனோட விமர்சனத்தை படிச்சிட்டு தான் பார்க்கனுமா வேண்டாமான்னு முடிவு செய்யணும்.

படத்தில் ஒரு CAPTION போட போடுறாங்க - நல்லதை தியடருக்கு வெளில கொண்டு போங்க, மற்றதை இங்கேயே விட்டுருங்க ....என்னமா யோசிக்கிறாங்க. கட்டாயமான முறையில் இது பதிவாளர்களை குறி வைத்து சொல்லப்பட்டு இருக்க வேண்டும். சோ உஷார் ...

இந்த படத்தில் அஜித் வைத்திற்கும் hair style யை GOTHIC STYLE என்று சொல்வார்கள்.

அஜித்துக்கும் பாவ்னாவிற்க்குமான ON SCREEN IMAGE நல்ல workout ஆகும் என்றே நினைக்கிறேன். சமீரா ரெடியின் ஒரு தெலுகு பட பாட்டை பார்த்ததிலிருந்து காத்து கருப்பு அடிச்ச மாதிரி ஆகிட்டேன்.

வில்லன்களாக சம்பத்(கோவா படத்தில் நன்றாக நடித்து இருப்பதாய் விகடன் ல போட்டு இருக்காங்க, all the best சம்பத்) ...காணாமல் போன சுரேஷ் ......

அதுன்னமோ தெரியல வெளிநாட்டு கதை என்றாலே எல்லோரும் தலைல எச்சி துப்பி வைச்ச மாதிரி கலர் பண்ணிக்கிறாங்க....


என்னை போல் உள்ள அஜித் ரசிகர்களுக்கு இன்று கொண்டாட்டமா இல்லை திண்டாட்டமான்னு தெரியல. .....


அணைத்து அஜித் ரசிகர்களுக்கும் என் வாழ்த்துக்கள் .....

விஜய் ரசிகர்களுக்கு வர போகும் சுறா படத்திற்கு என் வாழ்த்துக்கள் ......(நாங்க எல்லாம் நடுநிலை வியாதிக்காரங்கல )


முக்கிய குறிப்பு - வட்டி கடையில் நகையை வைத்திருப்போர் படம் பார்க்காமல், அசலை மீட்க வேலைக்கு போகுமாறு கேட்டு கொள்ள படுகிறார்கள்.



டிஸ்கி - படத்தை பற்றி யூகி சேது .....

What is the one-line story of Aasal?
It is an MGR-meets-Sivaji film, meaning action and sentiments have been woven together. The story is about an international negotiator and middleman, who is betrayed by his kith and kin. How he takes vengeance against those who betrayed him forms the rest of the story.

Thursday, February 4, 2010

ஆனந்த விகடனும் தமிழ்ப்படமும்

வழக்கம் போல் இந்த வாரமும் ஆனந்த விகடன் வாங்க கூடாது என்றே இருந்தேன். ஆனால் cover story யை பார்த்த உடனே வாங்க வேண்டியதாக போயிருச்சு. அப்படி என்ன கவர் ஸ்டோரி??? சினிமா ஹீரோக்கள் டம்மி பீஸா........(தலைப்பு சரியாய் ஞாபகமில்லை) எழுதியவர் கதிர்வேலன் (இதுவும் சரியாய் ஞாபகமில்லை).

சரி நம்ம கவர் ஸ்டோரிக்குள் போகும் முன் ...... விகடன்ல லூசு பையன் ங்கிற ஒருத்தர் ஓர் நையாண்டி பகுதியை எழுதிட்டு இருக்காரு. அதில் அவர்கள் கிண்டல் பண்ணாத அரசியல்வாதிகள், சினிமா ஆளுங்களே இல்லை என்று சொல்லலாம்.

அரசியல்வாதிகளின் மீதும், சினிமாக்காரங்க மீதும் அவர்கள் வைப்பது கொள்கை ரீதியான விமர்சனமோ, கிண்டலோ இல்லை. பெரும்பாலும் அவை அனைத்தும் தனிநபர் தகுதல்களாகவே இருக்கும். அத்தனை கிண்டல் தொனிக்கும் கார்ட்டூன் படங்கள். அதுவும் விஜயை அவர்கள் கிண்டலடிக்கும் விதம்....அப்பப்ப. (விகடன் வீட்டிலுள்ள சிறுவர் முதல் பெரியவர்கள் வரை படிக்க படுகிறது).

இப்படி கார்டூன் போடும் அவர்கள் எந்த உரிமையில் இந்த மாதிரியான கவர் ஸ்டோரிக்களை போட்டார்கள் என்று எனக்கு சத்யமா தெரியல. ஒரு வேளை அதெல்லாம் தான் பத்திரிகை தர்மம்மோ .......

ஏதோ ரொம்ப வருஷம் கழிச்சு ஒரு படத்திற்கு போய், நன்றாக சிரித்துவிட்டு வந்தேன். எனக்கு தெரிந்த வரைக்கும் அந்த படத்தில் யாரையும் அவர்கள் புண்படுத்தவில்லை .

முக்கியமாக ஒரு விஷயம் ......இந்த மாதிரியான கவர் ஸ்டோரி நான் விகடனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. நான் தமிழ்ப்படத்தை பற்றியும், அத்தனை இயக்கிய அமுதனை பற்றியும் எதாவது பாராட்டி எழுதிருப்பர்கள் என்று நினைத்தேன்.

கடைசியாக அவர்கள் விஜய் ரசிகர்களை வேற சப்போர்ட் க்கு வருகிற மாதிரி எழுதிருக்காங்க ...... எனக்கு தெரிந்து பதிவுலகத்தில் இருக்கும் ஓர் தீவிர விஜய் ரசிகரே இந்த படத்தை பாராட்டி எழுதிருக்காரு. பிறகு என்னோடு இந்த படத்தை பார்த்தவர்கள் பலரும் பல நடிகர்களுக்கு தீவிர விசிறிகளே.

இந்த கூத்தில் தயாநிதி அழகிரியும் விஜய்யும் ஏதோ சண்டை போட்டு கொள்வது போல் ...அட்டை படம். ......

முக்கியமாக .....ஒரு விஷயம் கிண்டலடிக்கப்பட கூடாது என்றால் ....... கிண்டலடிக்க கூடிய விஷயங்கள் ஏதும் அதில் இருக்க கூடாது.

இதில் வேறுச் சில டைரக்டர்கள் கோவப்பட்டு இருக்காங்க ....... கதை மேல் நம்பிக்கை இல்லாமல் மசாலா ஐட்டங்களின் மேல் நம்பிக்கை வைப்பவர்கள் தானே அவர்கள் ........

ஒரு பத்திரிக்கையின் கவர் ஸ்டோரி ...என்றால் பல்வேறு விஷயங்களை முன் வைத்து, அதனை கொண்டு ஆராய்ந்து, அதன் முலம் ஆசிரியர் ஒரு கருத்தை சொல்ல வேண்டும். ஆனால் பலரின் கருத்தை ஒரு தொகுப்பாக போடுவதெல்லாம் கவர் ஸ்டோரி ஆகிவிடாது.

விகடனிடம் இருந்து நான் இந்த மாதிரியான கவர் ஸ்டோரியை நான் எதிர்ப்பார்க்கவில்லை.

Related Posts with Thumbnails