Sunday, October 17, 2010
நினைவுகள் ஒரு தொடர்கதை
Sunday, October 10, 2010
கனவொன்றில் உறைந்த அபலை - அய்யப்பமாதவன்
பிரபஞ்சமே நிர்மூலமானதாக
முதன்முதலாக முத்தமிட்டவளை உருவாக்கிக்கொள்கிறான்
கற்றோ படிரென சன்னலை அறைந்துமூடுகிறது
விழித்துக்கொண்டவளின் முழுக்காதலுடன்
வீர்யமிக்க காமத்தை
களையும் உடல் வழியே துய்க்கிறான்
கெட்ட சொப்பனத்தின் இடையூறில்
மங்கி மறையும் நிர்வாணம்
சபிக்கப்பட்ட நகரத்தில்
பித்தம் முற்றிய நிலையில்
ஒழுங்கற்ற வறண்ட பாழ் மனதுடன்
அபலை போன்ற தோற்றத்தில் நிற்கிறான்
வீசுகின்ற காற்றில் காதோரம் அசையும் முடிகளில்
அவள் விரல்கள் கோதிய ஞாபத்தில்
ஏதோ ஒரு நிழல் தொடர பயந்து
சாய்ந்து படுத்தான் சிதைவுற்ற கட்டிலில்
கேலிச் சிரிப்புகள் பெருகும் வெளியினை மூட
தனிமைக்குள் புகுந்து சென்றான்
வெளியில் அலறும் காற்றில் துர்தேவதைகள்
தாழிட்ட கதவை உடைக்கின்ற வேளை
பெண்களுள்ள பிரதேசங்களை தேடும் கனவொன்றில்
உறைந்துபோனான்
எழுதியவர் - அய்யப்பமாதவன்
புத்தகம் - நிசி அகவல்
பதிப்பகம் - ஆழி
விலை - ரூ. 60
நன்றி - கார்த்திகை பாண்டியன்
Sunday, October 3, 2010
தேவனின் ஸ்ரீமான் சுதர்சனம்
எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர் தேவன். இத்தனைக்கும் அவரது நாவல்களை நான் அதிகம் படித்ததில்லை. அவரோட விச்சுவுக்கு கடிதங்கள், ரங்கூன் பெரியப்பா , போக்கிரி மாமா, பார்வதியின் சங்கல்பம் , சீனு பயல் போன்ற கட்டுரை + சிறுகதை தொகுப்பை தான் படித்திருக்கேன். so ஸ்ரீமான் சுதர்சனம் தான் நான் படித்த தேவனுடைய முதல் நாவல்.
படிக்க ஆரம்பிக்கும் பொழுது கொஞ்சம் பயமாக தான் இருந்துச்சு, ஏதோ சிறுகதை ல அடிச்சு எழுதிட்டாரு, அதையையே நாவலையும் கையாண்டு இருப்பாரான்னு.
தேவன் அவர்கள், தனிமனித உணர்வு போராட்டம் ன்னெல்லாம் போகாமல் : ரொம்ப சாதாரணமாய் , ஒரு சாமானிய மனிதனின் பார்வையில் சொல்லிருக்காரு. பிறகு இன்னொரு விஷயத்தையும் சொல்லியே ஆக வேண்டும், என்னதான் கதை 1930 களில் நடப்பது போல் இருந்தாலும், அந்த காலத்தை ஆவண படுத்த முயற்சிக்காமல் நம்மை கதையின் நாயகனான சுதர்சனதுடன் பயணிக்க வைக்கிறார் தேவன், இது சுதர்சனம் ஸ்ரீமான் சுதர்சனம் ஆகும் வரைக்கும் ...முதலில் இருந்து கடைசி வரைக்கும் கொஞ்சம் கூட விலகாமல் : சுவாரசியம் அப்படியே இருக்கிறது.
சுதர்சனம் ரொம்ப பாவமுங்க. வீட்டுலையும் சரி, ஆபீஸ்லையும் சரி இரண்டு பக்கமும் அவனுக்கு பயங்கர இடி கிடைக்குது. அவனுடைய மனைவி கோமளத்தை சந்தோஷ படுத்த வசதிக்கு மீறிய வீட்டிற்கு ஜாகை மாறுகிறான், அதற்க்கு தேவையான பணத்தை : அக்கவுண்டண்ட் கங்காதர பிள்ளை அசந்த நேரத்தில் திருடி விடுகிறான். புது வீடிற்கு போன கோமளம் கொஞ்ச குஷியாகி தனது வீடிற்கு லெட்டர் போட்டு விடுகிறாள். பிறகு அவளுடைய அப்பா அம்மா வருகிறாங்க : ஆஸ்பத்திரி செலவுகள். இதை கேள்வி படும் சுதர்சனத்தின் அம்மா கோவத்துடன் சுதர்சனத்தின் தங்கையை பிரசவம் பார்க்க அழைத்து வந்து விடுகிறாள்.... இதனால் ஏற்படும் செலவுகளை சமாளிக்க சம்பள உயர்வு கிடைக்காத காரணத்தால் மீண்டும் மீண்டும் ஆபீஸ் பணத்தை திருடுகிறான் அதுவும் சிறு சிறு தொகைகளாக, ஏனென்றால் அவனுக்கும் மனசாட்சி இருக்கிறதல்லவா . ஒவ்வொரு முறையும் எப்படியோ தப்பி விடுகிறான்.
இதனிடைய அவனது முதலாளி பரமேசுவர முதலியாரின் நல்ல உள்ளதை கண்டு வருந்துகிறான். ஆனால் என்ன செய்ய வருஷ ஆடிட்டிங் செய்வதற்கு ஆடிட்டரின் இரண்டு உதவியாளர்கள் வறாங்க..... ஆடிட்டிங் நேரத்துல நடக்கும் பெரிய பண கொள்ளை ..அதனால் ஒரு விபத்து.. பிறகு என்ன என்பது தான் கதை.
இதில் ஆபீஸ் அரசியல், வேலை செய்பவர்களிடைய இருக்கும் விரோத மன போக்கு...... சத்யமாக தேவன் அவர்கள் தனது சொந்த அனுபவத்தில் இருந்து எழுதி உள்ளாரோன்னு எண்ண தோன்றும்.
என்னதான் கங்காதர பிள்ளையை ஆரம்பம் முதல் ஒரு வில்லன் மாதிரி காட்டி இருந்தாலும், கடைசில் அவர் பரமேசுவர முதலியாரிடம் சுதர்சனதிற்காக பேசும் பொழுது அவருடைய நல்ல மனசு தெரியுது. பிறகு பரமேசுவர முதலியார் - இந்த கதையிலையே மிகவும் அருமையான பாத்திர படைப்பு.
இதை நான் ஆபீஸ் போகும் பொழுதும் திரும்ப வரும் பொழுதிலும் எலெக்ட்ரிக் ரயிலில் தான் படித்தேன். FIRST CLASS வகுப்பு என்பதினால் ; 50 வயதை கடந்தவர்கள் கொஞ்சம் நிறைய இருப்பார்கள். ஒவ்வொரு முறையும் இந்த புஸ்தக அட்டையை பார்த்துட்டு , என்கிட்டே பேசுவாங்க. நிறைய சுவாரசியமான தகவல்கள் எல்லாம் சொல்லுவாங்க. அதையெல்லாம் கேட்டு கேட்டே ரொம்ப ஆர்வமாக படிச்சு முடிச்சேன் .
அதுவும் அந்த காலத்துல இந்த கதை மவுண்ட் ரோடு, வடபழனி முருகன் கோவில் என்று சுற்றி வந்ததால் அப்பொழுதைய சென்னை மக்கள்ஸ் கொஞ்சம் குஷியாக படிப்பார்கள்ன்னு ஒருத்தர் சொன்னாரு.
= = = = =
அங்கங்கே முருகன் பக்தி பாடல்கள் கொஞ்சம் வருது ...தேவன் அவர்களுக்கு பக்தி ரொம்ப ஜாஸ்தின்னு தெரிஞ்சுக்க முடிது.
அதே போல் .... சுதர்சனம் குடி போகும் அந்த ஏரியாவாக தேவன் எதை சொல்லி இருப்பாருன்னு நாவலை படிச்சு முடிக்குர வரைக்கும் யோசிச்சுகிட்டே இருந்தேன் .
இந்த நாவலை வெளியிட்டு இருப்பது கிழக்கு பதிப்பகம். விலை நூறு ரூபாய்
கடைசியா முடிக்குறதுக்கு முன்னாடி ஒரு விஷயம் - நகைச்சுவை கதைகள்ன்னாலே அதற்க்கு வயசு ரொம்ப கம்மி தான். ஏன்ன அன்னைக்கு நகைச்சுவைன்னு இருந்த எழுத்தக்கள் இன்னைக்கும் நகைச்சுவையாக பார்க்க படுமான்னு தெரியாது. நான் இதை படிக்கும் பொழுது விழுந்து விழுந்து சிரிக்க விட்டாலும் ; I ENJOYED READING .
இந்த நாவல் வாரயிறுதி நாட்களில் படிக்க ஏற்றது ....
= = = = =
டிஸ்கி - நாவலை படிச்ச பிறகு ; ஒரு தொழிற்சாலையில் சாதாரண ஊழியரான எங்க அப்பா எப்புடி நாங்க கேட்டதை எல்லாம் வாங்கி தந்து , எப்புடி ஒரு பணகார தன்மையான சந்தோஷங்களுடன் எங்களை வளர்த்தார்ன்னு ஆச்சரியமா இருக்கு. EAST OR WEST : MY DAD IS BEST . MA DAD ALWAYS ROCK ....
Monday, September 27, 2010
அப்பாவின் மீசை
இருந்தே அப்பா மீசையோடு தான்
சிறு வயதில் வேறயாருடைய மீசையும்
அப்பாவின் மீசை போல் இருந்ததில்லை ...
நீங்கள் என் அப்பாவை பார்த்ததில்லை
அதனால் அவரது மீசையையும்
நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்...
கம்பீரத்தின் அடையாளமாய்
மேல் உதட்டின் மேல
சுவாசத்தின் காவலர்களாய்
இடது பக்கமும் வலது பக்கமும்
சம சீராய் வளர்ந்துவிட்ட முடிகள்
கருப்பு வண்ணம் கொண்ட முடிகள்
உணர்சிகளை அப்பா வெளிகாட்டும்
பொழுது : அதன் வண்ணங்களும் மாறும்
கோபத்தின் பொழுது சிகப்பாய்
சிரிப்பின் பொழுது நீலமாய்
அந்த கருப்பு மீசையின் வெளிபாடுகள்
ஆச்சரியம் ஒன்றே எனக்கு
முடிகளுக்கு வாசனை இல்லை என்று
நான் படித்த அறிவியல் சொன்னாலும்
அது அப்பாவின் மீசைக்கில்லை என்று
தொழிற்சாலையில் இருந்து வந்த அப்பாவை
ஓடி சென்று அணைத்த பொழுது
வேர்வை வாசத்துடன் மீசையின் வாசத்தையும் உணர்ந்தேன்
சலூனில் அப்பாவின் மீசைக்கு அருகே கத்தி கத்திரி வரும்
பொழுதெல்லாம் கடவுளை ஆயிரம் முறையாவது
வேண்டிருந்திருப்பேன் : அப்பொழுதெல்லாம்
கடவுள் நல்லவராய் தான் இருந்தார்
எல்லா பிள்ளைகளை போல தான்
எனக்கும் அறிவியலின் புரியாத புதிர்களில்
ஒன்றாக இருந்தது அப்பாவின் மீசை.
ஒரு சமயம் தாத்தா இறந்த
செய்தி கேட்டு அப்பா அழுதார்
மீசையும் அழுதது.
அப்பா அழுவாரா ???
அப்பா அழுதுவிட்டார் என்ற அதிர்ச்சியே
அவரது மீசை மீதான பிம்பம் உடைந்து விடுமோ
பயத்தில் ஓடிவிட்டேன்.
ஊர் போய் சேரும் வரை
அப்பாவை நேர் கொண்டு பார்க்கவில்லை
அப்பாவின் மீசை தரும் தைரியத்தை
கொஞ்ச நேரம் அம்மாவின் முந்தானை
ஊர் மக்கள் ; சொந்தம் ; குடும்ப நண்பர்கள்
என்று நிறைய ஆண்கள் இருந்தார்கள் அங்கு
வித விதமான மீசைகளோடு
எந்த மீசையும் அப்பாவின் மீசையை
போல் அழகு இல்லை ...
சிறுவர்களான எங்களை
இருட்டு அறையில் தூங்க வைக்க பட்டோம்
இரவில் தீடிரென்று வந்த சூரிய வெளிச்சம் போல்
கதவை திறந்து கொண்டு வந்த பெரியம்மா
எங்களை எழுப்பி கையோடு அழைத்து சென்றார்.
ஏன் எதற்கு எங்கே என்று கேட்பதற்குள்
மூன்று அறைகள் தள்ளி இருந்த அறைக்குள்
கொண்டு செல்ல பட்டோம் .
அங்கே தாத்தாவின் தலையை பிடித்த மாதிரி
அப்பா நின்று இருந்தார் : கொஞ்சம் வித்த்யாசமாக
தெரிந்தார்.
ஐந்து நிமிடங்கள் புரியாத புதிருக்கு
காணாமல் போன மீசை பதிலாய்
கூட்டத்தில் எல்லோருக்கும் மீசை இருந்தது
அப்பாவுக்கு இல்லை : இருந்தாலும் அழகு இருந்தது
அது நான் ரசித்த அழகில்லை.
புரியாமல் பக்கத்தில் நின்ற
பெரியம்மாவை கேட்ட பொழுது
"தாத்தா உங்க அப்பாவோட மீசையையும் சேர்த்து சாமிகிட்ட கொண்டு போயிட்டாரு"
புரியாமல் தாத்தாவை வெறுத்தேன்.
Sunday, September 19, 2010
கலவை - எண்ணங்கள்
முயல் ஆமை கதையில் நாம் என்றாவது ஜெயித்த ஆமையின் வெற்றியின் பாத சுவடுகளை பற்றி கவலை பட்டு இருக்கிறோமா ?? ?
இங்கே ரசிப்பு தன்மை என்பது பந்தய குதுரையின் மேல் பணம் கட்டுவது போலாகிவிட்டது.
மனுஷன் உயிருடன் இருக்கும் பொழுதெல்லாம் யாரும் கவனிப்பதில்லை. மக்களுக்கு இல்லாத ஒன்றின் மேல் தான் அதிகமான விருப்பும் இருக்கிறது. புதிய ஒன்றை ஒருவன் விரும்பும் பொழுது, அவன் ஏற்கனவே விரும்பி கொண்டிருந்த பொருளின் மீதான விரும்பம் காரணமே இல்லாமல் குறைகிறது : நிலையான விருப்பம் இல்லாத மனிதனுக்கு என்றுமே அமைதி இல்லை.
ரசிப்பு ஒப்பீடுகள் தான் தமிழ் சினிமாவின் மிக பெரிய எதிரி. ஆனால் ஒரு விஷயத்தை ஏற்று கொள்ள தான் வேண்டும் : ரசிபதற்க்கு என்று சினிமாவில் அதிகமில்லை.
இதை ஏன் சொல்கிறேனென்று எனக்கு தெரியவில்லை.
நடிகர் முரளியை எனக்கு ரொம்ப பிடிக்கும் : என்ன காரணம் என்று தெரியாது.
அவர் இறந்த செய்தி கேட்டன்று , அவர் நடித்த இதயம் படத்தை மீண்டும் ஒரு முறை பார்த்தேன்.
= = = = =
கொஞ்ச நாளை எனக்கு எழுத்தாளர் தேவன் மீதான பித்து அதிகமாகி கொண்டே போகிறது. எழுத்தில் அப்படி ஒரு சுவாரசியம். மை ஊற்றி எழுதினாரா இல்லை மயக்க போடி போட்டேளுதினாரென்று தெரியவில்லை : நேரம் காலம் போவதே தெரியவில்லை. ஸ்ரீமான் சுதர்சனம் படித்தேன், பிறகு அவரெழுதிய சிற்பல கட்டுரை மற்றும் சிறுகதை தொகுப்புகளை படித்தேன். எழுத்துக்களோடு வாசகனை வாழ வைக்கும் சிறந்தவர்களில் அவருமொருவரென்று சில நாட்கள் முன்னர் தானுணர்ந்து கொண்டேன். தற்பொழுது துப்பறியும் சாம்புவின் சேட்டைகளை ரசித்துக்கொண்டிருக்கிறேன் .
= = = = =
நான் பொதுவாய் "தொல்லை" காட்சியை அதிகம் பார்பதில்லை. அதனாலே பல நல்ல நிகழ்ச்சிகளை தவற விட்டிருக்கிறேன், அதில் நாளைய இயக்குனரும் ஓன்று. அதிலும் நலனின் குறும்படங்களிருக்கும் குறும்பு தனத்தை மிகவும் ரசித்தேன், அவைகளை யூடுபில் ( YOUTUBE ) பார்த்தபொழுது. நிச்சயம் நலன் சினிமா துறையில் பெரிய ஆளாய் வருவாரென்று நம்புகிறேன்.
= = = = =
வெற்றி - இந்த எண்ணம் ஒருவனின் மனதிற்குள் வரும் பொழுதே, மற்றொருவன் தோல்வி அடைந்தால் தான் ஒருவன் வெற்றி பெற முடியும் என்ற எண்ணம் வருகிறது, மக்கள் வெற்றியின் இலக்கணத்தையே மாற்றிவிட்டார்கள். போட்டிகள் நிறைந்த உலகத்தில் யாரும் WIN - WIN STRATEGY கையாள்வதில்லை.
என்னை கேட்டால் வெற்றி அடைவதற்கும் சிறப்பாக செயல் படுவதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர வேண்டும்.
= = = = =
ஏற்கனவே நானெழுதிய "தேவதையின் கை" யின் பாதிப்பிலிருந்தே நானின்னும் வெளிவரவில்லை. அதற்குள் அடுத்த காதல் கதைக்கான கரு உதயமாகி விட்டது. "கம்ப்யூட்டர் கிளாஸ்" இது தான் கதையின் தலைப்பு. நான் இளநிலை கல்லூரி வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு ஒரு வருடம் வெட்டியாகயிருந்தேன், அப்பொழுது நடந்த ஒரு சம்பவத்தை வைத்து எழுத போகிறேன். சுவையாக இருக்குமென்று நம்புகிறேன். அதிலொரு வசனம் இப்படி வருகிறது "IS CAMERA CELL PHONE THERE ?? SAY TRUE OR FALSE ...." (இனிமேல் கடவுளே வந்தாலும் தமிழர்களை முடியாது)
= = = = =
கொஞ்ச நாள் முன்பு நான் 1960 யில் வெளிவந்த "PEEPING TOM " என்றொரு படத்தை பார்த்தேன். மனநிலை சார்ந்த திகில் படம் அது. அந்த படத்தில் இருக்கிற கதையே ஓரிரு வரிகள் தான், அதனால் கதையை சொல்ல விருபவில்லை. ஆனால் பயத்தோடு ஒவ்வொரு பெண்ணையும் கொலை செய்யும் இடமாக இருக்கட்டும், கடைசியில் கதாநாயகியை கொள்ள மனமில்லாமல் தன்னை தானே மாய்த்து கொள்ளும் இடமாக இருக்கட்டும் ..... அதை நீங்களே பார்த்து கொள்ளுங்களேன்.
= = = = =
THE DARK ROOM என்று ஒரு ஆங்கில நாவலை படித்தேன் - இது தமிழிலும் இருட்டு அறை என்று விகடன் பதிப்பகத்தின் முலம் வெளி வந்திருக்கிறது. அந்த கால குடும்ப தலைவியை பற்றின்ன கதை. ஏக்கம், அதன் முலம் அவள் அடையும் ஏமாற்றம், தலைவனை கவர எடுக்கும் முயற்சிகளில் தோல்வி, தலைவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு, அதனால் அவள் எடுக்கும் முடிவு : அதில் அவள் அடையும் தோல்வி : அதனால் வேறு வழி இல்லாமல் மீண்டும் குடும்ப சிறைக்கே வரும் அந்த குடும்ப தலைவியின் மன போராட்டங்களை ரொம்ப வர்ணனை இல்லாமல் காட்சிகளின் மூலமாகவே சொல்லிருக்கிறார் RK நாராயண்.
இதே போன்ற மனநிலையில் இருக்கின்ற ஒரு தலைவி எடுக்கும் விபரீத முடிவை கதையாக வைத்து தான் ALEXANDRA PROJECT படத்தை எடுத்தார்களென்று நண்பன் சொல்ல கேட்டிருக்கிறேன்.
= = = = =
எண்ணியதெல்லாம் எழுதிவிட்டேனாயென்று தெரியவில்லை. நினைவிலிருந்தவற்றை எழுத்துக்களில் கொண்டுவர நேரம் தானில்லை. இன்னும் எழுதிருப்பேன் சுவை குறைந்து விடுமோயென்ற ஐயத்தில் (இப்பொழுது மட்டும் இருக்கா ??) இதோடு நிறுத்தி விடுகிறேன்.
KEEP SMILING
ENJOY LIVING
Tuesday, September 7, 2010
மிட்டாய் வீடு - பார்க்க வேண்டிய குறும்படம்
கல்யாணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்க படுகிறது. ஆனால் அது காதல் திருமணமாக இருந்தால் சொர்க்கமாய் இருக்கிற வீட்டில் நிச்சயிக்க படுகிறது. முதல் முதலில் காதலியை வீட்டில் அறிமுக படுத்தும் பொழுது, அம்மா - காதலி இருவருக்கும் என்ன மாதிரியான மனநிலைமை இருக்குமென்று நல்ல எடுத்து காட்டிருக்கிறார் இயக்குனர் ("காதலில் சொதப்புவது எப்படி" எடுதரே அவரே தான் ..... )
திரு. பாலாஜி மற்றும் அவருடைய டீம் - வாய்ப்புகளே இல்லை ; பாராட்ட வார்த்தைகளில்லை.
பாலாஜியோட குறும்படங்கள் மேல எனக்கொரு சொல்ல முடியாத பிரியம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன் - பொதுவாய் ரொம்ப பார்த்து பார்த்து தான் யூடுபில் சில பல சேனல்களை follow செய்வேன் - ஆனால் கொஞ்சம் கூட யோசிக்காமல் இந்த குறும்படத்தை பார்த்த உடனே subscribe பண்ணிட்டேன்.
இயக்குனர் கொஞ்சம் குறும்புகாரர் போலிருக்கு - அது அங்கொன்றும் இங்கொன்றுமாய் காட்சிகளில் தெரிகிறது, குறிப்பாய் "இதோட போதுமே" என்று பையன் அப்பாவை பார்த்து சொல்லும் பொழுது. அதென்ன காட்சி ??? குறும்படத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
குறும்படம் ஆரம்பித்ததில் இருந்து எட்டாவது நிமிஷம் வரைக்கும் இதொரு நகைச்சுவை பட பதிவென்றே நினைத்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தேன்..... ஆனால் அதன் பிறகு தான் நிகழ்ச்சியான வசன அமைப்புகளிலும் காட்சி அமைப்புகளிலும் இயக்குனர் நம்மை பெரிதும் கவர்கிறார்.
அதிலும் அந்த காதலியின் பார்வையிலிருந்து கதை சொல்லப்படும் நிமிஷம் - நன்றாக சிரித்துவிட்டேன்.
என்னை சிரிக்க வைத்த மற்றொரு காட்சி - ஆரம்ப காட்சி தான் ( இயக்குனருடைய குறும்பின் உச்சமென்றே சொல்லலாம்).
இந்த குறும்படம் உணர்த்தும் மற்றொரு விஷயம் - நிதர்சன வாழ்வில் நாம் நம்முடைய மூளை வேலை செய்யும் முன்னரே, நம்முடைய உணர்வுகளை வெளிகாட்டி விடுகிறோம், அது மற்றவர்களை காயபடுதும் என்று அறியாமல். சுயநல கோவங்களுக்கு என்றுமே மதிப்பில்லை .
இந்த குறும்படத்தை பற்றி இன்னும் சொல்ல நிறைய தோன்றுகிறது, ஆனால் நேரமில்லாததால் இதோடு முடித்து கொள்கிறேன். என்னால் ஒன்றை மட்டும் நிச்சயமாக சொல்ல முடியும் - இது உங்களுக்கொரு நல்ல ரசிப்பனுபவத்தை தருமென்பதை.
Tuesday, August 24, 2010
நான் மகான் அல்ல - சூப்பர் திரைக்கதை

கார்த்தி ஒரு பக்கம் இருக்கட்டும், அந்த நாலு பேர், யப்பா செம நடிப்புடா சாமி. எங்க இருந்து அவங்களை டைரக்டர் பிடிச்சாரோ தெரியல. அதுவும் பிணத்தின் தலையை வெட்டும் பொழுது அவங்க முகத்துல காட்டுற REACTION எல்லாம் செம. ஆனா டைரக்டர் அவங்களை கொண்டு நம்பள இன்னும் மிரட்டி இருக்கலாம்.
நம்ம யுவன் தான் மியூசிக். பாட்டெல்லாம் நல்ல தான் இருக்கு. ஆனா வழக்கமா இந்த THRILLER படங்கள் ....பேய் படங்கள் ன்னாலே ஒரு மியூசிக் வைச்சு இருப்பாங்க ல , அதை ஏன் யுவன் சார் முதல் சீன் ல பயன்படுத்தி இருக்கார்ன்னு தெரியல. பாட்டுன்னு பார்த்த எனக்கு இந்த கார்த்தி-காஜல் அடிக்கடி செல்போன் ல பேசிக்குற பாட்டு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சு இருக்கு. மத்த பாட்டு எல்லாம் என்னை அவ்வளவாக கவரல.
ஒளிப்பதிவு மதி ...... செம சேட்டைய காட்டி இருக்காரு. எப்புடி தான் சில சீன்களை எடுத்தாரோன்னு தெரியல, அம்புட்டு அழகு.
= = = = =
டிஸ்கி - படம் முடிஞ்சு வெளிய வந்து பார்த்த .... மழை ல பைக் ல மாட்டி இருந்த ஹெல்மெட் FULL ஆ ஈரம் ஆகிருச்சு. சரின்னு ஹெல்மெட் மாட்டமா பைக் ஓட்டிகிட்டு போனேன். கொஞ்ச தூரம் போன பொழுது, ஒரு போலீஸ் மாமா கிட்ட திட்டு வாங்கின பிறகு, வேற வழிய இல்லமா ....அவ்வளவு ஈரமான (உள் பக்கம்) ஹெல்மெட்யை மாட்டிகிட்டு பெருங்களத்தூர் பக்கம் கிளம்பினேன். உலக சினிமாவை பார்க்கும் பொழுது கூட இந்த அனுபவம் ஏற்படல. கட்டாயம் எனக்கு இந்த படம் ஒரு வித்த்யசமான அனுபவத்தை தந்தது. வாழ்க்கை ல மறக்கவே முடியாது.
Wednesday, August 18, 2010
கலவை - சரக்கு ஸ்பெஷல் (ஊறுகாய் இல்லை)
நம்ம கலைஞர் ஐயாயோட கருணை மனசை நினைச்சாலே அப்படியே முடி எல்லாம் நேட்டுகிட்டு நிக்குது. டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வாம். கொஞ்ச நாள் முன்னாடி பெருங்களத்தூர் முத ரயில் கேட் கிட்ட ஒரு சொந்தகாரருகாக காத்துகிட்டு இருந்தேன்.அந்த பக்கம் இருந்த டாஸ்மாக் கடைய அப்ப தான் திறந்தாங்க. எங்க இருந்து தான் மக்கள் வருவாங்களோ தெரியல. மசால் வடையை மோப்பம் பிடிச்ச எலி மாதிரி ஒரு கூட்டம் ஓடி வந்தாங்க. சரி நானும் ஏதோ சாக்கடை சுத்தம் செய்றவங்க போல இருக்கு, அதான் காலையில சரக்கு அடிக்குரங்கன்னு நினைச்சேன். ஆனா அவங்க எல்லாம் அந்த கடையோட ROYAL CUSTOMERS ன்னு பக்கத்து கடையில ஒரு ஆளுக்கு மிச்சர் பாக்கெட் இரண்டு ரூபாய் டிஸ்கவுண்ட் கிடைக்கும் பொழுது தான் தெரிஞ்சுது. இது இப்படி இருக்க ...
ஒரு வாட்டி பக்கத்து வீடுகாரங்களுக்காக புது பெருங்களத்தூர் ரேஷன் கடைக்கு போனேன். அங்க நான் சக்கரைக்கான விலைக்காக மொத்தமா ஒரு நூறு ரூபாய் தந்தேன். கொஞ்சம் நேரம் பில் அமௌன்ட்யை எல்லாம் எழுதின பிறகு, அந்த ஆபீசர் "சார் எதாச்சு வாங்கிகோங்க..சோப்பு தரட்டுமா"ன்னு சொல்லிகிட்டே இரண்டு துணி துவைக்குற சோப் எடுத்து வைச்சு, அதையும் பில்ல சேர்க்க போனாரு. பிறகு கொஞ்சம் அதட்டி, தாஜா பண்ணி கேட்டதில், ஒவ்வொரு மாசத்துக்கும் இவ்வளவு மளிகை பொருள்களை வித்தாக வேண்டுமாம். டார்கெட்.
அதனால பொதுவாய் ரேஷன் கடைல இருக்கிறவங்க என்ன பண்ணுறாங்கன்ன , வர மக்கள்கிட்ட இந்த சோப், சின்ன கடுகு பாக்கெட் இன்னும் பிற சமஜரங்களை எல்லாம் தள்ளி விடுறாங்க. பெரும்பாலும் பெண்கள் தான் இந்த நேரத்துல வருவதல.... ரேஷன் கடைகாரங்களுக்கு வேலை ரொம்ப சுலபமா போய்விடுகிறது. அவங்களுக்கு இதெல்லாம் தேவையே இல்லாட்டியும், வாங்கிட்டு போறாங்க ரேஷன் கடை ல இருக்கிறவங்க இம்சை தாங்க முடியாம. அப்படி போறவங்க ஒன்னும் பெரிய அளவுல வசதி படைச்சவங்க இல்லை. ஒவ்வொரு பத்து ரூபாயும் அவங்களுக்கு முக்கியம். அவங்க கிட்ட போய், கொள்முதல் செய்ஞ்ச குளிக்கிற சோப், துவைக்கிற சோப் யைஎல்லாம் ஏன் தள்ளி விடுறாங்கன்னு தெரியல.
சரி முதல் மேட்டருக்கே வருவோம் ..... வேற எந்த அரசாங்க துறைக்காவது இந்த மாதிரி குறுகிய காலத்தில் சம்பள உயர்வு கிடைச்சு இருக்கான்னு எனக்கு தெரியல. கேட்ட விற்பனை கிர்பனைன்னு ஏதேதோ சொல்லுவாங்க.
= = = = =
எந்திரன் பட பாட்டெல்லாம் வந்துருச்சு. சென்னைல எந்த ரேடியோ ஸ்டேஷன் பக்கம் திருப்பினாலும் இந்த எந்திரன் பாட்டு இம்சை தாங்க முடியல. இது பத்தாதுன்னு இந்த RJ க்கள் அதுக்கு சொம்பு அடிக்குறது சத்யமா தாங்க முடியல. இன்னொரு விஷயம் எந்திரன் பட பாட்டு எல்லாம் எனக்கு இன்னும் புரியல / பிடிக்கல. ஒரு வேளை படத்தோடு சேர்த்து பார்த்தால் பிடிக்குமோ என்னவோ. அதுவும் பட ட்ரைலர் ல ஒரு இடத்துல ஐஸ் "i am yours " ன்னு சொல்லு போது..அப்படியே அம்முது. கட்டாயம் முத நாள் முத ஷோ பார்க்கணும்.
= = = = =
புது வேலைல சேர்ந்தாச்சு. என்ன ஒன்னு முதல் முதலா வேலை செய்ஞ்ச ஆபீஸ்யை தாண்டி தான் போக வேண்டிருக்கு. பழைய ஆபீஸ்யை பார்க்கும் பொழுதெல்லாம் யாரோ மனசுக்குள்ள "அது ஒரு அழகிய கனகாலம்"ன்னு பாடுறாங்க. வாழ்க்கை எவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு அப்பெல்லாம். ம்ம்ம் ஒன்னும் பண்ண முடியாது. இந்த AUGUST 15 ல இருந்து நானும் ஒரு பொருளாதார அடிமையகுவதுன்னு முடிவெடுத்து இருக்கேன். நமக்குன்னு இல்லாட்டியும் வாழ்க்கைல சிலபல பேரை சந்தோஷ படுத்த வேண்டி இருக்கு ல ....so only this முடிவு.
= = = = =
நேத்து மதியம்... திநகர் பஸ் ஸ்டாண்ட் முன்னமே நின்னுகிட்டு இருந்தேன். ஒரே பசி. சரின்னு சாப்பிடலாம்ன்னு போன, அந்த சமயம்ன்னு பார்த்து கைல 39 ரூபாய் தான் இருந்துச்சு.(நான் எப்பவுமே நூறு ரூபாய்க்கு மேல கைல காசு வைச்சுக்க மாட்டேன்) ATM ல எடுக்கலாம்ன்னு பார்த்த, அதுக்கு அக்கௌன்ட் ல காசு இருக்கனுமாம் (என்ன கொடுமை சார் இது) ... சரி எப்படியாச்சு சமாளிச்சுரலாம்ன்னு பஸ் ஸ்டாண்ட் எதிர்க்க இருக்குற முருகன் இட்லி கடைக்கு போனேன் ....ஒரு இட்லி 6 ரூபாய் அங்க. நாலு இட்லி சாப்பிட்டுட்டு மிச்ச காசை பஸ்க்கு வைச்சுபோம்ன்னு நினைச்சேன். அப்படி உள்ள போரருதுக்கு முன்னாடி பக்கத்துல இருந்த வசந்த் விகார் ல சாப்பாடு 32 ரூபாய்ன்னு போட்டு இருந்துச்சு. இருந்த பசிக்கு சாப்பாடே சாப்பிடலாம்ன்னு உள்ள போயிட்டேன். மூணு மணி ஆகிருச்சு அப்ப, அதனால சிறப்பாக ஒன்னும் இல்லை. முக்கியமா ரசம் மிளகாய் ரசம் போலிருக்கு. செம காரம்.
= = = = =
கொஞ்ச நாள் முன்னாடி மன்மோகன் சிங் சார் .... நக்சல் நாட்டு பாதுகாப்புக்கு இடைஞ்சலாக இருக்காங்க, அதனால விமான படைக்கு அவர்களை சுட உத்தரவு தந்து இருக்காரு.
ம்ம்ம் ... சிலபல நாள் முன்னாடி சென்னை பல்கலைக்கழகம் 150 வது வுஷம் முன்னிட்டு விழா எடுதாங்க ....அப்ப நம்ம டெல்லி ஆடுகள் வருவதற்காக ஏர்போர்ட் பக்கம் இருக்கிற ரோடு யை இரண்டு மணி நேரத்துக்கு BLOCK பண்ணிருந்தாங்க. நிறைய பேர் மாட்டிகிட்டு முளிச்சாங்க. அந்த கூடத்துல இரண்டு ஆம்புலன்ஸ் அடக்கம். இது எல்லாம் நாட்டு பாதுகாப்புக்கு ரொம்ப நல்லது போலிருக்கு, ம்ம்ம்
= = = = =
அம்மாவுக்கு நான் வெயில்ல சுத்தி ரொம்ப கருப்பா இருக்குறது கஷ்டமா இருக்கு போல .... நிறைய BEAUTY டிப்ஸ் தந்து இருக்காங்க. அது வேற இல்லன்னு கடலை மாவு, அந்த மாவு இந்த மாவு ...சீக்காய் தந்து இருக்காங்க. ம்ம்ம் என்னை ரித்திக் ரோஷன்க்கு தம்பி மாதிரி ஆக்குவது தான் அவங்க டார்கெட் போலிருக்கு.
= = = = =
கொஞ்ச நாள் முன்னாடி கார்த்திகை பாண்டியன் அண்ணா எழுதின " தமிழில் பொறியியல் கல்வி -சாத்தியமா? " யை FRIENDSக்கு ஈமெயில் ல அனுப்பி வைச்சேன். உடனே ஒரு ஆடு போன் பண்ணி "மச்சான் இது எல்லாம் படிக்குறவங்க கவலை பட வேண்டியது ...நீ எதுக்கு இதுக்கு எல்லாம் பீல் பண்ணுற..நீ எந்த காலத்துல........" ...இப்படியே பல போன் கால்கள் ..பல பல்புகள் ..சந்தோஷமா போனது.
= = = = =
சரிங்க ...பதிவு ரொம்ப பெருசாகிருச்சு போல இருக்கு. பிறகொரு சமயம் பார்போம்.
KEEP SMILING
ENJOY LIVING
Saturday, August 14, 2010
THE GREAT ESCAPE (1963) - திரைபார்வை
1944 , GERMANY
50 போர் கைதிகளை கொண்ட அந்த லாரி பெர்லின் நகரத்தை விட்டு தள்ளி இருந்த ஓர் வெட்டவெளிக்கு வந்து நின்றது. என்ன ஏதுன்னு தெரியாமல் முழித்த கைதிகளிடம், ஜெர்மன் ராணுவ அதிகாரிகள் "இன்னும் போக வேண்டய தூரம் ஜாஸ்தியா இருக்கு, அதனால கொஞ்சம் கீழ இறங்கி இளைப்பாறிட்டு வாங்க". எந்த ஊர் சிறைல போட போறாங்களோன்னு யோசித்துக் கொண்டே, சோகத்திலும் ஒருவரை ஒருவர் கிண்டலடித்து கொண்டே இறங்கி சிறிது தூரம் நடந்திருப்பார்கள். கொஞ்ச நேரம் கழித்து இரண்டு rapid gun கள் அவர்களை நோக்கி குறி வைத்தன. பத்து நிமிடங்கள் கழித்து 50 சடலங்களை விட்டுவிட்டு லாரிகளும், இராணுவத்தினரும் அந்த இடத்தை விட்டு சென்றனர்.
"This picture is dedicated to the fifty."
= = = = =
இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எழுதப்பட்ட ஒரு நாவலை கொண்டு எடுக்கப்பட்டது. எழுதியவர் சம்பவம் நடந்த Stalag Luft III யில் கைதியாக இருந்தவர் தான். அதனால் தான் என்னவோ இந்த படம் முழுக்க அப்படியொரு பரபரப்பு. நாவலை படமாக்குவதற்கு நிறைய பேர் கேட்டார்கள், ஆனால் எங்கே கதையை கொலை செய்து விடுவார்களோ என்று பயந்து யாருக்கும் தராமல் இருந்தார். அப்பொழுது இரண்டாம் போரின் பொழுது பல செய்தி குறும்படங்களை எடுத்து அனுபவபட்டவரான John Sturges மிகவும் கேட்டதின் பெயரில், அவருக்கு இந்த கதையை படமாக்க அனுமதி தந்தார்.
= = = = =
இந்த படம் எல்லா விதத்திலும் ஸ்பெஷல் தான். உண்மையை அப்படியே பிரதிபலிக்க வேண்டுமென்று சிறை கூடங்களுக்கான செட்களை, Stalag Luft III யில் கைதிகளாக இருந்தவர்களை கொண்டே வடிவமைத்தார்கள். அதே போல் தான் பிற வெளி புற காட்சிகளின் பொழுதும்.
= = = = =
தப்பித்து போகும் கைதிகளை பிடிபதற்கு நிறைய செலவு ஆகுவதால், அவர்கள் தப்பித்து போக முடியாதளவுக்கு ஒரு சிறை வடிவமைத்து : அதில் பிரச்சனை குறிய அணைத்து கைதிகளையும் போடுகிறது ஜெர்மன் ராணுவம். கைதிகள் அனைவரும் சிறு சிறு முயற்சிகள் எடுத்து தோற்று போகிறார்கள்.
அவரும் வருகிறார். ஆனால் அவரை சிறையிலடைக்கும் முன், மீண்டுமொருமுறை அவர் தப்பிக்க முயற்சி செய்தால், சுட படுவர் என்று எச்சரிக்கை செய்கிறார்கள். ஆனால் அவருக்கோ இப்படி சிறையில் சும்மா இருப்பதை விட, போரில் நாட்டுகாக போராட ஆசை.
அன்று இரவே, ரகசிய கூட்டத்தில் யார் யார் என்ன வேலை செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க படுகிறது. அப்படி எடுக்க பட்ட முடிவின் படி, மூன்று சுரங்கபாதை வெட்ட படுகிறது. சிறை அதிகரிகள் ஒன்றை கண்டுபிடித்தால் கூட மற்ற இரண்டில் தப்பிக்க முடியுமே என்ற முன் யோசனையில் தான். அப்படி அவர்கள் வெட்டும் பொழுது, ஒரு பிரச்சனை வருகிறது. குழியில் இருந்து வரும் மண்ணை என்ன செய்வது என்று ???
எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும், ஒரு சுரங்கபாதை சிறை அதிகாரிகளால் கண்டுபிடிக்க படுகிறது. அதனால் மீதி இருக்கும் இரண்டு சுரங்கத்தில் ஒன்றில் மட்டும் கவனத்தை செலுத்துகிறார்கள். அப்படி செலுத்தி அவர்கள் சுரங்கபாதையை வெட்டி அந்த பக்கம் வெளியேறும் போது தான் அவர்களுக்கு தெரிகிறது, திட்டமிட்ட படி அந்த பாதை காட்டின் உள்ள போய் முடியாமல் ....முள்வேலி தடுப்புக்கு பக்கத்திலும் : காட்டுக்கு 20 அடி முன் தள்ளியும் போய் முடிகிறது. சிறை காவலாளிகள் பார்வை.... வானத்தில் குண்டு போடும் விமானங்கள் .... ரொம்ப இக்கட்டான நிலை ...தப்பிதர்களா ???
" கேப்டன் ...."
"புரிது ...நீ என்ன கேட்க போறன்னு ...இந்த வாட்டி அவங்க முகத்துல கரிய புசனும் ..இருபது முப்பது பேர் இல்ல ..ஒரு 250 பேர்"
பிறகு அந்த அமெரிக்கா கைதி பந்தை சுவரில் அடித்து காவலாளிகளின் நடையை கணக்கிடும் முறை நல்ல தானிருக்கு. ஆனால் அது வேற ஏதோ நாவலில் வருகிறது என்று கேள்விபட்டேன்.
இந்தப்படம் உங்களது சிடி / டிவிடி collections யில் இல்லாவிட்டாலும், இந்த உண்மை சம்பவத்தின் புத்தக வடிவை நீங்கள் கட்டாயம் வசித்ததாக வேண்டும்.
Monday, August 9, 2010
THE SEVENTH SEAL (1957) - காலதேவனோடு சதுரங்கம் - திரைபார்வை
பிறகு படத்தை பார்க்கும் முன்பு அந்த காலத்தில் நடந்த புனித போர்களை பற்றியும் : அந்த கால மூடநம்பிக்கைகளை பற்றியும் தெரிந்து வைத்துக் கொண்டால் ...இன்னும் படத்தை பலமாக ரசிக்கலாம்.
படம் ஆரம்பமே .....அப்படிப்பட்ட புனித போரில் இருந்து திரும்புகிற இரண்டு புனித போர் வீரர்கள் கடற்கரையில் படுதிருப்பதிலிருந்து ஆரம்பமாகிறது ....... (சுவீடன் நாட்டு படம் என்பதால் பெயரெல்லாம் வாசிபதற்கே கஷ்டமாயிருக்கு. அதனால் கதாபாத்திரத்தை வைத்து கதையை சொல்கிறேன்....)
களைத்த நண்பனை பார்த்துக் கொண்டே தனது ஊரை பிளேக் (PLAGUE ) நோய் தாக்கி விட்டதை எண்ணி சோகமாய் இருக்கும் கதாநாயகனின் உயிரை எடுக்க காலதேவன் அவன் முன் தோன்றுகிறான். தன்னுடைய மரணத்தை ஒத்தி போட நினைக்கும் நாயகன் காலதேவனை சதுரங்கம் அட கூப்பிடுகிறான்.
அவனை பார்த்து மரண தேவன் "நான் சதுரங்கத்தில் வல்லவன் என்று தெரியுமா" ...
உடனே அதற்க்கு நாயகன் ....."தெரியும் ஓவியங்களில் பார்த்திருக்கிறேன்" என்று சொல்லுகிறேன்.
"அப்படி இருந்து என்னை விளையாட கூபிடுகிறாயே"
"என்னகென்னு சில தந்திரங்கள் வைத்திருக்கிறேன்"
" என்னிடமேவா"
"கதை வேண்டாம் ...நீ ஜெயித்தால் என் உயிரை கொண்டு போ"....
அவனை பார்த்து மர்மமாய் காலதேவன் சிரிக்கிறான். விளையாட ஆரம்பிக்கிறார்கள்.
"அதுவும் நான் தான். பிரச்சனை இல்லை"
= = =
இது தான் படத்துல வர முத சீன். சும்மா ஜிவ்வுன்னு இருக்கும் சின்ன பசங்க இந்த சீன்யை பார்க்குற போது. பிறகு என்னாகும்ன்ன ..... அடுத்த சீன் ல ஹீரோ தோழனோட கிளம்பி போயிட்டு இருப்பான். .....
அப்படி போயிட்டு இருக்கும் போது நம்ம ஹீரோயோட மனநிலைமையை வசனங்கள் முலமா நமக்கு சொல்லுறாங்க. அதாவது நம்ம ஹீரோ புனித போரினால் ரொம்ப குழப்பத்துல இருக்கிறாரு. அதாவது கடவுள்ன்ன யார் ? அவனோட தேவை தான் என்ன ?? இந்த மாதிரி ரொம்ப கேள்விகள் அவனுக்குள்ளே அவன் கேட்டுகிட்டு வருகிறான் (....பதிவில் ஆரம்பத்துல சொன்ன மாதிரி புனித போர் பற்றியும், அந்த கிறிஸ்துவ நம்பிக்கைகள் பற்றியும் கொஞ்சமாச்சு தெரிந்திருந்தால் தான் நமக்கு ஓரளவுக்கு புரிந்துகொள்ள முடியும் ...இல்லாட்டியும் ரசிக்கலாம்.)
அப்படி போற வழில ...ஒரு தேவாலயம் வருது. சரின்னு உள்ள போறாங்க. ஹீரோயுடைய சிஷ்ய புள்ள அங்க இருக்கிற ஒரு ஓவியரோட பேச உட்கர்ந்துவிடுகிறாரு. நம்ம ஹீரோ ஏகப்பட்ட மன உளைச்சல் ஓட பவ மன்னிப்பு கேட்க போறாரு. ...
இதற்க்கிடைய ஒரு நடிகனுடைய உயிரை எடுக்க போகும் காலதேவனுகும் அந்த நடிகனுக்கும் நடக்கும் உரையாடல்..... படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
வழியில் அவனது நண்பனால் காப்பாற்ற பட்ட ஒரு கூத்தாடியை சந்திக்கிறான்.கூத்தாடி குடும்பமும் ஹீரோவும் அவனுடைய சகாவும் நட்பு பாராட்டி கொள்ளுறாங்க.
= = = = =
ஒரு கட்டத்தில் பாதிரி என்று நினைத்துக் கொண்டு காலதேவனிடமே பாவமன்னிப்பு கேட்டு கொண்டிருப்பான் ஹீரோ ..அப்பொரு வசனம் வரும் பாருங்க ....
"நம்முடைய இயலாமை, பயம் எல்லாத்தையும் சேர்த்து அதற்க்கு கடவுள் என்று உருவம் தந்து வழிபட்டு கொண்டிருக்கிறோம்.."
=
"நாம் ரொம்ப கவலை படுறோம்'
"இந்த மாதிரி சமயத்துல தான் இரண்டு பேரா இருக்குறது ரொம்ப உதவியா இருக்கு"
=
"எனக்கு என்னோட கூட்டாளியினால் மனசு வெறுத்து போயிருக்கு"
"யாரு ..உன்னோட சிஷ்யனை சொல்லுறீயா?"
"இல்ல ..நான் என்னை சொன்னேன்"
=
காலதேவன் "அடுத்த முறை நாம் பார்க்கும் பொழுது.... உன்னது வாழ்விலும் உன் நண்பர்கள் வாழ்விலும் அது எனக்கான நேரமாய் இருக்கும்"
"அப்ப நான் உங்களோட ரகசியங்கள் தெரிந்துகொள்ளலாம் ?"
"என்னிடத்தில் ரகசியங்கலோன்றும் இல்லை"
"அப்ப உங்களுக்கு ஒன்றும் தெரியாது.."
"இல்லை. நான் ஒரு தெரிந்த ஒன்றுமில்லாதவன்"
=
நடிகன் காலதேவனிடம் " வெட்கம் ....அவமானம்..... நடிகர்களுக்கு சலுகைகள் இல்லையா..."
"உனக்கு இல்லை"
"குறுக்கு வழி கூடவா"
=
"அவங்க சொல்லுறாங்க உனக்குள்ள சாத்தான் இருக்காமே"
"அதை நீங ஏன் கேட்குற"
"சொந்த விஷயத்துக்காக. நான் அவனை பார்க்கணும்"
"ஏன்"
"கடவுளை பத்தி கேட்க தான். கட்டாயம் அவனுக்கு தெரிஞ்சு இருக்கும்'
"நீ எப்ப்வேன்ன அவனை பார்க்கலாம்"
"எப்புடி?"
"நான் சொல்லுற மாதிரி செய். என்னோட கண்ணை பாரு"
"என்ன பார்க்கிற"
"பயம்..அத தவுர ஒன்னுமில்லா"
"ஒன்னுமில்லையா ....யாருமில்லையா"
"இல்ல. யாருமில்ல"
"அவன் எனக்குள்ள இருக்கிறான். இப்ப கூட உணர்கிறேன்..... என்னை எரிக்க போகும் நெருப்பு கூட என்னை ஒன்னும் செய்யாது..அவன் என்னுள் இருப்பதினால்...."
"சாத்தான் அப்படி சொன்னனா"
"இல்ல ..ஆனா தெரியும் ...."
"அதான் எப்படி"
"தெரியும் தெரியும்... நீ கூட அவனை பார்க்கணும். பாதிரிகளால் பார்க்க முடியுது, வீரர்களால்.... அதனால் தான் அவர்கள் என்னை தொடவில்லை...."
இந்த மாதிரி அங்கங்கே பளிச் பளிச் வசனங்கள்.... பல வசனங்கள் கதாநாயகனுடைய தேடலை சார்ந்தே இருக்கிறது. குறிப்பா பல வசனங்கள் அந்த கால கட்டமைப்பை கேள்வி கேட்கிறது. இன்றளவும் அந்த காலத்தில் நடந்த பல கொடூரங்களை வாடிகன் அமைப்பினர் ஏற்று கொள்ளவே இல்லை. மனிதர்களை கொடுமை படுத்தியதெல்லாம் புனிதம் புனிதம் என்றே சொல்லி கொண்டு வந்து இருக்கிறார்கள். இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக ஒப்பு கொண்டு வருகிறார்கள்.
இந்த படமொரு ஒரு கிளாச்சிக் படம். பல விஷயத்துக்காக இந்த படத்தை கட்டாயம் பார்க்கணும். நான் முதலில் இந்த படத்தை காலதேவன் கேரக்டர்காகவே பார்த்தேன். அது கேரக்டர் இன்றளவும் மிக பிரபலம். பல இங்கிலீஷ் படங்களில் இந்த காலதேவன் உடைகளில் யாரையாச்சு பார்க்கலாம். பிறகு முக்கியமாக வசங்களுக்க்காகவே ஒருமுறை பார்க்கலாம்.
எனக்கு இந்த படத்தில் எல்லாம் புரிந்தது ஒன்றை தவிர ...ஏன் இந்த படத்தை கடைசி காட்சியில் DANCE OF DEATH யை காட்டி முடித்திருக்கிறார்கள்ன்னு. இந்த படத்திற்க்கான திரைப்பார்வை எழுதுமுன் இந்த DANCE OF DEATH ன்ன என்னனு படிச்சு பார்த்தேன். சுத்தமா புரியல ..... ஏறக்குறைய நம்ம திருநீறு அர்த்தத்தை தான் அதுவும் சொல்லுதுன்னு நினைக்கிறேன்.
Friday, August 6, 2010
இதொரு சுய டவுசர் கிழிப்பு
அப்படியே கொஞ்சம் பிளாக்கின் இடது பக்கம் கொஞ்சம் பாருங்க ....தெரியுதா ??? அதுதான் என்னோட பதிவுலக பெயரு. google reader ல படிப்பவர்களுக்காக வேண்டுமானால் சொல்கிறேன் ... "இலக்கிய சுறா" டம்பி மேவீ (வேற யாரு நமக்கெல்லாம் பட்டம் தர போறாங்க ; அதனால நமக்கு நாமே திட்டத்தின் படி ...... ஹி ஹி ஹி )
2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி..
நான் அதை ஒன்னும் சிறப்பா கருதல.
4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
நான் முதல ஒரு முயற்சியும் செய்யல. என்னோட நண்பர் ஒருத்தர் தான் தமிழிஷ்ல என்னுடைய பதிவுகளை சேர்த்து கொண்டிருந்தார். பிறகு ஹேமா, கார்த்திகை பாண்டியன் இரண்டு பெரும் ரொம்ப INSIST பண்ணியதால் தமிழ்மணத்துல சேர்ந்தேன். பிறகு தமிழிஷ்யில் நானே சேர்க்க ஆரம்பித்தேன் ...பிறகு தமிழிஷ் பட்டி பெற்ற பிறகு பெருசா ஏதும் முயற்சிக்கவில்லை. அப்பப்ப டிவிட்டர்ல பகிர்ந்துப்பேன். சாட் ல சில நண்பர்களுக்கு லிங்க் தந்து படிக்க சொல்வேன்.
5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
என்னோட சொந்த வாழ்க்கை ரொம்ப அழுகாச்சியா இருக்கும். அதனால் அப்படி எல்லாம் அவசரப்பட்டு பகிர்ந்துக்க மாட்டேன். அது எல்லாம் சொந்த செலவுல சூனியம் வைச்சுக்கிற மாதிரி தான்.
6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
தெரியலைங்க. எதுக்கு எழுதுறேன்ன்னு தெரியல. தேடல் இல்லாத வாழ்க்கை ல சுகம் இருக்காதுன்னு சொல்லுவாங்க. அப்படிப்பட்ட தேடலில் பதிவு எழுதுவதும் ஓன்று. பொழுது போக்க என்பதையும் தாண்டி நான் நிறைய விஷயங்களை கற்று கொண்டு இருக்கிறேன். சம்பாத்தியம்ன்னு பார்த்தால் நட்புக்கள் தான். காசை விட நான் மனுஷங்களை மிகவும் மதிப்பவன்.
7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
இரண்டு : வலைபதிவுகளில் நான் எழுதுவதற்காக உருவாக்கினேன். அது இரண்டும் தமிழ் பதிவுகளே. முதலில் ஆங்கிலத்தில் DAILY LIFE ங்கிற பெயரில் எழுத ஆரம்பித்தேன், பிறகு அதை தினசரி வாழ்க்கைன்னு மாத்திட்டேன். போன வருஷ கடைசில மேவியின் பகிர்வுகள் ன்னு ஒரு பிளாக் ஆரம்பிச்சேன். அதுல எனக்கு பகிர்ந்துக்க வேண்டும்ன்னு நான் ஆசை படுற விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
சத்யமா கோவம் எல்லாம் வராதுங்க. அதே போல் எப்பொழுதும் நான் யார் மேலையும் பொறமை பட்டதில்லை.
9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
அப்படி யாரும் பாராட்டினதில்லைங்க. என்னோட முதல் பதிவுக்கு (இங்கிலீஷ்) என் அண்ணன் போட்ட பின்னூட்டத்தை வேண்டுமானால் நான் பெற்ற பாராட்டாய் சொல்லலாம். இன்னும் அந்த வரிகள் ஞாபகமிருக்கு ....."wonderfull daa ..keep going ". பிறகு என்னோட பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களையே எனக்கு கிடைத்த பாராட்டுக்களாக கருத்துகிறேன்.
10. கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..
என்னை பற்றி சொல்வதற்கு பெருசா ஒன்றுமில்லைங்க. வாழ்க்கையை அதன் போக்கில் விட்டுவிட்டு ரசிப்பவன். நிறைய படிக்கணும், நிறைய கற்று கொள்ள வேண்டும்ன்னு ஆசை இருக்கு.
Sunday, August 1, 2010
டிவிட்டரும் நானும் - ஒரு கோங்க தனமான பார்வை
என்னங்க எப்புடி இருக்கீங்க ??? சதோஷமா இருக்கீங்களா ???? நான் நலமுங்க.
வழக்கம் போல நான் என்னோட அண்ணனை பார்த்துட்டு தான் டிவிட்டர் ல அக்கௌன்ட் ஸ்டார்ட் பண்ணினேனுங்க. அப்பரும் இந்த பதிவுக்குள்ளர போறதுக்கு முன்னாடி என்னோட ட்விட்டர் ஐடி இது தானுங்க http://twitter.com/mayvee . எதுக்கு சொல்லுறேன்ன எல்லமொரு எச்சரிக்கைக்கு தான். பிறகு அங்க வந்து என்னோட டிவிட்களை படிச்சிட்டு கடுப்ப்ஸ் அப் இந்தியாவாக கூடாதுல அதுக்கு தான். இங்குன்ன இருக்குறது போல அங்கன்னையும் ஒன்னும் உருபடிய எழுதுறது இல்லைங்க. அது சரி நானெல்லாம் எக்ஸாம் பேப்பர் லையே ஒன்னும் பெரிய எழுதினதில்லை :).....
JACK DORSEY _EVAN WILLIAMS _BIZ STONE ...... இந்த மூணு பைய புள்ளைங்க தான் இந்த கும்மி தளத்தை கண்டுபிடிச்சு இருக்காங்க. இதுல என்ன விஷயம்ன்ன ஓசில கிடைக்குதேன்னு டிவிட்டர் கணக்கை ஆரம்பிச்சிருக்கும் பல இலக்கியவாதிகளுக்கு இந்த விஷயம் தெரியாது. ஏன் இந்த பதிவை எழுதுற வரைக்கும் எனக்கு கூட தெரியாதுங்க ; எல்லாம் நம்ம விக்கி பகவன் அருள் தானுங்க. நான் ஓசிக்கு பினாயில் கிடைக்குதுன்னாலே சும்மாவே ஒரு இரண்டு மூணு கிளாஸ் எக்ஸ்ட்ராவாக வாங்கி குடிப்பேன் ...ஹி ஹி ஹி ..... ஓசி ல ஒரு செர்விஸ்... சும்மா விடுவேனே. நானும் ஒரு சுப முகுர்த்த நாளுல ஒரு அக்கௌன்ட்யை ஒபீன் பண்ணிட்டோம். சரி எவ்வளவோ பொட்டிக்கடை, டீக்கடைன்னு அக்கௌன்ட் இருக்கு அதோட இதுவும் இருந்துட்டு போகட்டும் ங்கிற நல்ல எண்ணம் தான், வேற என்ன ???
டிவிட்டர் : பதிவுலகம் போலில்லாமல் ஒரு நேரடி விவாத மேடைன்னு தான் நினைச்சு வந்தேனுங்க டிவிட்டர் குள்ள. ஆனா எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அப்படியெல்லாம் இல்லைங்க. சிற்பல இலக்கியவாதிகள் சாரு, ஜெயமோகன் போன்றவர்களின் டவுசரை கிழிக்குறதில்லையே குறியா இருக்காங்க. அப்படி கிழிச்சு என்னத்தை தான் பார்க்க ஆசை படுறாங்கன்னு தெரியல சாமி. ஒரு வேலை அவங்க அவ்வளவு கவர்ச்சியா இருப்பங்களோ ??? ஜெயமோகனை நேரில் பார்த்ததில்லை ; சாருவையும் எஸ்ரவையும் நேருல பார்த்து இருக்கேன். ஆனாலும் அவங்க கிட்டயும் அவ்வளவு ஒன்னும் டவுசரை கிழிச்சு பார்க்குற அளவுக்கு ஒன்னுமில்லையே ????
இல்லாட்டி எனக்கொரு ஐடியா தோணுது .. கொஞ்சம் மொக்கை தான் என்னை மாதிரியே - அவங்க டவுசர் மாத்துற போதோ இல்லன்னா குளிக்கும் போதோ ...அந்த இலக்கியத்தின் ரகசியத்தை தெரிந்துக் கொள்ளலாம். ஹி ஹி ஹி ஹி. ஆத்துக்கும் தைரியம் இல்லாட்டி அவங்க வீட்டுல இருந்து பழசு பட்டி எதாச்சு வாங்கிட்டு வந்து தனிய ரூம்ல உட்கார்ந்துகிட்டு கிழி கிழின்னு கிழிக்கலாம்.
இன்னொரு ஆசாமி இருக்காரு ...ஸ்க்ரீன் ஷாட் எடுத்த : இலக்கண சொற்சிதிரமாகிட்டு இருக்காரு.
உங்களுக்கு எப்பவாச்சு அதித்ய சேனல் பார்த்து ரொம்ப போர் அடிச்சுதுன்ன ...இங்கன்ன வந்து இலக்கிய காமெடியை கொஞ்சம் ரசிக்கலாம்.
நான் பொதுவா சில டிவிட்டர்களின் டிவிட்டுகாக காத்திருப்பேன் ..அதையும் முக்கியமா அதிஷா, யுவகிருஷ்ணா, வினவு தோழர்கள் (அதாங்க ஐய்யர், ஐயங்கார் ஆளுங்க தப்பு செய்தால் பாப்பான் நாய்ன்னு சொல்லிட்டு, மத்த ஜாதி காரங்க செய்ஞ்ச மேட்டுக்குடி சொல்லுவாங்களே அவங்களே தான் ஹி ஹி ஹி ஹி..... நட்டார் நாய்.... தேவர் நாய் ... ன்னெல்லாம் திட்ட மாட்டாங்க போலிருக்கு) இன்னும் சிலபல டிவிடர்களின் டிவிட்களை ரசித்து படிப்பேனுங்க. அதுல கொஞ்சம் இங்கிலீஷ் ல எழுதுற டிவிடர்களும் அடக்கம்.
இந்த இங்கிலீஷ் ல எழுதுற டிவிட்டர்கள் எழுதுவது எனக்கு அப்பப்ப புரியாதுங்க (ஆமா தமிழ் ல எழுதின மட்டும் உனக்கு புரியமான்னெல்லாம் கேட்க கூடாதுங்க...நான் பாவம்).
சரி இவ்வளவும் சொல்லிட்ட ...நீ அதுல என்ன செய்றன்னு நீங்க கேட்குறது எனக்கும் நல்லாவே கேட்குதுங்க .....
பெருசா ஒன்னும் இல்லைங்க SAME MOKKAI THERE ALSO .... ஆனா இந்த சினிமா நடிகர் நடிகைங்க இருக்கங்களே (நம்ம ஊரு ஆளுங்க யாருமில்லைங்க ...எல்லாம் ஹிந்தி கார பைய புள்ளைங்க தான்) ...... பெரும்பாலும் ஆங்கில டிவிடர்களை போல போன் ல இருந்து டிவிட்டுவாங்க..... எதை எதை டிவிட்டுவதுன்னு ஒரு வகை தொகை இல்லாம .......முடியாதுங்க ....கக்கா போன கூட "am in toilet . feeling hot in anal . tight motion . see " ன்னு சொல்லிட்டு கக்காவை எல்லாம் போட்டோ பிடிச்சு போடுற அளவுக்கு WELL CONNECTED ஆ இருப்பாங்க . ஹி ஹி ஹி ஹி ......
சரி சரி ..ஓவர் குஷில ஓவர் மொக்கையாகிருச்சு போல .... இன்னும் ஒன்னு இரண்டு விஷயத்த சொல்லி கடையை கிளோஸ் பண்ணிக்குறேன்.
காலேஜ் படிக்கும் போது தான் எந்த பிகரையும் கரெக்ட் பண்ண முடியல ...சரி டிவிடர்ல எதாச்சு நடிகைகிட்ட முயற்சி பண்ணலாம்ன்னு நினைச்ச போது தான் DEEPKA PADUKONE யை FOLLOW பண்ண ஆரம்பிச்சேன். சரி அவங்க கர்நாடகான்னு தெரிஞ்ச உடனே எங்க அம்மா கிட்ட இருந்து (ஆமாங்க என்னோட அம்மா மைசூர்காரங்க) ஒன்னு இரண்டு கன்னட வார்த்தை பேச கத்துகிட்டு ...டிவிட்டர் ல தீபிகா வை கரெக்ட் பண்ணலாம் வந்த ....... பேச கத்துகிட்ட கன்னட வார்த்தைகளை எப்புடி டைப் பண்ணறதுன்னு தெரியல ...
மிக சமீபத்துல அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலின் போது கருத்து கணிப்புகளை டிவிட்டர் விவாதங்களை வைச்சு முடிவு பண்ணி இருப்பாங்கன்னு கேள்வி பட்டிருக்கிறேனுங்க.
இதைப்பற்றி வேறு விஷயம் எதாச்சு உங்களுக்கு தெரிந்தால் பின்னூட்டத்துல சொல்லுங்க.
Thursday, July 29, 2010
கலவை - பொதுவாழ்க்கை /பொது கழிப்பிடம்
ஹாய் மக்கள்ஸ் எப்புடிருக்கீங்க .... நல்ல இருக்கீங்க தானே. நமக்கு என்ன எப்பவும் போல ராஜா மாதிரி இருக்கேன். எவ்வளவு நாளைக்கு தான் வார்த்தைகளால் ஹாய் சொல்லிக்கிட்டு இருப்பதுன்னு : இந்த பதிவுல முதன் முறையாக, வேறு யாரும் சொல்லாத முறையில் ஹாய் சொல்லிருக்கேன். வேற யாரும் கையை காட்டி ஹாய் சொன்னதில்லை. .... எப்புடி நாங்களும் இலக்கியவாதி ஆகிட்டோம் லநம்ம வைரமுத்து சார் அரசியலுக்கு வர போவதா கேள்விபட்டேன். கட்டாயம் அவரு திமுக பக்கம் தான் போவாருன்னு நினைக்கிறேன், ஏன்ன்ன அந்த அளவுக்கு சமீப காலமா கலைஞர் ஐயாவுக்கு சொம்பு அடிச்சு இருக்கார்ல. எனக்கென்னவோ இவரை விட அந்த சின்ன வயசு கவிஞர் தான் நல்ல சொம்பு அடிச்சு இருக்குறத தோணுது. பைய புள்ள செம உஷார் போலிருக்கு.
இதை விட காமெடி ....நம்ம கலைஞர் ஐயா சொல்லுறது தான் ..."தமிழர்களே தமிழர்களே என்னை தூக்கி கடலில் போடுங்கள்". இவர் லெட்டர் எழுதுற வேகத்துக்கு இவரை தூக்கி வேற எங்கயாச்சு தான் போடணும். அப்படியே தூக்கி போட்டாலும், போட்டவன் கொலை கேஸ் ல மாட்டிபான், அதனால யாரும் அப்படி செய்ய மாட்டாங்க ங்குற தைரியத்துல சொல்லிக்கிட்டு இருக்காரு. ஐயா மக்கள்ஸ் ஒரு நேரம் போல இன்னொரு நேரம் இருக்க மாட்டாங்க. அதனால எதை பேசுரதுனாலும் அக்கம் பக்கம் பார்த்து பேசுங்க. பதவிக்காக திமுக மக்கள்ஸ் யே அப்படி செய்தாலும் செய்வாங்க. be carefull ....நான் உங்களை சொன்னேன். (இதை எதிர்த்து பின்னோட்டம் போடுறவங்களுக்கு பெண் சிங்கம் பட திருட்டு சிடி அனுப்பி வைக்க படும்)
இன்னொரு விஷயம் நம்ம மக்கள்ஸ் க்கு எப்பவுமே பாதிப்பு வந்த தான் அதுக்கு எதிர்ப்பு தெரிவிப்பாங்க .... யாருக்கும் precautionary activities பத்தி யோசிக்குறதே இல்ல. இன்றைய நாளுல இந்த சம்பவம் மாதிரியே பல இடங்களில் நடக்க வாய்ப்புள்ளதாக ஒரு இயற்க்கை விழிப்புணர்வு அறிக்கை சொல்லுது.
(ஆப்பு ங்குறது மக்களுக்கு யாரும் தேடி வந்து வைக்குறது இல்ல ...அவன் அவன் அவனே தேடி போய் அது மேல உட்கார்ந்துக்குறான்)
அப்படியே நான் அதை பத்தி எழுதினாலும் .... கொஞ்சம் பின்னோட்டம் , நிறைய ஹிட்ஸ் , கொஞ்சம் VOTE தான் கிடைக்கும், பிறகு அதை பத்தி இந்த சமுதாயம் மறந்துரும். அதனால என்ன உபயோகம்ன்னு நிறைய யோசிச்சு இருக்கேன். பிறகு அதை எல்லாம் எழுதுவதற்கும் நமக்கு டைம் இல்லைங்க ......
உடனே அவரு ...."நீங்க எழுதுங்க அப்ப தான் நல்ல இருக்கும்" அப்படின்னு சொல்லுறாரு. (இன்னுமாடா இந்த உலகம் நம்பள நம்புது ??)
= = = = =
பிராத்தனை கூட்டத்துக்கு வரேன்னு சொன்ன ஆளு வரல ங்கிறதுக்காக ஒரு ஆடு என்னை கூட்டிகிட்டு அங்க போய் உட்கார வைச்சுருச்சு. சரின்னு நான் பொறுமையா கேட்கிட்டு இருந்தேன். ஒரு சமயத்துல அந்த மத போதகர் ஒரு பொய் சொன்னாரு .... உடனே நான் உண்மைய சொல்லலாம்ன்னு ஆரம்பித்த போது ...உடனே அந்த ஆடு இரண்டு வெங்காய ரவா தோசை வாங்கி தரேன் பேசாம இருக்குன்னு சொல்லிருச்சு ...நானும் ஒன்னும் பேசல. நமக்கு கொள்கையை விட ரவா தோசை தானே முக்கியம்......
= = = = =
Thursday, July 22, 2010
மேனஜர் முகத்தில் குத்து விட நினைக்கும் பத்து தருணங்கள்
நான் SALES ல இருக்குறதல நம்ம மானா சூனா (என்னோட மேனஜர் ) மேல அடிக்கடி கோவம் வரும். அப்ப எல்லாம் நினைச்சுப்பேன் இந்த ஆளுல எப்புடிவது குத்தோ குத்துன்னு குத்தனும்ன்னு. நேத்து பரிசல் எழுதின பதிவை படிச்சபோதே இந்த மாதிரி எழுதணும்ன்னு தோனுச்சு, ஆனா வழக்கம் போல டைம் தான் இல்லை. ....
சரி சரி ..இதுக்கு மேல மொக்கை போட நான் விரும்பல. என்னொன்னு இந்த பதிவு மானா சூனா கண்ணுல படகூடாது. அப்படியே பட்டாலும் எனக்கொண்ணும் பிரச்சனையில்லை....நான் தான் டம்பி மேவீன்னு அவருக்கு தெரியவா போகுது. ஹி ஹி ஹி ஹி ஹி ..OK LETS START THE MUSIC ....
= = = = =
தினந்தோறும் காலையுல ஏழு மணிக்கே இன்றைய டார்கெட் (எங்களுக்கு DAILY TARGET ) எவ்வளவுன்னு கேட்டு SMS அனுப்பும் பொழுது. அந்த நேரத்துல நான் கக்கா கூட போயிருக்க மாட்டேன்....அப்ப அவரு முகத்த பார்த்து ...
-
ஆபீஸ் உள்ள வந்த உடனே "இன்னைக்கு மார்க்கெட் எப்புடி இருக்கும்ன்னு கேட்கும் பொழுது.. நான் ரிப்போர்ட் கூட படிச்சு இருக்க மாட்டேன் ...அப்ப ஒன்னு
-
DAILY மூணு TEAM MEETING வைக்கும் போது....
-
காலைல இருந்து நம்ம கூடவே சுத்திட்டு, சாயங்காலம் யான உடன், இன்னைக்கு என்னப்பாச்சுன்னு கேட்கும் பொழுது.....ஒன்னு
-
மொக்கையான ஒரு LEAD தந்துட்டு , பெரிய பணக்கார ஆளை காட்டிவிட்ட மாதிரி பந்தா பண்ணும் பொழுது ...
-
கஷ்ட பட்டு ஒரு LOGIN பண்ணிட்டு, பெருமையா அவர பார்க்கும் பொழுது, "ஒன்னு இங்க இருக்கு, இன்னொன்னு எங்க??"ன்னு கௌண்டமணி செந்தில் காமெடி கணக்கா அடுத்த LOGIN பத்தி கேட்கும் போது ....ஓங்கி ஒன்னு ....
-
சனிகிழமையான எதாச்சு பெரிய ஓட்டலுக்கு கூட்டிகிட்டு போய், சாப்பாடு வாங்கி தந்து, மொக்கை போடும் போதும், சாப்பிட்டு விட்டு வெளில வந்த உடனே அடுத்த வார டார்கெட்யை பத்தி பேசும் பொழுது.....ஒன்னு
-
ரிப்போர்ட் பண்ணும் போது, "CLIENT க்கு இஷ்டம் இல்ல போல இருக்கு மானா சூனா" (எங்க ஆபீஸ் ல யாரையும் சார் கிர்ன்னெல்லாம் கூப்பிட மாட்டோம்) ன்னு சொன்ன, நீ சரியாய் பேசிருக்க மாட்டன்னு பதில் வரும் பொழுது.....அப்படி ஒரு கோவம் வரும் பாருங்க ...அப்படியே ஆபீஸ்ன்னு கூட பார்க்காம ஓங்கி ....
-
ரஜினி நடிச்ச சிவாஜி படத்துல ஆபீஸ் ரூம்ன்னு ஒன்னு வருமுல, அதே மாதிரி எங்க ஆபீஸ்ல MEETING ROOM ன்னு ஒன்னு இருக்கு, அதுக்குள்ளே மானா சூனா கூப்பிடும் பொழுது .......
-
"இந்த சிஸ்டம் ல கோளாறு போல் இருக்கு" ன்னு சொல்லும் பொழுது, ஏன் எதுன்னு கூட பார்க்காம, LKG ல இருந்து காலேஜ் வரைக்கும் நான் படிச்ச படிப்பை விமர்சிக்கும் போது....(கட்டாயம் TOTAL DAMAGE தான்) அப்போன்னு
-
= = = = =
இவ்வளவு அடிக்குறாங்க, அப்பரும் எதுக்கு வேலை பார்க்குறன்னு நீங்க கேட்குறது எனக்கு கேட்குது....அடிச்ச அப்பரும மானா சூனா "இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்...இவன ரொம்ப நல்லவன்" ன்னு சொல்லுவாரு..அந்த அந்த ஒரு வார்த்தைகாகவே ..ஹி ஹி ஹி ஹி......
Monday, July 19, 2010
கலவை - நன்றி ஸ்பெஷல்
ஏதோ தானோன்னு எழுதினேன், அப்பருமா கொஞ்சம் கொஞ்சம் எழுத்து பிழையை குறைச்சிகிட்டு.... ம்ம்ம் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
இப்ப பார்த்த தினசரி வாழ்க்கைக்கு 100 followers + google reader ல 135 பேரு. அப்பரும் மேவியின் பகிர்வு பிளாக்கு ஒரு 20 followers + google reader ல 25 பேரு ...... நான் எழுதுறதை / மொக்கை போடுறதை படிக்குறாங்க ....சந்தோஷமா இருக்கு (நான் கணக்குல கொஞ்சம் weak ங்க....சரியாய் சொல்லி இருக்கேனான்னு தெரியல)
பொதுவா எனக்கு மொக்கை போடுறது ஒன்னும் புதுசு இல்ல. ஏன்ன நம்ம பொழப்பே அது தானே. மார்க்கெட்டிங் ....
சரி சரி ..... கடைசியா ஒன்னு சொல்லிக்குறேன் .... பிரபலங்கள் மாதிரி நான் சேர்த்த கூட்டம் இல்ல ..அதுவா சேர்ந்த கூட்டம். இவங்க எவ்வளவு பேருக்கு பின்னோட்டம் போட்டு இருப்பேன்னு தெரியல.
யாராச்சு நான் பின்னோட்டம் போடுறது இல்லைன்னு வருத்த பட்டீங்கன்ன சொல்லுங்க .....ப்ளீஸ்.
(அட google ல search options ல கூட நம்ம பிளாக் வருதுன்னு கேள்விபட்டேன் பாஸ்....)
= = = = =
= = = = =
VIKAS SWARUP எழுதின SIX SUSPECTS ன்னு நாவல் செம கிரைம். அந்த நாவல் இப்ப expiry date தாண்டி போயிருச்சு, அதனால அந்த கதையை பத்தி நான் ஒன்னும் சொல்லல. அந்த நாவலோட தமிழ் மொழிபெயர்ப்பு இப்ப ஜூனியர் விகடன் ல தொடர வாரம் இருமுறை வருது. இதுல என்ன விஷயம்ன்ன இந்த நாவலோட ஆங்கில வடிவத்துல நிறைய கெட்ட வார்த்தை வரும். அதையெல்லாம் எப்புடி தமிழ்ல மொழிபெயர்க்க போறாங்களோ ???? (செம்மொழியான தமிழ்மொழி ல வார்த்தைகள் இல்லாமலா இருக்கும்)
= = = = =
நேத்து தினகரன் நியூஸ்பேப்பர் சைட் ல உலாவிட்டு இருக்குற போது அங்க புத்தகம்ன்னு option இருந்துச்சு. அட பரவால்லையே இவங்க கூட இலக்கிய சேவை செய்றாங்களேன்னு அதிர்ச்சியாகி கிளிக் பண்ணி உள்ளே போய் பார்த்த...அந்த கொடுமையை நீங்களே இங்கே போய் பாருங்க .....
= = = = =
CHETAN BHAGAT ...இவரோட நாவல்ஸ் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் 5 poinT someone ங்கிற அவரோட ....close to my heart ன்னு சொல்லலாம். இவரு வந்து times of india ல columns எழுதிகிட்டு இருக்காரு. பொதுவா நான் அதையெல்லாம் அவ்வளவா படிக்கிறதில்ல. இருந்தாலும் விதி வலியதுன்னு சொல்லுவாங்களே அந்த மாதிரி கொஞ்ச நாள் முன்னாடி இவரோட column ஒன்னை படிச்சேன்.... சிறு பிள்ள தனமா இருந்துச்சு.சரி நமக்கு தான் அப்படி தோணுதன்னு சந்தேகமா நண்பன்கிட்ட படிக்க சொன்னேன். அவனுக்கும் அதே தோனுச்சு.
ஒரு வேளை நான் அவ்வளவு பெரிய அறிவாளியா ; இல்லை அவரு அவ்வளவு முட்டாளான்னு தெரியல.
= = = = =
MERE BAAP PEHLE AAP ன்னு ஒரு ஹிந்தி படத்தை இந்த சனிகிழமை பார்த்தேன். படத்தை பார்க்க முக்கிய காரணமே பிரியதர்ஷன் direction ன்னு போட்டு இருந்ததால் தான். பிள்ளைங்க சேர்ந்து பெரியவங்க காதலை சேர்த்து வைப்பது தான் கதை. படத்தை பத்தி பெருசா சொல்ல ஒன்னும் இல்ல. ஒரு வாட்டி பார்க்கலாம்.
அதே பிரியதர்ஷன் ங்குற பெயருக்காக இன்னொரு படத்தையும் இந்த weekend பார்த்தேன். கோபுர வாசலிலே. சின்ன வயசுல பார்த்தப்போ எனக்கு பிடிச்சு போயிருச்சு. அதே நினைப்புல தெரிய தனமா சிடி வாங்கிட்டேன். editing ...continuity ன்னு பலது மொக்கைய தானிருக்கு. ஆனா ஒன்னு இளையராஜா பின்னி பெடல் எடுத்த படங்களில் இதுவும் ஒன்னு அதற்காகவே ஒரு முறை பார்க்கலாம்.
அதே மாதிரி இதற்கு எல்லாம் சிகரம் வைச்சது போல 99 ன்னு ஒரு ஹிந்தி படத்தை பார்த்தேன். 1999 ல நடந்த கிரிகெட் சூதாட்டத்தை வைச்சு கஹை பண்ணி இருக்காங்க. சும்மா விறு விறுன்னு படம் போரறதே தெரியல. அதுவும் காமெடி ஒட்டியே வரும். ஒன்னும் பெரிய இலக்கிய படம்ன்னு எல்லாம் சொல்ல முடியாது. ஆனா அவசியம் பார்க்க வேண்டிய படம்.
= = = = =
இப்பெல்லாம் தினசரி வாழ்க்கைல ஒரு நாளுல பொலபுக்கே நேரம் சரியாய் போறதால இப்ப எல்லாம் முன்ன மாதிரி புஸ்தகம் ஜாஸ்தியா படிக்க முடியல. அதுவும் நாவல்ன்ன சுத்தம். சிறுகதைகளாச்சு கொஞ்சம் படிக்க முடியுது.
அப்படியும் நண்பர்கள் சமீபம ஒரு புஸ்தகத்தை படி படின்னு சொல்லிகிட்டே இருக்காங்க. அது INDIA ON TELEVISION .....ஒரு தலைமுறையோட யோசிக்கும் விதத்தை எப்புடி டிவி மாத்தி இருக்குன்னு சொல்லுதாம் இந்த புஸ்தகம். மேலும் இன்னும் பிற விஷயங்களையும் சேர்த்தே சொல்லி இருக்காங்க.
நான் ரொம்பவும் சுவாரசியமா படிக்குற நாவல் வகைரவையே படிக்க நேரமில்லை. இப்ப போய் இந்த புஸ்தகத்தை எல்லாம் படிக்க முடியுமா ??? யாராச்சு இதை படிச்சவங்க கிட்ட இதை பத்தி கேட்கலாம்ன்னு இருக்கேன். பிறகு பட்ஜெட் இந்த மாசம் கொஞ்சம் டைட்.
= = = = =
தேவை இல்லாத இடங்களில் எல்லாம் உங்க போன் நம்பரை எல்லாம் தராதீங்க. அது சொந்த செலவில் சூனியம் வைச்சுக்குற மாதிரி தான். அது அப்படியே telecallers கைக்கு போயிரும். ஏன் நீங்க உங்க bank ல உங்க details யை எல்லாம் தந்து இருப்பீங்கல அதையையே உங்களுக்கு தெரியாமல் அவங்களோடு tie up வைச்சுக்குற company கிட்ட தந்துருவாங்க. அவங்க அவங்க products யை sell பண்ணுறதுக்கு உங்களை இம்சை பண்ணுவாங்க.
= = = = =
பிறகு நிறைய விஷயம் இருக்கு, ஆனா ஞாபகம் தான் வர மாட்டேனுங்குது. பிறகு நம்ம நாட்டுல நடக்குற எல்லா பிரச்சனைக்கும் பொருளாதாரம் ஒரு முக்கிய காரணம். அதனால நம்ம தல ADAM SMITH எழுதின WEALTH OF NATIONS படிங்க. கொஞ்சம் மொக்கைய தான் இருக்கும். ஆனால் உங்களுக்கு நிறைய learn பண்ணி குடுக்கும்.
= = = = =
பிறகு பார்போம்
KEEP SMILING
Thursday, July 15, 2010
வேலாயுதம் - விஜயின் புதுப்பட கதை

இந்த படத்துல விஜய்க்கு இரண்டு ஜோடி - ஜெனிலியா, ஹன்ஷிகா. சரண்யா மோகன் விஜயோட தங்கச்சியாக நடிக்குரங்க. இந்த படத்துல விஜய்க்கு double action . ஒன்னு village character இன்னொன்னு city character .
கிராமத்து விஜய்க்கு ஜோடி ஹன்ஷிகா. பிறகு அவர் நகரத்துக்கு வந்த உடனே ஜெனிலியா உடன் டூயட் பாடுவாரு
பிற கதாபாத்திரங்கள் எல்லாம் தேவைக்கு ஏற்ப கதைல வரும்.
ஜெனிலியா ஒரு டிவி ரிபோர்டர். கதை ஆரம்பத்துல அவங்க ஒரு டாக்டரை பேட்டி எடுக்குறாங்க. அதுல அந்த டாக்டர் மூளையோட முழுமையான சக்தியை பத்தி பேசுறாரு. இது வரைக்கும் மனுஷ பைய புள்ளைங்க 1 % தான் அவங்களோட மூளையோட சக்தியை பயன்படுதிருக்காங்கன்னு சொல்லுறாரு.
cut ...
கிராமத்து விஜய் ஆட்டம் பாட்டம்ன்னு ஜாலிஆ இருக்காரு. அப்ப அவரோட தங்கச்சி ஓட தோழியான ஹன்ஷிகா மேல லவ் வருது அவருக்கு.....
cut ....
நகரத்து விஜய் ஒரு சோஷலிஸ்ட். பொதுசேவை, தொழில் சங்கம்ன்னு பீஸிஆ இருக்காரு. ஒரு தொழிலாளி க்கு பேச போய், கோவத்துல ஒரு பணக்காரர் யை மோசமா திட்டி விடுகிறார்.
cut
கிராமத்து விஜய் ஹன்ஷிகாவை எப்படியோ கெஞ்சி கூத்தாடி love பண்ண வைசுடுரர். அதற்க்கு அவரோட தங்கச்சி சரண்யா மோகன் உதவி செய்றாங்க .
cut
நகரத்து விஜயை அந்த பணக்காரர் ஆள் வைத்து அடித்து விடுகிறார். இதனால் அவரோட மூளை பகுதியில் பலமாக அடிபட்டு விடுகிறது.
cut
கிராமத்து விஜய் ஒரு பிரச்சனை காரணமாக சென்னை நோக்கி கிளம்புகிறார்.
cut
அந்த அடியால் நகரத்து விஜய்க்கு சில அதிசிய உணர்வுகள் கிடைக்குது. இதனால் அவரு ரொம்ப குழம்புகிறார். மூளையில் சில அதிசிய காட்சிகள் கனவாக வருகிறது. ESP மாதிரி ஒன்னு. இதனால் அவர் தெருவுகளில் நடக்கும் பொழுது ஏனுன்னே தெரியாம சில சண்டை நடக்கும் இடங்களுக்கு போறாரு. பிரச்சனையும் தீர்த்து வைக்குறாரு. கோவம் ஜாஸ்தியா வருது. வேர்வை ஜாஸ்தியா வருது...இப்படி பலது நடக்குது.
cut
எடுத்த documentary ஓட தொடர்சிக்காக அந்த டாக்டரை போய் பார்க்குறாங்க ஜெனிலியா. (அந்த டாக்டர் தான் விஜய்க்கு treatment பண்ணியவரு) ..பேசிகிட்டே இருக்கும் பொழுது நகரத்து விஜய் கேஸ் யை பத்தி சொல்லுறாரு. TRP ratings க்கு ஆசைப்பட்டு . ஜெனிலியாவும் ஆர்வமா விஜயை பத்தின விஷயத்தை கேட்குறாங்க.
cut
கிராமத்து விஜய் சென்னைக்கு வாறாரு.... ஜெனிலியாவை meet பண்ணுறாரு. confusion ...ஆள் மாறாட்டம் .. கொஞ்சம் ஜாலியாக சில காட்சிகள்.
cut
நகரத்து விஜய் கொஞ்சம் மக்களுக்காக super ஹீரோ மாதிரி ஆகுறாரு...... அவரு பெயரு வேலு ..மக்களுக்காக ஆயுதம் எடுக்கிறாரு. அதனால் அவரு வேலையுதமாகுறாரு. (title justification ).... மக்களுக்காக அவரோட ஸ்பெஷல் சக்திகளை வைச்சு help பண்ணும் போது.... ஒரு வில்லன் உருவகுறாரு.
cut
வில்லன்கள் கிட்ட நகரத்து விஜயை ஒன்னும் பண்ண முடியாது, அவரை கொலை செய்வது தான் ஒரே வழின்னு சொல்லிவிடுகிறார் அந்த டாகடர்.
cut
கிராமத்து விஜயை ஏதோ பழி போட்டு ..... ஜெயிலுக்கு அனுபிடுறாங்க. நகரத்து விஜய்க்கும் கிராமத்து இடைய பகைமையை உருவாக்குறாங்க. ஆனால் நகரத்து விஜய்க்கு கிராமத்து விஜய் மேல எந்த கோவமும் இல்லை. ... பிறகு உணர்வு போராட்டம். கோவம் விரோதம்ன்னு போகும். பிறகு இரண்டு பெரும் ஒன்னு ஆகிடுவாங்க. பிறகு வில்லன்களை பழி வாங்குவாங்க.
= = = = =
முலகதை என்னமோ இது தான், ஆனால் பட்ஜெட் பொறுத்து கதை கொஞ்சம் change ஆகலாம். சரியான வில்லனை தேடி கொண்டு இருக்காங்க. இளமையான வில்லன் கிடைத்தால் கதை ஒரு மாதிரியாகவும் ...வயசான வில்லன் கிடைத்தால் கதை வேறு மாதிரியாகவும் அமையும்.
விஜயின் பழைய படங்கள் மாதிரி இல்லாமல் ...இதில் வில்லன் விஜய்க்கு புத்திசாலி தனமான தடைகளை போடுவாரு. அதை விஜய் மீறி, தடைகள் தாண்டி வருவாரு.... கதையின் சுவாரசியம் அதுல தானிருக்கும்.
இது தான் இப்பொழுதுக்கு பேசப்பட்டுள்ள கதை ....... போக போக discussion பண்ணி பண்ணி கதையை சூப்பரக்கலாம் இல்லாட்டி குட்டி சுவரக்கலாம்.
Monday, July 12, 2010
கலவை - இலக்கிய ஸ்பெஷல்
= = = = =
என் கூட வேலை பார்க்குற ஆடு ஒன்னு John Grisham எழுதின நாவலை படி படின்னு இம்சை பண்ணிகிட்டே இருக்கு. அவர் அப்படி என்ன தான் எழுதி கிளிச்சி இருக்கார்ன்னு பார்க்க ஆசைய இருக்கு. ஏற்கனவே அரிப்பு எடுத்து DAN BROWN எழுதின THE LOST SYMBOL படிச்சதே இன்னும் ஜீரணம் ஆகல ..இதற்குள்ள இது வேறயையான்னு வெறுப்பா இருக்கு.
அதே மாதிரி என்னோட அண்ணனும் TO KILL A MOCKINGBIRD யை படிக்க சொல்லிகிட்டே இருக்காரு. நானும் அதோ படிக்கிறேன் இதோ படிக்கிறேன்ன்னு டாபசிகிட்டே இருக்கேன். அது வேற புல்லு புடுங்குற Pulitzer Prize வாங்கி இருக்காம். 1960 ல. ..... பார்போம்.
= = = = =
எனக்கு சின்ன வயசுல இருந்தே இந்த RUSKIN BOND பைய புள்ள மேல ஒரு தனி attachment தான், ஏன்னு தெரியல. ஸ்கூல்ல அவரோட கதைகளை படிச்சது கூட ஒரு காரணமா இருக்கலாம். இவரு குழந்தைகளுக்குன்னு எழுதபடுற கதைகளுல SPECIALIST யாம். இவரோட BOOKS எது முதல படிக்கலாம்ன்னு தெரியல. யாருக்காச்சு தெரிஞ்ச சொல்லுங்க ப்ளீஸ். இன்னைக்கு இவரோட Unforgettable People ங்குற புஸ்தகத்தை பார்த்தேன். கொஞ்சம் புரட்டி பார்த்ததுல. மனுஷன் நல்லாவே எழுதிருக்காரு. WIKI ல இவரை பத்தி இதை எழுதி முடிச்சதும் படிக்கணும்.
= = = = =
இந்த WEEKEND ல நம்ம ராம்கோபால் வர்மா ஓட SARKAR படத்தை YOUTUBE ல DOWNLOAD பண்ணி பார்த்தேன்..... முடிவு மட்டும் எனக்கு பிடிச்சு இருந்துச்சு. மத்த நேரம் எல்லாம் தூங்கி தூங்கி தான் பார்த்தேன்....
ஆனா அன்னைக்கே இன்னொரு இந்திய இங்கிலீஷ் குறும்படத்தை பார்த்தேன்...கதை அருமையா இருந்துச்சு..ஆனா MAKING தான் செம சொதப்பல். ...
= = = = =
ரொம்ப நாள் முன்னாடி வாங்கி போட்ட சுஜாதாவோட கொலையுதிர் காலத்தை போன சனிகிழமை தான் படிக்க முடிஞ்சது. சும்மா சொல்ல கூடாது மனுஷன் அடிச்சு விளையாடி இருக்காரு. இத சின்ன வ்வயசுல பொதிகைல சீரியல்ஆ பார்த்து இருக்கேன்...அதை பார்த்துட்டு கதை மொக்கையா தான் இருக்கும்ன்னு முடிவு பண்ணி படிக்காம இருந்தேன். அது எவ்வளவு பெரிய தப்புன்னு படிச்சு முடிச்ச அப்பரும் தான் தெரிஞ்சுது.
அதே மாதிரி தல எழுதின கரையெல்லாம் செண்பக பூ வாங்கி வைச்சு இருக்கேன் ...அதை படிக்க தான் நல்ல நேரம் பார்த்துகிட்டு இருக்கேன்....
= = = = =
கொஞ்ச நாள் முன்னாடி அண்ணா சுஜாதாவோட மர்ம கதைகள்ன்னு புக் வாங்கினாரு..படிக்க கேட்டேன் ; ஆனா எனக்கு தர்ம துபாய்க்கு எடுத்துகிட்டு போயிட்டாரு. அதனால் கொஞ்சம் கோவமா இருந்தேன்....இந்த வாரத்துல அதை அனுபுறேன்ன்னு சொல்லி என்னை COOL பண்ணிட்டாரு.
இந்த மாசம் புதுமைபித்தனோட மொழிபெயர்ப்பு சிறுகதை தொகுப்பையும் சாகி எழுதின சிறுகதை தொகுப்பையும் எப்படிபட்டாச்சு வாங்கி படிச்சுருனும்ன்னு முடிவு கட்டி இருக்கேன்..பார்க்கலாம். அதற்க்கு முன்னாடி D. H. Lawrence ஓட ஒரு நாவலையாச்சு படிச்சு முடிக்கணும்.
= = = = =
கொஞ்ச நாள் முன்னாடி அத்தை பையனை பார்க்க போன போது ...அவன் ROMAN HOLIDAYS ன்னு ஒரு படத்தை போட்டு காட்டினான். கதைன்னு பெருசா இல்லை.... ஆனா எடுத்து இருக்குற விதம் அருமையா இருக்கு. அதுவும் அந்த கடைசி சீன்ல வர CAMERA ANGLE .....ஒரு அழகிய கவிதை மாதிரி இருக்கும்.
= = = = = =
இன்னும் கொஞ்சம் விஷயம் இருக்குங்க ஆனா எழுத தான் முடியல. இலக்கிய ஸ்பெஷல்ன்னு லேபல் வேற போட்டுட்டேன்ல அதான், அதை எல்லாம் எழுதலாமான்னு சந்தேகமா இருக்கு. நீங்க என்னன்னா புஸ்தகம் படிக்கிறீங்கன்னு பின்னோடதுல சொல்லுங்க. நான் நாடகம்ன்னு பார்த்த நம்ம மெரீனா எழுதின மாப்பிளை முறுக்கு தான் படிச்சேன்.
அதே மாதிரி நம்ம பால சந்தர் எழுதின ஒரு நாடகத்தையும் படிச்சேன். சிரிப்பு நாடகம். விகடன் பிரசுரம் தான். ரைட்டு/....
= = = = =
செம்மொழி மாநாட்டை நான் டிவில கொஞ்சம் பார்த்தேனுங்க. அதுவும் பட்டிமன்றம். அதிலையும் நல்ல சொம்பு அடிச்சாங்க. அதுவும் எஸ்வி சேகர் - செம சிரிப்பு போலீஸ் மாதிரி பேசினாரு. அதுக்கு அப்பரும் நான் அதை நான் பார்க்கவே இல்லை.
= = = = =
இந்த குறும்படத்தை பத்தி நான் ஒன்னும் சொல்லல ..நீங்க உங்க கருத்தை சொல்லுங்க
Friday, July 9, 2010
மதராசபட்டினம் - விமர்சனம்
கதைன்னு பார்த்தீங்கன . பழைய நினைவுகள் மீண்டும் வர ...காணாமல் விட்ட காதலனை தேடி லண்டன் ல இருந்து வருகிற மூதாட்டி..... பிறகு அவள் சென்னையில் பார்க்கும் ஒவ்வொரு இடமும் அவளது காதலனை நினைவு படுகிறது . அவனுடைய பொருள் ஓன்று அவளிடம் இருக்கிறது. அது அவளுக்கு சொந்தமதில்லை என்ற நினைவே அவனை கண்டுபிடித்து அந்த பொருளை திரும்ப தர எண்ணுகிறாள். அவள் அவளது காதலனை கண்டுபிடிக்கும் நேரத்தில் ...அந்த பொருள் அவளுடையது தான் என்று உணர்கிறாள்.... அது என்ன பொருள் ??? அவளிடம் எப்படி வந்தது ??? ஏன் எதனால் அவள் அவளது காதலனை பிரிகிறாள் ??? ...... பதிலையெல்லாம் கண்டுபிடிக்க படத்தை பாருங்க ..தியேட்டருக்கு போய் பாருங்க
=
மார்க்கெட்டிங் ல இருப்பதால சினிமாவை நான் என்றுமே ஒரு end product யாக பார்த்தே பழகி விட்டேன். அப்படி பார்த்தால் இந்த படம் customers யை satisfy செய்யும் ஒரு நல்ல product தான். என்ன அங்கங்க கொஞ்சம் பட்டி பார்த்து டிங்கரிங் பண்ணிருக்கலாம். என்ன ஒரே ஒரு குறைன்ன மதராசபட்டினம்ன்னு பெயரை வைச்சுட்டு பழைய மதராஸ் யை கொஞ்சம் தான் கட்டிருக்காங்க. அது மக்கள்ஸ்க்கு தெரியாத மாதிரி super screenplay ......
பொதுவா நான் படிச்ச வரைக்கும் 1945 இந்தியாவுல பல ரகசிய வன்முறை இயக்கங்கள் freedom க்காக போராடி இருக்காங்க. அவங்களையெல்லாம் தீவிரவாதின்னு சொல்லி ஜெயில்ல போட்டு இருக்காங்க. இந்த விஷயத்தை டைரக்டர் ஊறுகாய் மாதிரி use பண்ணிருக்காரு. அந்த scene ல நாசர் ஒரு மாதிரி அதர்ச்சி காட்டுறாரு....அதுயேதுக்குன்னே புரியல.
முக்கியமா ஒரு period film ன்ன அதுல வர எல்லா character களுக்கும் சரியான character justification தந்து இருக்கணும்.... ஆனா இதுல பெப்பறப்பேன்னு இருக்கு.
ஆனா ஒன்னு சொல்லியே ஆகணும் ..timing comedy நல்லாவே இருக்கு படத்துல. அதுவும் ஆர்யா இங்கிலீஷ் வாத்தியார் வீட்டுக்கு தனது சககளுடன் போகும் காட்சி செம தூளுங்க.
தொடரும் படத்தை பார்த்து இருக்கீங்களா ?? அதுல ரமேஷ் கண்ணா ஒரு வித editing யை use பண்ணிருப்பார்..... அதே concept யை நல்ல பயன்படுதிருக்காங்க। நிகழ் காலத்துக்கும் கடந்த காலத்துக்கும் மாறி மாறி போகும் காட்சி அமைப்பு .....simply supereb . அதுவும் கடைசில bridge சீன் ...... ம்ம்ம் சென்னை எவ்வளவு குப்பையாக போயிருச்சுன்னு காட்ட அது ஒன்னே போதும்.
எல்லா பாடல்களும் நல்ல இருக்கு। ஆனா ஒரு பாட்டு மட்டும் படத்தோட ஒட்டவே மாட்டேனுங்குது .... அதுவும் செகண்ட் half ல ஒரு பாட்டு ....காதலும் போராட்டமும் கலந்த கலவையாக செம சுவை.
ஆர்யா ...மனுஷன் அடிச்சு விளையாடி இருக்காரு. இந்த படதிற்க்காகவே குஸ்தி LEARN பண்ணிருப்பார் போல....சண்டை காட்சிகள் அருமையா இருக்கு. அதுவும் அந்த CLOCK ROOM சண்டை ......ரொம்ப லாஜிக் ஆ அமைச்சு இருக்காங்க.
SETS ...... தூள் தான். ஆனால் செயற்கை தனம் ரொம்பவே தெரியுது.
கதாநாயகி ...... அழகு சிலை (இன்னைக்கு என் கனவுல கட்டாயம் வருவாங்கன்னு நினைக்குறேன்..... அப்படி வந்த கும்த்லக்கிகடி கும்மா தான்) . வயதான கதாபாத்திரத்துல வர நடிகையும் நல்ல நடிச்சு இருக்காங்க. கிளைமாக்ஸ் ல வர டயலாக்யை கேட்டா எங்கே தாலி செண்டிமெண்ட் தமிழ் சினிமாவுக்கு திரும்ப வந்துருமோன்னு பயமா இருக்கு.
ரன் படத்துல "கதல் பீச்சே" ன்னு தமிழை கடிச்சு குதறின உதித் நாராயண் தான் இந்த படத்துல ஒரு பாட்டு பாடி இருக்காரு। கேட்க நல்ல இருக்கு. (அந்த நிமிஷத்துல தமிழ் செம்மொழி ஆச்சுன்ற விஷயத்தை கொஞ்சம் மறந்துட்டு பாட்டை கேட்கணும்)....
மியூசிக் ..ஜீவி பிரகாஷ்ன்னு நினைக்கிறேன்...சரியா தெரியல ....கலக்கி இருக்காரு.
எல்லாமே தூள் தான் படத்துல. காட்சிகளை பத்தி நான் ரொம்ப சொல்ல விரும்பல. நீங்க போய் பாருங்க .... கட்டாயம் ரசிப்பீங்க. சில டயலாக் க்கெல்லாம் செம கிளாப்ஸ் .....தியேட்டர் கலாட்டா -
காலேஜ் படிக்கும் நேரத்துல இருந்தே படம் ஓடிகிட்டு இருக்கும் பொழுது கமெண்ட் பாஸ் பண்ணுறது எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் இருட்டுல யாருன்னே தெரியமே ஒருத்தர் சொல்லுற கமெண்ட்க்கு பதில் கவுன்ட்டர் அடிக்கிறது செம ஜாலிங்க.
இந்த படத்துல ஆர்யா பேசுற மாதிரி ஒரு டயலாக் ஒன்னு வரும், அது என்னனா "நீங்க பெரிய ஆளுங்க ...எதை வேன்னுமனாலும் வாங்கி பரிசாக தருவீங்க...ஆனா நான் ஏழை, நான் என்ன தர முடியும்" ன்னு அவர் பேசிட்டு முடிக்கிறதுக்குள்ளே ..இருட்டுல ஒருத்தன் செம கவுன்ட்டர் அடிச்சான் பாருங்க " குழந்தை தர முடியும்" .... செம ரகள....
டிஸ்கி - எல்லா படத்துக்கும் டிக்கெட் காசை ஏத்தி வைக்குற தியேடார்க்காரன் ...இதுக்கு டிக்கெட் விலை ஏத்தவே இல்லை ....அதிர்ச்சி ஆனாலும் உண்மை...ஒரு வேளை அடி தள்ளுபடி யாக இருக்குமோ
அம்மா தாயே .படிச்சிட்டு vote இல்லாட்டி பின்னோட்டம் போடுங்க ...
Tuesday, July 6, 2010
மெரினாவின் சின்ன வயதினிலே - ஓர் இனிமையான அனுபவம்
எனக்கு இன்னொன்னு புரியல மட்டேனுங்குது. ஏன் எல்லோரும் ரொம்ப சீரியஸ் யான புத்தகங்களை பத்தியே எழுதுறாங்கன்னு.
நீங்க எப்பவாச்சு குழந்தையாகவே இருந்திருக்கலாமோன்னு நினைச்சு இருக்கீங்களா ???? வாழ்க்கைல நிறைய stress வரும் பொழுதெல்லாம், அடடா நம்ம சின்ன வயசுல எவ்வளவு சந்தோஷமா இருந்தோம், இப்ப அந்த சந்தோசம் எல்லாம் எங்கடா போச்சுன்னு யோசிச்சு இருக்கீங்களா ????
இந்த மாதிரி நீங்க கொக்கு மக்கா யோசிக்கும் பொழுது படிக்க வேண்டிய book தான் இது. அப்படி weekdays ல டைம் இல்லாட்டி weekend ல படிங்க ....... நிச்சயம் உங்களுக்கு சின்ன வயசுல பண்ணின மொள்ளமாரி தனம் எல்லாம் ஞாபகம் வரும். அப்பப்ப நீங்களே சிரிப்பிங்க ....
சரி சரி .... book பெயரை சொல்லுறேன் ....சின்ன வயதினிலே
நம்ம தல மெரினா / பரணீதரன் எழுதினது. இவரோட இந்த புத்தகத்தை படிச்ச பிறகு தான் நான் இவரோட மத்த books யை எல்லாம் வாங்கி படிக்க ஆரம்பிச்சேன். உங்களுக்கே தெரியும் சுவாரசிய எழுத்துக்களுக்கு இவர் சொந்தகாரர்ன்னு. அப்படிபட்டவர் தனோட சின்ன வயசு அனுபத்தை எல்லாம் எவ்வளவு colourful ஆ சொல்லிருப்பார்ன்னு நீங்களே யோசிச்சு பார்த்துகோங்க. அதுவும் கோபுலு sketch ஓட படிச்ச இவ்வளவு சுவைய இருக்கும்ன்னு கணக்கு போட்டு பார்த்துகோங்க. (நீங்க ஒரு வேளை என்னை மாதிரி கணக்குல weak ன்ன, முயற்சி பண்ணுங்க, விடாம முயற்சி பண்ணுங்க, முன் வைத்த காலை பின் வைக்க மாட்டான் இந்த அலெக்ஸ்சாண்டர்ன்னு மனசுக்குள்ள சொல்லிகிட்டே முயற்சி பண்ணுங்க)
இந்த சீலி பய இருக்கானே ......(மெரீனாவை சின்ன வயசுல அப்படி தான் கூப்பிடுவாங்க) அவனோட ஒரே அக்கப்போர் தானுங்க. முத பக்கத்தில் இருந்து கடைசி பக்கத்துக்கு முன் பக்கம் வரைக்கும், கடைசி பாகத்துல நம்மள cry பண்ண வைச்சுடுறான்.....
முக்கிய்மா ஒன்னு சொல்ல மறந்துட்டேன், இதுல அவர் எழுதிக்கிரதேல்லாம் அவரோட சிறு வயசு நினைவுகள் .....அதனால் படிக்குற நம்மளையும் கையை பிடிச்சு 50 years back புரசவாக்கதுக்கு கூட்டிட்டு போயிடுறாரு.
எடுத்த உடனே ....சீலி பய அவனோட பெயரை கண்டுபிடிச்ச அனுபவம் ....நிச்சயம் ஒரு ரஜினி பட opening scene மாதிரி இருக்கும். பிறகு அவனோட வாத்தியார் அவனை அடிச்சிட்டு, பிறகு அவனோட அப்பா கிட்ட மொக்கை வாங்குன விஷயம், ஹீரோ மாதிரி முடி வளர்க்க எப்புடி எல்லாம் முடி வெட்டுறவன் கிட்ட தப்பிச்ச கதையும் பிறகு அந்த முடியை பறி குடுத்த விதமும் ..... சத்யம அந்த பகுதியை படிக்கும் பொழுது சிரிச்சு சிரிச்சு ....முடியல .
(இந்த புத்தகத்தை நான் வாங்கி ஒரு இரண்டு மூணு வருஷம் ஆகிருக்கும், இப்பவும் மனசு ரொம்ப STRESS ஆ இருக்குற சமயத்துல எல்லாம் இந்த BOOK யை தான் எடுத்து படிப்பேன்.)
அப்படியே சின்ன வயசுல மெரீனா அவர் பண்ணின லூட்டி, திருட்டு தனம், பயந்த விஷயங்கள், சின்ன வயசு சிறி சிறு வருமானங்கள்....ன்னு நிறைய சொல்லுறார் ....அதெல்லாம் செம கிளாஸ்.
பிறகு அவங்க சித்தப்பா பத்தி சொல்லும் போது, ஒரு சிறு பையனுக்கு இருக்கிற HERO WORSHIP தெரியுது...அட படிக்குற நம்மளையும் அதே பார்வைல யோசிக்க வைக்குறார்.....(அது தான் அவரோட எழுத்துக்களின் வெற்றி என்றே நினைக்கிறேன்)....
ஒரு பாட்டுல ஒரு வரி வரும் (என்ன படம்ன்னு தெரியல....) "இந்த நிமிஷம் நிமிஷம் அப்படியே நின்று விட கூடாத"ன்னு, அதே மாதிரி தான் இந்த புத்தகத்த படிக்கும் பொழுது நான் நினைச்சேன். ஆனா அப்படியே அழகாய் பறக்குற ஒரு பறவையை கல் எடுத்து அடிச்ச எப்புடி இருக்கும் நமக்கு .....அதே மாதிரி தான் புத்தகத்த ஓட முடிவையும் ஆசிரியர் வைச்சு இருக்குறார்.
அப்படி தான் "காஞ்சனமாலா இங்கே வரமாட்டார்" ங்கிற பாகத்துல ஒரு சிறு பையனுக்குரிய குறும்பு தனத்தை சொல்லுற ஆசிரியர்...அப்படியே U - TURN அடிச்சு "ஆஸ்பத்திரியில் அண்ணா" விலும், "புரசைவாக்கம் TO நுங்கம்பாக்கம்" விலும் நம்மளை அழ வைச்சுடுறார். நான் இந்த புத்தகத்தை எப்ப படிச்சாலும், இந்த பகுதியை மட்டும் படிக்கவே மாட்டேன்.
இதுல ஒரு surprise என்னன்னா இந்த புத்தகத்தை publish பண்ணிருப்பது விகடன். வழக்கம அவங்க first time readers யை தான் டார்கெட் பண்ணுவாங்க......ம்ம்ம்
டிஸ்கி - சலிசு விலை தான். பிறகு கவனமாக வாசித்தால் இன்னும் சில பல மேட்டர் களை தெரிந்து கொள்ளலாம். முக்கியமா நான் இந்த வாங்கின கொஞ்சம் நேரம் கழிச்சு தமிழ் நாட்டுல மிக பெரிய பிரபலம்ன்னு கொண்டாட படுற ஒரு ஆடு கிட்ட இருந்து autograph வாங்கினேன். அந்த ஆடும் சந்தோஷமா போட்டு தந்துச்சு
சரிங்க இப்பவே 4:50am Tuesday (IST) - Time in Chennai, India ஆகிருச்சு ..... இப்ப walking போயிட்டு அப்படியே newspaper வாங்கிட்டு ....வரணும்.
இன்னும் நிறைய புத்தகம் படிச்சு இருக்கேன், படங்களும் நிறைய பார்த்து இருக்கேன். டைம் கிடைச்ச எழுதுறேன்...இல்லாட்டி மொக்க தான்.
சந்தோஷமா இருங்க ...
ENJOY LIVING
பிறகு பார்போம் ......