Pages

Saturday, May 29, 2010

மணமகள் தேவை - கார்த்திகை பாண்டியனுக்கு

மேல போட்டோல பழம் மாதிரி இருக்காரே அவரு தான் கார்த்திகை பாண்டியன். என்ன தான் பாக்க பழம் மாதிரி இருந்தாலும் அவரு ஒரு பலாபழம். அந்த அளவுக்கு உள்ளுள்ள நிறைய விஷயத்தை வைச்சுகிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி சீன் போடுவாரு. ஒரு டி, இரண்டு பஜ்ஜி வாங்கி தந்த போதும் எங்க வேண்டுமானாலும் நின்னு மத்தவங்க காதுல இருந்து ரத்தம் வருகிற அளவுக்கு இலக்கியம் பேசுவாரு. அந்த அளவுக்கு இவரு ஒரு இலக்கிய பீஸ். (என்னை மாதிரி காமெடி பீஸ் கூட ,.... நல்ல படிங்க காம பீஸ்ன்னு எழுதல)

அடடடா.... பதிவு எழுத வந்த மேட்டரையையே மறந்துட்டேன் பாருங்க. நேத்து இவரோட பிறந்த நாளை இவரு கொண்டாடி இருக்காரு. அது சரி இவரோட பொறந்த நாளை இவரு கொண்டாடாம பக்கத்துக்கு வீட்டுகாரன் ஆ வந்து கொண்டாடுவான். எத்தனை குஜிளிக்கள், எத்தனை இலக்கிய பீஸ்கள் ......... அந்த கொண்டாடத்தில் கலந்து கிட்டாங்கன்னு தெரியாது, ஏன்ன அந்த அளவுக்கு மதுரையில நம்ம உளவு துறை இல்லை என்பது தான் உண்மை. ஹி ஹி ஹி

நேத்து இவருக்கு நான் போன் பண்ணும் போது தான் இந்த விஷயத்த சொன்னாரு. அப்பவே ஒரு பதிவு போட்டு இருப்பேன். ஆனா என்ன ஒன்னு பாருங்க சம்பளம் வாங்குறேன் ன்ற ஒரே காரணத்துக்காக என்னை வேலை பார்க்க சொல்லிட்டாரு முதலாளி. நானெல்லாம் ஆபீஸ் வர்றதே ஒரு பெரிய புண்ணியம்ன்னு அவருக்கு தெரியல. ஓகே அவரை ப்ரீயா விட்டுருவோம்.

இவருக்கும் என்னனாவோ சொல்லி பார்த்துட்டாரு அவங்க வீட்டுல அவரோட கல்யாண பேச்சை யாரும் எடுக்க காணல. சரி ஒரு பொண்ணு ஓட வாழ்க்கை தப்பிச்சுதுன்னு பார்த்த, காபா ரொம்ப பழகிய ஆளா போயிட்டாரு. மனசை கல் ஆக்கிகிட்டு ...... இந்த பதிவோட டைட்டில்யை எழுதினேன் ...... மணமகள் தேவை.

பொண்ணுக்கு எது தெரிஞ்சு இருக்கோ இல்லையோ கட்டாயம் மொக்கை தனமா இலக்கியம் பேச தெரிஞ்சு இருக்க வேண்டும். பொண்ணு பார்க்க வரும் போது காபா பொண்ணுக்கு எஸ்ரா எழுதின துணையெழுத்து ல இருந்து டெஸ்ட் வைப்பாரு. அதுல அவங்க பாஸ் ஆனா தான் கல்யாணம். இல்லாட்டி வெறும் friends .....


முக்கியமாக பொண்ணு கார்த்திகை பண்டியானோட கல்யாணமான பின்னாடி எஸ்ரா ஓட அடியாளாக மாறணும். யாமம், நெடுங்குருதி .... இன்னும் என்னன்னா இருக்கோ அதெல்லாம் தினசரி வாழ்க்கை ல பொண்ணு படிக்கணும்.

டிஸ்கி - இன்னும் நிறைய எழுதிருப்பேன், ஆனால் "i am பாவம்" என்று அவரே சொன்னதினால் இதோடு விட்டுவிட்டேன் (எவ்வளவு அடிச்சாலும் தாங்குறார் ரொம்ப நல்லவருங்க) . பிறந்த நாள் வாழ்த்துக்களோடு அவர் தனது துறை சார்ந்த மேற்படிப்பில் முயற்சித்து வருவதினால் அதற்கும் சேர்த்தே வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள்.


"எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள், அதை விட சந்தோசம் தரும் விஷயம் வேறு எதுவுமில்லை. இயசு சொன்னது போல (அல்லது சொன்னார் என்று நம்ப படுகிற) உன்னை போல் பிறரையும் நேசி" ( இதை எதுக்கு சொல்லுறேன் என்றால் வர வர என்னோட பதிவில் கருத்தே இல்லைன்னு நிறைய பேர் சொல்லுறாங்க, அதுக்கு தான். மேலும் இந்த மாதிரி கருத்து சொன்ன ஒரு மொக்கை பதிவு கூட இலக்கிய பதிவு ஆகி விடும் என்று பதிவுலக பெருசுகள் பலர் சொன்னாங்க )



Wednesday, May 19, 2010

ரித்தி/மதுவன்தியும் அண்ணனும் - சில அனுபவங்களும்

"அப்ப்வ்பா ..அப்ப்வ்பா"

"என்னடி ......"

"சச்சிக்குது...சச்சிக்குது"

"போய்..அம்மா கிட்ட பசிக்குதுன்னு சொல்லு ..."

"யும்ம...யும்ம்"

"என்னமா ...."

"நா போகி ..நீ "

" ம்ம்ம் ...சரி. என்ன வோணும்?"

"சச்சிம்பர்...சம்சிம்பர் ...."

"சரி ..இரு,கொண்டு வரேன்"

அண்ணன் ஒரு cup நிறைய சாம்பார் கொண்டு வந்து தந்த உடனே ரித்தி அந்த cup பக்கத்துல பொம்மை எடுத்து வைத்ததை பார்த்த அண்ணன்

"என்னம்மா ...ஏன் பொம்மைய cup பக்கத்துல வைக்குற?"

"நா டளியடினேன் (விளையாடினேன்) சச்சிக்குது .....பொம்மை டிளியடின சச்சிகதா ??" (என்னோட விளையாடின பொம்மைக்கு பசிக்காத?)



"ரித்தி ..பே காட்டு ...ரித்தி பே காட்டு ..."

"நா காட்டடேன்....(நான் காட்ட மாட்டேன்)"

"அப்ப்வ்பா பஹா..அப்ப்வ்பா பஹா ...ஈதோ பஹா ... நீ பானத பே காத்தான்(நீ வந்த நான் பே காட்டுகிறேன்)

"இதோ அப்பா பே ...ரித்தி எங்க பே"

"ரித்தி பே ..ரித்தி பே"

(இந்த ஒரு போட்டோ எடுக்க ரித்தியை இப்படியெல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டிருக்கு)

டிஸ்கி -மனிதர்கள் பிறக்கும் பொழுது மனிதநேயம் மிக்கவர்களாக தான் பிறக்கிறார்கள்.கல்வி முறையும் சமுதாயமும் தான் அவனை மாற்றுகிறது .....

Saturday, May 8, 2010

போலீஸ் மாமாவும் ஆயிர ரூபாய் மொய்யும்



நானும் சென்னை வந்ததில் இருந்து, எந்த போலீசும் என்னை நிறுத்தி லஞ்சம் கேட்டதில்லை, இதனால நான் ஒரு வேளை இந்திய குடிமகன் இல்லையோன்னு கூட சந்தேகம் வந்துச்சு. அப்படி ஒரு வேளை போலீஸ் நம்ம கிட்ட லஞ்சம் கேட்ட அப்படியே சினிமா படத்துல வர மாதிரி லஞ்சம் தரமாட்டேன்ன்னு வீராப்பு வேங்கைமைந்தனாக சொல்லிடலாம்ன்னு இருந்தேன். ஏன்னா லஞ்சம் கூடுபதும் தப்பு வாங்குவதும் தப்பு. ஒரு வேளை அப்படி எந்த போலீசாச்சு என்கிட்டே கேட்டாங்கன்ன என்ன பண்ணறதுன்னு கூட நிறைய யோசிச்சு வைச்சு இருந்தேன்.

இந்த பதிவு ஒன்னும் லஞ்சத்துக்கு எதிரான பதிவு இல்லைங்க, அந்த மாதிரி எழுத வேற ஆளுங்க நிறைய இருக்காங்க. ஏன் இதை சொல்லுறேனா ஒரு வேளை யாராச்சு தப்ப நினைசுகிட்டு ஆட்டோ அனுபிட்டாங்கன்ன என்ன பண்ணறது. பாதுகாப்பான உறவு தேவைன்னு அரசாங்கமே சொல்லுது அதனால தான் இந்த மாதிரி எல்லாம் கலங்கரை விளக்கம் தர வேண்டியதா இருக்கு. எல்லாம் நேர கொடுமை தான், அத தவிர வேற ஒன்னும் இல்ல.

டிஸ்கி - இப்பவே சொல்லிறேன். இந்த பதிவிலும் வழக்கம் போல் நான் கருத்தையும் சொல்லவில்லை. அதனால் மொக்கையை தவிர வேற எதையும் எதிர்பார்த்து, டோல் கொப்பற கோயா ஆகாதிங்க.

நடந்தது என்ன ..... அப்படின்னு விஜய் டிவி ல சொல்லுற மாதிரி எல்லாம் எனக்கு சொல்ல தெரியாதுங்க. ஏதோ ஞாபகம் இருக்கிறதை கொஞ்சம் ஞாபக படுத்தி சொல்லுறேன்..... கொஞ்சம் கொக்கு மக்கா தான் இருக்கும். ADJUST பண்ணிகொங்க.

நேத்து தீடிர்ன்னு BUSINESSMAN (A person engaged in commercial or industrial business (especially an owner or executive) கார்க்கியை நேர்ல பார்க்கணும்ன்னு ஒரு விபரீத ஆசை வந்துச்சு (நல்ல வேளை நேர்ல பார்க்கும் பொழுது அவர் என்கிட்டே இலக்கியம் பேசல). சரின்னு ஆபீஸ்ல இருந்து அவருக்கு கால் பண்ணி சொல்லிட்டு ........ அந்த பணகார ஏரியாவில் இருக்குற அவரோட ஆபீஸ்க்கு போனேன். பார்த்தேன். பேசினேன். பேசினோம். கிளம்பினேன். வந்து வழி அனுப்பினர். (அதை பற்றி தனிய ஒரு பதிவு எழுதுறேன், இதுல எழுதல. இது லஞ்சம் பத்தின பதிவுன்னு எல்லோருக்கும் ஞாபகம் இருக்கட்டும்.)

அந்த ஏரியாவிலிருந்து பெருங்குடியை தாண்டி (இந்த spelling சரியாய் தப்பான்னு தெரியல. யாராச்சு சொன்ன நல்ல இருக்கும்) துரைபாக்கம் வழிய வந்து (சீக்கிரம் இந்த பதிவை எழுதி முடிக்கணும், இப்பவே மணி 4 . 44 am ) 100 ft ரோடு சிக்னல் ல நின்னுக்கிட்டு இருந்தேன். அப்பன்னு பார்த்து என்னோட சனி பிடிச்ச மொபைல் (சாணி கலர் ல இருக்கும்) ல யாரோ கூப்பிட்டாங்க. இந்த இடத்துல நான் பைக் தான் ஓட்டிகிட்டு வந்தேன் என்பது தேவையான இடைசொருகல்.

ரிங் அடிக்கும் பொழுதே சிக்னலை பார்த்தேன். 40 seconds இருந்துச்சு. சரின்னு அதற்குள் பேசி முடிச்சுடலாம்ன்னு தான் நினைச்சு பேசினேன். பேசினது என்னோட மேனேஜர். லேசுல விடுவாரா. அவருக்கு பதில் சொல்லிக்கிட்டு இருக்கும் பொழுதே கிரீன் சிக்னல் விழுந்துருச்சு. சரி பேசி முடிச்சு வண்டிய எடுக்கலாம்ன்னு பார்த்த பின்னாடி இருந்த கார்காரன் sound horn தந்தான். சரின்னு ஏதோ ஞாபகத்துல பேசிகிட்டே தோள் ல முட்டு தந்துகிட்டே right side cut பண்ணி 100 ft ரோடுக்கு போயிறலாம்ன்னு நினைச்சு பைக் ஸ்டார்ட் பண்ணி கிளப்பினேன்.


அப்படி கிளம்பும் போது எதிர்க்க ஒரு traffic constable வந்து பைக் நிறுத்துற மாதிரி கவட்டையா விரிச்சுகிட்டு வந்தாரு. தூக்கிறாலமா ன்னு பார்த்தேன். எதாச்சு கேஸ் கீஸ்ன்னு ஆகிட என்ன பண்ணறதுன்னு நிறுத்திட்டேன்.

அப்பரும் என்ன நடந்து இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும் என்பதால் அந்த சீன்களை இந்த பதிவில் இருந்து avid editing முலமாக நீக்கிவிட்டேன் (வேற என்னங்க பண்ணுறது டைப் பண்ண டைம் இல்லையே..டி குடிக்க போகணும்)


கொஞ்ச நேரம் கழிச்சு இன்ஸ்பெக்டர் முன்னாடி நின்னுகிட்டு இருந்தேன். வண்டி சாவியை வைத்தபடி கான்ஸ்டேபிள் பக்கத்துல இருந்தாரு.

"ஆயிர ரூபா பைன்...கட்டிட்டு போ.."

"இல்ல சார் .....அவ்வளவு காசு இல்ல சார்"

"எங்க வேல பார்க்குற"

"...... .... .... கம்பெனி"

"சம்பளம் எவ்வளவு இருக்கும்"

"..... ... .."

"அவ்வளவு காசு வாங்குற ....கைல கொஞ்சம் வைசிகிட்டா என்ன"

"தெரியாதே சார்...இந்த மாதிரிஎல்லாம் நடக்கும்ன்னு"

"சரி சரி .....மூநூறு ரூபா கட்டிட்டு போ"

"எரநூறு (200 ) தான் இருக்கு சார்"

"சரி கட்டிட்டு போ...நான் எத்தன பேர தான் மன்னிச்சு விடறது....."

"சரி சார் ......இதுக்கு ரசித் தருவிங்களா"

"ஏன் ...அதெல்லாம் வராது..."

"அதுஎப்படி சார் ..."

"யோய் நீ ரொம்ப பேசுற ...... "

"இல்ல சார் ....நியாயத்தை தான் சொன்னேன்"

"சரி நானும் நியாயப்படி சொல்லுறேன்...ஒழுங்கா ஆயிர ரூபா கட்டிட்டு போ...."

சரி நம்ம காசு போலீஸ் கைக்கு போகாமல் அரசாகதுக்கு தானே போகுதுன்னு (வேற வழி) நினைசுகிட்டு கட்டிட்டு வந்தேன். கொஞ்ச தூரம் போனா உடனே, தீடிர்ந்னு டென்ஷனாகி அந்த ரசீது சுக்கு நூறாய் கிழிச்சு போட்டுட்டேன்.


டிஸ்கி : தமிழ் நாட்டு போலீஸ் படத்துக்கு பதிலாக வெளிநாட்டு போலீஸ் படத்தை ஏன் போட்டேநேன்றால், இது ஒரு உலக தரமான பதிவென்பதை காட்ட தான்.

Sunday, May 2, 2010

ரோசாப்பூ ரவிக்கைகாரி


நான் UG படித்த காலத்தில் (போயிட்டு வந்த காலத்தில்ன்னு சொன்ன நல்ல இருக்கும்) என்னோடு படித்த அனந்த குமார், இந்த படத்தோட ஒரு பாட்டை அடிக்கடி பாடிக் கொண்டே இருப்பான்.... அதை கேட்டு கேட்டு தான் இந்த படத்தை பார்த்தே ஆகணும்ன்னு ஆர்வம் வந்துச்சு. பிறகு கொஞ்சம் படிப்பு, நிறைய புத்தகங்கள்ன்னு வாழ்க்கை போனதால இந்த படத்தை பத்தி மறந்தே போயிட்டேன். ஆனா அந்த பாட்டை கேட்க்கும் பொழுதெல்லாம் அந்த படத்தை பார்க்க வேண்டும்ன்னு நினைச்சிப்பேன். பிறகு சிடி வாங்க போகும் போது மறந்து போய்விடுவேன்.


அப்படி இந்த வெள்ளிகிழமை ஆபீஸ்ல இருந்து கிளம்பும் போது, இந்த வாரம் புத்தகம் எதுவும் படிக்க வேண்டாம், எதாச்சு நல்ல படமா பார்போம்ன்னு பெருங்களத்தூர் வந்த உடனே இரண்டாவது கேட் பக்கத்துல இருக்குற சிடி கடைக்கு போனேன். அங்க வைச்சு தான் இந்த படத்தோட சிடியை பார்த்தேன். moser baer super dvd . ஆனா இந்த படத்தோட இன்னும் இரண்டு படம் வேற இருந்துச்சு. சரி அதை பத்தி அப்பரும சொல்லுறேன்.



படத்தை பத்தி சொல்லுறதுக்கு முன்னை ஆனந்த் அடிக்கடி பாடின பாட்டு எதுன்னு சொல்லிறேன். "மாமன் ஒரு நாள் மல்லிக பூ" .... செம பாட்டுங்க. இளையராஜா பின்னி பெடல் எடுத்த பாடல்களில் இதுவும் ஒன்னு. அப்பரும் வெத்தல வெத்தலன்னு ஆரம்பத்துல வர பாட்டும் அருமையா இருக்கும். சூப்பர் ரகத்தை சேர்ந்தது (அதை கேட்க இங்க கிளிக் செய்யுங்க). அப்பரும் கடைசில வர "உச்சி......", அந்த பாட்டும் எனக்கு பிடிச்சு இருந்தது. ஆனா இடைல வர "என்னுள்ளே எங்கோ" பாட்டு என்னை ரொம்ப கவரல. இன்னும் இரண்டு மூணு பாட்டு இருக்குன்னு நினைக்கிறேன், ஆனா ஞாபத்துக்கு வரல.


சரி. பாட்டை தவிர இந்த படத்துல எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்ன்னு பார்த்த, படத்தோட கதை தான். ஒரு டிரஸ் விஷயத்தை வைச்சு தமிழ்ல எதாச்சு படம் வந்து இருக்கன்னு தெரியல. மனித சமுதாயத்தையும் மற்றும் வளர்ச்சியையும் பெரிதும் மாற்றிய விஷயம் எதுன்னு பார்த்த இரண்டே இரண்டு விஷயம் தான், ஒன்னு பண்டம் மாற்று முறையும், இன்னொன்னு உடையும் தான்.

பொதுவா உடை, புடவைன்னு வந்தாலே பெண்ணியம் பேசுறதை தான் நான் படிச்சு இருக்கேன், பார்த்து இருக்கேன், ஆனால் இதுல விஷயமே வேற. இந்த கதை ஒரு கிராமத்துல பெண்களுக்கு பாவாடை, ரவிக்கை, பாடி (கதை நடப்பது 1930 களில்) வாங்கி தருகிற ஒரு ஆணுடைய கதை. ரோசாப்பூ ரவிக்கைகாரி. இரண்டு மணி நேர திரைப்படமாய்.



கதாநாயகன் செம்பட்டையாக நடிகர் சிவகுமார். செம நடிப்பு, செம body language .......வாழ்ந்திருக்கிறார், அதனால் மற்ற கதாபாத்திரங்களின் பெயர்கள் நினைவில் இல்லை. எனக்கு அந்த பயில்வான் கதாபாத்திரம் பிடிச்சு இருக்கு. அந்த பண்ணையார் கதாபாத்திரம் ஓகே, பெருசா ஒண்ணுமில்லை. செம்பட்டை அண்ணன் கதாபாத்திரம் இயலாமையின் வெளிப்பாட்டில் என்னை கொஞ்சம் IMPRESS பண்ணினார்.


செம்பட்டைக்கு கல்யாணமாகி, பொண்டாட்டியை ஊருக்கு கூட்டிகிட்டு வரான், அவள் தான் ரோசாப்பூ ரவிக்கைகாரி. சேலத்தில் இருந்து அந்த கிராமத்துக்கு வரும் அவளுக்கு அந்த கிராமம் பிடிக்கவில்லை. அந்த கிராமத்துல பொண்ணுங்க பாவாடை போடுரறதும், ரவிக்கை மற்றும் பாடி போடுவதும் இல்லை, அப்படி போட்ட அந்த கிராமத்துல அது பெரிய குற்றம். அப்படி இருக்கும் பொழுது நகரத்தில் இருந்து வரும் செம்பட்டையின் மனைவி போடும் மேக் கப்யை பார்த்தும், அவள் போடும் ரவிக்கை, பாவாடை, பாடியை பார்த்தும் கிராம பெண்களுக்கு சபலம் தட்டுகிறது.


நகரத்தில் இருந்து பொருட்களை வாங்கி வந்து, கிராமத்தில் விற்கும் செம்பட்டையின் முலம் ரகசியமாக வாங்கி வர சொல்லுறாங்க. அப்பொழுது பிரிட்டிஷ் துரைக்கு வேலை பார்க்கும் ஒருவனை செம்பட்டையுடன் ஒப்பிட்டு பார்த்து, அவன் மேல் ஒருவித மோகம் கொள்கிறாள்செம்பட்டையின் மனைவி . இதனிடைய வர போகும் பாக்டரிக்கு ஆள் எடுப்பதாய் சொல்லி, பர்மா டி-எஸ்டேட்க்கு (எரியும் பனிக்காடு படிச்சு பாருங்க) செம்பட்டையின் முலம் தகவல் பரப்பி ஆள் எடுக்கும் துரை. இந்த பிரச்சனை எல்லாம் நேர் கோட்டில் சந்திக்கும் பொழுது செம்பட்டைக்கு என்னானது என்று சொல்கிறது இந்த படம்.



படத்துல சில நொள்ளை நொட்டைகள் இல்லாமல் இல்லை, இருந்தும் இந்த படத்தை சலிக்காமல் பார்க்க முடியும். அதுவும் இளையராஜா பாட்டுக்காகவே ஒரு தடவை பார்க்கலாம். படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதிருப்பவர் இந்த படத்தில் தான் அறிமுகமானார் என்பதை நம்ப முடியல.

சில சொதபல் காட்சி அமைப்புகளால் இரண்டு இடத்துல டைரக்டர் வாய்ஸ் குடுக்க வேண்டியதா இருக்கு (அப்ப வந்த படத்துல எல்லாம் இது சகஜம்ன்னு கேள்விபட்டேன்) ..... கடைசில வணக்கம் போடும் பொழுது டைட்டில் கார்டு போட்டு இருக்கலாம், அதை விட்டுட்டு வெத்தல வெத்தலயோஒய் ......தாங்க முடியல.



அப்பரும் பல காட்சிகளில் intimacy இல்லாததால் .....பல காட்சிகள் பெபெபரபேன்னு இருக்கு.

1979 ல இந்த படம் வந்துச்சாம். உங்க டிவிடி collections ல இருக்க வேண்டிய படம் இது.

Moserbaer SUPER DVD - ரோசாப்பூ ரவிக்கைகாரி + பத்ரகாளி + கண்காட்சி = விலை 30 ரூபாய்

Thursday, April 29, 2010

ரித்தி/மதுவன்தி ஸ்பெஷல் - நான் வளர்கிறேனே

"மனதின் அளவுக்கு உடை எடுத்தால் அது உடம்பின் அளவிற்கு தானே இருக்கிறது"

"ஏய் காக்கா.... என்கிட்டயையா. மரியாதையா போட்டு இருக்குறதை வந்து சாப்புடு"

"நான் தூங்க போறேன்...அது வரைக்கும் நீ ஓட்டிகிட்டு இருக்கு....காலைல வந்த தந்துருனும்..என்ன ஓகேவா...டீலா நோ டீலா..ஒரே வார்த்தை....ஓகோன்னு ஒரு சைக்கிள்"




"அதோ அங்க போயிராலமா....பின்னாடி மேவி சித்தப்பா வறாரு...அவர் போடுற மொக்கைல இருந்து யாராச்சு என்னை காப்பாத்துங்க ப்ளீஸ்"


"என்ன இருந்தாலும் அப்பா கார் மாதிரி இல்லா. டப்பா காரு. எனக்கும் இந்த காருக்கும் கெமிஸ்ட்ரி நல்ல இல்லை."


"பயமா இருக்கு...முத வாட்டி எழுத போறேன்.....சித்தப்பா கையெழுத்து மாதிரி வந்துற கூடாது. இந்த வயசிலே எழுத கத்துக்கணும்ன்னு யார் கண்டுபிடிச்சங்களோ ......இந்த அநியாயத்தை தட்டி கேட்க யாரும் இல்லையா"
"ஒரு சுறாவளி கிளம்பியதே!சிவ தாண்டவம் தொடங்கியதே!"


"நாங்க எல்லாம் யாரு...எங்ககிட்டயேவா.....நாங்க எல்லாம் சுறா மீனுக்கே தூண்டில் போடுறவங்க"


= = = = = =

கவிதை எழுதிட எண்ணங்கள் அலை மோதும்

வேளையில் சோர்வாய் உணர்த்திட

நிழலுக்காக ஒதிங்கினேன் : தஞ்சம் அடைந்தேன்

ரித்தி புகைபடங்களிடம் .....

எண்ணங்களில் இருந்த கவிதை

காணாமல் : காற்றில் தன் இலக்கு

இதுவல்ல என்று தெரிந்துக் கொண்டு.

பிறகு உணர்தேன் . கவிதையின் மொத்த

உருவான ரித்தி புகைப்படங்கள் இருக்கும்

பொழுது . புனைவுக்காக ஏன் இந்த அலைச்சல் என்று......

கவிதையை நான் சுவாசித்த பிறகு

என் நிஜமான முகம்

மொக்கை கொஞ்சம் சிரித்துவிட்டது.

/\
/\
/\
/\
/\
/\
/\
/\
/\
/\
டிஸ்கி - அப்படி சுறாவளியாக கிளம்பிய ரித்தி, கொஞ்ச நேரத்தில் அதில ஆர்வம் குறைஞ்சு போய் வேற பக்கம் ஓடிட்டாங்க











Friday, April 23, 2010

சத்திரம் பஸ் ஸ்டாண்ட் - திருச்சி நினைவுகள்


சத்திரம் பஸ் ஸ்டாண்ட்.......... என்னால் மறக்க முடியாத ஓரிடம். என் வாழ்வில் பல இனிமையான பக்கங்களை இங்கு தான் கடந்து வந்திருக்கிறேன். இனிமை என்று ஓன்று இருந்தால் கசப்பு என்று ஓன்று இருக்குமில்லையா ????? அதே போல் என் வாழ்வில் நான் மிகவும் வெறுமையாக உணர்ந்த சமயங்களில் இங்கு தான் சுற்றிருக்கிறேன்.

அப்பொழுதெல்லாம் ரொம்பவும் அப்பாவியாக இருந்தேன். ஆனால் சென்னை வந்து அந்த அப்பாவி தனத்தையெல்லாம் தொலைத்துவிட்டேன். இப்பவும் அடிக்கடி ஒரு ஆசை வரும்...... இறந்த நாட்களை இறப்பு கணக்கில் சேர்த்துவிட்டு மீண்டும் புதிதாய் அப்பாவியாய் பிறந்து திருச்சியில் வாழ வேண்டும்.

என் வாழ்க்கையில் இந்த இடம் எப்பொழுதும் ஸ்பெஷல் தான். இந்த பதிவு எழுதும் போது கூட நாகநாதர் டி கடையின் மிளகு தூள் தூவிய பஜ்ஜி இன்றும் நினைவில் இனிக்கிறது.

ஒரு தேவதையை பார்த்து, காதல் கொண்டு, பைத்தியாமாகி சுற்றியதும் இங்கு தான். இப்பொழுதும் தில்லை நகர் பஸ் என்றால் என்னிடத்தில் ஸ்பெஷல் தான்.

அதே போல் அரசன் பேக்கரி டி, KRISHNA CORNER பெல் புரி, .......

இந்த படத்தில் இருக்கும் st joseph complex முதல் மாடியில் நின்று கொண்டு இந்திரா காந்தி காலேஜ் பெண்களை சைட் அடிப்போம். SRC மற்றும் HOLLYCROSS காலேஜ் பெண்களை பெரும்பாலும் சைட் அடிக்க மாட்டோம்.......ஏன்னு தெரியாது.

மாரிஸ் தியேடருக்கு இங்கு இருந்தே நடந்து போவோம் (hollycross பஸ் ஸ்டாப் ல இறங்க மாட்டோம்) .......

அதே போல் RAINBOW ஐஸ் கிரீம் கடை.......black forest ஐஸ் கிரீம் தான் சாப்பிடுவேன் எப்பொழுதும் போனாலும்.

ஒவ்வொரு ஏரியா ஸ்டாப்க்கும் போய், அந்த அந்த ஊர் பெண்களை சைட் அடிப்போம். பெரும்பாலும் சமயபுரம் பக்கம் போகும் பெண்களை சைட் அடிக்க மாட்டோம்.

அதே போல் சென்னை சில்க்ஸ் முதல் முறையாக திருச்சியில் திறந்த பொழுது எதிர் ஜூஸ் கடையில் நின்று வாய் பிளந்து பார்த்தும் இருக்கிறேன்.

இன்னும் பல இருக்கிறது, ஆனால் மனசு முழுக்க சந்தோசம் இருப்பதால்.... இன்னொரு சமயம் முடிந்தால் இன்னும் விலாவரியாக எழுதுகிறேன்.

Tuesday, April 20, 2010

கோழி தந்த தோழி - கார்க்கி எதிர்க் கவிதை


அழுக்கை மறைக்கத்தான்


சேலை என்றெண்ணியிருந்தேன்.


நீ கட்டியிருக்கும் சேலையை


காணும் வரை
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
நீ சாப்பிட்டுவிட்டு வந்த


ஒரு மழைநாளில்


இது நல்லாருக்கா என்று என்னிடம் கேட்டதை


ஓட்டல்க்காரனிடம் கேட்பதாக நினைத்துக்கொண்டு


அதன் எஸ்கேப்யாக காத்திருந்தேன் நான்
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
எவ்வளவு முயன்றாலும்


வயறு முழுசா சாப்பிட முடியவில்லை


என ஆதங்கப்படுகிறாய்.


கடுகு அளவிற்கு கூட


என்னிடம் காசில்லை
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
அம்மனுக்கு சாத்த சேலை கேட்கிறார்கள்.


பழைய சேலைகளெல்லாம்


நீ வாங்கி கொள்வாய் என்று


அவர்கள் சொன்னதை நான் கேட்கவில்லை
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
உனக்கு வேண்டுமென்றால்


சோறுயையே மோராகி தருவேன்


என்ன செய்ய..


வீடிற்கு ஒரு கூக்கர் தானாம்!!!
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
புடவையிலும் இருப்பாள்


சுடிதாரிலும் இருப்பாள்



என்கிறார்கள்..


நீ குளியலறையில் தானே


இருக்கிறாய்?

Saturday, April 17, 2010

கோழி அப்டேட்ஸ் - Twitter ஸ்பெஷல்


சுவை காரணமாக கோழி வெட்ட படுவதை பார்த்துக் கொண்டிருந்தேன்

___________________________________________________________________


கோழியின் சுவை அறியாத கடவுள் இருந்தால் அவன் காதலிக்காதவன்

___________________________________________________________________

தோழியின் நினைவாக வலது இடது என்று வாஸ்து பார்க்காமல் கோழியின் காலை கடித்து கொண்டிருக்கிறேன்

___________________________________________________________________

அவன் அவனுக்கான கோழியை சுவைக்கும் பொழுது நான் சைவம் ஆனேன்

___________________________________________________________________

நான் ஏன் அல்லக்கை ஆனேன் யோசிக்கிறேன் கோழி கறியை சுவைத்தப்படி

___________________________________________________________________

நாற்றம் அடித்தாலும் கடந்து செல்கிறேன் கோழி கறி கடையை , உன் நினைவு வருவதால்

___________________________________________________________________

kfc கோழியில் கூட சிறகுகளை தேடுகிறேன் உன் நினைவாக

___________________________________________________________________

நானொரு சோஷலிஸ்ட். KFC ல சாப்பிடலாமா ??

___________________________________________________________________

Thursday, April 15, 2010

கோழி அப்டேட்ஸ் – திருமண ஸ்பெஷல்





கையில் பூக்களோடு நடந்து வந்த தோழியைப் பார்த்து நண்பர் கேட்டார் “பூவோட வறாங்களே. அது தான் கோழியா சகா?” என்று. பார்க்காமலே சொன்னேன் “அவ கோழியோட வர மாட்டா சகா. ஏன்னா அவளே ஒரு கோழி தான்”

______________________________________________________

கரிக்கட்டை மாதிரி இருக்காங்களே அவங்க யாரு சகா என்றார் இன்னொருவர். பயந்து போய் தோழி இருந்த இடத்தை நோக்கி ஓடினேன். நடந்ததை சொன்னவுடன் சிரித்தபடி சொன்னாள் தோழி “நான் இன்னும் கோழி தான்டா. நீ வெட்டினால் சிக்கன் ஆவேன்”.


____________________________________________________


தோழியின் இலையில் முதல் ஸ்வீட் நான் வைக்கலாம் என்று ரசமலாய் கொண்டு போனேன். ரசமலாயை விட சிக்கன் பெட்டரா இருக்குமில்ல என்றாள். ”எல்லோரும் கோழி வேண்டும் என்றால் நான் என்ன செய்ய. நீ ஒருத்திதானே இருக்க” என்றேன்.

______________________________________________________


அண்ணனுக்கு பரிசளிக்க எதையோ காகிதத்தால் சுற்றிக் கொண்டு வந்த தோழி ”வாழ்த்து அட்டையில் என்ன எழுதுவது என்று தெரியாமல் “மையால் நிரப்புங்கள்” என்று எழுதி இருந்தாள். “இதற்கு உன் பேரை மட்டுமே எழுதி இருக்கலாம்” என்றேன். இன்னமும் அர்த்தம் புரியாமல் தொல்லை செய்து கொண்டிருக்கிறாள்

______________________________________________________

காலியாய் இருந்த சமயலறையில் இருவரும் கோழி சமைத்து பார்க்கலாம் என அழைத்தாள் தோழி. ”எப்படியும் நாம் சமைக்கணும். இப்பவே ரிகர்சல் பார்க்கலாம்” என்றாள். அவளிடம் இன்றிரவு சொல்ல வேண்டும் நான் கோழி உரிப்பதில் கைதேர்ந்தவன் என்று .

______________________________________________________


Tuesday, April 13, 2010

காதல் கவிதைகள் -6



போலியான இன்பங்களைக் கொண்டு

இல்லாத சந்தோஷ தருணங்களை கருவில் உருவாக்கி

மனதளவில் சோகமும் சந்தோஷமும் மாறி மாறி

வந்தக் கொண்டே ; நினைவுகளுடன் நடந்துக் கொண்டிருக்கும் பொழுது

என் வாழ்வின் வசந்தக் கால தேவதை : சிறகு ஒடிந்து

பறக்கவும் திறனில்லாமல் வேடனின் அம்பு சொற்களுடன்

வாழ்ந்து கொண்டே இறந்து கொண்டும்

சுவாசத்தை எண்ணிக் கொண்டும்

மாலை வெயில் வேர்வைகளுடன் அவள் வீதியில்

அவளுடைய கணவன் ; என் பார்வையில் அந்நியனாய்

ஒரு நொடி பார்வை பரிமாற்றத்தில்

விரும்பி ஏற்று கொண்ட ஏமாற்றத்தின் நினைவுகளின் வலி

எனக்கு அவள் கண்களில்
முதுமை ; பத்து வருடங்கள் முன்பு காதலாய்

என்னை காதலித்தவை அவை அல்ல.

சில குழப்பங்களுடன் போராட்டம்
அவள் இவளா இவள் அவளா என்றெல்லாம்
கேள்விகள் வார்த்தைகள் காணாமல் போன கவிதை போல்.

தேவதைக்கு சிறகு இருந்த இடத்தில் சுமைகளுடன் சோகங்கள் .
முடியாமலும் முடிவில்லாமலும்
சிறு சிறு உறவுகள் வாழ்வில் வருவது ஏன் ?
ஓர் காலத்தில் சுகமாய் இருந்த காதல், இன்று சுமையாய் மாறியதேன்
பல குழப்பங்களுடன் முடிக்கிறேன் இந்த கவிதையை

Sunday, April 11, 2010

காதல் கவிதைகள் -5




அவளுக்கான என் இதய துடிப்புகளின்

மௌனம் ; களைந்து கழிந்து

என் காதலை அவளுக்கென்று

சிறப்பாய் உணர்த்தி விடாதோ .....???

அவளுக்கென்று என் இதயத்தை செதுக்கிய


என் காதல் சிற்பி இறக்கும்

முன் அவளிடத்தில் எனக்கான காதல் பிறக்குமோ ???

= = = = =

சொல்ல தவறிய காதல்

மௌனங்களின் வலியாய்

கண்ணீருடன் நிற்கிறேன் நான்

தோழியின் திருமணத்தில்

மாப்பிள்ளையின் வலது புறத்தில்


= = = = =

நித்தம் நித்தம்

உன் பெயர் சொல்லியே

ஜீவிக்கும் வரம் வேண்டும்

அப்பொழுதும் நான்

உனக்கான பொழுதுகளை கலவாடாமல்

மௌனங்களின் ஆட்சியில் ஒன்றை கண் பார்வையோடு

உன்னை காதலித்து கொண்டிருப்பேன்




= = = = =

அவளை பார்த்தால்

மௌனம் கூட சில வார்த்தைகளாவது பேசிவிட துடிக்கும்

ஆனால் அவள் அப்படி ஒன்றும் அழகில்லை



டிஸ்கி - பீலிங்க்ஸ் எதுவுமில்லாமல் கவிதை எழுதிருக்கேன், அதனால் உங்களுக்கு பிடித்த கவிதையை இன்னும் அழகு படுத்துங்க.

Wednesday, April 7, 2010

என்னை பற்றி உங்களுக்கு தெரியாத ஏழு விஷயங்கள்

என்னை பற்றி சொல்வதற்கு ஒண்ணுமே இல்லை. இருந்தாலும் நான் சொல்கிறேன். ஒரு ரஷிய நாட்டு பழமொழி ஒன்னு இருக்கு அதாவது "ஒரு உண்மைக்குள் ஆயிரம் ஆயிரம் ரகசியங்கள் உண்டு". என்னதான் ஒருத்தன் உண்மை சொன்னாலும், அதில் கொஞ்சமாச்சு கொக்கு மக்காய் சில பொய்கள் ஒளிந்து இருக்கும். சரி இதை நான் எதுக்கு சொல்லுறேன்ன்ன வர வர என் பதிவில் கருத்துக்களே இல்லை என்று பாகிஸ்தான் நாட்டு அமைச்சர் ஒருவர் ஈமெயில் அனுப்பிருந்தார். ...:)


நான் படிக்க விரும்பியது சமையல் கலையை. ஆனால் படிக்க முடியவில்லை. அந்த ஏமாற்றத்தை இன்றளவும் என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை.


நான் நிறைய புத்தகங்களை படிப்பேன், ஆனால் அதை பற்றி பேச பிடிக்காது. என்னை எப்பொழுதும் முட்டாளாய் காட்டிக் கொள்ள பிடிக்கும்.


நான் ஒரு தீவிர சோஷலிஸ்ட். ஆனால் எது சோறு போடுகிறதோ நான் அந்த பக்கம் இருப்பேன்.


மகாபாரதம், ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம் ஆகிய மூன்று நூல்களையும் பத்து முறைக்கு மேல் படித்து இருப்பேன். இருந்தாலும் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.


நான் ஒரு தனிமை விரும்பி, அதிகம் பேச பிடிக்காது. எந்தவித அடையாளமும் இல்லாமல் வாழ பிடிக்கும். அடையாளம் இல்லாததால் பெரும்பாலும் எனக்கு கோவம் வராது. எப்பொழுதும் நடுநிலைமையாக தான் பேசுவேன்.

நான் மிக பெரிய செலவாளி. என் கையில் காசு தங்காது.

எனக்கு அழகானவர்களை கண்டால் பொறாமையாய் இருக்கும். நான் அழகில்லை என்ற எண்ணம் எனக்கு சின்ன வயசில் இருந்தே இருக்கிறது.

டிஸ்கி - புது வேலையில் ரொம்ப பிஸிங்க. வானவில் கார்த்திக் (நான் அதிகம் பொறமை படும் பதிவாளர்) எழுதிய பீட்டர் பதிவை படித்த பின் இந்த பதிவிற்க்கான IDEA கிடைத்தது......

முக்கிய குறிப்பு - கோழி அப்டேட்ஸ்க்கும் தோழி அப்டேட்ஸ்க்கும் இடைய என்ன நடந்தது ????? விவரம் அடுத்த பதிவில்

Friday, April 2, 2010

பையா பட விமர்சனம் : கார்த்திகை பாண்டியன் அடிய டான்ஸ்

back with bang .....

இப்படி தான் சொல்லி ஆரம்பிக்க வேண்டும் இந்த பதிவை, ஏனென்றால் புது வேலையில் நான் கொஞ்சம் பிஸி பள பாத்யாக இருந்து விட்டேன். எல்லோரும் எப்புடி இருக்கீங்க ??? சௌக்கியம் தானே ??? அமெரிக்காவில் இருப்பவர்கள் யாரவது இந்த பதிவை படித்தால், ஒபாமாவை கேட்டதாக சொல்லவும்.


= = = =

முக்கியமாக இந்த பதிவுக்கு ஏற்ற படங்களை கூகுளில் தேட நேரம் இல்லாததால், பதிவில் எந்த படங்களையும் போட முடியவில்லை (இதில் எந்த அரசியலும் இல்லை). அதனால் இதை நீங்கள் ஒரு பின்னாடி அரிப்பு வந்த பின்நவீன பதிவாக பார்த்தாலும் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. இந்த பதிவை படித்துவிட்டு மேவீக்கு என்ன தண்டனை தரலாம்ன்னு சாரு எழுதினாலும் பிரச்சனை இல்லை (அவரது பதிவுகளை படிப்பதே ஒரு பெரிய தண்டனை தான் என்பது அவருக்கு தெரியவில்லை.) பிறகு சாரு போலாந்து நாட்டின் இலக்கியங்களை மேற்கோள் காட்டினாலும் பிரச்சனை இல்லை, ஏனென்றால் எனக்கு நம்ம நாட்டு இலக்கியங்களை பற்றியே ஒன்றும் தெரியாது. என்னை பொறுத்த வரைக்கும் அவர் தனது இடது காதில் போட்டிருக்கும் தோடை வலது காதிற்கு மாற்றினால் தான் தமிழ் இலக்கியத்தில் பெரிய மாற்றம் வரும்.

= = = =

நேத்து ரயில் நிலையத்தில் கார்த்திகை பாண்டியனுடன் பேசி கொண்டிருக்கும் பொழுது பேச்சு பையா பாடல்களை பற்றி போனது. அப்பொழுது நான் சற்றும் எதிர்பாக்காத கொடுரம் நடந்தது. "என் காதலை சொல்ல நேரமில்லை" பாட்டை பாடியபடி கார்த்திகை பாண்டியன் டான்ஸ் அட ஆரம்பிச்சுட்டார். ஒரு இரண்டு நிமிஷம் அடி இருப்பார். கடைசியில் அவரது இடுப்பை அடியப்படி ஒரு movement தந்தார் பாருங்க, ரஷிய நாட்டு இலக்கியங்களே தோத்து போயிரும். (அந்த movement பார்த்த பிறகு எனக்கு தூக்கம் வரவில்லை என்பது வேற விஷயம்.)


அடிய பிறகு இன்னொரு விஷயமும் சொன்னார் : அதாவது எஸ்ராவை பற்றி யாராச்சு தப்பா பேசினால் அவர்கள் இந்த டான்ஸ்யை பார்க்க நேரிடுமாம், அதுவும் தனியாக. அப்படிப்பட்ட டான்ஸ்யை பார்த்த பிறகும் நான் இந்த படத்தை பார்க்க போயிருக்கிறேன் என்றால் எனது தைரியத்தை நீங்கள் பாராட்ட வேண்டும். (அந்த பாட்டில் ஹீரோ கார்த்திகை பாண்டியன் அளவுக்கு அடவில்லை என்பது இன்னொரு விஷயம்). சரி படத்தை பத்தி எனக்கு ஞாபகம் இருக்கிற கொஞ்ச விஷயத்தை இப்ப சொல்லுறேன்.

= = = =

முதலில் TAG LINE யை பார்த்துவிடுவோம்

பையா - டோய்யா (இதற்க்கு என்ன அர்த்தம்ன்னு கேட்காதிங்க )


இது அடிப்படையில் ஒரு road movie . பெரும்பாலும் இயக்குனர்களுக்கு இந்த மாதிரியான கதைகள் கிடைத்தால் அடித்து விளையாடி விடுவார்கள். ஆனால் லிங்குசாமி கோட்டை உடன் முட்டையும் விட்டுட்டார். ஐயோ பாவம் (மும்தாஜ் ஸ்டைலில் படிக்கவும்). பொதுவா road movie படங்களில் பெரியதாக கதை சொல்ல முடியாது, சிறு சிறு குறியீடுகளிலும், காட்சிகளிலும், வசனங்களிலும் தான் டைரக்டர் படத்தை துக்கி நிறுத்த முடியும். வித்த்யசமான கதை தளத்தை யோசித்த டைரக்டர், திரைகதையை பற்றி யோசிக்கவே இல்லை. டொட்டொடய்ங்!!!


ஒரு பயணம், ஒரு காதல், ஒரு பிரிவு, ஒரு சண்டை பிறகு சுபம். இவ்வளவு தாங்க மொத்த கதை (விமர்சனம் என்ற பெயரில் மொத்த கதையை சொல்ல நான் ஒன்னும் பிரபலமுமில்லை, இலக்கியவாதியும் இல்லை) பிறகு பின்னணி இசை, கேமரா எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா பற்றியெல்லாம் பேச எனக்கு நேரமும் இல்லை, அதற்க்கு நெட்வொர்க் உதவி புரிவதாய் இல்லை. மேலும் அதை பற்றி எல்லாம் வேறு யாராச்சு எழுதுவாங்க, அங்க போய் படிச்சுகோங்க.


மொத்தத்தில் படம் வித்த்யசமான படம் தான், ஒரு முறை பார்க்கலாம். கொண்டாட படும் அளவுக்கு சிறப்பானதாய் இல்லை. மசாலா பட ரசிகர்களுக்கு பிடிக்காது. படம் கொஞ்சம் நீளம். ரொம்ப போர் அடிக்காது.

வில்லன் மொக்கையாய் இருப்பதால், thrill missing. பொதுவாய் லிங்குசாமி படம் என்றால் இண்டர்வலுக்கு முன் வரும் சண்டை தான் பட்டைய கிளப்பும் , ஆனால் அந்த effect இதில் மிஸ்ஸிங்.

தியேட்டர் நொறுக்ஸ் (உபயம் - ஜெட்டி ,பேண்ட், பனியன், ஷர்ட் போட்ட ஜெட்லி ) -

இதில் என்ன எழுதுவதுன்னு தெரியல. அடுத்த விமர்சனத்திலிருந்து pick up பண்ணி கொள்கிறேன். வேண்டுமானால் ஒரேஒரு விஷயம் சொல்லுகிறேன். என்னோடு சினிமாவுக்கு வந்த புது ஆபீஸ் நண்பர் என்னோட மொக்கை பக்கத்தை பார்த்து....அதிர்ச்சி அடைந்து விட்டார், ஏனென்றால் ஆபீஸ்ல நான் ரொம்ப ஷார்ப்.


படம் பார்த்த பிறகு தாரணி பிரிய அக்காவுக்கு போன் பண்ணி தமன்னாவை காதலிப்பாதாய் சொன்னேன், உடனே அக்கா "அப்ப த்ரிஷாவின் கதி?? "ன்னு கேட்டாங்க. நான் பதில் சொல்லாமல் மேகத்தை பார்த்தப்படி கண்களில் இருந்து வந்த கண்ணீரை துடைத்து கொண்டேன்.


(சரிங்க கிடைத்த நேரத்தில் இவ்வளவு தான் எழுத முடிந்தது)


டிஸ்கி 1- சுஜாதாவை படித்தவர்கள் கார்த்திகை பாண்டியனுக்கு இடுப்பு இல்லை என்று சொல்ல மாட்டார்கள்.

டிஸ்கி 2 - தமன்னாவின் இடுப்பை close up ல காட்டி இருப்பாங்க, அதில் இருந்தே நாம் அறிந்து கொள்ளலாம் இந்த படம் ஒரு இலக்கிய படைப்பு என்று.

Sunday, March 21, 2010

தொலைந்த சொர்க்கம் -6

தாஜ்
மும்பை


சர்வீஸ் சென்டரை நோக்கி சற்று குழப்பத்தோடு service entrance யில் யார் டுடியில் இருக்கிறார்கள் என்று பார்க்க போய் கொண்டிருந்தார். இந்த நேரத்துக்கெல்லாம் குப்பத்திலிருந்து கிளம்பிய அவன்
வெளியே சின்ன யானை என்று செல்லமாக அழைக்கப் படும் அந்த லோட் ஆட்டோவில் காத்துக்கொண்டிருந்தான். அவன் ரோட்டின் ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு steering மீது தலை வைத்துக் கொண்டு, ஒரு கையில் மொபைல்யை பிடித்துக் கொண்டு, ஹோட்டல் உள்ளே வரும் இருந்து ஒரு அழைப்புக்காக கத்துக் கொண்டிருந்தான்.

"அங்க போய் நில்லு, ஒரு போன் கால் வரும், அதை attend பண்ணாத, கால் வந்த உடனே service enterance க்கு போய் லோட் இறக்கிட்டு வந்துரு.

"எப்புடி நா மட்டும் பண்ணறது..... லேடாயி மாட்டிகிட்ட. அதுவேற இல்லமா அது பெரிய இடம், செக்யூரிட்டி எல்லாம் இருப்பாங்க."

"டேய் .... நான் சொன்ன வேலைய மட்டும் பாரு. நீ அங்க போற நேரத்துக்கு யாருமே இருக்க மாட்டாங்க. அதுக்கு நா கரண்டி."
என்று சொன்ன சோட்டா தாதாவை நம்பி தான் அவன், முகில் கிருஷ்ணா அங்கே காத்துக் கொண்டிருந்தான். காசுக்காக இல்லாவிட்டாலும் சோட்டாவின் மேல் இருக்கும் பயதிற்க்காகவே பொருட்களுடன் தனது ஏரியாவை விட்டு வெளிய வந்து இருக்கிறான். வழக்கமாய் போலீஸ் பயத்தினால் ஏரியாவை விட்டு வர மாட்டான்.



சோட்டா ராம், தாஜ் ஹோட்டலின் மூன்றாவது தளத்தில் இருக்கும் ஒரு கதவுகள் முடிய அறைக்குள் சோபாவில் உட்க்கர்ந்துக் கொண்டு , ஒரு பீர் பாட்டிலை காலி செய்துவிட்டு, செல்போனில் முகில் கிருஷ்ணாவை அழைத்தான்.

"வந்துட்டியா ?"

"வந்துட்டேன் பாஸ். நீங்க சொன்ன இடத்தில தான் வண்டியை நிறுத்திருக்கேன்"

"சரி"

"பாஸ். இன்னும் miss call வரலையே...."

"வரும். வரும்..... அப்பரும் அந்த missed call வந்தப்பரும் இந்த நம்பரை use பண்ணாத. நா சொன்ன மாதிரி இன்னொருத்தன் பெயர்ல தானே வாங்கி இருக்க?"

"ஆமா"


ஒரு சிகரட்டை பற்ற வைத்து விட்டு, இரண்டு இழுப்புகளுக்கு பின் சயீத் இந்நேரம் சொன்ன மாதிரி செய்து இருப்பானா என்ற சந்தேகத்தில் அவனுக்கு மீண்டும் போன் பண்ணினான்.


service entrance யில் யாருமில்லாததை உறுதி செய்த பிறகு, store room வழியாக
food production யை நோக்கி சென்று கொண்டிருந்த சயீத், அழைப்பு வரவே.

" உங்க பெயர் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா"

"இங்க பாரு. என் பெயரு இப்ப உனக்கு முக்கியம் இல்ல. உன்னோட பொண்டாட்டி உசுரும், பசங்க உசுரும் தான் முக்கியம்"

கொஞ்ச கோவமாக செல்போனை டேபிளில் வைத்த சோட்டா ராம், கொஞ்ச நேரத்துக்கு ஜன்னல் வழிய தெரிந்த நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டு இருந்தார்.

"ராமு......." என்று அவரது தாய் குரல் கேட்கவே கண்களில் கண்ணீருடன் "அம்மா நீ மட்டும் உயிரோட இருந்திருந்த நான் ஏன்மா இப்படி இருக்க போறேன்".


= = = = = = = = = =


திவஸ்


மதிய பிரதேசம்.

ஏதோ ஒன்றை முகர்ந்து பார்த்துவிட்டு ஒடி சென்ற நாய் மீண்டும் வந்து போலீஸ் இருக்கும் பக்கமாய் ஓடி வந்தது.


"எப்புடி சார் கொலை பண்ணினது ஒரு பொம்பளன்னும் அவ மும்பை நோக்கி போறவன்னும் சொல்லுரிங்க..."

"டேய் சில விஷயத்துக்கு எல்லாம் காரணம் கிடைக்காது. ஆனா இப்படி தான் இருக்கனும்ன்ன்னு ஒரு சின்ன guess தான் ...... இதே மாதிரியான கொலை நடந்துகிட்டு வர ஊர் வரிசையை பாரு" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ........


புனே

மித்ரா தாஸ் தன் மீது மோதிச் சென்ற ஆணின் வேர்வை நாற்றத்தில் சற்று மயங்கி, மனதளவில் தன்வசம் இழந்தாள். அது அவளுக்குள் மீண்டும் மீண்டும் ஆணின் ரத்த வாடையை முகர வேண்டும் என்ற ஆசையை துண்டிக் கொண்டே இருந்தது. மும்பை பக்கம் வந்து விட்ட பிறகும் அவளால் அந்த இச்சையை அடக்க முடியவில்லை. புனே மற்றும் மும்பையில் அவள் தெரிந்த முகம் என்பதினால் கலவரப்பட்டு போனாள் .

எதுவும் தப்பாகி விட கூடாது .....


கொஞ்ச நேரம் அங்கு நேரத்தை போக்கலாம் என்று நினைத்தவள், கார் ஸ்டார்ட் செய்த பின் செல்லும் வழிதெரியாமல் மனம் போன போக்கில் காரை செலுத்தினாள்.


யாரோ மண்டையில் கனமான சுத்தியலை கொண்டு தாக்கியதை போல் உணர்ந்தாள்.

டங் டங் டாங் டங் .....

மண்டை குடைச்சல் அவளுக்கு ஜாஸ்தியானது.

= = = = = = = = = =

பட்னா

பீகார்.

"அப்பா போயிட்டு வரேன்பா" என்று தாயின் கையை பிடித்தபடியே தனது தந்தையை பார்த்து சொன்ன கிஷன், துணி பைகளை எடுத்தபடிய வாசலை நோக்கிச் சென்றான்.

"பாருப்பா. லாரி டிரைவர் நம்ம தோஸ்து தான்.... எப்படியும் போக மூணு நாளாச்சி ஆகும், அவர்கிட்ட வெட்கபடாம எத இருந்தாலும் கேள்ளு."

"சரிப்பா. அம்மா கவலபடாதமா.... நம்ம ஊர்ல இருந்து போன நிறைய பேர் அங்க வேல பாக்குறாங்க. அதனால எதாச்சுனாலும் ஆளுங்க இருக்காங்க"

"சரிபா. அப்பாவுக்கு அப்ப அப்ப போன் பண்ணு. மொபைல், காசு எல்லாத்தையும் பத்திரமா வைச்சுக்கோ."

"சரிம்மா, சரிப்பா. போயிட்டு வரேன். அங்க போய் வேல எப்புடி இருக்குன்னு போன் பண்ணுறேன்."

" டேய்."

"என்னமா?"

"போரறது நல்ல கம்பெனியா?"

"அம்மா. தாஜ்மா..ரொம்ப பெரிய ஹோடலு..........."

கொஞ்சம் நேரம் கழித்து, லாரியில் ஏறி மும்பையை நோக்கி பயணமானான் கிஷன்.

= = = = = = = = = =

சென்னை.

"let the shit be always a shit ......."

"இல்ல ஷபேனம்....நான் சொல்லியே ஆகணும்"

"எதபத்தி?""அது வந்து..."

"நீ ஒரு பொண்ண காலேஜ்ல காதலிச்ச, அதானே ..."

"ஆமா. ஆனா ஏன் அவளை ...."

"அதை நீ சொல்ல வேண்டாம்" என்று சொன்னப்படி அவள் என்னை வந்து அணைத்தாள்.

"சரி. இப்போ சொல்லு, நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?"

"அதை நான் மும்பைக்கு வந்து சொல்லுறேன்"

"அட நீயும் மும்பைக்கு போறியா"

"இல்ல போறோம்"

= = = = = = = = = =

திவஸ்,

மதிய பிரதேசம்.

"எப்புடி சார். அவன் முஸ்லிம்ன்னு சொல்லுரிங்க ?"

"look ..... it has been circumcisionated "

"இதனால என்ன சார் பிரயோஜனம்?"

" short list பண்ணலாம்ல"

"சார். இப்பெல்லாம் முஸ்லிம் மட்டும் சுன்னத் பண்ணிக்கிறது இல்லையே.....

= = = = = = = = = =

தொடரும்......

Friday, March 12, 2010

தொலைந்த சொர்க்கம் -5


ருத்திர சேனை அலுவலகம்,
மும்பை.


அவன் கேட்ட கேள்வியை கேட்டதிலிருந்து சிரேஞ்சன் கர்க்கரேவின் முகம் அப்படியே சிவந்து போய்விட்டது. சிரேஞ்சன் தனது தந்தைக்கு பிறகு ருத்திர சேனையின் தலைமையை ஏற்று இருந்தான். இந்தியாவின் சொர்கப்புரியான மும்பை மரத்தியர்களுக்கே என்ற வாதத்தில் நம்பிக்கை வைத்துக் கொண்டு அரசியலில் தனது முதல் அடியை எடுத்து வைக்க நாள் பார்த்துக் கொண்டிருந்தான்.


பொறுமையை இழந்த சிரேஞ்சன் தன் எதிரே நின்று கொண்டு இருந்த ஆட்களைப் பார்த்து ......

"என்னாலும் சரி ... இங்க இருக்கிற ரயில்வே வேலைக்கு நம்ம ஆளுகளை தான் எடுக்கணும் .... எவன் எவனோ வந்து இங்க காசு பாக்குறாங்க, ஆனா நம்ம ஆளுங்க இன்னும் காசுக்கே வழில்லாம இருக்காங்க ....."

மெம்மேலும் வார்த்தை அம்புகளை தொடுத்து அங்கு கூடி இருந்த ஆடு மந்தையை இன போதையை காட்டி தனது கருத்தை ஏற்றுக் கொள்ள வைத்தான்.அவன் பேச்சின் முடிவில் அனைவரையும் ஏதோ பீகார்காரிகள் தான் மராத்தியர்களின் வாழ்க்கையை கெடுப்பதாக எண்ண வைத்து விட்டு, ஜன்னல் பக்கம் போனான் சிரேஞ்சன்.



அங்கே அவன் பார்வைக்கு சர்ச்கேட்கில் இருந்து வந்த கார் அவன் பார்வைக்கு கிடைத்தது. அதில் அமர்ந்து இருந்தவனை பார்த்து காரியம் வெற்றி என்பது போல் விரல் காட்டினான்.


சிரேஞ்சன் கை காட்டிய உடன் அந்த காரில் அமர்ந்திருந்தவன், காரை வேகமாக கிளப்பி கொஞ்ச தூரம் போன பின் ஒரு கடையின் முன் வண்டியை நிறுத்தினான்.


AIRTEL EASY RECHARGE ...... பெயர் பலகையில் எழுதிருந்ததை படித்தபடி உள்ள சென்றான்.இரவு நேரமானதால் கடைக்காரன் தூக்கக் கலகத்தில் இருந்தான்.

"ரீ- சார்ஜ். நூறு ரூபாய்க்கு...."

"நம்பர் சொல்லுங்க"

நம்பர் குறித்துக் கொண்டு ரீ-சார்ஜ் செய்தான்.

"சார், செக் பண்ணிகொங்க...."

"எனக்கு இல்லைங்க....தெரிஞ்சவருக்கு ....."

அந்த தெரிந்தவன் கடையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் குப்பத்தில் இருந்தான்.அவன் மொபைல் ரீ சார்ஜ்யான உடன், கையெறி குண்டுகள், தூப்பாக்கிகள், அதற்க்கான தோட்டாக்கள் நிரப்பிய மாட்டு கரி , ஆட்டு கரி லோட் கொண்ட வண்டியை தாஜ் ஹோட்டல் நோக்கி ஸ்டார்ட் செய்து, கிளம்பினான்.


= = = = = = = = = =

ஷபேனம். இன்று இரவு என்னை தாக்கிய புயல்.அவளுக்கு எனது முதல் காதலை பற்றி தெரியுமா தெரியாதா என்ற குழப்பத்தில் கொஞ்சம் தீவிரமாக யோசித்து கொண்டிருந்தேன்.அவளிடம் என் காதலை சொன்ன பிறகும் ஷாபியவின் நினைவுகள் என் மனதைவிட்டு போகவில்லை.


உடல் அடுத்த வேளை புணர்வு தயாராகி விட்டாலும், மனம் உண்மையை சொல்ல தயாராகவில்லை.ஷபேனம், night linen clothes யில் அவயங்கள் தெரிய தேவதையாய் அறையில் அங்கும் இங்கும் RD BURMAN யை கேட்டபடி என் உள்ளத்தில் உள்ள காதலை மேலும் மேலும் வளர்த்து கொண்டு இருந்தாள்.

Nature has shaped her appropriately .... she was damn hot

= = = = = = = = = =

தாஜ்
மும்பை.


தனது ஆபீஸ் ரூமில் பதட்டமாய் சயீத் அங்கும் இங்கும் நடைப் போட்டுக் கொண்டு இருந்தார்.எதிர்ப் பார்த்தப்படிய தாதாவிடமிருந்து செல்போன் அழைப்பு வரவே. எடுத்து பேசினான்.

"சார். சொன்ன புரிஞ்சுகொங்க. purchase indent இல்லாம, எதையும் உள்ளே கொண்டு வர முடியாது. அதுவும் மாட்டு கரிக்கெல்லாம் chef கிட்ட இருந்து ஆர்டர் வரணும்."

"கள்ள தனமா கொண்டு போயிரு..."

"இல்லைங்க... store room ledger யை chef shift wise வந்து செக் பண்ணுவாரு...."

"அப்படி வந்த பெரிய பிரச்சனை ஆகிரும். நீங்க என் பெயரே இதில வராதுன்னு தானே சொன்னிங்க ......"


"அடடா... நீ மட்டும் இத பண்ணிரு, நீ ஏதோ project வைச்சு இருக்கியமே , அதுக்கு நான் காசு தரேன், இல்லாட்டி நான் சொன்னது தான் நடக்கும் ..."


கொஞ்ச நேர மௌனமாய் இருந்துவிட்டு " சரி பண்ணுறேன்".


விரித்த வலையில் மீன் சிக்கியதை எண்ணி சந்தோஷமாய் தாதா போனை வைக்கவே மேலும் பதட்டம் ஆனார் சயீத்.

= = = = = = = = = =

Devil's eye ஆபீஸ்

மும்பை .


" அதெல்லாம் தெரியாது. யாரையாச்சு பலி போட்டே ஆகணும். it will make wonders in trp "


இதைக் கேட்ட பின் ஷனந்து யாரை அதற்க்கு பிக்ஸ் செய்தால் மக்கள் வருத்த படுவார்கள் என்றெண்ணியவாறு நின்றுக் கொண்டு இருந்தான்.


"சார்" என்று அழைத்தபடிய விவிதி அவனை நோக்கி வந்துக் கொண்டு இருந்தாள்.அப்பொழுது தான் அவளுடைய நிகழ்ச்சி தான் தொடர்ந்து prime time rating யில் ஹிட் அடித்து கொண்டிருப்பது அவனுக்கு ஞாபகம் வந்தது.


காயம் பட்ட உதட்டை தடவிய படி அவளை பார்த்து மர்மமாய் சிரித்தான் ஷனந்து.

= = = = = = = = = =

தொடரும் .....

Thursday, February 25, 2010

கலவை

எனக்கு 49 வயதில் இறக்க வேண்டும்ன்னு ஆசையா இருக்கு. அது ஏன்னு தெரியல சின்ன வயசில் இருந்தே இப்படி ஒரு எண்ணம். எனக்கு இறப்பை கண்டு பெரிய அளவில் பயம் ஒன்றுமில்லை ஏனென்றால் நான் என்னுடைய பிறப்பை பெரியதாக கொண்டாடுவது இல்லை. யார் ஒருவன் அவனது பிறப்பை பற்றி பெருமிதம் கொள்கிறானோ அவனுக்கே இறப்பை பற்றிய பயம் அதிகமாக இருக்கும். நாம் ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டே தான் வாழ்கிறோம். நாம் பிறந்ததே இறப்பதற்கு தான். அதனால் ஆணவம் இல்லாமல் மனிதனாய் வாழ பழகி கொள்ளுங்கள்.

= = = = = = = = = =

THE SEVENTH VOYAGE OF SINBAD ....1958 லில் வந்த படம். FANTASY வகைறவை சேர்ந்தது. கதைன்னு ஒன்னும் பெருசா இருக்காது. ஆனால் இதில் வரும் மாயஜால காட்சிகளுக்காகவே ஒரு முறை பார்க்கலாம். அதுவும் அந்த காலத்திலையே குறைந்த தொழில்நுட்ப வசதிகளை கொண்டு சிறந்த முறையில் ANIMATION காட்சிகளை உருவாக்கி உள்ளார்கள். ஒத்த கண் ராட்சசன், அடிமை டிராகன் , ஒரு அடி உயர இளவரசி என்று உங்கள் வீட்டு குழந்தைகளின் ரசனைக்கு ஏற்ற படம்.

இந்த படத்தின் இன்னொரு விஷயம் என்னவென்றால் எப்பொழுதும் அலாவுதீன் கையில் இருக்கும் அற்புத விளக்கை சிந்துபாத் கையில் தந்து இருக்காங்க. மேலும் ஜினியை ஒரு கதாபாத்திரமாக காட்டி இருக்காங்க, கடைசியில் ஜினி விளக்கில் இருந்து விடுதலையாகி மனிதனாய் மாறி சிந்துபாத் கப்பலில் சேர்ந்து விடுவார்..... (தினத்தந்தி சிந்துபாத் கதை முடிந்து விட்டதா ???)

= = = = = = = = = = =

சேத்தன் பகத் தனது அடுத்த கதை எழுத ஆரம்பிச்சிட்டாராம். வித்தயாசமான காதல் கதைன்னு ட்விட்டர் ல சொல்லி இருக்காரு. பார்போம். இவருடைய 2 STATES தான் நான் அதிகம் சிரித்துப்படி படித்த புத்தகம். அதில் ஒரு இடத்தில மாப்பிள்ளைக்கு மாமனார் பஞ்சகச்ச வேஷ்டி கட்டும் பொழுது ....ஒரு டயலாக் எழுதி இருப்பார் பாருங்க வாய்ப்பே இல்லை .......அவ்வளவு காமெடி.

= = = = = = = = = = =

BUSINESS LAW பற்றிய எளிய அறிமுகம் வேண்டுவோருக்கு RSN PILLAI and BHAGAVATHY இதே தலைப்பில் எழதிய புத்தகம் உபயோகமாக இருக்கும் .....என்ன படிக்க தான் கொஞ்சம் SCHOOL GUIDE மாதிரி இருக்கும்.

= = = = = = = = = =

இப்ப நான் படித்து கொண்டு இருப்பது ADAM SMITH (பொருளாதாரத்தின் தந்தை ... (தாய் கட்டாயம் அவரது மனைவியாக தான் இருக்க வேண்டும் ஏனென்றால் அவருக்கு சின்ன வீடு மற்றும் set up கள் இருந்ததாக குறிப்பு எதுவுமில்லை )) எழுதிய THE WEALTH OF NATIONS . ஏறக்குறைய மூந்நூறு வருஷங்களுக்கு முன்னாடி எழுதப்பட்டது. பொருளாதரத்தில் ஆர்வமுள்ள எல்லோரும் படிக்க வேண்டிய புத்தகம் இது, ஆனால் ரொம்ப TECHNICALA இருக்கும். நான் இப்ப தான் பைசா வந்த கதையை படித்து முடித்தேன். அதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. அவ்வளவு DRY .

இந்த புத்தகத்தை எனக்கு படிக்க தந்த ராஜேஷை பற்றி கொஞ்சமாவது சொல்லியாக வேண்டும். எந்த புது புத்தகம் வாங்கினாலும் அவர் படிக்குமுன் என்னை படிக்க சொல்லி தருவர்.(பிரியம் எல்லாம் இல்லைங்க..நான் தரும் இம்சை தங்காமல் தான் தருவாரு). இவர் இங்க நிறைய படிச்சிட்டு, இங்கிலாந்துக்கு போய் இன்னும் அதிகமாக செலவு செய்து இன்னும் அதிகமாக படிச்சிட்டு ....."என் திறமை முழுவதும் இந்தியாவுக்கு தான்" அப்படின்னு வீரமா வந்தாரு..... வந்த மூன்றே மாதங்களில் ரொம்ப நொந்து போய் "மேவி நான் இந்தியாவுக்கே வந்து இருக்க கூடாது ...அங்கேயே இருந்திர்க்கனும்....." சொல்ல (புலம்ப) ஆரம்பிச்சிட்டாரு .......

= = = = = = = = = =

சுஜாதா ...எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். முதலில் இவர் சினிமாவுக்கு எழுதும் வசனங்களை கேட்டு தான் இவரது ரசிகர் ஆனேன். பிறகு பொதிகையில் (பத்து வருடங்களுக்கு முன்) " கொலை உதிர் காலம் " தொடராக வந்த பொழுது தான் இவர் என் ஹீரோவனர். இவரது "ஸ்ரீ ரெங்கத்து தேவதைகள் " ....CLOSE TO MY HEART .

சமீபத்தில் தாரணி அக்கா சொன்னதினால் "பிரிவோம் சந்திப்போம்" படித்தேன் (உபயம் : ராஜேஷ் ) ...அப்பிடியே உருகி போயிட்டேன். எனக்கு BRANDING மேல் ஆசை வந்ததிற்கு இவர் எழுதிய ஒரு கட்டுரை தான் காரணம் .

= = = = = = = = = =

கொஞ்ச நாள் முன்னாடி எனது சொந்தக்காரர் ஒருத்தர் நித்யானந்தரின் "ஜீவன் முக்தி" பரிசாக தந்தார் ( எங்க குடும்பத்தில் இருக்கிற எல்லோருக்கும் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உண்டு, என்னை தவிர).... நல்ல ENGAGING யாக தான் எழுதிருக்கார். அதிலும் ஆன்மீகவாதிகள் "முக்தி பக்திக்கு அடிப்படை" என்ற CHAPTERயை கட்டாயம் படிக்க வேண்டும். (ஆன்மீகத்தில் நாட்டம் இல்லாதவர்கள் பின்னூட்டத்தில் கிண்டல் அடிக்கவும்)

= = = = = = = = = =

வர வர குமுதத்தை படித்தாலே ஏதோ இன்டர்நெட்யை படிப்பது போல் உள்ளது . இல்லாட்டி அவங்க தருகிற மேட்டர் எல்லாம் ஏற்கனவே படித்தது போல் இருக்கு. விகடனுடன் போட்டி போடுவதை நிறுத்தி விட்டு .....இவர்களின் CONTENT மேல் கவனத்தை செலுத்தினால் நல்ல இருக்கும்.

அதே மாதிரி தான் "புதிய தலைமுறை" யும், வர வர அவர்களின் CONTENT யை பார்த்தாலே ரொம்ப குழம்பி போய் இருக்காங்கன்னு தெரியுது. வரும் காலங்களில் இதுவும் இன்னொரு வார இதழ்யாகி விடுமோ என்று கொஞ்சம் யோசனையாக இருக்கு.

= = = = = = = = = =

கார்க்கி ரசிகர் மன்ற முதலாம் ஆண்டு கூட்டம் போன வாரத்தில் வெற்றிக்காரமாக நடந்தது. கூட்டத்தில் பேசிய "கோவை கார்க்கி ரசிகர் மன்ற" தலைவர் பிரபு அவர்கள் ட்விட்டரில் கார்க்கி எழுதும் "தோழி அப்டேட்ஸ்" மிகவும் ரசிப்பதாய் சொன்னார். டெல்லி ரசிகரான அப்பாஸ் கார்க்கி எங்கே இலக்கியவாதியாக மாறி விடுவரோ என்ற தனது பயத்தை வெளிக்காட்டினர். (மேலும் விவரங்களுக்கு என்னை தொடர்பு கொள்ளுங்க)

= = = = = = = = = =

கோவா படத்தை பார்த்தப் பிறகு பியாவை காதலிக்காமல் இருக்க முடியவில்லை. த்ரிஷா சொன்ன மாதிரி கனவுல வரல, அதனால் அவங்களை கை விட்டாச்சு (ONLY SINGLE MEANING ) ..... ஆனாலும் நமீதா தான் என் கனவுக் கன்னி ...அதில் எந்த வித மாற்று கருதும் இல்லை.

= = = = = = = = = = =

கார்த்திகை பாண்டியன் அவர்கள் காதலர்கள் தினத்தின் போது எனக்கு போன் பண்ணினாரு ..... நான் ரொம்ப பயந்துப் போயிட்டேன், நான் அந்த மாதிரி ஆளு இல்லைங்கன்னு சொல்லலாம்ன்னு பார்த்தேன். நல்ல வேளையாக வாழ்த்துக்களை மட்டும் சொன்னாரு

வானவில் கார்த்திக் கேட்டு கொண்டதின் பெயரில் நானும் ட்விட் பண்ண ஆரம்பிச்சாச்சு.

= = = = = = = = = =

பிகு : இந்த பதிவில் இடைச் சொற்க்களை நான் அதிகம் உபயோக படுத்தவில்லை, அதனால் இலக்கியவாதிகள் என்னை மன்னிக்கவும்

Monday, February 22, 2010

தொலைந்த சொர்க்கம் -4

பகுதி - 4
= = = = = =
தாஜ்
மும்பை


சயீத் தாதாவிடம் இருந்த தொலைப்பேசி அழைப்பை எதிர் நோக்கி காத்திருந்த சமயத்தில் வேறு இரு நபர்கள் பதட்டத்துடன் திருட்டுத் தனமாய் வேலைப் பார்த்துக் கொண்டு இருந்தனர். இன்னும் மூன்று அல்லது நான்கு நிமிடங்களில் அழைப்பு வரும் என்று அவருக்கு தெரிந்து இருந்ததால் அவரால் இயல்பாய் இருக்க முடியவில்லை. சுவாசம் கூட அவரது சக்திக்குள் இல்லை.

அதே கட்டடத்தில் மூன்றாம் தளத்தில் ஒருவன் CCTV கேமராக்கள் இருக்கும் இடங்களை நோட்டம் விட்டுக் கொண்டும், ENGINEERING DEPARTMENT யில் இன்னொருவன் அந்த ஹோட்டலின் MAP , BLUE PRINT யையும் ஜிராக்ஸ் எடுத்து கொண்டும் இருந்தனர்.

= = = = = = = = = =


புனே

அவள் புனேவில் உள்ள ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் எதிரில் தனது காரில் அமர்ந்தப்படிய அங்கு வருவோர் போவோரை நோட்டம் விட்டு கொண்டு இருந்தாள். அப்பொழுது அவளது செல்போன் தன இருப்பதை உணர்த்த ஒலியை ஒளியுடன் வெளியிட்டது.

டிஸ்பிளேவை பார்த்தாள். தெரியாத நம்பர்.

யாராக இருந்தாலும் பேசிவிடலாம் என்று நினைத்தவாறு எடுத்தாள்.

"ஹலோ...?" என்றாள் கேள்விக்குறியுடன்

"டாக்டர் ....."

"ya .... hope that you are aware that you are speaking to an gynecologist ..."

அதற்க்கு பதில் வந்த உடன்

"sorry ..... am on leave "

என்றுச் சொல்லி வைத்தாள் மித்ரா தாஸ்.

= = = = = = = = = =

ஷபேனம்....இப்பொழுது என் முன் ஒரு புரியாத புதிராய் உலவிக் கொண்டு இருந்தாள். என் காதலை ஏற்று கொண்டாளா இல்லையா என்ற குழப்பத்துடன் நான் அமர்ந்து இருந்தேன்.

கவிதை எனக்கு வாசித்துப் பழக்கமில்லை, ஆனால் எனக்கு இப்ப ஒரு கவிதை வாசிக்க வேண்டும் என்றது போல் இருந்தது. கட்டிலிலிருந்து எழுந்து போய் Leona Lewis யை நிறுத்திவிட்டு RD Burman யை இசைக்க விட்டாள்.

I was feeling nude and there was alot to be felt tonight .


= = = = = = = = = =

சர்ச்கேட்

மும்பை

போலீஸ் ஸ்டேஷனில் இருந்து இயலாமை உடன் வெளிய வந்த அவர் ...... இல்லை இல்லை அந்த மாதிரியான முக பாவனை உடன் வெளிய வந்த அவர் .....

எதிரில் காரில் அமர்ந்து இருந்தவனை நோக்கி வெற்றி என்பது போல் கை காட்டினார்.


= = = = = = = = = =

Devil's eye ஆபீஸ்
மும்பை .

ஷனந்து கொஞ்ச தூரம் போன பிறகு தனது செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டு இருந்தான்...

"அப்ப யாரையாவது பலி போட்ட TRP இன்னும் ஜாஸ்தி ஆகுமா ???"

"....."

"ஆனா எப்புடி ...அவங்க நல்ல முன்னேறினா பிறகு தானே ......"

தொடரும் .....

Friday, February 19, 2010

தொலைந்த சொர்க்கம் -3

பகுதி -3

Devil's eye ஆபீஸ்
மும்பை .

அந்த நியூஸ் சேனலின் MD தனது அறையில் தன் எதிரில் அமர்ந்து இருந்த அந்தச் சேனலின் டாப் நியூஸ் ரிப்போர்ட்டர்களை பார்த்தபடி ;
"எல்லோரும் வந்தாச்சா ???" என்று கேட்டார் ஷனந்து ஷர்மா.
"இல்ல சார். விவிதி இன்னும் வரல" என்று அங்கு அமர்ந்து இருந்த ஏழு ரிப்போர்ட்டர்களில் ஒருவன் சொன்னான். ஷனந்து தனது வழக்கமான கெட்ட வார்த்தைச் சொல்லும் முன் .....

கதவின் அருகே,
டெல்லி பல்கலைகழகத்தின் முதுநிலை பட்டம் வந்து நின்றது மன்னிக்கவும் பட்டம் வாங்கியவள் வந்து நின்றாள்.
"சாரி சார்" என்றபடி வந்து அமர்ந்தாள் விவிதி. வாழ்க்கையில் தனது லட்சியக் கனவுக்காக எதையும் இழக்க தயாராக இருப்பவள். ஏனென்றால் அவளுக்கு என்று தனிப்பட்ட நம்பிக்கைகள் எதுவும் இல்லை.

"இன்னும் கொஞ்ச நாள்ல மும்பையில் பெரிய அளவில தகுதல் ஒன்னு நடக்க போரறதா உளவுத்துறை ஸ்மெல் பண்ணி இருக்காங்க. சோ நாம் எதையும் சமாளிக்க தயாராக இருக்கனும். நான் ஒரு வீக் நடக்கும்ன்னு என்று எதிர்ப்பார்க்கிறேன். Are we fit for it?"
"முடியும் சார். அனா இன்னும் கொஞ்சம் வசதி வேண்டும் சார்"
"எனது??"
"நாம சிஸ்டம் கொஞ்சம் வீக்யாக இருக்கு சார். tele-conference ல அப்ப அப்ப வாய்ஸ் பிரேக் ஆகுது சார். போன ப்ராஜெக்ட்ல கூட இதே பிரச்சனை தான் சார். அதான் அப்ப TRP கம்மி ஆகிருச்சு"
"அது சில நொடிகள் தானே"
"அதுக்குள் வேற சேனலுக்கு வாய்ப்பு போயிரும் சார்"
"சரி. வேற என்ன இருக்கு"
"பார்த்து தான் சொல்லனும் "

"சரி. இதை கொஞ்சம் லீக் ஆகாமல் பார்த்துகோங்க. நெதர்லாந்து brands சிலது இந்தியாவுக்கு வருது. அதனால மார்க்கெட்டிங் department TRP இருந்த அந்த promoting ப்ராஜெக்ட் நாமக்கு தான்னு சொல்லி இருக்காங்க. பத்து கோடி கிட்ட assured ROI"
"சரி சார். நாளைகே இதப் பற்றி ரிப்போர்ட் தரோம்"
"அது மட்டும் இல்லை. நாளை முதல் நீங்க எல்லோரும் டெய்லி ஒரு கவர் ஸ்டோரி தரனும். எதுக்கு ரேடிங் ஜாஸ்திய இருக்கோ அவங்களுக்கு தான் இந்த ப்ராஜெக்ட்"
நட்பு இருந்த இடத்தில பகமை உணர்வுடன் கலைந்து சென்றனர். எல்லோருக்கும் அந்த ப்ராஜெக்ட் அவங்க வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்பது தெரிந்து இருந்தது.
விவிதி மட்டும் அங்கேயே நின்று கொண்டு இருந்தாள். வாழ்வில் அடுத்த நிலைக்கு போகும் நேரம் இது என்று உணர்ந்து இருந்ததால் இந்த ப்ராஜெக்ட்யை கை விட அவளுக்கு மனமில்லை.
கொஞ்ச நேரம் கழித்து, வெற்றிகரமாய் ப்ராஜெக்ட் கிடைத்த சந்தோஷத்தில் சோர்வாக வெளியே வந்தாள்.

கொஞ்ச தூரம் நடந்து போனவளை ......

"hey ..... confirm that uplinks are on smooth mode ...???"


= = = = = = = = = =

சயீத் கொஞ்சம் அல்ல ரொம்பவே பதட்டமாய் தான் இருந்தார் எந்நேரமும் அவருக்கு அந்த தாதாவிடமிருந்து அழைப்பு வரும் என்பதால் தான்.

அப்பொழுது அவரது செல்போன் ஏதோ ரஷ்ய நாட்டின் இசையை வெளியிட்டது.

ஒரு மினிஷம் பயத்துடனே எடுத்து டிஸ்பிளேவை பார்த்தார்.

மும்பை நம்பர் இல்லை. அவரது மனம் கொஞ்சம் சாந்தமானது. பீகார் நம்பர்.

பேசியது கிஷன் ......

"ரொம்ப நன்றி சார் ......"

"நன்றி எல்லாம் இருக்கட்டும் ...இன்னும் நாலு நாள் தான் இருக்கு வேலைல சேர...சிக்கரம் வந்து சேரு...."

இந்த மாதிரியான சிறுச் சிறு உதவிகள் தான் அவரது வாழ்க்கையில் கொஞ்சமாவது நிம்மதி தந்துக் கொண்டு இருப்பதாய் நம்பிக் கொண்டு இருந்தார். மற்ற நேரங்களில் எல்லாம் மாதம் முதல் தேதி வந்தாலே அந்த மாதம் கட்ட வேண்டிய due க்களிலே மனம் போய்...பயம் திரும்பி வருகிறது அவருக்கு.

இன்னும் அவர் எதிர்ப் பார்த்த அழைப்பு வரவில்லை. ஒரு நிமிஷம் அவரது மனைவியும் குழந்தைகளும் அவர் கண் முன்னே வந்து போனார்கள்.


= = = = = = = = = =

ஷபேனம் என்னைப் பார்த்து மர்மம் கலந்த வெட்க சிரிப்பை ஒன்றை தந்தாள். எனக்கு அதைப் பார்த்தப் பிறகு அவஸ்தையாய் இருந்தது.

மெல்ல மெல்ல என் அருகே வந்து , தோல் மீது கை போட்டப்படியே ....

"give me some time baby " என்று சொன்னாள்.



கொஞ்ச தூரம் போனவள் திரும்பி என்னை பார்த்து ....

"and also dont use safety here afterwards ....." என்று சொல்லியப்படி நான் மீதி வைத்து இருந்த காண்டங்களை குப்பை தொட்டியில் போட்டாள்.




தொடரும் .....

தொலைந்த சொர்க்கம் -2

பகுதி -2

தாஜ்,
மும்பை.

அன்று காலையிலிருந்து கொஞ்சம் பதட்டமாய் தான் இருந்தார் அந்த ஹோட்டலின் PURCHASE MANAGER சயீத். நேற்றுயிலிருந்தே இப்படி தான். அதுவும் ஒரு பெரிய தாதாவிடம் இருந்து கொலை மிரட்டல் வந்தால் எப்படி நிம்மதியாய் இருக்க முடியும்.

பரபரப்பான மனநிலமையுடன் தனது அலுவலகம் நோக்கி சென்று கொண்டு இருந்தார். மனிதனின் அறிவு குரங்காய் மாறும் வயதில் அவரிருந்தார். 40 ........ பார்பதற்கு 34 போல் இருந்தார்.

= = = = = = = = = =


சர்ச்கேட்
மும்பை
போலீஸ் ஸ்டேஷனுக்கு அந்த இரவில் கொஞ்சம் தயக்கமாய் தான் அந்த வயதான ஆள் நுழைந்தான். அங்கே இருந்த ஹெட் கான்ஸ்டபிள் அருகே போய் ......
"சார்...."
"என்னயா??"
"சார். யார்ன்னு தெரியல தொடர்ந்து முன்னு நாளா யாரோ சில பேரு பீச் பக்கமா சந்தேகமா சுத்திகிட்டு இருக்காங்க சார்"
"யார்ன்னு தெரியுமா?"
"வெளிநாட்டுகாரங்க மாதிரி இருக்காங்க சார்"
"யோவ். அது டூர்ரிஸ்ட்யாக இருக்கும்"
"இல்ல சார். பார்த்த அப்படி தெரியல சார்"
"பின்ன ...."
"எனக்கு சந்தேகமா இருக்கு சார்"
"அதுக்கு?"
"நீங்க வந்து பார்க்கனும் சார்"
"உன் சந்தேகத்துக்கு எல்லாம் நாங்க வர முடியாது... போ போ....."
"சார்........"
"இப்போ நீ போகலன்ன உன்னை சந்தேக கேஸ் ல உள்ள தள்ளிருவேன்"
அவன் ஏமாற்றத்துடன் என்ன செய்வது என்று தெரியாமல் வெளியே சென்றான்.

= = = = = = = = = =

பிளாசா ஹோட்டல்

நியூயார்க்
காலியாக இருந்த அந்த பாரில் இருட்டின் மறைவில் இருவர் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.
"இது அவசியமா???"
"அவசியமோ ...... அவசியம் இல்லையோ ; காசு வாங்கியாச்சு. செய்துதான் அகனும்."
"சரி. இதில டிவி நியூஸ் சேனல் ஆளு எப்படி வந்தான்???"
"எல்லாம் TRP செய்ற வேலை தான். viewership ஜாஸ்தி ஆச்சுனா ....... அவனுக்கு லாபம் தானே"
"௦ஓகோ..... இப்படி போகுதா சங்கதி"
"சரி சரி ...... வெளில போகும் பொழுது ..... நான் சொன்ன ஹோட்டல் ல அந்த பெயர் ஒரு ரூம் புக் பண்ணிரு.....அது தான் CODE WORD . ...."
"சரி அப்பரும் ...."
" நீ இத பண்ணு முதல"

= = = = = = = = = =


"ஏன்......என்ன திடிர்ன்னு கேட்குற?" என்று கேட்டப்படி ஷபேனம் அருகே போனேன்.

"sources say that something is going to wrong "

"aa .... sources ...... many a times they have proved that they are only shit.. nothing else"

"ok , leave them .... but we have been ordered to slow down the projects in mumbai for quiet sometime"

அவள் தந்த காப்பியை குடிதப்படிய அவள் சொன்னதை நம்ப மறுப்பதாய் தலையாட்டினேன் ...

"no anand ...you have to be serios in this ...."

குளித்து முடித்தப் பிறகு ....அமைதியாய் இருந்த மனம், அவளுடன் கொண்டு இருந்த அறு மாதக் கால நட்பு தற்பொழுது காதலாக மாறி இருந்த சமயத்தில் அவளுக்காக அவள் சொன்னதை யோசிக்க தூடங்கியது. ஆனால் அதை விட எனது காதலை அவளிடம் எப்புடி சொல்வது என்பதே எனக்கு பெரிய யோசனையாக இருந்தது.

சற்று நேரம் ஆழமாய் யோசித்தப் பின் எதிர் சோபாவில் உட்கார்து இருந்த அவளை பார்த்து மிகுதியான தவிப்புடன் கேட்டேன் ....

"shabenam . "

"what ??"

"will you marry me "

= = = = = = = = = =

இந்திய - பாகிஸ்தான் எல்லை

அவன் எதிரே பருவ வயதில் இருக்கும் நான்கு விடலை வாலிபர்கள் அமர்ந்து இருந்தார்கள்.


அப்பொழுது அவன் மயக்கும் குரலில் .....


"இதை செய்தால் எல்லாம் வல்ல இறைவன் சந்தோசபடுவான் ; உங்களுக்கு சொர்க்கத்தில் 14 கன்னி பெண்களை பரிசாக தருவான்"


"உண்மையாகவா!!"


"ஆமம். அது மட்டும் அல்ல. உங்களுக்கு மறுபிறப்பில் நீங்கள் அமெரிக்காவில் பெரிய பணக்கரனாய் பிறக்க அருள்புரிவான்"


விடலைகள் கற்பனையில் மிதந்துக் கொண்டு இருப்பதை கண்டு அவன் மர்மமாய் சிரித்தான். அந்த விடலைகளுக்கு மத சொற்பொழிவை விட அவருடைய இந்த பேச்சு ரொம்ப சந்தோஷத்தை தந்தது. ......

தொடரும் .....

Wednesday, February 17, 2010

தொலைந்த சொர்க்கம் -1

= = = = = = = = = = = = = = = = = = = =

பகுதி - 1

சென்னை, தமிழ் நாடு.
இரவு :09 :00

அவள் சிரித்தபடிய அவளுக்காக கார் பார்கிங்கில் காத்து கொண்டு இருந்த என்னை நோக்கி வந்தாள். அவளும் நானும் ஒரே ஆபீஸ். அன்று முழுவதும் இருவரின் கண்களும் அடிக்கடி சந்தித்துச் சிரித்துக் கொண்டன. இரவு நேர தென்றல் ; அவளை பார்த்தப் பிறகு என்னை ஏதோ இம்சித்தது.
சென்றோம் ; சென்னையில் உள்ள ஓர் பிரபல ஹோட்டல் பார்க்கு. singles bar , அதனால் எங்களுக்குள் தயக்கம் இல்லை.
அமர்ந்த பிறகு .....
"B-52 with vodka " என்று சொன்ன பிறகு என்னை பார்த்தாள்.
"Manhattan" என்றேன் நான்.

= = = = = = = = = =

திவஸ், மதிய பிரதேசம்.

மும்பை நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கிடந்த அந்த பிணத்தை சுற்றி போலீஸ் நின்று கொண்டு இருந்தது. ஆண் பிணம். ஆனால் அதனுடைய பிறப்பு உறுப்பு தனியாக ஐந்து அடி தூரத்தில் ஈ மொய்தப்படி கிடந்தது.

"சார் எப்புடி, இத ஒரு பொண்ணு தான் கொலை செய்ஞ்சு இருப்பன்னு சொல்லுரிங்க??" என்று கேள்விக் கேட்ட படிய தனது சீனியரை பார்த்தான்.

"some girl have cumed on him " என்று அந்த பிணத்தினுடைய தொடை பகுதிகளை காட்டியப்படி சீனியர் சொன்னார்.

அப்பொழுது புதருக்குள் இருந்து வந்த நாய் ஓன்று ஆந்த உறுப்பை முகர்ந்து பார்த்துவிட்டு ஓடி சென்றது.

= = = = = = = = = =

கிடைத்தது நான் சொல்லியது. ஒரு sip க்கு பிறகு அவளைப் பார்த்தேன் ; மந்தகசமாய் சிரித்தாள். 555 pac லில் இருந்து ஒரு cigar எடுத்து பற்ற வைக்க போன்னேன்.
இதை பார்த்த பார் செக்யூரிட்டி என் அருகே வந்து.....
"sir. smoking is prohibited here"
"ok. is there any smoking zone near by??"
"no"
வேறு வழி இல்லாமல் ஐம்பது ரூபாய் தந்தேன் ; அவன் வாயை முடி கொள்ள.
"shabenam. cigar??"
"its not my brand"என்று சொல்லியேவரே தனது கை பையில் இருந்து எடுத்தாள் menthol flavor. 120 mm ; பெண்களை குறிவைத்து சந்தையிட பட்டவை. அந்த flavor எனக்கு பிடிக்காது. மது அருந்திய பின்.....
பேசினாள்.
அவளின் பருவகால காதலை பற்றி ,காதலனின் தந்தையுடன் அவளுடைய தாய் கொண்டு இருந்த கள்ளக்காதலை, அதனால் அவள் அடைந்த அவமானத்தை பற்றி,
இதனால் அவளின் காதல் எவ்வாறு தோற்றது,
அவள் இருக்க ; வேறு ஒருத்தியுடன் அவனுக்கு நடந்த விருபபமில்லாத கல்யாணம்,
மனதைத் தேற்ற படிப்பில் கவனத்தை மாற்றியதை......
எல்லாம் சொன்னாள்.
கேட்க கேட்க எனக்கு அவள் மேல் இருந்த காமம் போய் ; ஒரு வித பரிதாபம் ஏற்பட்டது.


ஏறக்குறைய அவள் வாழ்கையும் என் வாழ்கை போலவே இருந்தது. நானும் என் சொர்கத்தையும் தொலைத்து விட்டேன். சுழ்நிலை கைதியாக இருந்த பொழுது ஏற்பட்ட தோல்வி.இன்று நான் சமுதாயத்தில் ஒரு நல்ல நிலையில் இருந்தாலும் ; அன்று கல்லுரி முடித்த நிலையில் என்னால் ஒரு வாக்குறுதி தர முடியவில்லை.அதன் பிறகு மேலப் படிப்பு படித்து, பிறகு ஒரு அமெரிக்க கம்பெனியில் வேலை கிடைத்தது ; இங்கே இப்பொழுது ஒரு உத்தர் பிரதேச அழகியுடன் இருக்கிறேன்.



எனது சிவிக் காரில் அவள் குடி இருக்கும் apartment க்கு வந்துயடைந்தோம்.
கார் பார்கிங்யை நோட்டம் விட்டபடி ; அவளிடம்
"hey will my car find a place here"
"look for my lot"
“hmm. What happened to your car?”
“its in the office itself. But don’t worry the keys are with me and have asked anna to have a look on it”
“oh, that drunkard. Do you still believe him?”
“yap. What to do”
“where is your lot”
“over there”

அவள் flat அருகே வந்ததும் ; அவள் கதவுகளை திறந்தாள்.
அவள் கதையை கேட்டபின் அன்று இரவு பிளான் செய்தபடி ஏதும் செய்ய தோன்றவில்லை.உடலில் எழுச்சி இல்லை.
மனம் ஒரு வித மயான அமைதியில் இருந்தது.
"சரி ஷபேனம். நான் வரேன்."
"என்னாச்சுப்பா" என்றாள் அவளின் மழலை தமிழ்யில். அதற்கே நான் என்னிடத்தில் இல்லை. சொக்கி போகிவிட்டேன்.
"இல்லை...... இன்று வேண்டாமே..."
"இல்லை இன்று நீ எனக்கு வேண்ணும்"
மறுப்புடன் நான் செல்ல எத்தனித்த போது என் சட்டையை பிடித்து இழுத்தாள்.அவள் இழுத்த வேகத்தில் நான் அவள் மேல் மோதினேன்.
அருகே வந்த அவள் எனது இரு கன்னங்களையும் நக்கினாள். பிறகு எனது உதட்டை கவ்வினாள்.
சிறிது நேரம் என் உதடுகள் அவள் உதடுகளை அடக்க முயற்சித்தது. அவ்வாறே அவள் உதடுகளும்.

நாவுகள் நலம் விசாரித்து கொண்டன.
கதவை முடிவிட்டு.
சென்றோம் கட்டிலுக்கு.
முதலில் அவள் ஆளுமையில் நான்.
பிறகு என் ஆளுமையில் அவள்.
அவள் என் ஆளுமையில் இருந்த போது ஏன்னோ கண்ணதாசன் எழுதிய " உனக்கும் கிழே ; உள்ளவர் கோடி ; நினைத்து பார்த்து நிம்மதி நாடு:" என்ற வரிகள் நினைவுக்கு வந்தது.
சிரித்தேன்.
அவளும் சிரித்தாள்.
அந்த சிரிப்பினால் என் மனதிற்குள் தீபாவளி.
அப்பொழுது ஷபேனம் முகத்திற்கு பதிலாக ஷாபிய சயீத்யின் முகம் என் கண்களில் வந்து போனது.
எழுந்தேன்.
அவளிடத்தில் ஆண்மையின் சாட்சிகள்;
என்னிடத்தில் பெண்மையின் சாயல்.
உட்கார்ந்தேன்.
"என்னாச்சுப்பா ஆனந்த்தேவ்?"
"ஒன்னும் இல்லை"
சரி மனநிலைமையை மாற்ற.......
“so how do you feel honey ??”
“cloud nine”
“hmm”
“how do you feel”
“me too the same ”
சற்றென்று செல்லமாய் அறைந்தாள்....

= = = = = = = = = =

பட்னா, பீகார்.

இரவு சினிமா பார்த்துவிட்டு வேலைக் கிடைக்காத வருத்ததுடன் வீட்டுக்கு வந்த கிஷனுக்கு , அவன் பெயருக்கு வந்து இருந்த லெட்டரை பார்த்ததும் சந்தோசம் பொறுக்கவில்லை. இனிமேல் வாழ்வில் பொற்காலம் தான் என்று நினைத்தான். மும்பை தாஜ் ஹோட்டலில் வேலை. PURCHASE EXECUTIVE .

= = = = = = = = = =

"ஆனந்த். கட்டாயம் நீ மும்பைல நடக்கிற conference க்கு போய் தான் ஆகனுமா??" என்று தனது கண்களில் தவிப்பை வைத்தப்படி கேட்டாள் ஷபேனம்.

தொடரும் ....

Related Posts with Thumbnails