தீபாவளிக்கு சில நாட்கள் முன் திருச்சி காற்றை சுவாசிக்க இரவு EGMORE ல ரயிலுக்கு காத்து கொண்டு இருந்தேன். செமையான கூட்டம். அழகான பெண்கள் இருந்தபடியால் மார்கழி மாதமாக இருக்குமா என்று கொஞ்சம் சந்தேகம் மனசுக்குள் வந்ததென்னமோ உண்மை தான்.
(-)
இருக்கையில் அமர்ந்து இருந்தேன். பையில் இருந்து KARL MAX எழுதிய DAS KAPITAL படிக்க எடுத்தேன். TTR வருகிறாரா என்று பார்க்க தலை நிமிர்ந்தேன். அதிர்ஷ்டம் ஒரு முறை தான் கதவை தட்டும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். அந்த சமயத்தில் ஏதோ ஒரு சத்தம் என் காதில் கேட்டது.
(-)
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் சில பெண்கள் "இது தானா!!??? இது தானா!!??" என்று ஒரு ரொமான்டிக் பாட்டு பாடி முடித்து இருந்தார்கள். அந்த பெர்த்யில் என்னை தவிர எல்லோரும் பெண்கள்.
(-)
கையில் CHETAN BHAGAT எழுதிய 2 STATES வைத்த படி எதிர் இருக்கையில் ஜன்னல் ஓரம் அமர்ந்து இருந்த பெண்ணை பார்த்தேன். DAS KAPITAL பையில் தூங்கி கொண்டு இருந்தது.
(-)
அவள் ஏதோ நாவல் படித்து கொண்டு இருந்தாள். ரயில் இப்பொழுது EGMORE க்கு விடை தர தயாராகி கொண்டு இருந்தது. இடது கை கொண்டு வலது புருவத்தை சொரிந்து கொண்டே இடது கண்ணை முடி வலது கண்ணால் பார்த்தேன் ; பின்பு வலது கண்ணை முடி இடது கண்ணால் பார்த்தேன். பிறகு இரண்டு கண்களையும் கொண்டு பார்த்தேன். எப்படி பார்த்தாலும் அழகாய் இருந்தாள்.
(-)
அவள் நான் பார்ப்பதை பார்த்து விட்டாள். பிறகு என்ன என்பது போல் முக பாவனை செய்தாள். ஒரு சிலை உயிர் பெற்றது இருந்தது. அவள் கையில் லியோ டால்ஸ்டாய் சிறுகதை தொகுப்பு. அதை பார்த்த உடனே அவளிடம் பேச வேண்டும் என்ற ஆசை தலை தூக்கியது.
"AGATHA CHRISTIE எனக்கும் பிடிக்கும்........" என்றேன் அவள் கையில் இருந்த புத்தகத்தை பார்த்தபடி.
"ஹலோ!!! நல்ல பாருங்க இது லியோ டால்ஸ்டாய் எழுதின புக்கு"
"அப்படியா??"
"ஆமா"
"இல்ல, உங்க முகத்தை பார்த்த அப்படி தெரிஞ்ச்சு"
"எப்புடி தெரிஞ்ச்சு"
"ரொம்ப சீரியஸ் ஆ"
"ம்ம்ம்"
(-)
ரயில் கிளம்ப ஐந்து நிமிடங்கள் இருந்த பொழுது நாங்கள் நல்ல பேச ஆரமித்து இருந்தோம். அவள் தனியாக வந்து இருக்கிறாள் என்னை மாதிரி.
"காபி சாப்பிடலாமா"
"டைம் ஆகிருச்சு"
"அதனால என்ன"
"TRAIN ஸ்டார்ட் ஆச்சுன்னா"
"எல்லாம் நான் பார்த்துக்குறேன்"
"இல்லை வேண்டாமே"
(-)
ரயில் திநகர் தண்டி போய் கொண்டு இருந்தது. கையில் காலியான காபி கப்களுடன் நானும் அவளும் கதவின் அருகே நின்று பேசி கொண்டு இருந்தோம். பெர்த்க்கு வந்த பிறகு ஏசி குளிரை விட அவளின் பேச்சு ரொம்ப.........
(-)
ரயில் தாம்பரம் தண்டி கொண்டு இருந்தது. TTR வந்தார். அவளுடைய டிக்கெட்யை வாங்கி என் டிக்கெட் உடன் சேர்த்து கூடுதேன். அவளுடைய டிக்கெட்யை முதலில் திருப்பி தந்தார். பிறகு என் டிக்கெட்யை இரண்டாவதாக. அவளிடம் டிக்கெட் திரும்ப தரும் போது அவளுடைய வயது 24 என்று எனக்கு தெரிந்து இருந்தது.
(-)
ரயில் செங்கல்பட்டுயை கடந்து கொஞ்சம் நேரம் ஆகிருக்கும். கதவின் அருகே நின்று கொண்டு இருந்த பொழுது எங்கள் பேச்சு பல விஷயங்கள் கடந்து வந்து இருந்தது.
"தேவி. DO U READ TAMIL BLOGS"
"ya."
"எந்த மாதிரியான பிளாக்ஸ்"
"POPULAR பிளாக்ஸ் அப்பரும் FRIENDS லிங்க் குடுக்கிறது"
"ம்ம்ம். ஒன்னு தெரியுமா"
"என்னது"
"நான் கார்கி......."
"என்னது நீ கார்கியா ???? பொய் சொல்லாத..... நான் கார்கி பிளாக்கில் அவருடைய போடோஸ் பார்த்து இருக்கிறேன்..."
"அட பாவமே.... நான் கர்கியோட FRIEND ன்னு சொல்ல வந்தேன்.... அதுகுள்ள ????"
"ஓ அப்படியா"
"ஆமா அப்படி தான்"
"நான் கார்கியோட எல்லா போஸ்ட்யையும் படிப்பேன். ஆமா நீ பிளாக் எழுதுவியா?"
(-)
அவள் எனது ஐ-போன்யை ஆராய்ந்து கொண்டு இருந்தாள். நான் திறந்த கதவின் வழியாக நச்ச்திரங்களை பார்த்தேன். அதை பார்த்த பொழுது எனக்கு சிறுவயதில் பாட்டி சொன்ன குபீர் ராஜாவின் கதை ஓன்று ஞாபகம் வந்தது. ஒரு சமயம் குபீர் வாலிபனாய் இருக்கும் பொழுது அவரது கிராமத்தில் இருந்து இரவில் சில திருடர்கள் தப்பித்து குதுரையில் சென்று கொண்டு இருந்தனர். குபீரும் அவர்களை தனது குதுரையில் துரத்தி கொண்டு இருக்கும் பொழுது ;அவரின் குதுரையின் வேகத்திலே மற்றொரு குதுரையை செலுத்திய படி இன்னொருவன் வந்து கொண்டு இருந்தான். இதை பார்த்த குபீருக்கு ஆச்சிரியம் தங்க முடியவில்லை. படளிபுரத்தில் அவனை போல் குதுரையை செலுத்த யாரும் இல்லை. அந்த அளவுக்கு பெயர் பெற்று இருந்தான். தன் வேகத்திற்கு இணையாக வருவது யாராக இருக்கும் என்ற கேள்விகளோடு திருடர்களை தொரத்தி கொண்டு இருந்தான். திருடர்களை நெருங்கிய சமயம் ; தன்னோடு போட்டியாக வந்தவனின் முக்காடு ஓர் மரத்தின் கிளையில் மாட்டி முகம் வெளிப்பட்டதை கவனித்தான். ஆச்சிரியம் தாங்க முடியவில்லை அவனால். போட்டி குதுரை மேல் வந்தது ஓர் பெண். அந்த வேகத்திலும் அவளின் முகம் பௌர்ணமி நிலவாய் அவனுக்கு காட்சி தந்தது.
அதே மாதிரி தான் இருந்தது எனக்கு அப்பொழுது. அங்கு வெவ்வேறு குதுரை : இங்கு நாங்கள் இருவரும் ஒரே ரயில் பெட்டியில்....
தொடரும்.......